Friday, 31 July 2015

அனைவருக்கும் ஒரு இனிய நற்செய்தி !!


பெங்களூரு,திருவண்ணாமலை,விழுப்புரம் பகுதியில் புதிய கிளைகள்-கீழ்க்கண்ட முகவரியில் பெங்களூருவில் நம் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் அனைத்து பொருட்கள், மற்றும் நம் ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் பெங்களூருவை சேர்ந்த அன்பர்கள் அனைவரும் நாம் கட்டணமின்றி வழங்கி வரும் தன வசிய விபூதி மற்றும் ருத்ராட்சங்கள், குன்றிமணி பவளமல்லி வேர் அங்கேயே பெற்று கொள்ளலாம். புதிதாக 'ஆரா ஸ்கானிங்' (Aura Scanning ) என்ற தெரபியும் அங்கே செயல்பட தொடங்கும். அன்பர்கள் தங்கள் கண் முன்னே தங்களின் உடல் சக்கரங்களின் செயல் பாட்டை காணலாம். எங்கே சரி செய்யப்பட வேண்டுமோ அவற்றை சரி செய்து, சமநிலை உடல் சக்கர நிலையை அடையலாம். மேலும் பெங்களூருவில் மாதம் மூன்று பயிற்சி வகுப்புகளும் நடைபெறும்.திருவண்ணாமலையிலும் நம் நேரடி சென்டர் துவங்கப்பட உள்ளது- கிரிவல பாதையில். முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் அடுத்த வாரம் வெளியிடப்படும். விழுப்புரத்தில் நம் அன்பர் ஒருவர் பொருட்கள் அனைத்தையும் அனைவரையும் சென்றடைய முகவராக செயல்பட இருக்கிறார். இதன் முகவரி மற்றும் நபரை பற்றிய தகவல்கள் திங்களன்று வெளியிடப்படும். விழுப்புரத்தை சுற்றியுள்ள நபர்கள் அவரிடம் பொருட்களை பெற்று கொள்ளலாம். மேலும் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு பகுதிகளிலும் நம் சென்டர் நிறுவப்பட உள்ளது-சேவைகள் அனைவரையும் சென்றடைய !!
குறிப்பு : மேற்கண்ட அனைத்து இடங்களிலும் கட்டணமின்றி 5-15 வயது குழந்தைகளுக்கு மற்றும் 70 வயது மேற்பட்ட பெரியோர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும். பெங்களூரு கிளை முகவரி :
ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டர்,
5/3, சுப்பிரமணியம் பில்டிங்க்ஸ், முதல் மாடி,
இம்மேடஹல்லி மெயின் ரோடு,
ஒயிட் பீல்ட், பெங்களூரு 560066

எதிர்பாராத பண வரவிற்கு எளிய தாந்த்ரீக பரிகாரம்


எம்மிடம் பண கஷ்டம், கடன் தொல்லை மற்றும் பணத்தேவைகள் அதிகம் உள்ளோர் ஆலோசனைக்கு வருகையில் அவர்களுக்கு கூறும் ஒரு வெற்றி கண்ட தாந்த்ரீக முறையை கீழே விளக்கியுள்ளேன். தேவை உள்ளோர், செய்து பலன் அடையுங்கள்.
பச்சை நிறத்திலுள்ள தவளை ஒன்றின் சிறிய அளவிலான படத்தை எடுத்து கொள்ளவும்.அதன் கீழே நீங்கள் எதிர்பார்க்கும் பண வரவு தொகையை எழுதி கொள்ளவும். தொகை நியாயமானதாகவும் தங்களின் தகுதிக்கு உட்பட்டதாகவும் இருப்பின் மிக வேகமாக பலன் தரும். பின்பு
 அதை மடித்து பணம் வைக்கும் பர்சில் வைத்து கொள்ளவும்-பர்ஸ் தோலில் செய்யப்பட்டதாக இருக்க கூடாது. மேலும் பச்சை நிறமாக இருப்பின் கூடுதல் நலம். படத்தை தினமும் இரவு படுக்கும் முன் எடுத்து பார்த்து கீழ்க்கண்ட மந்திரத்தை 30 தடவை கண் மூடி கூறவும்-மனதினுள். அப்படி கூறும் சமயம் நாவினை உள் புறமாக (வாயினுள் மேல் பகுதியில் படுமாறு) மடித்து கொள்ளவும். முடிந்ததும் நீங்கள் தூங்கும் தலையணை அடியில் வைத்து விட்டு மீண்டும் காலையில் எடுத்து பணம் வைக்கும் பர்சில் வைத்து கொள்ளலாம். தினசரி செய்து வரலாம். இதற்கு கால அவகாசம் கிடையாது. மந்திரம் அதீத சக்தி வாய்ந்தது. தேவைப்படும் வரை, தேவைகள் தீரும் வரை செய்து வரலாம். ஒரு தேவை முடிந்து மறு தேவைக்கு பயன்படுத்தும் சமயம் படத்தை மாற்றி விடவும்.
மந்திரம் : "யோகம் அநேகம் என்னுள்ளே இறங்கட்டும் "

Sunday, 26 July 2015

செல்வம் பெருக அனைவரும் செய்யகூடிய எளிய தாந்த்ரீக சாதனைமிக அபூர்வமான சங்கான முத்து சங்கை பற்றி "பிரம்ம வைவர்ட்ட புராணம்" மகாலட்சுமி இதில் வாசம் செய்கிறாள் என்கிறது. ஜைன தந்திரத்தில் வரும் "பத்மாவதி சாதனை"யிலும் முத்து சங்கே பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் சந்திரனின் பூரண ஆகர்ஷன சக்தியையும் உள்ளடக்கியது இந்த முத்து சங்கு. நிரூபிக்கப்பட்ட முறைப்படி, இது உடல் கோளாறுகளையும் சரி செய்ய கூடியது. இரவு முழுதும் இதில் நீர் விட்டு வைத்து விட்டு மறு நாள் காலை அந்த நீரை உடலில் தோல் பிரச்னை உள்ள இடங்களில் தேய்த்து வர தோல் வியாதிகள் நீங்கும். முக வசீகரத்திற்கு முகத்தில் தினசரி இதை தேய்த்து வரலாம்.மேலும், கண்ணனுக்கு கீழே கரு வளையம் உள்ளோர், அந்த பக்கத்தில் இதை தேய்த்து வர, கரு வளையம் நீங்கி, கண் பொலிவு பெரும்.
வியாபாரத்தில் உள்ளோர், வியாபார ஸ்தலம் மற்றும் வீட்டில் என்று முறையே இரண்டு சங்குகள் வைத்து வழிபட்டு வர, பண முடை இல்லாமல் வியாபாரம் செழித்து வளரும்.
கீழ்க்கண்ட தாந்த்ரீக சாதனையின் மூலம் மிக நல்ல செல்வசெழிப்பை நம் வாழ்வில் உண்டாக்கி கொள்ள முடியும்-மிக எளிமையாக.
இதை திங்கள் அன்று இரவு 8.12 க்கு தொடங்கவும். தினசரி ஒரே நேரத்தில் தொடர்ந்து 20 நாட்கள் செய்யவும்.
தேவை : முத்து சங்கு, மஞ்சள் கலந்த அரிசி (அர்ச்சிக்க) , நெய் விளக்கு, ஒரு வெள்ளை துணி, சிறிது குங்குமம்
குளித்து முடித்து சுத்தமான உடையுடன், பூஜை அறையில் ஏதேனும் ஒரு விரிப்பில் அமர்ந்து எதிரே முத்து சங்கை வைத்து அதற்கு மஞ்சள் மற்றும் சந்தனம் இடவும்.
நெய் விளக்கேற்றி வைக்கவும் . பின்பு அதன் முன்னே குங்குமத்தால் 'ஸ்ரீம்' என கோலமிட்டு கீழ்க்கண்ட மந்திரத்தை கண் மூடி தியானித்து நிதானமாக கூறவும்-ஒவ்வொரு முறை கூறும் பொழுதும் மஞ்சள் கலந்த அரிசி சிறிது சங்கிற்கு அர்ச்சிக்கவும். இதில் அரிசியை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. முனை உடையாத அரிசியாக இருக்க வேண்டியது முக்கியம்.இப்படி இருபது முறை கூறி விட்டு பூஜையை முடித்து கொள்ளலாம். அனைத்தும் அப்படியே இருக்க மறு நாள், கோலம் புதிதாக இட்டு, புதிய அரிசியை கொண்டு மந்திரம் கூறி அர்ச்சிக்கவும்-29 நாட்கள் முடிந்ததும் அனைத்து அரிசியையும் மூட்டையாக கட்டி வீடு அல்லது தொழில் செய்யும் இடங்களில் கட்டி வைக்கவும். சங்கை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வரவும்.வருடம் ஒரு முறை இந்த 'தாந்த்ரீக சாதனை' செய்து வர, செல்வம் மென் மேலும் பெருகி நம்மை வாழ்வாங்கு வாழ வைக்கும்.
மந்திரம் :
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் தாரித்ரிய விநாஸின்யை தன தான்ய ஸம்ருதிம் தேஹி தேஹி நமஹ "

வசீகர சக்திக்கு முத்து சங்கு


கொடுக்கப்பட்டுள்ள தாந்த்ரீக முறை முத்து சங்கின் மூலம் வசீகரத்திற்கு பயன்படும் ஒன்று. இதை முறையற்றவர்களிடம்உபயோகிப்பின் மிகுந்த துன்பம் ஏற்படும். எனவே, நல்ல காரியங்களுக்கு, உதாரணமாக வேலைக்கு இண்டர்வியூ செல்லும் பொழுது, வியாபார நிமித்தம், கணவன் மனைவி சச்சரவு சரியாக, உறவுகள் வலுப்பட போன்றவைகளுக்கு உபயோகிக்கலாம்.
இதை ஞாயிறன்று தொடங்கவும். குளித்து முடித்து சுத்தமான மனதுடனும், ஆடைகளுடனும் ஏதேனும் விரிப்பினில் சங்கின் எதிரே அமர்ந்து சங்கிற்கு குங்கும பூவினால் திலகம் இட்டு, நெய் விளக்கேற்றி வைத்து கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 முறை கூறி வழிபடவும். ஒவ்வொரு முறை மந்திரத்தை கூறும் பொழுதும் மஞ்சள் கலந்த அரிசியை சங்கிற்கு இட வேண்டும்- அர்ச்சிப்பது போல். எவர் முன் வசீகரமாய் தெரிய வேண்டுமோ அவரின் பெயரை கீழ்க்கண்ட மந்திரத்தின் விடுபட்ட பகுதியில் சேர்த்து மந்திரத்தை கூறவும். இதை தொடர்ந்து முப்பது நாட்கள் செய்து வர காரிய பலிதம் உண்டாகும்.
ஓம் க்ரீம் ----------------------யை வசமாணய சுவாஹா :

திருமண தடை, காரிய தடை நீக்கும் கணேச சங்குஅதிசயங்களில் அதிசயமான சங்குகள் மிக நல்ல பலன்களை மிக வேகமான முறையில் தர வல்லவை. அதில் ஒன்று தான் கணேச சங்கு. இயற்கையிலேயே கணேச முக வடிவுடன் காணப்படுவதால் மட்டுமல்லாமல் திருமண தடை, எங்கும் எதிலும் காரிய தடை, ஏழரை, கர்ம, கண்டக, அஷ்டம சனி காலங்களில், லக்னத்தில் அல்லது அஷ்டமத்தில் கேது அல்லது சனி இருப்பின் இதை வைத்து பூஜித்து வர அனைத்து தோஷங்கள் மற்றும் கஷ்டங்கள் விலகி நன்மைகள் பெருகும். காலையில் குளித்து முடித்ததும் சுத்தமான நீரை இதில் ஊற்றி கைகளில் வைத்து கொண்டு 'ஓம் கணேசாய நமஹ' என 70 முறை கூறி பின் அந்த நீரை குடித்து விட்டு சென்றால் அன்றைய தினம் மிகவும் வெற்றிகரமாக இருபது கண்கூடு. மேலும் அடிகடி விபத்துக்குள்ளாகும் வாகனங்களில் இந்த சங்கை வைத்து வழிபட்டு வர வாகன விபத்துகள் நேராமல் அந்த கணேசர் நம்மை காப்பாற்றி அருள் புரிவார்.