Friday, 24 July 2015

ஏழரை சனியின் தாக்கம் குறைய தாந்த்ரீக பரிகாரம்


ஏற்கனவே கூறியுள்ளபடி நாம் அன்றாடம் உபயோகிக்கும் வீட்டு பொருட்களின் மூலமே நம் பல் வேறு பிரச்சனைகளை, கிரக தாக்கங்களை அடியோடு துரத்தலாம். அப்படிப்பட்ட பொருட்களில் ஒன்று தான் இஞ்சி. சனி, சுக்கிரன் மற்றும் சந்திரனின் குறைபாடு இருப்பின் அதை இஞ்சியின் துணை கொண்டு நீக்கலாம்.
தினமும் இஞ்சியை சாறெடுத்து அதோடு சிறிது எலுமிச்சை பிழிந்து நீருடன் சாறாக ( சர்க்கரை அல்லது உப்பு சேர்ப்பது அவரவர் விருப்பம்) அருந்தி வர, ஏழரை சனி மற்றும் பிற சனியின் தாக்கங்கள் உடளவில் குறைய ஆரம்பிக்கும். மேலும் தாயுடனான உறவில் பிரச்னை, சுகக்கேடு, பெண்களால் பிரச்ச னை உள்ளோரும் மேற்கண்ட முறையில்செய்து வர நல்ல மாற்றம் உண்டாகும். இஞ்சியை துவையலாக உண்டு வந்தாலும் பயன் உண்டு.அப்படி தொடர்ந்து உபயோகிக்கும் பொழுது 45 நாட்களுக்கு ஒரு முறை 10 நாள் நிறுத்தி விட்டு பின் தொடரவும்.எலும்பு குறைபாடு உள்ளோரும் மேற்கண்ட இஞ்சியை உண்டு வர நலம் பிறக்கும். மேலும் தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு பூண்டு பல் சாப்பிட்டு வர செவ்வாயினால் ஏற்படும் அணைத்து கஷ்டங்களும் நீங்கும்.

Thursday, 23 July 2015

ராஜ வசியம், தொழில் வசியம், மற்றும் கணவன் மனைவி வசீகரத்திற்கு திலக முறைபலர் தொடர்ந்து எவ்வளவோ உழைத்தும் வியாபாரம் அல்லது தொழில் முன்னேறாத நிலை, அப்படியே தொழில் நடந்தாலும் கையில் பணம் தங்காமை, கடன் பிரச்னை போன்றவற்றிற்கு காரணம் குறிப்பிட்ட நபருக்கு மற்றும் அவர் தொழில் செய்யும் ஸ்தலத்திற்கு வசீகரத்தன்மை இல்லாதது ஒரு முக்கிய காரணம் ஆகும். அப்படிபட்டோருக்கு நிரந்தரமாக தீர்வு தர நாம் கொடுத்து வரும் தாந்த்ரீக தீர்வுகள், உடனடி பலன் கொடுத்து வந்துள்ளன. ஆனால் சிலருக்கு அப்படி செய்து கொள்ள முடியாதபடி அவர்களின் பொருளாதார சூழ்நிலை இருப்பின், அவர்களுக்கு தற்காலிக தீர்வாக வியாபார வசீகர தன்மை கொண்ட திலகம் பயன் பெரும். மேலும் இது போன்ற திலகம் கணவன்-மனைவி ஒற்றுமைக்கும் கொடுத்து வருவதுண்டு-திருமணம் ஆகாத ஆண்-பெண்களுக்கு இவை வழங்கப்பட மாட்டாது. இது போன்ற திலகங்கள் 'ராஜ வசியத்திற்கு' , தற்காலத்தில் அரசியில் பிரமுகர்களுக்கு  பயன்படும்-கட்சியில், மேலிடத்தில் மிகுந்த செல்வாக்கை  இது போன்ற திலகங்கள், மேலும் சில முறைகளின் மூலம் பெறலாம். கீழே

இது போன்று ஒரு முறையை விளக்கி இருக்கிறேன். முடிந்தவர்கள் தாங்களே செய்து கொண்டு பயன் பெறலாம்.

சத்துரு வசியம்- எதிரிகள் அடங்க செவ்வாய் கிழமை காலை 6-7 க்குள் பொன்னவரை வேரும், கையான் வேரும் மற்றும் ஒரு வெள்ளருக்கு இலையும் ஒரு விஷ்ணு காந்தி இலையும் சேர்த்து கருக்கி மையாக்கி இட்டு கொண்டால் எப்பேர்பட்ட சத்துருவும், நம்மை கண்டு நடுங்குவான். மேற்கண்ட முறைக்கு வேறு எந்த மந்திரமோ அல்லது சாப நிவர்தியோ கிடையாது. 

Tuesday, 21 July 2015

எதிர்மறை சக்திகளை விரட்ட ஹிமாலயன் ராக் சால்ட் விளக்கு
நம்மை சுற்றிலும் உள்ள எதிர்மறை சக்திகள், வீட்டில் அலுவலகத்தில் தேங்கியிருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் போன்றவற்றை முழுவதுமாக நீக்க வல்லது ஹிமாலயன் ராக் சால்ட் விளக்கு. இவை பல ரூபங்களில் 2-8 கிலோ கிராம் அளவுகளில் கிடைக்கும். மேலும் இவை அலர்ஜி, ஆஸ்துமா,தூக்கமின்மை,தோல் வியாதிகள்,தலை வலி, இரத்த வியாதிகள்,சயினஸ் போன்ற வியாதிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது. முக்கியமாக எங்கும் எதிலும் ஏமாற்றம், தோல்வி, எதிர்மறை எண்ணங்கள் நிறைந்திருப்போர், தோல்வி மனப்பான்மை கொண்டோர், நிரந்தர சோகத்தில் இருப்போர், செய்வினை அல்லது ஏவல் போன்ற பாதிப்புக்கு உள்ளானதாக கருதுவோர் கட்டாயமாக உபயோகிக்க வேண்டிய ஒன்று.
நம் நாட்டில் சற்று அரிதாக கிடைக்க கூடிய இதை தற்போது ஆர்டரின் பேரில் தருவித்து கொடுக்க முடிவு செய்துள்ளோம்-தேவை உள்ளோர் : +919840130156 அணுகலாம்.

பண, ஜன வசீகரத்தை ஏற்படுத்தும் கஸ்தூரி

கஸ்தூரி மானிலிருந்து எடுக்கப்படும் ஒன்றான கஸ்தூரி அஷ்டகந்ததில் ஒன்றாகும் மற்றும் தன ஜன வசீகரத்தை ஏற்படுத்தும் இது தாந்த்ரீக பயன்பாட்டிற்கு ஏற்றது. மேலும் இது மருத்துவத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. உண்மையான கஸ்தூரியுடன் சிறிது குங்குமபூ சேர்த்து நெற்றியில் தரிக்க மேற்சொன்ன வசீகரத்தன்மை உண்டாகும். இம்முறைக்கு மந்திரங்கள் உச்சாடனம் எதுவும் தேவை இல்லை.

Monday, 20 July 2015

ஏழு சக்கரங்களும் நம் உடல் நலமும்மூலாதாரம், சுவாதிஷ்டானம்,
மணிபூரஹம்,அனாஹதம்,விசுத்தி,ஆக்ஞா,சஹஸ்ராரம்
என படுகின்ற புற கண்களால் காண முடியாத ஏழு சக்கரங்களையும் அவை நம் உடலில் ஏற்படுத்தும் நன்மை தீமைகளை இந்த பதிவில் காண போகிறோம் !!
இவை நம் உடலில் சம நிலையில் இருக்கும் பொழுது நம் மனம்,உடல் அனைத்தும் சீராகவும் சிறப்பாகவும் இருக்கிறது !! மேலும் சம நிலையில் உள்ள நாசியும், சம நிலையில் சக்கரங்களும் இருந்து விட்டால் நாம் நல்ல மேன்மை நிலைக்கு சென்று பல அற்புதங்களை உணரவும் நிகழ்த்தவும் முடியும்..பின்பு வேறு எந்த கிரக கோளாறுகள் அல்லது தீய மற்றும் எதிர் மறை சக்திகளை கண்டு பதற தேவை இல்லை !! ஆனால் அந்த நிலை அவ்வளவு எளிதல்ல !!

சம நிலையில் இல்லாத பொழுது -

மூலாதாரம் : உணவு சரியாக உட்கொள்ளாமை, வீரிய குறைவு, மல ஜல கோளாறுகள், பெரும் குடல் மற்றும் சிறு குடல் நோய்கள்.

சுவாதிஷ்டானம் : சிறுநீரகம், கல்லீரல், அடி வயிற்று கோளாறுகள்

மணிபூரஹம் : கணையம் மற்றும் அன்னீரக சுரப்பிகளின் நோய்கள்

அனாஹதம் : இதயம் மற்றும் நுரையீறுகள் சம்பந்தப்பட்ட நோய்கள், எதிர்ப்பு சக்தி இல்லாமை, முதுகு மற்றும் தோல் பட்டை, கை வலி

விசுத்தி : தொண்டை, கழுத்து, பற்கள் மற்றும் ஈறுகள், காது மற்றும் தசைகள் சம்பந்தமான நோய்கள்

ஆக்ஞா : மூளை, நரம்பு மண்டலம், கண், காது, மூக்கு சம்பந்தமான நோய்கள்

சஹஸ்ராரம் : பெருமூளை, உடல் வலிகள், முதுகு தண்டு வடத்தின் உச்சி

இவைகள் குறைவாக இருக்கும் பொழுது 'எல்லாவற்றிலும் ஏமாற்றம், எந்த விஷயத்திற்கும் சந்தோசம் இல்லாமை, தாழ்வு மனப்பான்மை, தொடர்ந்த தலை குத்தல் போன்றவை ஏற்படும், அதே நேரத்தில் இவை அதீதமாக இருக்கும் பொழுது 'எதிலும் குழப்ப நிலை,முடிவெடுக்க முடியாத மனம் மற்றும் விரக்தி மனப்பான்மை, தற்கொலை எண்ணங்கள் ஏற்படும்.

சக்கரங்களும் கிரகங்களும் :

மூலாதாரம்:              சனி மற்றும் ராகு
சுவாதிஷ்டானம் :    சுக்கிரன்
மணிபூரஹம்       :   செவ்வாய் மற்றும் கேது
அனாஹதம்         :   சூரியன்
விசுத்தி                  :   புதன்
ஆக்ஞா                  :   சந்திரன்
சஹஸ்ராரம்       :    வியாழன் (குரு)

இதை எப்படி எதிர்கொள்வது ?

அரோமா தெரபி, தியானம், நல்ல குருவின் வழிகாட்டல், தொடர்ந்த நேர் மறை சிந்தனைகளை வளர்த்து கொள்ளல், யோகா, சவுண்ட் மற்றும் கலர் தெரபி மூலம் சரி செய்து கொள்ளலாம்.

மேலும் மிக எளிய முறையில் இவற்றை எப்பொழுதும் சம நிலையில் வைத்திருக்க கூடிய முறைகளை ஒரு பயிற்சி முகாமாக நடத்தும் திட்டமும் உள்ளது.

Sunday, 19 July 2015

செல்வத்தை அள்ளித்தரும் முத்து சங்குவலம்புரி சங்கு, கோமுகி சங்கு மற்றும் ராக்கெட் சங்குகளை போலவே மிகவும் அரிதான வகையை சேர்ந்தது மோட்டி சங்கு (Pearl Conch) எனப்படும் முத்து சங்கு. சந்திரனின் ஆகர்ஷன சக்தி கொண்ட இதன் பயன்கள் மிக அதிகம்.

மன அமைதி இல்லாமை, ஜாதகத்தில் சந்திரன் அஷ்டமனம், சதா கவலைகள் போன்றவை இருப்பின்  இதை பூஜை அறையில் வைத்து தினசரி தொட்டு வணங்கி வரவும்.

தாயுடன் சரியான உறவு இல்லாதோர் வீட்டில் இதை வைத்து வணங்கி வர தாயுடனான சச்சரவுகள் நீங்கி நலம் பெறலாம்.

வெளிநாட்டு வியாபாரம் மற்றும் வெளி தேசங்களில் இருந்து லாபம் பெற இதை வைத்து இருக்கலாம்.

பொதுவாக வியாபார வெற்றி, குறைவில்லாத பண வரவிற்கு இதை வைத்து வணங்கி வரலாம். பணம், பதவி, புகழ் இம்மூன்றும் வேண்டும் என்பவர்கள் ஒரு சிகப்பு பட்டு துணியில் இதில் ஒன்றை பண அறையிலும் மற்றொன்றை பூஜை அறையிலும் வைத்திருக்க நினைத்த காரியம் நிறைவேறும்.

இதன் அரிதான தன்மைகளுக்காக தற்சமயம் இதை கடலில் இருந்து எடுப்பதை அரசு தடைசெய்ய போவதாக   தகவல்.

இது குறித்து மேலும் விவரங்களுக்கு தொலைபேசியில் அழைக்கவும் : +919840130156

மலை தேன் குறித்த ஜோதிட சூட்சுமங்கள்


பொதுவாக தேன் பல விதங்களில் நன்மை செய்ய கூடியது. தாந்த்ரீக பரிகாரமாக ஒரு பாட்டில் தேனை வியாபார ஸ்தலத்தில் வைத்திருக்க வியாபாரம் நல்ல முன்னேற்றம் காணும். இது பற்றி ஏற்கனவே நாம் ஒரு பதிவில் குறிப்பிட்டு உள்ளோம்.உண்மையான கோரோசனை அல்லது கஸ்தூரியோடு மலை தேன் கலந்து நெற்றியில் இட்டு வர வசிய சக்தி ஏற்படும். பலர் தொடர்ந்து உண்மையான மலை தேன் குறித்து கேட்டு வரவே, தற்போது கேரளாவில் இருந்து தருவிக்கப்பட்டு உள்ளது. தேவை உள்ளோர் : +919840130156 அழைக்கவும்.
இப்பொழுது மலை தேனின் மற்ற பயன்களை பார்போம்.
செவ்வாய் : ஜாதகத்தில் செவ்வாயினால் ஏற்படும் குறைவை அதாவது உடல் ரீதியான கோளாறுகளை தீர்க்க தொடர்ந்து ஒரு தேக்கரண்டி தேன் அருந்தி வருதல் நலம் பயக்கும்.
குரு: ஜாதகம் அல்லது கோட்சாரத்தில் குருவின் நிலை திருப்தி தரும் படி இல்லையெனில் தொடர்ந்து வியாழக்கிழமைகள் தேன் தானம் செய்து வர குருவினால் ஏற்படும் பாதகங்கள் குறையும்.
ராகு மற்றும் கேது : இவ்விரு சாயா கிரகங்களினால் ஏற்படும் தோசத்தை / சேதத்தை தடுக்க சிவனுக்கு மலை தேன் அபிஷேகம் செய்வித்தல் ஒரு நல்ல பலனை ஏற்படுத்தும்.
சூரியன் : சூரியன் ஜாதகத்தில் வலுவிழக்கும் சமயம் நம் உடலில் வயிற்று கோளாறுகள் ஏற்படும்-இதை போக்க சூரியனை நம் உடலில் வலுப்படுத்த மலை தேன் தொடர்ந்து உண்டு வரலாம்.
வாதம் (சனி) பித்தம் (சூரியன்) கபம் (குரு) : நம் உடலில் இம்மூன்றையும் சமன்படுத்த தினசரி காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் மலை தேன் குடித்து வரலாம்.இது வடக்கே ஜோதிடர்கள் தங்களிடம் ஆலோசனைக்கு வரும் அனைவரிடமும் கூறும் ஒன்றாகும்.
கோபம் குறைய : தினசரி காலை சிறிது வெங்காய சாரோடு மலை தேன் கலந்து உண்டு வர தேவை இல்லாத கோபங்கள் அடங்கும்-இரத்த கொதிப்பு இருப்பின் சமன்படும்.