Saturday, 2 September 2017

குரு பெயர்ச்சி ஹோமம்-2.9.17


இன்று எல்லாம் வல்ல இறைவனின் பரிபூரண அனுகிரஹத்தினாலும் பல நல்ல உள்ளங்களினாலும் மேற்கண்ட ஹோமம், எளிய முறையில், அதே சமயம், மிக நல்ல அதிர்வலைகள் உருவாகி, நடந்தேறியது. இந்த ஹோமத்தினை நல்ல படியாக நடத்த உதவிய என் அருமை தம்பி பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர், அம்பாள் உபாசகர் Bharani Kumar, சகோதரர் Ram Prakash மற்றும் சகோதரர் க்ரிஷ்ணமுர்த்தி , தன் கலைக்கரங்களால் குருபகவானை கண் முன் நிறுத்திய தம்பி Adaikappan Alangaram,சகோதரி கிருத்திகா மேலும் பலருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். முக்கிய குறிப்பு : எம் அன்பர்கள், சென்னையிலிருந்து குடும்பத்தினருடன் ஒவ்வொரு முறையும் வந்திருந்து தன்னார்வல தொண்டில் ஈடுபட்டு வரும் சகோதரி Abirami Vivek, எம் சிரமத்தை குறைத்து வருகிறார். மேலும், ஒவ்வொரு முறையும் உள்ளூரிலிருந்தும், வேலூர், மதுரை, பெங்களூரு, திருச்சி போன்ற இடங்களில் இருந்தும் வந்து தங்கள் கடமை இது, என நினைத்து, எம் நிகழ்ச்சிகளுக்கு தொண்டாற்றும் பலரையும் கைகூப்பி வணங்குகின்றேன். நீங்கள் இல்லாவிடில், இவ்வளவு சிரமமின்றி எம் காரியங்கள் நடந்து முடியாது. எல்லாம் வல்ல இறைவன், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அனைத்து வித செல்வங்களையும் வழங்கி ஆசீர்வதிக்க, எம் அன்றாட பிரார்த்தனையில் வேண்டி கேட்டு கொள்கிறேன். இது போன்றே, ஒரு குடும்பமாக நாம் தொண்டாற்றி வரின், லோகத்தில் சிறிய அளவிலாவது நம்மால் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகின்றேன். அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். ஹரி ஓம் தத் சத்

Tuesday, 29 August 2017

குரு பெயர்ச்சி ஹோமம் 02.9.17

 மேற்கண்ட ஹோமம் பற்றிய விவரங்கள் உங்கள் அனைவருக்கும்  நன்கறிந்த
ஒன்றாகும். வருகை தரும் அனைவரும் தங்களின் பெயர் தங்களின் குடும்பத்தார் பெயர்கள் , நட்சத்திரம் மற்றும் கோத்திரம் போன்றவைகளை ஒரு தாளில் எழுதி எடுத்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம். நேரடி சங்கல்பம் செய்ய விரும்புவோர் மற்றும் கலச அபிஷேகம் பெற விரும்புவோர்  முன் கூட்டியே தெரிவிக்கவும். வரும் அனைவரும் பச்சை கொண்டைக்கடலை எடுத்து வரலாம்- ஹோமத்தில் சேர்க்க. மேலும் சுத்தமான நெய் வகைகள்,உதிரி புஷ்பம்  ஏற்றுக்கொள்ளப்படும். தற்சமயம் வைதீகர்களுக்கு வேட்டி அங்கவஸ்திரம். மற்றும் அன்னதானவகையில் இனிப்பு வழங்க
( மேற்கண்ட இரண்டும் குரு பகவானுக்கு ப்ரீதியானவை ) நன்கொடைகள் ஏற்று கொள்ளப்படுகின்றன. விருப்பமுள்ளோர் தொடர்பு கொள்ளவும்.

+919840130156 / +918754402857


Monday, 28 August 2017

தனதா யக்ஷினி ரஹஸ்ய மந்த்ரம்சிறிது நாட்களுக்கு முன் பண வரத்து பெறுக, தனதா யக்ஷினி தீப
எண்ணெய் நம் சென்டரில்  கிடைக்கும் என அறிவித்திருந்தோம். அதை உபயோகித்து பலன் பெற்று வரும் பலர், மேலும் உபாஸிக்க ஏதேனும் மந்திரமும் கேட்டு வருகின்றனர். கீழ்காணும் மந்திரத்தை, பசுஞ்சாணம் மேல் அகல் விளக்கு  வைத்து, வெள்ளை திரியிட்டு, தனதா யக்ஷினி எண்ணையை கொண்டு , விளக்கேற்றி, உச்சரித்து வர, அனைத்து வித செல்வங்களும் சேரும், பணப்பிரச்னைகள் அகலும்.

" ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் தாம் ஸ்வாஹா"

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com