Saturday, 14 July 2018

ராவண சம்ஹிதை - தொடர்கிறதுமஹாவிஷ்ணுவிலிருந்து பிரம்மனும், ப்ரம்மாவிலிருந்து ப்ரஜாபதிகளும், ப்ரஜாபதியிடமிருந்து புலஸ்தியரும், புலஸ்தியர் வம்சத்தில் ராவணனும் , குபேரனும் பிறப்பெடுத்தனர். சர்வேஸ்வரரிடம் ராவணன் கற்ற தந்த்ரத்தில் ஷட்கர்மங்கள் உள்ளன. தற்காலத்தில் தாந்த்ரீகத்தில் சில தோல்விகள் வருவதற்கு காரணம், பலர் எந்த ஒரு கர்மத்தையும் எந்த நேரத்திலும் அல்லது நாளிலும் செய்யலாம் என நினைப்பதே. இதற்கு பிரத்யேக நேரம், நட்ஷத்திரம், திரவியம், வண்ணம், ஜபமாலை, திசை, தேவதை என பல உள்ளன. அப்படி செய்யப்படாத கர்மங்கள் வெற்றியை தருவதில்லை. ராவணன் கணபதி,தசமஹா தேவியர், யட்சிணி,யோகினி, கமலவாஸினி, காக்கை தந்த்ரம், மிருக தந்த்ரம், திலக தந்த்ரம்,யந்த்ர முறைகள் போன்ற பலவற்றை கற்றுணர்ந்திருப்பது தெரிகிறது. இது ஒரு மஹா பொக்கிஷமாகும். மேலே, குறிப்பிட்டுள்ள கர்மங்களாவன : ஷாந்திகரணம் (கோள்களின் தாக்கத்திலிருந்து விடுபட, நன்மைகள் சேர, நோய் நொடிகளில் இருந்து விடுதலை பெற, வறுமையில் இருந்து விடுபட இதை நாடலாம் . 
வஷிகரணம் : இது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
ஸ்தம்பனம் : அடுத்தோருக்கு தடையை ஏற்படுத்துதல், ஸ்தம்பிக்க செய்தல்.
வித்வேஷனம் : பிரித்தல்
உச்சாடனம் மற்றும் மாரணம். மேலும், இதில் மோஹனம் (மற்றவரை நம்மை மோஹிக்க செய்தல்) ஆகர்ஷணம் போன்றவையும் அடக்கம். 

பூக்களை கொண்டு பாக்கினை கொண்டு என பல்வேறு மந்த்ர தந்த்ர முறைகளும் இதில் உண்டு. கருவிலிருக்கும் குழந்தையின் நகர்ந்திருக்கும் நாபியை யந்திரத்தினை கொண்டு சரி செய்ய முடியும் என தெரியுமா உங்களுக்கு?  

கடந்த பல வருடங்களாக பலர், இம்முறைகளை கற்றுத்தரக்கூறி வற்புறுத்தி வருகின்றனர். எனினும், கால சூழ்நிலையையும், இதனால் கற்பவர்,மற்றோர்க்கு, பாதிப்பையும் ஏற்படுத்த முடியும் என்ற காரணத்தால், கோரிக்கைகளை ஏற்காமல் இருக்கின்றோம். ஒரு முறை, சர சாஸ்திரத்தை கட்டணமின்றி பயிற்சியாக கொடுக்க இருந்த பொழுது, நன்கு விவரமறிந்த பல காலமாக அதை தொடர்ந்து கடைபிடிக்கும் வல்லுநர் ஒருவர் , 'அனைத்து விஷயங்களையும் கொடுத்து விடாதீர், தவறான கைகளில் சேர்ந்து விடப்போகிறது' என வேண்டினார். ஆகவே, முழு முறைகளையும் கூறாது, தங்களுக்கு நன்மை சேர கூடிய முறைகளை மட்டும் அந்த பயிற்சியில் கொடுத்து முடித்தோம். 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Friday, 13 July 2018

ராவண சம்ஹிதை -பரமேஸ்வரரால் அருளப்பட்ட தாந்த்ரீக முறைகள்ராவணன் தன சகோதரன் குபேரனை விட பன்மடங்கு அதிக சக்தியும் வேறு பல வரங்களையும் வேண்டி பிரம்மனை நோக்கி பத்தாயிரம் ஆண்டுகள் தவமிருந்தார். முதலில் சில நூறு ஆண்டுகளாகியும் பிரம்மன் தோன்றாததால், ஒவ்வொரு ஆயிரம் ஆண்டுகளுக்கும் ஒரு தலை என ஒன்பதாயிரம் ஆண்டுகளில் ஒன்பது தலைகளையும் கொய்து வேள்வியில் இட்டு கடும் தவமிருந்தான். பத்தாயிரமாவது ஆண்டு முடிவில் தன்னிடம் உள்ள ஒரே தலையையும் வெட்ட முயற்சிக்க பிரம்மன் தோன்றி அவனுக்கு பல வரங்களை வழங்கினார். பின், பரமேஸ்வரரிடம் பல தாந்த்ரீக முறைகள் கற்றுணர்ந்து, அனைவரையும் வெற்றி கொண்டான். இவை ராவண சம்ஹிதை எனப்படும். இந்த முறைகளால் வெற்றி கொள்ள முடியாதது எதுவும் இல்லை எனலாம். இன்றளவும், தெற்கிந்தியாவில் உள்ள பல தாந்த்ரீக வல்லுநர்களுக்கு இம்முறைகள் தெரிவதில்லை. பல நூறு யந்த்ர, தந்த்ர முறைகளை உள்ளடக்கிய இதன் அதிசயங்களை பற்றிய தகவல்கள், அடுத்த பதிவில் வெளிவரும். 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

#தந்த்ரராஜதந்த்ரம் #காலசக்ரதந்த்ரம்சமீபத்தில் நடந்த இரு மகிழ்ச்சியான நிகழ்வுகளை உங்களுடன் பகிர்கிறேன். உங்கள் அனைவருக்கும் இவை ஒரு புதிய புரிதலாக இருக்கும். இரு பெண் அன்பர்கள் சமீபத்தில் ஆலோசானைக்கு வந்து பரிகாரங்கள் கொடுக்கப்பட்டன. முதலாமவர்க்கு வேலை கிடைக்கவேண்டும், அதுவும் உடனடியாக என்பது போல் நிலை. இரண்டாமவர்க்கு பல வருடங்களாக முயன்றும் சொத்து ஒன்று வாங்க முடியாமல் தடை, மேலும் சொத்து ஒன்றினை விற்க வேண்டும். ஒரு மாதமாகியும், பரிகாரங்கள் செய்யப்பட்டும், விஷயங்கள் நடை பெறாமல் இழுபறி நிலையில் இருக்கவே, முதலாமவர் அழைத்து, இனியும் வேலை கிடைப்பது தாமதமானால் சிறிது சோதனைகளை சந்திக்கவேண்டும் என்கிறார். மிகுந்த அலசல்களுக்கு பிறகு, அவருக்கு 'காலசக்ர தந்த்ர' முறைப்படி, வண்ணம் ஒன்றை உபயோகிக்கவும், தவிர்க்கவேண்டிய வண்ணத்தையும், மேலும் அதன் உபயோக முறையும் விளக்கப்பட்டது. இது நடந்து முடிந்த ஒரு வாரத்திற்குள் அவர் தொலைபேசியில் அழைத்து வேலை கிடைத்ததாக கூறி மகிழ்ந்தார். இரண்டாமவருக்கும் இது போன்றே, அவருக்கு உகந்த வேறு வண்ண முறைகளை கூறி விளக்கவும், பத்து நாட்களுக்குள் அவருக்கு பல வருடங்களாக அமையாது இருந்து வந்த சொத்து ஒன்று அமைந்து, கடந்த புதனன்று அக்ரீமெண்ட்டும் போடப்பட்டு விட்டது. இனி, விற்பனை மட்டும் பாக்கி. 'காலசக்ர தந்த்ரம்' 'ராவண சம்ஹிதை' போன்றவை மிக வலிமை மிக்க உடனடி பலன் கொடுக்கும் முறையாகும். ஆனால், சுலபமாக சில வழிகளை கூறினால், தற்காலத்தில் பலரின் மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது. நம்பிக்கையுடன் செய்வோருக்கு பலன் கை மேல் கிடைக்கவும் செய்கிறது, 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Sunday, 8 July 2018

மூன்றாவது கண்ணை சமநிலைப்படுத்த

நம் 'ஷீர்டி ஸ்ரீ சாய் சேவா டிரஸ்ட்டின்' சார்பில் இன்று மாலை (08.7.18)
'ஜின் ஷின் ஜிட்ஷூ" ஜப்பானிய முத்திரை மற்றும் விரல் பயிற்சிகள் நல்ல முறையில் அமைதியாக நடந்து முடிந்தது.  நம் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் அன்பர்கள் வாழ்வை மேம்படுத்தும் ஏதேனும் ஒரு பொருளை பல வருடங்களாக வழங்கி வருகிறோம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அது போல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும்  'ஆக்கினை சக்கரம்' என கூறப்படும் மூன்றாவது கண்ணை சம நிலைக்கு கொண்டு செல்ல கூடிய விசேஷ சக்தியூற்றப்பெற்ற மஞ்சள் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com