Wednesday, 9 September 2015

கருப்பு உப்பின் தாந்த்ரீக பயன்கள்


கெட்ட கனவுகள், நிம்மதியற்ற உறக்க நிலை,பேய்-ஆவி பயம் நீங்க சிறிய வெள்ளை துணியில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும் கருப்பு உப்பை சிறிதளவு முடிந்து தலையணை அடியில் வைத்து உறங்க மேற்கண்டவை நீங்கும். அனைத்து தீய சக்திகளையும் ஓட்ட வல்லது கருப்பு உப்பு.

Tuesday, 8 September 2015

வியாபார மற்றும் பண பிரச்சனைகள் தீர்க்கும் ஏழு மற்றும் எட்டு முக ருத்திராட்சங்கள்



17 முக ருத்திராக்ஷும்

தன்னை அணிந்தவரை குறைந்த காலத்தில் செல்வந்தர் ஆக்கும் தன்மை கொண்டது.கைவினை மற்றும் படைப்பாற்றலுக்குரிய கடவுள் விஸ்வகர்மாவுக்குரியது இந்த ருத்திராக்ஷும்.இதை அணிபவருக்கு திடீர் செல்வம் மட்டுமல்ல, ஆன்மீக சக்திகளும் வந்து அடையும். இது அணியும் பெண்களுக்கு மன வாழ்க்கை, குழந்தை செல்வம், நல்ல கணவர், நல்ல தாம்பத்யம், நீண்ட ஆயுள் போன்ற அனைத்து நன்மைகளும் ஏற்படும். இதை அணிந்து 'காத்யாயினி' யை வழிபட திருமணமாகாத பெண்களுக்கு உடனடி வரன் அமையும். பல்வேறு வகையில் திடீர் செல்வம், அதிர்ஷ்டம் தர வல்லது இந்த ருத்திராக்ஷும்.


மேற்கண்ட நமது பதிவை கண்டு பலர் தொடர்ந்து தொலைபேசியில் இது வேண்டும் என்று கேட்டு வந்தனர்-ஆனால் சாமானியர்கள் வாங்கும் விலையில் இல்லை இந்த ருத்திராட்சம்-ரூ.90,000 முதல் 1,50,000 வரை விற்கப்படுகிறது. ஆகையால் இதை விசாரிப்போரிடம் நாம் நமது அனுபவத்தில் கண்ட உண்மையை சொல்வதுண்டு-ஆம், இது கொடுக்க கூடிய அதே பலனை தரவல்லது 7 மற்றும் 8 முக ருத்திராட்சங்கள். சேர்த்து அணிய வேண்டும். லக்ஷ்மி மற்றும் கணபதியின் ஆகர்ஷன சக்தியை கொண்ட இவ்விரண்டும்- பண பிரச்சனைக்கு மட்டுமின்றி ஜாதகத்தில் அஷ்டமத்தில் சனி அல்லது ராகு இருப்பினும், ஏழரை, அஷ்டம, கண்டக சனி மற்றும் கர்ம சனி காலங்களிலும் அணிந்து நிவாரணம் பெறலாம். மேலும் தற்போது காம்புடன் கூடிய அதிக நபர்கள் கைபடாத அதிவீரிய காய்கள் கிடைப்பது அரிது. ஒரு சில அன்பர்களுக்காக தற்போது நேபாளத்தில் இருந்து நமக்கு வந்திருந்த ருத்திராட்ச காய்களில் அதிசியமாக இரண்டு 8 முக காய்கள் காம்புடன் !! இப்படி பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டது !!  

Sunday, 6 September 2015

லக்ஷ்மி கடாட்ஷம் கிட்ட



மீன ராசி மற்றும் லக்னம்

பண பெட்டியில் குங்குமபூ மற்றும் ஒரு தங்க நாணயம் வைத்திருக்கவும். நாணயத்தில் பன்னீர் தெளித்து வைக்கவும். கணபதி யந்திரம் வைத்து வழிபட்டு வர லக்ஷ்மி கடாட்ஷம் கிட்டி வாழ்வாங்கு வாழலாம். 

லக்ஷ்மி கடாட்ஷம் கிட்ட

கும்ப ராசி மற்றும் லக்னம்

ஏழு முக ருத்திராட்சம் ஏற்றம் தரும். மேலும் தினசரி 'ஸ்ரீம்' என்ற பீஜ மந்திரத்தை தாமரை மணி மலை கொண்டு 108 முறை ஜெபம் செய்து வர லக்ஷ்மி அருள் கூடும். பணம் வைக்கும் இடத்தில் கட்டை மஞ்சள் வைத்து தூப தீபம் காட்டி வழிபட்டு வரவும். 

லக்ஷ்மி கடாட்ஷம் கிட்ட

மகர ராசி மற்றும் லக்னம்

ஸ்படிக லிங்கம் வைத்து வழிபட்டு வர வாழ்வு வளம் பெரும். பணம் வைக்கும் இடத்தில் பொடி தேங்காய் ஒன்றில் சந்தனாதி தைலம் தடவி வைத்திருக்கவும்.ஒவ்வொரு சனிக்கிழமையும் தைலம் தடவி வரவும். மேலும் பணம் வைக்கும் இடத்தில் தினமும் புதிதாக ஒரு பன்னீர் ரோஜா வைத்து வரவும்.

லக்ஷ்மி கடாட்ஷம் கிட்ட



தனுசு ராசி மற்றும் லக்னம்

ஸ்படிக லக்ஷ்மி வைத்து வழிபட்டு வர சுக வாழ்வு வாழலாம். லக்ஷ்மி நான்கு கரத்தை உடையவளாக இருக்க வேண்டும். மேலும் பணம் வைக்கும் இடத்தில் மஞ்சள் துணியில் கஸ்துரி மஞ்சள் மற்றும் சிறிது குங்குமபூ சேர்த்து வைத்திருக்கவும்.

லக்ஷ்மி கடாட்ஷம் கிட்ட



விருட்சிக ராசி மற்றும் லக்னம்

மஹா மேரு வைத்து வழிபட்டு வர அனைத்து நன்மைகளும் வந்து சேரும். குறைவில்லாத வாழ்வு வாழலாம். மேலும் பணம் வைக்கும் இடத்தில் ஒரு சிகப்பு பட்டு துணியில் சிறிது குங்குமம், கருப்பு மஞ்சள்,பொடி         தேங்காய், சிறிது அரிசி முடிந்து வைக்கவும்-செல்வம் பெருக. 

லக்ஷ்மி கடாட்ஷம் கிட்ட



துலா ராசி மற்றும் லக்னம்

இவர்கள் பத்து முக ருத்திராட்சம் அணிந்து மகாலட்சுமியை வழிபட்டு வர அனைத்து செல்வங்களும் வந்து சேரும். மேலும் பணம் வைக்கும் இடத்தில் சிறிது 'கஸ்தூரி'யை வெள்ளை துணியில் முடிந்து வைத்திருக்க செல்வம் பெருகும். 

லக்ஷ்மி கடாட்ஷம் கிட்ட



கன்னி ராசி / லக்னம்


கன்னி ராசியினர் வெள்ளெருக்கு விநாயகர் வைத்து வழிபட்டு வர லக்ஷ்மி கடாட்ஷம் கிட்டி நிதி நிலைமை மேம்படும். பணம் வைக்கும் இடத்தில் சிறிது அரிசி, சந்தானம் மற்றும் துளசி இலைகள் வைத்து அடிக்கடி மாற்றி வர நன்மைகள் அதிகரிக்கும்.

லக்ஷ்மி கடாட்ஷம் கிட்ட


சிம்ம ராசி / லக்னம்

சிம்ம ராசியினர் தங்கள் வீடு அல்லது வியாபார ஸ்தலத்தில் வடக்கு பகுதியில் வெண்கலத்தினால் குபேரர் (சீன குபேரர் அல்ல) வைத்து வழிபட்டு வரலாம். மேலும் குபேர யந்திரம் இந்த ராசி லக்னதாருக்கு மிகுந்த நன்மை செய்யும். இவர்கள் பணபெட்டியில் / பண வைக்கும் இடத்தின் பிடியில் சிகப்பு ரிப்பன் ஒன்றை கட்டி வைக்க பணபெருக்கம்  இருந்து கொண்டே இருக்கும்.

லக்ஷ்மி கடாட்ஷம் கிட்ட


கடக ராசி / லக்னம்

சம்பூர்ண மகாலட்சுமி யந்திரம் வைத்து பீஜ மந்திரம் கூறி வழிபட்டு வரவும். வெள்ளிகிழமைகளில் யந்திரத்திற்கு அபிஷேகம் செய்வித்து தூப தீபம் காட்டி வணங்கி வரவும். கடக ராசி அல்லது லக்னம் உள்ள அன்பர்கள் இரண்டு முக ருத்ராட்சம் அணிந்து வர நிதி நிலைமை மேம்படும். ஒரு வெள்ளி காசை சந்தனாதி தைலத்தில் நனைத்து லெதர் அல்லாத பர்ஸ் அல்லது பண பெட்டியில் வைத்திருக்கலாம்.