Saturday, 12 August 2017

பணம் பல வழிகளில் வர

சனிக்கிழமை
தோறும்  காலை ஆறிலிருந்து ஏழு மணிக்குள் எழுகையில் எந்த மூக்கின் வழியே மூச்சு வருகிறதோ அந்த பக்கத்து கைகளால் முகத்தை முழுதும் துடைத்து கொண்டு, அதே பக்கத்து கால்களால் முதல் அடி வைத்து நடந்து, பின் பல் துலக்கி, ஆண்களாயின் இடது புற உள்ளங்காலிலும், பாதத்தின் பின் புறமும், நல்லெண்ணெய் சிறிது தடவி விட்டு, சூரியனை பார்த்து வணங்கி வர பணத்தடைகள் நீங்கி பல வழிகளில் தனம் சேரும். நல்லெண்ணெய்  பெண்களாயின் வலது புறம் தடவி வரவும்.  

Thursday, 10 August 2017

அனைத்து தேவைகளும் தீர்க்கும் வசிய யந்திரங்கள்


யந்திரம் : மனித வாழ்வில் ஏற்படும் பல்வேறு சோதனைகளுக்கும் தீர்வாக  தாந்த்ரீகத்தில் பல் வேறு யந்திர முறைகள் உள்ளன. தகுந்த நேரம்,நட்சத்திரம், நாள் போன்றவை இனம் கண்டு உபாசனையுடன் இவற்றை பூஜிக்க, தான் சென்று சேரும் இடத்தின் தேவைகளை செவ்வனே பூர்த்தி செய்யும்.

துஷ்ட சக்திகள் அகல, கணவன் மனைவி அன்னியோன்னியம், வியாபார/தொழில் வெற்றி, பணத்தடைகள் நீங்க, மன வியாதி அகல, தீராத வியாதிகள் தீர, புகுந்த வீட்டில் பெண் நிம்மதியாக வாழ, நலிந்த தொழில்கள் வீறு நடை போட, எதிரிகளால் தொல்லைகள் நிற்க,விரும்பியவர் வசப்பட,  என சொல்லி கொண்டே போகலாம். இது மட்டுமல்லாது கிரக கோளாறுகளுக்கும், ஒவ்வொரு தெய்வம் மற்றும் தேவதைகளுக்கும் என யந்திர முறைகள் உள்ளன. எம் அனுபவத்தில் இவற்றை கொடுத்து நாம் கூறிய முறையில் உபயோகம் செய்து வருகிறவர்கள் மிகுந்த வெற்றியை பெற்றுள்ளனர். சமீபத்தில், திருவண்ணாமலையை அடுத்து சிறிய மடம் நிறுவி நடத்தி வரும் நிறுவனர் ஒருவர், தினசரி அன்னதானம் மற்றும் இதர செலவுகளுக்கு ஒவ்வொரு மாதமும் தகுந்த நன்கொடை கிட்டாமல் திண்டாடி வந்தார். அவரின் தொடர்ந்த வேண்டுகோளுக்கு இணைந்து, அவ்விடத்தில் ஏதேனும் குறை உள்ளதா என சென்று பார்த்து வந்தோம். அவ்விடத்தில் யோகினிகளின் சூட்சும நடமாட்டம் உள்ளதும், அவர்களுக்கு உபாசனை செய்யாமல் இருப்பதால், மனக்குறையுடன்  இருப்பதும் தென்பட்டது. உண்மையில் நம்மை சுற்றி பல வித சூட்சும சக்திகள் இயங்கி கொண்டிருக்கும். அவற்றில் தெய்வீக சூட்சும சக்திகள் ஏதேனும் விருப்பம் கொண்டு வந்தமர்ந்து, அவற்றை அறியாமல் நாம் திருப்தி செய்ய தவறின், சில கஷ்டங்களுக்கு உட்படுவோம். இதை உணர்ந்து, அவருக்கு அறுபத்து நான்கு யோகினிகள் (இவர்களுடைய கோவில் ஒரிசாவில் உள்ள புவனேஸ்வரில் உள்ளது-மேல்விவரங்களுக்கு எம்முடைய யோகினிகளை பற்றி பழைய பதிவுகளை காணவும் ) யந்திரம் உபாசனையுடன் கொடுத்து பிரதிஷ்டை செய்து, பூஜிக்கும் முறைகளை கூறினோம். தற்சமயம், வியத்தகு முறையில் முன்னேற்றம் கண்டதோடு மட்டுமல்லாமல் அருகிலிருக்கும் இடத்தையும் வாங்கி விரிவு படுத்தி  அடுத்த மாதம் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

மேலும் முக்காலத்தையும் கூறும் பஞ்சாங்குலி தேவி யந்திரந்தை, ,உபாசனை முறையை பற்றி அடுத்த பதிவுகளில் பார்ப்போம்
...

குரு பெயர்ச்சி சூட்சும பரிகார ஹோமம் 2017

நமசிவய
மந்திர உருவேற்றப்பெற்ற இயற்கை பட்டு கைக்குட்டை வழங்க இருக்கும் -
குரு பெயர்ச்சி சூட்சும பரிகார ஹோமம் -2017
நாள் : 02.9.17
நேரம் : 9 மணி முதல் 2 மணி வரை
இடம் : பாணி கிரஹா திருமண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை.
மேற்கண்ட நாளில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு சூட்சும ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் பல சிறப்புகளும் சூட்சுமங்களும் உள்ளது. அதை பற்றி விரிவாக வரும் பதிவுகளில் காண்போம்.
குடும்ப சகிதம் சங்கல்பம் செய்து கொள்ளலாம். எவ்வித கட்டணமும் இல்லை. பூஜை பொருட்கள், பூ பழங்கள், போன்றவற்றை விருப்பமுள்ளோர் வழங்கி இத்தெய்வீக காரியத்தின் புண்ணிய பலனை முழுமையாக பெறலாம். பொருளுதவியும் ஏற்று கொள்ளப்படும்- மண்டபம், பூஜை பொருட்கள், சுத்தம் செய்வோருக்கான கட்டணம் போன்றவற்றில் எதற்காக செய்கிறோம் என குறிப்பிட்டு அனுப்பவும். மேலும் இது பற்றி விவரங்கள் வெளிவரும். இந்த ஹோமத்தின் பரிகார பலன் எவ்வளவு மகத்தானது, மேலும் இவை உங்கள் வாழ்வில் வரும் ஒரு வருடம் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரும் என்பது வரும் பதிவுகளில் விளக்கப்படும். ஆன்மீக பசியோடு காத்திருங்கள்.
அனைவருக்கும் நிவேதன அன்னம் மற்றும் பிரசாதமாக மந்திர உருவேற்றப்பெற்ற மஞ்சள் கைக்குட்டை மற்றும் இதர பிரசாதங்கள் வழங்கப்படும். அதீத சூட்சுமங்களை கொண்டது மேற்கண்ட இயற்கை பட்டு கைக்குட்டை. வெளியூர் வாழ் அன்பர்கள், தகுந்த தபால் தலையுடன் கூடிய கவர்கள் அனுப்பி வைப்பின், பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். தங்கள் பெயர், குடும்பத்தினர் பெயர்கள் மற்றும் நட்சத்திர கோத்திர விவரங்கள் எழுதி அனுப்ப மறந்துவிடாதீர்.
ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Tuesday, 8 August 2017

தன வசியத்திற்கு ஸ்ரீபால்-பொடித்தேங்காய்

இவற்றை பற்றி பழைய பதிவுகளில் கொடுத்துள்ளோம். இதன் பல் வேறு உபயோகங்களை இந்த பதிவில் பார்ப்போம். பொதுவாக தேங்காய்கள் கணபதி மற்றும் மஹாலக்ஷ்மி அம்சமாகும்.

இவற்றில் ஏகாக்ஷி தேங்காய் -ஒற்றை கண் உள்ளது.
த்விவாக்ஷி தேங்காய்- இரண்டு கண்கள் உடையது
நிராக்ஷி தேங்காய்- கண்களே இல்லாதது மற்றும் தாந்த்ரீக பூஜையில் கும்ப கலசத்தில் வைத்து வழிபடப்படும் பச்சை நிற தேங்காய் என சில வகைகள் உள்ளன. இவற்றில் ஸ்ரீபால் என அழைக்கப்படும் பொடித்தேங்காய் தாந்த்ரீக பூஜைகளில் தன ஆகர்ஷண பூஜைக்கு உபயோகிக்கப்படும் ஒன்று,

இவற்றை கழுத்தில் பதக்கம் போலும், வீட்டின்  பூஜையறையிலும், பணப்பெட்டியிலும்  வைத்திருக்க அவ்விடம் தன வசியத்திற்கு உள்ளாகின்றது.  கடன் சுமை குறைய, எதிர்பாராத பண வரவிற்கு இதை வைத்திருக்கலாம். வீட்டின் பணப்பெட்டியில் ஆறு பொடித்தேங்காய்களை     வைத்து தினசரி தீப தூபம்  காட்டி "ஸ்ரீம்" என்ற பீஜ மந்திரத்தை மனதினுள் கூறி வர, வற்றாத செல்வ நிலையை அடையலாம். திருமணம் தடைபடுவோர், இந்த தேங்காயில் மஞ்சள் தடவி, மேற்கண்ட மந்திரத்தை அறுவது முறை கூறி தூப தீபம் காட்டி வழிபட்டு வர, திருமணத்தடைகள் நீங்கும்.

வீட்டில் / தொழில் செய்யும் இடத்தில ஆறு வெள்ளிக்கிழமைகள், மஹாலக்ஷ்மி தாயார் படத்திற்கு, ஆறு பொடித்தேங்காயினை வெள்ளை நிற நூலில் கட்டி, மாலையாக இட்டு, மேற்கண்ட பீஜ மந்திரத்தை 150 முறை கூறி வழிபட்டு, தூப தீபம் காட்டி, வெள்ளை கேசரி நிவேதனம் செய்து, பின் ஆறு வெள்ளிகள் முடிந்ததும், அவற்றை பணப்பெட்டியில் அல்லது தன்னூடே வைத்திருக்க, அசாத்தியமான பணத்தேவைகளையும் எளிதில் தீர வைக்கும், மஹாலக்ஷ்மி ரூபத்தில் உள்ள இந்த பொடித்தேங்காய்.

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Sunday, 6 August 2017

இழந்த சொத்துக்கள், கொடுத்த பணம் திரும்பி வர


சொத்துக்களை இழந்தோரும், ஏமாற்றி பிடுங்கப்பெற்றோரும்,வர வேண்டிய நியாயமான சொத்துக்கள் வராமல் தவிப்போரும், திரும்ப கிடைக்கும் என நினைத்து கொடுத்த பணத்தை இழந்தோரும், மேற்கண்ட நிலை மாற, தொடர்ந்து 27 பஞ்சமிகள், மாலை வேளையில் சிவன் சன்னதியில் சிகப்பு திரி கொண்டு மண் அகலில் இலுப்பெண்ணெய் தீபம் 9 ஏற்றி மனமுருகி வேண்டி வர, பரிகாரம் முடிவதற்குள் பலன் கை மேல்.

குறிப்பு : இந்த பரிகாரம் செய்யும் நாள் அசைவம்-முட்டை உட்பட தவிர்க்க வேண்டும். அதிக வட்டிக்கு பணத்தை கொடுத்து விட்டு, அதீதமாய் ஆசைப்படுவோர் மேற்கண்ட பரிகாரம் செய்து பலன் பெற முடியாது.

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com