Wednesday, 28 September 2016

பண வரவு இருந்து கொண்டே இருக்க


தொழில் செய்யும் இடம் அல்லது வீட்டில் பணவரத்து இருந்து கொண்டே இருக்க : சிறிது துளசி இலைகளை அரைத்து பச்சை நிற மெழுகுவற்றியில் தடவி சிறிது நேரம் காயவைத்து பின்னர் புதன் தோறும் அவற்றை ஏற்றி வர, பண வரவு மிகும். நாள் முழுதும் செய்யலாம்.

தகுந்த நபரை திருமணம் செய்யஒவ்வொரு செடிகள்,மூலிகைகள் மற்றும் அதன் வேர்கள், காய்கள்,பழங்கள்,விதைகள் என அனைத்திற்குமே விசேஷ சக்திகளும், கிரகங்களின் ஆகர்ஷண சக்தியும் உண்டு. அப்படிப்பட்டதில் ஒன்று :

திருமணத்திற்காக காத்திருப்போர்,தனக்குரிய நல்ல நபர் தேடி வர 9 பட்டாணிகள் கொண்ட பச்சை பட்டாணியை (பிரிக்காமல்) தான்  வசிக்கும் இடத்தின் வாசலில் தொங்க விட, விரைவில் தகுந்த நபர் தேடி வருவார்.

நெருப்பு விபத்திலிருந்து தப்பவீட்டில் அடிக்கடி யாரேனும் நெருப்பு சூடு பட்டு கொண்டிருந்தால், அல்லது சமைலயறையில் வேலை செய்யும் சமயம், நெருப்பு பற்றிய பயம் இருப்பின், சமையலறையில் சிறிய அளவிலான சோற்று காற்றாழை செடியை வளர்த்து வர, மேற்கண்ட விஷயங்களில் இருந்து தப்பலாம். எப்படி துளசி பண விவகாரங்கள் மற்றும் நற்செயல்கள் நடக்க உதவுமோ, அதே போன்ற அமானுஷ்ய சக்தி மேற்கண்ட செடிக்கு உண்டு. 

செய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெறவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், அச்சமயம் ஒரு சிறிய கரித்துண்டை நம் பாக்கெட்டில் இட்டு செல்ல மேற்சொன்ன விடயங்களில் இருந்து காப்பு பெறலாம்

Monday, 26 September 2016

மண் பானை நீரின் மகத்துவங்கள்

அன்பர்களை நம் முன்னோர்கள் வழிகாட்டுதலின் படி ஆரோக்கியமான ஆன்மீக நடத்தைகளுக்கு மட்டுமல்லாது, ஆரோக்கியமான உடல் மற்றும் மன நலன்களுக்கும் நாம் முறைகளை கூறி வந்துள்ளோம்.

மண் பானையில் சமைத்தல், நீர் அருந்துதல் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய, தற்சமயம் நாம் கடைபிடிக்க தவறிவிட்ட ஒன்றாகும். உடலில் உஷ்ணத்தை அடியோடு குறைக்கும் தன்மை கொண்டது இது. மாறாக தற்சமயம் பிரிட்ஜில் வைத்து நீர் அருந்தி வருவதால் பல கண்ணுக்கு தெரியாத கோளாறுகளை, சந்தித்து வருகின்றோம். உடல் அமைதி இழக்க, மனம் அமைதி இழக்கும். மனம் அமைதி இழக்க செய்யும் செயல்களில் உறுதியற்று போகும். செய்யும் செயல்கள் மற்றும் எடுக்கும் முடிவுகள் தவறானால், பெரும் சிக்கலை சந்திக்க நேரும். பலரின் தொடர்ந்த வேண்டுகோளை அடுத்து நம் சென்டரில் மண் பாட்டில்கள் மற்றும் டம்பளர் அறிமுகப்படுத்தியுள்ளோம். அழிந்து வரும் கலையான இது, தகுந்த நபர் மூலம் செவ்வனே செய்யப்பட்டு தருவிக்கப்பட்டுள்ளது. உபயோகிக்க எளிதான இவை உடலில் சேரும் நச்சு தன்மையை தடுக்கும். மேலும், டூத்பேஸ்ட்டுகள் மூலம் அன்றாடம் நம் உடலில் சேரும் நச்சு தன்மையுள்ள ஃப்ளோரைடுகளை இவை குறைக்கும் தன்மையுள்ளது. விருப்பமுள்ளோர் வாங்கி பயன் பெறலாம்.

பாட்டில்கள் ரூ.200 மற்றும் டம்பளர் ரூ.50 மட்டும்.

அழைக்க : +918754402857 

Sunday, 25 September 2016

ஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்ஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் மீளாத்துன்பத்தில் இருந்தார். தனக்கு ஏன்  இந்த நிலை என மனம் வருந்தினார். அவரின் நிலையினை சோதித்ததில், அவர் வழிபட்டு வரும் தேவதை, தெய்வத்தின் ஆற்றல் அவருக்கு உதவும் நிலையில் இல்லை என தெரிந்தது. ஒவ்வொருவரும் தனக்கு இஷ்டமான  தெய்வங்களை வழிபட்டு, ஆராதனை செய்து வந்தாலும், முக்கியமாக அவருக்கு உதவும் நிலையில் உள்ள தெய்வம் அல்லது தேவதை என உண்டு. அடுத்ததாக அவருக்கு வாழ் நாள் முழுதும் அதிர்ஷ்டம் மற்றும் பண வரவை கொடுக்கும் தெய்வம். மூன்றாவதாக, தற்சமயம் பிரச்சனைகள் நீங்க வழிபட வேண்டிய தெய்வம். இந்த மூன்றையும் முறைப்படி கடைபிடிக்க, நம் தொல்லைகளில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம். இது தெரியாமல் நாம் செய்து வரும் வழிபாடுகள், நமக்கு மன அமைதியையும், ஞானத்தையும் தருவது உறுதி என்றாலும் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது கடினமே. மேலும் பரிகார வகைகளில் பல உண்டு, உதாரணத்திற்கு சில முக்கிய மூலிகைகள், இலைகள் அல்லது பொடிகளை போட்டு தினசரி நீராடிவருவதும் பலம் வாய்ந்த ஓர் பரிகாரமாகும். இவைகள் அனைத்தும் நம் கிரந்தங்களில் உள்ளவை. மேற்கண்டவற்றை அவருக்கு விளக்கி கூறி, அவருக்கு உரிய முக்கிய மூன்று தெய்வங்களை வழிபட கூறினோம். மேலும், தற்சமயம் வழிபட்டு வரும் தெய்வ ஆராதனைகளும் தொடருமாறு கூறப்பட்டது, மிக பெரும் துன்பத்தில் இருந்த அவர் மேற்கண்ட வழிபாடு முறையை தொடங்கியதும், சிறிது சிறிதாக, சூரியனை கண்ட
பனி போல் பிரச்சனைகளில் இருந்து வெளிவந்தார்.

(குறிப்பு : இந்த கட்டுரை குலதெய்வத்தை பற்றியது அல்ல-குலதெய்வ வழிபாடு மிக அவசியம். )