Saturday, 26 August 2017

உடனடி பலனளிக்கும் பரிகார முறைகள்

சமீபத்தில் நடந்த ஒரு புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்த பொழுது திடீரென்று,
அங்கு வந்திருந்த ஒரு அம்மையார் வணக்கம் தெரிவித்தார். பதிலுக்கு வணக்கம் கூறிவிட்டு விசாரித்ததில், அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன், தன்  மகனுக்காக தாந்த்ரீக ஜோதிட ஆலோசனைக்கு  வந்திருந்ததையும், நாம் பரிகாரம் கூறியதையும் குறிப்பிட்டு, தற்சமயம் மீண்டும் ஆலோசனை தேவை என்றும், தொலைபேசி எண்ணை மறந்து விட்டு, தவித்து கொண்டிருக்கையில், தெய்வ அருளால் நேரில் சந்தித்து விட்டேன் என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.அப்பொழுது பழைய விஷயங்கள் நினைவிற்கு வரவே, அவருக்கு ஆலோசனை தர விருப்பமில்லை எனவும், வேறு தகுந்த நபரை சந்திக்குமாறும் கூறினேன். காரணம், அந்த சமயத்தில், இவர், தன் 22  வயது மகனுடன் வந்திருந்தார். அந்த மாணவனுக்கு இவற்றில் எல்லாம் நம்பிக்கையில்லை, அது மட்டுமின்றி இவற்றில் ஓர் இளப்பம் இருந்தது. அவர்களின் விஷயங்களை கணித்து கொண்டிருக்கையில், அந்த மாணவன் , தாயின் வற்புறுத்தலால், பல நபரை சந்தித்து விட்டதாகவும், ஒரு பிரஜோனமும் இல்லை என்றதோடு மட்டுமல்லாமல், தான் சந்தித்த நபர்களின் பெயரையும் குறிப்பிட்டு, அவர்களெல்லாம் வெறும் கட்டு கதை என்றான். அவர் கூறிய நபர்களெல்லம், மிக அதிக முதிர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்ல, மிகுந்த ஞானம் உள்ளவரும் கூட. எனக்கு ஏற்பட்ட கோபத்தை அடக்கி கொண்டு அவருக்கு தேவையான பரிகாரத்தை கூறி அனுப்பி வைத்தேன். அதாவது, அயல் நாட்டிற்கு சென்று படிக்க துடித்து வந்த அந்த நபர், கடந்த ஒரு வருடமாக முயற்சித்தும் பலன் இல்லை. அதுவே, ஆற்றாமைக்கு காரணம். அது மட்டுமின்றி, பலரையும் ஆலோசித்தும், அவர்கள் கூறிய பரிகாரங்கள் எதையும் செய்யவில்லை !! நோய்க்கு மருத்துவரிடம் சென்று, அவர் கொடுக்கும் மருந்துகளை உண்ணாது, அவரை குறை கூறும் நிலை தான் இது.

நான் தொடர்ந்து 48 தினங்கள், அதிகாலையில் சூரியனை தரிசித்து சில விஷயங்கள் செய்யுமாறு கூறியிருந்ததை கண்டு, கிளம்பு முன், தனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை, எனினும், சூரியனை பார்ப்பது 'சன் கேசிங்' என்று வெளிநாட்டில் புகழ் பெற்ற முறை, அதனால் முயற்சிக்கிறேன் என கூறி சென்றான். இதை நினைவில் வைத்து அந்த தாயிடம் கூறியபொழுது, அழாத குறையாக, 'சார், நீங்கள் சொன்னதை செய்த 27 வது நாளே, விசா கிடைத்து விட்டது, அப்படி போகும் சமயமும், தன் முயற்சியால் தான் வந்தது என கூறி சென்றான், ஆனால், அங்கு சென்று படித்து கொண்டே வேலை செய்து சம்பாதிக்கவும் செய்தான், தற்சமயம் ஒரு பிரச்சனையில் சிக்கி, இங்கு திரும்பி விட்டான், அவன் தற்பொழுது நிறைய மாறி விட்டான், அவன் கூறி தான் உங்களை தேடி கொண்டுள்ளோம் என மிக வேண்டி கேட்கவே, தொலைபேசி எண் கொடுத்து, ஆலோசனைக்கு நேரம் கேட்டு கொள்ளும்படி கூறினேன்.

பரிகார முறைகளில், பல சூட்சுமங்கள் உண்டு. அதை பற்றியெல்லாம் அலசி ஆராயாமல், உண்மையை கண்டு கொள்ளாமல், பிறரை ஏசினால் மேற்கண்ட நிலை தான் மிஞ்சும். ஜோதிடம், தாந்த்ரீகம், ஸ்வர சாஸ்திரம், ரத்ன சாஸ்திரம் போன்றவை மிக அதீத சக்தி வாய்ந்தவை மட்டுமல்ல. அறிவியல் சார்ந்த உண்மையும் கூட. 

Friday, 25 August 2017

மாந்த்ரீக மூலிகை ரகசியங்கள்தற்சமயம் பலர், ஒவ்வொரு மாந்த்ரீக மூலிகைகளின் பெயரை சொல்லி, பத்திரிகைகளில், இது அதை செய்யும்,இதை செய்யும் என விளம்பரம் தருவதை கண்டு வருகிறேன். என்னிடம் ஒருவர், இவை உங்களிடம் உள்ளதா எனவும் அது பயன் தருமா என்றும் கேட்க, அவருக்கு கூறிய பதிலை உங்களுடன் பகிர்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன், சதுரகிரி மற்றும் கொல்லி மலை போன்ற மலை பகுதிகளில், தகுதியான நபர்களை கொண்டு, எடுக்க வேண்டிய முறைகளை கூறி எடுத்து, உபயோகித்து வந்தோம். தற்சமயம், வெகு முக்கியமான, சவாலான விஷயங்களுக்கு மட்டுமே அரிதாக எடுத்து தேவைப்படுபவர்களுக்கு உரிய முறைகள் செய்து கொடுத்து வருகிறோம். இது போன்ற மூலிகைகளை கொண்டு வெற்றிக்கான அஞ்சனமும் தயாரித்ததுண்டு. இருப்பினும், சிலர் அதை நாம் கூறும் வண்ணம் உபயோகிக்காமல், தவறான செயல்களுக்கு உபயோகம் செய்வதை அறிந்ததால், அதையும் குறைத்து கொண்டு விட்டோம்.

மேற்சொன்னவாறு, மூலிகைகள் கண்டிப்பாக இந்த காலத்திலும் பலன் தரக்கூடியவைகளே, அது மட்டுமின்றி, அதிசயங்களையும் நடத்த வல்லவை. ஆனால், அவற்றிற்கென பல கட்டுப்பாடுகள் உள்ளன.

குறிப்பிட்ட கிழமை, நட்சத்திரம் மற்றும் ஹோரை முக்கியம்-அப்படி மூலிகைகளை எடுப்பதற்கு.

எடுக்கும் மூலிகைகளை காப்பு கட்டி எடுக்கவேண்டும். வெறுமே, புத்தகங்களில் படித்து விட்டு, மஞ்சள் காப்பு கட்டி எடுப்பதில்  ஒரு பயனும் இல்லை. காப்பு கட்டி எடுக்கும் முறை என்பது நீண்ட விஷயங்களை கொண்ட ஒன்றாகும். அப்படி எடுக்கும் சமயம், அதற்கான மூல மந்திரம் கொண்டு ஜெபித்து எடுத்தால் மட்டுமே பயன்.

அப்படி எடுக்கப்படும் மூலிகையை, எந்த கர்மத்திற்காக (வசியம், மோஹனம், ஆக்ரூஷணம் போன்று..) உபயோகிக்கின்றோமோ,  அதற்குரிய  மந்திர ஜெபம் செய்து சக்தியூட்டி கொடுத்தால் மட்டுமே பயன் தரும். ஒவ்வொருவருக்கும், தனித்தனியாக ஜெபம் செய்ய வேண்டும். எனவே, கடைசரக்கு போன்று இவற்றை விற்பதால், என்ன பயன் தரும் என்பது சந்தேகமே.

கடைசியாக, அப்படிப்பட்ட மூலிகைகளை, உடலில் துணியின்றி எடுக்க வேண்டும் என்பது நியதி. அப்படி செய்தால் மட்டுமே பலன். அதனால் தான் மேற்சொன்னவாறு, அதற்குரிய ஆட்களை கொண்டு எடுக்கப்ப
ட்டது.

நம் சித்தர்கள் சொன்ன,ஒவ்வொரு முறையுமே மிகுந்த பலன் தரக்கூடியவையே, முறையாக செய்தால். 

Wednesday, 23 August 2017

பதினாறு நாட்களில் பலன் தரும் அகத்தியர் வசிய விநாயகர்

வெள்ளெருக்கும் வன்னியும் கலந்த மிக அதீத சக்தி வாய்ந்த தொழில் ,வேலை
,அரசு வேலை, மற்றும் காரியத்தடை நீக்கும் விநாயகர் பற்றி சென்ற வருடம் குறிப்பிட்டிருந்தோம். தற்சமயம் அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மீண்டும் மேற்கண்ட சிலைகள் செய்விக்கப்பட்டுள்ளது- குறைந்த அளவில். மேலும் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி வைக்கும் அகத்தியர் அருளிய சூட்சும மூலிகை வசிய விநாயகரும் செய்விக்கப்பட்டுள்ளது. இந்த வசிய விநாயகர் பதினாறு நாட்களில் பலன் தருவார் என்பது அகத்தியர் கூற்று மட்டுமல்ல- நாம் கண்கூடாக அனுபவத்தில் கண்ட உண்மையும் கூட.

சென்னை மற்றும் கரூரில் கிடைக்கும்
+919840130156 / +918754402857 / +917010059413

விநாயகர் சதுர்த்தி நாளில் நன்மை சேர்க்கும் நவ விநாயக வழிபாடு

விநாயகர் சதுர்த்தி நாளில் நன்மை சேர்க்கும் நவ விநாயக வழிபாடு
வெள்ளெருக்கன் வன்னி விநாயகரை பற்றி குறிப்பிட்டிருந்தோம், வருடத்தில் ஒரு முறை மட்டுமே கிடைக்க கூடிய அறிய வாய்ப்பான இந்த விநாயகர் சதுர்த்தியில் மேற்கண்ட வெள்ளெருக்கன் வன்னி விநாயகரை வைத்து அவர் முன் , வீட்டிலேயே எட்டு வகை பிள்ளையாரை பிடித்து வைத்து வழிபட எல்லா வித நன்மைகளும் வந்து சேரும். அவற்றை இப்பொழுது பார்ப்போம்.

வெள்ளெருக்கன் வன்னி விநாயகர் அனைத்து வித வாழ்வியல் தடைகளையும் நீக்க வல்லவர். இவர் முன் மஞ்சள் பிள்ளையாரை  பிடித்து வைக்க, திருமண மற்றும் சுபதடைகள் நீங்கும். அதனுடன் வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைக்க, சௌபாக்கியம் சேரும், அதனுடன் உப்பில் பிள்ளையார் பிடித்து வைக்க, எதிரிகளால் தொல்லை மற்றும் கடன் தொல்லை அகலும், அதனுடன் வேப்பம் இலைகளை குழைத்து பிள்ளையார் பிடிக்க, அனைத்திலும் வெற்றி உண்டாகும், மேலும், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடிக்க, நினைத்த காரியங்கள் நிறைவேறும், அதனுடன் வெண்ணையில்  பிள்ளையார் பிடிக்க, தீராத வியாதிகள் தீரும், எட்டாவதாக பச்சரிசி மாவு கொண்டு பிள்ளையார் பிடிக்க, வீட்டில் உணவு பொருட்களுக்கு குறையேதும் வராத வண்ண இருக்கும், கடைசியாக மண் பிள்ளையார் பிடித்து வைக்க, ராஜ யோகங்களை பெறலாம்.

இது போன்று ஒன்பது பிள்ளையார்களை வைத்து வழிபட்டு, நிவேதனம் செய்து, பின் மறுநாள் அஷ்ட பிள்ளையார்களை மட்டும் ஆற்றிலோ அல்லது நீர் நிலையிலோ சேர்த்து விட்டு வழிபட்டு வரலாம்.

தனிப்பட்ட முறையில், தெருவோரங்களில் வாங்கப்படும் கலர் பிள்ளையார்களை வைத்து வழிபாடு இந்நாளில் செய்வது தகாத ஒன்றாகும். வண்ணம் சேர்க்கப்படாத களிமண் பிள்ளையார்கள் வாங்கலாம். அவரவர்கள் தங்கள் கைகளால் மறு நாள் மறு பூஜை செய்து, நிவேதனமிட்டு, பின் கடலில் அல்லது நீர் நிலைகளில் சேர்ப்பது மட்டுமே பலன் தரும். பலர், தெருக்களில் காட்சிக்காக வைக்கப்படும் பிள்ளையார் சிலைகளுடன்,தாங்கள் பூஜித்த பிள்ளையாரை சேர்த்து விடுகின்றனர். இது பாவச்செயலாகும். 

Sunday, 20 August 2017

கடன் பெற்று கலங்கி நிற்போர்க்கு ஒரு நற்செய்தி

நமசிவய


சில நேரங்களில், நாட்களில், நட்சத்திர ,திதி மற்றும் கரணங்களில் வாங்கும் கடனானது, எவ்வளவோ பணம் வந்தும் அடைக்க முடியாமல், பல மடங்கு வட்டி கட்டி சிரமத்திற்கு உள்ளாவதும், சிலருக்கு வட்டியே கட்ட  முடியாமல், அவமானத்திற்கு உள்ளாவதும்  நேரும். அப்படிப்பட்டோர்க்கு தான் இந்த நற்செய்தி. வரும் 29.08.17  செவ்வாயன்று 11.40 AM மணியிலிருந்து 1:40 PM மணிக்குள் நீங்கள் வாங்கிய கடனில், ஒரு மிக சிறு பகுதியை, முதலுக்காக, வைத்து கொள்ளும்படி, கடன் கொடுத்தவரிடம் கூறி கொடுக்கவும். நீங்களே அசரும் வண்ணம் வெகு வேகமாக அந்த கடன் அடைவதை அனுபவத்தில் காணலாம். அப்படிபட்ட அசாத்திய  சக்தியுள்ள மைத்ர முகூர்த்த நேரம் மேற்கண்டது. விரைவில் உங்கள் அனைவரின் கடனும் அடைபட்டு, சிறப்போடு வாழ, என் அன்றாட வழிபாட்டில் பிரார்த்திக்கின்றேன்.

ஹரி ஓம் தத் சத்