Tuesday, 9 September 2014

கிரக தோஷங்களை போக்கும் உணவு பரிகாரங்கள்


உணவு பொருட்களின் மூலம் பல் வேறு கிரக தோஷங்களை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். யாம் கொடுத்து வரும் 'ஹெல்த் தெரபி' இல் கூறப்படும் சில விஷயங்கள் இங்கே உங்களுக்காக :
மஞ்சள் : ஜாதகத்தில் அல்லது கோட்சாரத்தில் குரு(வியாழன்) வலிமை இழந்து இருப்பின் மஞ்சளை தினமும் பாலில் ஒரு மேஜை கரண்டி அளவு கலந்து குடித்து வருவது மிக சிறந்த பரிகாரம்.வெளியில் செல்லும் பொழுது மஞ்சளை உடன் வைத்திருக்கலாம்.மேலும் மஞ்சள் தானம் செய்யலாம். மஞ்சளை ஆண்கள் நெற்றியில் இட்டு செல்வதும், பெண்கள் முகத்தில் பூசி செல்வதும் சிறப்பு தரும். ஜாதகத்தில் வியாழன் -ஒன்று மூன்று ஏழு அல்லது பதினொன்று இடத்தில் அமர உடலில் ஆர்மோன் பிரச்சனைகள் வரலாம். அதற்கும் பாலில் மஞ்சள் சேர்த்து அருந்துவது மிக சிறந்த பரிகாரம். குரு கெட்டிருக்கும் சமயம் மஞ்சள் காமாலை நோய்கள் வரலாம். அதற்கும் மேற்கண்டது மிக சிறந்த ஒன்று. மேற்கண்டவைகளை அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை மேஷம்,ரிஷபம்,கடகம்,சிம்மம்,துலாம்,தனுசு மற்றும் கும்ப ராசியினர் செய்து வர கஷ்டங்கள் குறைந்து நன்மை பெருகும்.
ஜிலேபி : சுக்கிரன் கெட்டிருப்பின் ஜிலேபி சாப்பிட்டு வருவது மிக சிறந்த ஒன்று. தினசரி காலை ஒன்று சாப்பிடலாம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சக்கரை இல்லாத ஜிலேபி வாங்கி உண்ணலாம். குழந்தை பேறு தாமதமாகும் பெண்கள் இதை தினசரி உண்டு வர சிறந்த பலன் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.தினம் ஒன்று போதுமானது. மேலும் இது முக வசீகரம் உண்டு செய்யும் ஒன்றாகும்.
கோதுமை : தந்தையுடன் பிரச்சனை, அரசு விவகாரங்களில் தொல்லை, வலது கண் நோய், எலும்பு தேய்மானம் போன்றவை ஜாதகத்தில் பலவீனமான சூரியனை குறிக்கும். மேலும் சூரியன் ஜாதகத்தில் இரண்டு, ஏழு, எட்டாம் இடங்களில் இருந்தாலும் சிறிதளவு கோதுமையை ஓடும் சுத்த நீரில் விடுவதும் (43 நாட்கள் செய்ய வேண்டும்-தொடர்ந்து). மேலும் சூரியனை வலுப்படுத்த : 5 டம்ளர் சுத்த குடி நீர் எடுத்து அதில் கோதுமை கால் கிலோ மற்றும் கருப்பு உளுந்து கால் கிலோ கலந்து அடுப்பில் வைத்து அதை பாதியாக வரும் அளவு கொதிக்க விட்டு, பின்பு சுத்தம் செய்து அதை ஒரு நாளில் மூன்று முறையாக அருந்தவும். இதை வாரம் ஒரு முறை செய்து வர சூரியனுக்கு மிக பலம் வாய்ந்த பரிகாரமாக அமையும். மேற்கண்ட பானம் உடலையும் மிகவும் பலப்படுத்தும்.
நெல்லிக்கனி : குரல் பிரச்சனைகள் அல்லது திக்கு வாய், சரியாக பேச்சு வராத தன்மை, ஞாபக மறதி, சகோதரிகளுடன் சண்டை, இரத்த அழுத்தம்,பலவீனமான எலும்புகள், மலம் சரியாக வெளியேற்றம் இல்லாமை போன்றவை ஜாதகத்தில் புதனால் ஏற்படும் ஒன்றாகும். இதற்கு தினசரி ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டு வருவது சிறந்த பரிகாரமாக அமையும், அல்லது இரவு படுக்கும் முன் நெல்லிக்காய் பவுடரை நீரில் கலக்கி குடித்து வரலாம். மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக இதை கடை பிடிக்க கல்வியில் மிக நல்ல முறையில் தேறலாம்.
அரிசி : சந்திரனை வலுப்படுத்த மிக சிறந்த பரிகாரம் அரிசி தானம். மேலும் தங்கள் தாயை சிறிது அரிசி மற்றும் வெள்ளி காசுடன் தாம்பூலம் கொடுத்து ஆசி பெறுவது சந்திரனை நம் ஜாதகத்தில் வலுவாக்கும் ஒன்றாகும். வெள்ளை சாதத்தை பிசைந்து இந்துப்பு மற்றும் சிறிது மிளகு பொடி கலந்து குடித்து வர உடலும் மெலியும்-சந்திரனுக்கும் பரிகாரமாகும். 
வரும் திங்கள் 15.9.14 முதல் நம் பரிகார முறைகள் சுவஸ்திக் வெப் டீவீயில் (swasthiktv.com )காலை 7.30-8 திங்கள் முதல் வெள்ளி வரை மற்றும் ஞாயிறு காலை (மறு ஒளிபரப்பு) 9-10 வரை ஒளிபரப்பாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

Monday, 8 September 2014

உடல் நிலை கோளாறுகளுக்கு சூட்சும பரிகாரங்கள்


உடல் கோளாறுகளுக்கு ஏற்ப போர்வையை பயன் படுத்தவும்
சிகப்பு : இருமல், ஜலதோஷம், மஞ்சள் காமாலை, உடல் தோளில் வெண் புள்ளி
ஆரஞ்சு : கல்லீரல், கிட்னி, மூட்டு வலி, தன்னம்பிக்கை இல்லாமை
மஞ்சள் : மலம் சார்ந்த பிரச்னை, மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகள்
பச்சை : நெஞ்சு (மார்பு), கண். இரத்த நோய்கள், மற்றும் புற்று நோய்கள்
நீலம் : ஆஸ்துமா, மூச்சு சம்பந்த நோய்கள், பல், மூக்கு, காது, மற்றும் நுரையீரல்
வெளிர் நீலம் : வாய், தொண்டை, மற்றும் உயர் இரத்த அழுத்தம், அதிக வியர்வை உடம்பில்
ஊதா : இள நரை,முடி உதிர்தல்

விரும்பியவரை மணக்க / நல்ல வரன் அமைய / திருமணம் தாமதமில்லாமல் நடக்க தாந்த்ரீக பரிகாரங்கள் :


(1) வெள்ளியன்று வெள்ளை நிற ஆடைகள் அணியவும்.
(2) வீட்டில் தென் மேற்கு பகுதியில் மண் அகலில் நெய் விளக்கேற்றி வரவும். 43 நாட்கள். நல்ல பலன் தெரியும்.
(3) ஒரு வெற்றிலையில் விரும்பியவரின் பெயர் எழுதி கடவுளிடம் வேண்டி பின்பு அதை தேன் பாட்டிலில் போட்டு வைக்கவும். (திருமணத்திற்கு தகுந்த ஆண் / பெண்கள் மட்டுமே செய்யவும்.தீவினை தீமை தரும் என்பதை நினைவில் கொள்க) 
(4) விரும்பியவரை திருமணம் பற்றி பேச பௌர்ணமியில் சந்திக்கவும்.
(5) பெண்கள் பச்சை நிற வளையல்கள் அணியவும்.
(6) ஒரு சிறு மண் சட்டியில் காளான்கள் வாங்கி நிரப்பி அதை ஏதேனும் தர்கா,மசூதி அல்லது கோவில்,சர்ச்சுகளில் தானம் செய்யவும்.
(7) திருமணம் முடியும் வரை இரவில் பால் அருந்தாமல் இருந்து வரவும்
(8) தொடர்ந்து 16 திங்கள் கிழமைகள் விரதம் இருந்து வரலாம்.
(9) வீட்டில் துளசி செடி வைத்து அதற்கு தினமும் சிறிது குங்குமப்பூ சேர்த்த நீர் விட்டு வரவும்
(10) வெள்ளியில் செய்த சிறு உருண்டைகள் உடன் வைத்திருக்கவும். அல்லது சிறிய உருண்டை வடிவ வெள்ளியை கழுத்திலும் அணியலாம்.