Saturday, 4 October 2014

துலாம் ராசி / லக்னதிற்க்கு வாழ் நாள் பரிகாரங்கள் (பொது)

ஆண்கள் :

தினமும் ஈசனை வழிபட்டு வரவும்

வீட்டில் கனகதாரா ஸ்தோத்திரம் ஒலிக்க செய்து கேட்டு வரவும்

பெண்கள் :

ஆலயத்திற்க்கு தூங்க விளக்கு அல்லது பெரிய மணி தானம் செய்யவும். வசதி உள்ளவர்கள் வருடம் ஒரு முறை செய்யலாம்.

வளர்பிறை ஞாயிறு அன்று  அம்மன் கோவிலில் நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்னை சேர்த்து  தீபம் ஏற்றி வரவும்.

செவ்வாய் கிழமை ராகு காலத்தில் துர்கையை வழிபட்டு வெங்காயம்,பூண்டு சேர்க்காத கொத்து கடலை சுண்டல் நிவேதனம் செய்து அதை விநியோகிக்கவும். முடிந்த போதெல்லம்  செய்யலாம். 

கன்னி ராசி / லக்னதிற்க்கு வாழ் நாள் பரிகாரங்கள் (பொது)ஆண்கள் : 

சனிக்கிழமைகளில் தவறாது அனுமனையும் சனி பகவனையும் வணங்கி வரவு.இரவு 8-9 மணியளவில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு.

2 வருடங்களுக்கு ஒரு முறை கீழ்க்கண்ட கோவில்களுக்கு சென்று முறைப்படி வழிபடவும் :

(1) கும்பகோணம் அருகில் உள்ள திருக்கோடிக்கா சென்று கர்ப்ப கிரக விளக்கில் நெய் சேர்த்து ஈசனையும்,அம்பிக்கையையும் வழிபடவும்.
(2) விழுப்புரம் அருகில் உள்ள 'திருவாமுத்தூர்' சென்று கர்ப்ப கிரக விளக்கில் நெய் சேர்த்து ஈசனையும்,அம்பிக்கையையும் வழிபடவும். இதற்கு அருகில் உள்ள தும்பூர் நாக அம்மனையும் வழிபடவும்.

பெண்கள் :

வளர்பிறை ஞாயிற்று கிழமைகளில் விநாயகர் சன்னதியில் கர்ப்ப கிரக விளக்கில் சுத்தமான நெய் சேர்த்து, வெண் பொங்கல் தானம் செய்யவும். முடிந்தபோதெல்லாம் செய்யலாம். 

வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டு  சன்னதியில் கர்ப்ப கிரக விளக்கில் சுத்தமான நெய் சேர்த்து, வெண் பொங்கல் தானம் செய்யவும். முடிந்தபோதெல்லாம் செய்யலாம். 

வளர்பிறை மற்றும் தேய்பிறை சஷ்டி அன்று விரதம் இருந்து மாலையில் முருகரை வழிபட்டு வரவும் 

MONEY THERAPY-பணத்தை ஈர்க்கும் முறைகள்

Friday, 3 October 2014

கிரக தொல்லைகளில் இருந்து விலக எளிய பரிகாரங்கள்-தொடர்ச்சி

புதன் : ஒவ்வாமை, பேச்சு சம்பந்தமான பிரச்சனைகள், வியாபாரம், படிப்பு - பசும் புல் வெளிகளில் அடிக்கடி நடப்பது, உட்காருவது, பச்சை நிறத்தை நம் இரு நெற்றி புருவங்களுக்கு இடையில் வைத்து தியானிப்பது மிகுந்த பலன் தரும். பச்சை செடிகள் மற்றும் மரங்களை தினசரி பத்து அல்லது பதினைந்து நிமிடம் செய்து வருதல் நலம்.

வியாழன் (குரு) : மஞ்சள் நிற உடையில் மஞ்சள் நாற்காலியில், மஞ்சள் பழங்களுக்கு நடுவில் உங்கள் மனதுக்கு உகந்த குரு  (சாய், ராகவேந்திரர்,ரமண மஹரிஷி,சேஷாத்ரி சுவாமிகள், மஹா பெரியவர் போன்ற பலர்) உட்கார்ந்து இருப்பது போல் உங்கள் இரு புருவங்களுக்கு இடையில் வைத்து தியானிக்கவும்.

வெள்ளி (சுக்கிரன்) : தாமரை மிகுந்த மன அமைதியை, பொறுமையை, அளவற்ற சக்தியை தர வல்லது. அகன்ற குலத்தில் தாமரைகள் நிறைந்து இருப்பது போல் உங்களின் இரு புருவங்களுக்கு இடையில் நிறுத்தி பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் தியானித்து வரவும்.

சனி :  ஒரு வெள்ளை தாளில் (பேப்பர்) 2 அங்குல அளவிற்க்கு நீல வட்டமிட்டு அதை உங்களுக்கு எதிரில் (சற்று தள்ளி) வைத்து உட்கார்ந்த நிலையில் இரு புருவங்களுக்கு இடையில் நீலத்தை நிறுத்தி கண் திறந்த நிலையில் தியானித்து வரவும்.

மேற்கண்டவைகள் மிக பலத்த பலன் அளிக்க கூடியவை. பலன் கண்டிப்பாக ஓரிரு நாட்களில், வாரங்களில் தெரிந்து விட பலருக்கு சாத்தியமில்லை என்றாலும், இதில் கிடைக்க கூடிய பலன்கள் நிரந்தரமானவை-காலம் முழுதும் கிரக கோளாறுகள் நம்மை தாக்காத வண்ணம் பாதுக்காகக்கூடியவை. தொடர்ந்து செய்து பலன் கண்டு வரவும். 

Wednesday, 1 October 2014

சிம்ம ராசி / லக்னத்திற்கு வாழ் நாள் பரிகாரங்கள் (பொது)

ஆண்கள் :

மஹான்கள், சித்தர், குரு ஜீவ சமாதி தரிசனம் வாழ் நாள் முழுதும் அவசியம். முடிந்த போதெல்லாம் சென்று தரிசித்து வரலாம்.

தினம் ஆதித்ய ஹ்ருதயம் காலை சூரியன் எழுவதை பார்த்த வாரே கூறி வரவும். பின்பு 3 முறை சூரியனுக்கு நீர் வார்க்கவும். 

ஸ்ரீரங்கம் உடையவர் ஸ்ரீ ராமானுஜர் சன்னதி சென்று தரிசித்து வரவும். 

பெண்கள் :

முடிந்த போதெல்லாம் முருகருக்கு பால் அபிஷேகம் செய்து வரவும்.

தினசரி காலை மாலை "கருட பத்து " படித்து வரவும்-முடியாதவர்கள் ஒலி நாடாவில் கேட்டு வரலாம். 

சுதர்சன சக்கரம் வைத்து பூஜித்து வரவும்.

பவுர்ணமி தோறும் அம்மனுக்கு பால் பாயசம் நிவேதனம் செய்து அதை அனைவருக்கும் வழங்கி வரவும். 

கடக ராசி / லக்னத்திற்க்கு வாழ் நாள் பரிகாரங்கள் (பொது) 

ஆண்கள் :

திங்கள் தோறும் பார்வதியை தரிசித்து வாருங்கள். முடிந்த போது திருகடையூர் அபிராமி தரிசனம் செய்வது நன்மை தரும். 

வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் செவ்வரளி பூ சாற்றி நெய் தீபம் ஏற்றி துர்கையை வழிபடவும்.

கீழ்க்கண்ட சரபேஸ்வரர் காயத்ரி மந்திரத்தை உட்சரித்து வரவும் : 

ஷாலுவேஷாய வித்மஹே : பக்‌ஷி ராஜய தீமஹி 
தந்நோ ஸரப : ப்ரசோதயாத் 

பெண்கள் : 

விநாயகரை ஞாயிறு அன்றெல்லாம் நெய் விளக்கேற்றி கோவிலில் சென்று வழிபாட்டு வரவும். 

லலிதா சஹஸ்ரநாமம் செவ்வாய் அன்று வீட்டில் சிகப்பு வஸ்திரம் தரித்து கூறி வரவும். முடியாதவர்கள் சிகப்பு வஸ்திரம் தரித்து கண் மூடி 3 முறை லலிதா சஹஸ்ரநாமம் ஒலி நாடாவில் கேட்டு வரலாம்.

வியாழகிழமைகளில் இரவு 8-9 மணியளவில் விஷ்ணு சகஸ்ரநாமம் கூறி வரவும் Tuesday, 30 September 2014

கருடனை வழிபடுவதின் பலன்கள்ஞாயிறு - நோய்கள் நீங்கும்
திங்கள்  - குடும்பம் மேன்மை பெரும்
செவ்வாய் - வீரம் உண்டாகும்
புதன்      - எதிரிகள் தொல்லை நீங்கும்
வியாழன் - நீண்ட ஆயுள் பெறலாம்
வெள்ளி  -  மிகுந்த செல்வ வளம் உண்டாகும்
சனி     -    கர்ம வினைகள் நீங்கி மோட்சம் பெறலாம் 

உங்கள் நியாயமான நீதிமன்ற வழக்கு வெல்ல வேண்டுமா?

வழக்கு முடியும் வரை திங்கட்கிழமை தோறும் முடிந்தளவு பொங்கல் நிவேதனம் செய்து பின்பு அதை பிரசாதமாக கொடுத்து வரவும். நீங்கள் அதை உண்ண கூடாது. இப்படி செய்து வர வழக்கு வெகு விரைவில் வெற்றியை தேடி தரும். 

மிதுன ராசி / லக்னதிற்க்கு வாழ் நாள் முழுவதற்குமான பரிகாரங்கள் (பொது)


ஆண்கள் :

பவுர்ணமி தோறும் வீட்டில் சத்திய நாராயணர் பூஜை செய்து வரவும்

புதன்கிழமைகளில் 'திருவிடைமருதூர்' மூகாம்பிகையை வணங்கி வரவும்.வீட்டிலேயே படம் வைத்து நெய் தீபம் ஏற்றி வணங்கலாம். 

சுதர்சன யந்திரம் வைத்து தினசரி சுதர்சன மந்திரம் அல்லது சுதர்சன காயத்ரி கூறி வரவும்

கும்பகோணம் அருகிலுள்ள கதிராமங்கலம்-வன துர்கை மற்றும் திருமீயச்சூர் லலிதாம்பிகை வழிபாடு வருடத்திற்கு ஒரு முறை அவசியம். 

பெண்கள் :

விநாயகருக்கு செவ்வாய் கிழமையில் காலை 9-10:30க்குள்  எண்னை காப்பு செய்ய பணம் அல்லது நல்லெண்ணெய் கொடுத்து, எண்னை காப்பு முடிந்ததும் 7 முறை பிரதட்சிணம் செய்து பின்பு விநாயகர் பின்புறம் 7 அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடவும். முடிந்த போதெல்லாம் செய்யலாம்.  

முருகர் சன்னதி சென்று அடிக்கடி வழிபட்டு வரவும். வெள்ளியில் வேல் ன்று வாங்கி வைத்து தினமும் கந்தர் சஷ்டி கவசம் படித்து வரலாம்.முடியாதவர்கள் ஒலி நாடாவில் தினசரி 3 முறை கேட்டு வரலாம்.

ரிஷப ராசி / லக்னத்திற்கு வாழ் நாள் முழுதுவதற்குமான பரிகாரம் (பொது)ஆண்கள் :

(1) ஏதேனும் மகான் /சித்தர் ஜீவ சமாதி வழிபாடு அவசியம்
(2) ஸ்ரீ ரங்க நாதரின் வெள்ளிக்கிழமை விஷ்வரூப தரிசனம் வருடம் இரு முறை செய்யலாம்
(3) நாக பஞ்சமி அன்று அஷ்ட லிங்க வழிபாடு
(4) அமாவாசையில் வைரவன்பட்டி பைரவரை வழிபாடு செய்து வரவும்
(5) காளஹஸ்தியில் வருடம் ஒரு முறை ருத்ராபிஷேகம் செய்யவும்

பெண்கள் :

(1) வெள்ளிக்கிழமை காலை 6-7 அல்லது இரவு 8-9 மணிக்கு தாயாருக்கு (மஹாலக்ஷ்மி) நெய் தீபம் ஏற்றி வரவும்
(2) செவ்வாய் கிழமை 4-4.30 க்குள் எலுமிச்சை மாலை அணிவித்து துர்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்
(3) முடிந்த போதெல்லாம் வீட்டில் 'லலிதா சஹாஸ்ரநாமாம்" கூறி வரவும். முடியாதவர்கள் தினசரி ஒலி நாடாவில் கேட்டு வரலாம்.  
வலிய பிரச்சனைகளை தீர்க்க எளிய தாந்த்ரீக பரிகாரங்கள்(1) நீரிழிவு, ஞாபக மறதி, ஆஸ்துமா, மூச்சிறைப்பு போன்றவை ஜாதகத்தில் குரு கிரகத்தினால் ஏற்படுபவை ஆகும். இதற்கு வாழை மரத்தின் வேரை வியாழனன்று காலை 6-7 மணியளவில் எடுத்து மஞ்சள் பூசி, பின்பு மஞ்சள் நூலில் கட்டி கழுத்திலோ அல்லது கை மணிக்கட்டிலோ அணிந்து கொள்ள மேற்சொன்ன நோய்கள் விலகும். (வேர் எடுக்கும் முறை பல பதிவுகளில் கொடுத்துள்ளது-மந்திரம் எதுவும் தேவை இல்லை)

(2) கர்ம வினைகளால் பாதிப்பிற்க்கு உள்ளானோர், சனி, ராகுவினால் தொல்லைகளுக்கு உள்ளானோர், ஏழரை சனி மற்றும் ராகு,சனி திசை நடப்பில் உள்ளோர்-ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் நாள் முழுதும் தன்னுடன் யூக்கலிப்டஸ் மர இலையை தன்னுடன் வைத்திருக்க பாதிப்புகள் அகலும். ஒவ்வொரு சனியான்றும் வைத்திருக்கலாம்.

(3) எவ்வளவு பணம் வந்தும் சேமிக்க முடியவில்லை என கவலையில் உள்ளோர் தங்களின் உடைகள் வைக்கும் பீரோ மற்றும் பணம் வைக்கும் இடங்களில் கரு நீல துணியை விரிப்பாக உபயோகித்து வர பண விரயம் நிற்கும். சனிக்கிழமை தொடுங்குவது சிறப்பு.

(4) பண பிரச்சனைகளால் மிகுந்த அவதிக்கு ஆளானோர், ஒரு வெள்ளியன்று யாரும் பார்க்காத நேரத்தில் வேப்ப மரம் ஒன்றில் (மரத்திடம் மானசீக மன்னிப்பு கோரி) சிறிய துளையிட்டு அதில் சிறிய சதுர வடிவ வெள்ளியை வைத்து பின்பு மூடி விடவும். முன்னேற்றம் பின்பு கண் கூடாக தெரியும்.Sunday, 28 September 2014

மூலிகைகள் மற்றும் விருட்சங்கள் தரும் பயன்கள்-2


வியாழனிற்க்கு மிக அற்புதமான ஒரு பரிகாரம் அத்தி மரத்தின் வேர்.
மேலும் மண வாழ்க்கையில் நிம்மதியின்மை,திருமண தடைகள் மற்றும் குடி அல்லது வேறு ஏதேனும் போதை பழக்கத்திலிருந்து விலக இதை வலது கையில் அணிந்து கொள்ளலாம். மஞ்சள் நிற நூலில் கட்டி அணிய வேண்டும். குழந்தை பேற்றிற்க்கும் இதை மஞ்சள் நூலில் இடுப்பை சுற்றி ஆண் பெண் இருவரும் (தம்பதியர்) கட்டி கொள்ள நன்மை நடக்கும். வாஸ்து தோஷம் உள்ள வீடுகள், வீடுகளில் உள்ள நபர்களுக்கு அடிக்கடி உடல் நிலை கோளாறு போன்றவை உள்ள மனையில் இதன் வேரை செப்பு தாயத்தில் அடைத்து தோஷமுள்ள இடத்தில் வைக்க தோஷம் நிவர்த்தியாகும். தெற்கு மற்றும் மேற்கு பார்த்த அனைத்து வீடுகளிலும் வைக்கலாம். திடீரென்று உறவுகளுக்குள் பிரச்னை போன்றவை ஏற்படின் இதன் வேரை வெள்ளி தாயத்தில் இட்டு மஞ்சள் நூல் கட்டி கழுத்தில் அணிந்து கொள்ள பிரச்னை விலகும். யோகா மற்றும் மந்திர, தந்திர சாதனைகள் செய்வோர், ஆன்மீகத்தில் உயர்வு பெற விரும்புவோர் மற்றும் திடமான மன நிலை வேண்டுவோர் இதன் வேரை சந்தனாதி தைலம் மற்றும் கற்பூர தைலம் சேர்த்து அரைத்து நெற்றியில் திலகமாக இட்டு பின் தியானத்திலோ, அல்லது படிக்கவோ அமரலாம். நல்ல முன்னேற்றம் தரும். (இந்த தைலங்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)
இதன் வேரை எடுக்க:
ஓரளவு வளர்ந்த செடியாக வாங்கி வீட்டில் வைத்து 12 நாட்கள் மஞ்சள் நீர் ஊற்றி வளர்த்து வரவும். பின்பு ஒரு வியாழன் அன்று காலை 6-7 மணிக்கு செடிக்கு நீர் ஊற்றி தீப தூபம் காண்பித்து, திராட்சை அல்லது பேரிட்சம் பழம் வைத்து நிவேதனம் செய்து, மரத்திடம் மானசீகமாக அனுமதி வேண்டி, ஆணி வேர் அறுகாமல், ஆயுதம் படாமல் சிறிது வேர் எடுத்து பின்பு மீண்டும் செடியை எடுத்த மண்ணிலேயே வைத்து மஞ்சள் நீர் ஊற்றி வளர்த்து வரவும். செடியின் வளர்ச்சியில் வேர் வேலை செய்யுமா என அறிந்து கொள்ளலாம். வீடுகளில் அதை தொடர்ந்து வளர்க்க முடியதோர், சிறிது வளர்ந்ததும் கோவிலிலோ அல்லது ஏதும் இது போன்ற செடி விற்கும் கார்டன்களில் கூட இலவசமாக கொடுத்து பராமரிக்க சொல்லலாம். எடுத்த வேறை மஞ்சள் நீரால் சுத்தப்படுத்தி தூப தீபம் காண்பித்து பின்பு கீழ்க்கண்ட மந்திரத்தை
-"ஓம் பிரஹஸ்பதயே நமஹ"
12 நாட்கள் ஒரு நாள் 1008 முறை வீதம் 11 நாட்கள் கூறி (சூரியன் அஸ்தமணத்திற்க்கு முன் செய்யலாம். காலை வேளை உசிதம்) பின்பு கடைசி நாள் 912 முறை கூறி நிவேதனம் செய்து எடுத்து உபயோகிக்கலாம். நல்ல பலன் தரும்.