Thursday, 29 December 2016

கரூரில் 'ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டர்'


அன்பர்களுக்கு ஓர் நற்செய்தி !!

கருவூரார் மற்றும் சதாசிவ பிரம்மேந்திரர் குடிகொண்டு ஆட்சி புரியும் கரூரில் நமது கிளை திறக்கப்பட உள்ளது !!

வரும் வியாழன் 5.1.17 காலை 9 :15 முதல் 10 மணியளவில் நமது சென்டர் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். முடிந்த அன்பர்கள் கலந்து கொள்ளலாம். இனி சென்னையில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் கரூரிலும் கிடைக்கும். மேலும் மாதம் இரு  முறை தனி நபர் ஆலோசனை, பயிற்சிகள் போன்றவை நடைபெறும்.

முகவரி : 'ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டர்'
               எண் : 7 , 1 பி, வடக்கு பிரதட்சணம்                                  ரோடு, 
               ஜெயம் டவர்ஸ், 
               கரூர் 639001
              +917010059413   

Wednesday, 28 December 2016

காமக்கியா சிந்தூரம்



காமியா மற்றும் காமக்கியா சிந்தூரம் என்று அழைக்கப்படும், வசீகர சக்தியை நமக்கு அளிக்கும் சிந்தூரத்தை பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். தாந்த்ரீக பூமியான அஸ்ஸாமில் குடிகொண்டிருக்கும் காமக்கியா தேவியின் கோவிலில் மிக அரிதாக வழங்கப்படும் இந்த சிந்தூரம் கிடைத்தற்கரிது. தற்சமயம் மிக குறைந்த அளவில் இவை தருவிக்கப்பட்டு நமது சென்டரில் வரும் வெள்ளி 30.12.16 முதல் கிடைக்கும்- அளவுகள் உள்ளவரை.
ஒரு நபருக்கு ஒரு கிராம் மட்டுமே வழங்க இயலும். விலை விவரங்களை தொலைபேசியில் மட்டும் அழைத்து தெரிந்து கொள்ளவும். படத்தில் குறிப்பிட்டிருப்பது ஒரிஜினல் சிந்தூரத்தின் கல் வடிவ தோற்றம். இதிலிருந்து தான் இந்த சிந்தூரம் தயாரிக்கப்படுகிறது. செய்வினை, ஏவல், திருஷ்டி போன்றவற்றை நீக்க கூடிய சக்தி இதற்கு உண்டு எனினும், இதன் பிரத்யேக வேலை, இதை அணிபவரை மிகுந்த வசீகர சக்தி உடையவராய் மாற்றுவது தான்.

தேவைக்கு : +918754402857

வசீகரம்

பலரின் தொடர்ந்த வேண்டுகோளுக்கு இணங்க மிக அற்புத சக்தி வாய்ந்த 'வசீகரம்' பயிற்சி வழங்க எண்ணம். தாந்த்ரீக வசீகரம், பொருட்களை கொண்டு வசீகரம்,மற்றும்  அதியற்புத மந்திர வசீகரம் போன்றவை பாடத்திட்டங்களாக இருக்கும்.
பழம்பெரும் கிரந்தமான 'திலக தந்த்ரா' வில் உள்ளதும் சேர்க்க உள்ளோம்.

குறிப்பு : வசியம் அல்லது வசீகரம் என்கின்ற  வார்த்தை  பலரின் போக்கால், மிக அசிங்கமான ஒன்றாகவும், பயம் ஏற்படுத்தும் ஒன்றாகவும் தற்சமயம் ஆகிவிட்டது பெரும்பாலோர் மனதில்.
இது காலத்தின் கோலம் அன்றி வேறில்லை. பல கடும் போராட்டமாக செல்லும் வாழ்க்கையில், தொழில் மற்றும் வேலை சம்பந்தமாக மற்றும் கணவன் மனைவி அன்னியோன்னியம், பிள்ளைகளின் அன்னியோனியத்திற்காக பெற்றோர்கள் இதை உபயோகப்படுத்தி பலன் பெறலாம். வேறு வித எண்ணங்கள் உள்ளோர்க்கு இவை எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் என்பது எம் அனுபவ கூற்று. இந்த பயிற்சியில் குங்கமப்பூ மற்றும் காமியா சிந்தூரமமும் வழங்க எண்ணம். உங்கள் ஆர்வத்தை கண்டு, பின் பயிற்சியின் நாளை அறிவிக்கின்றோம். 

Tuesday, 27 December 2016

ஹனுமன் ஜெயந்தி-28.12.16



நாளை 28.12.16 வீர பக்த ஹனும
னின் ஜெயந்தி நாள். இந்நாளில் ஹனுமனை இலுப்பெண்ணை தீபம் சிகப்பு திரி கொண்டு ஏற்றி வழிபட, வாழ்வின் அனைத்து தடைகளும் நீங்கும். சுந்தரகாண்ட பாராயணம் அல்லது சீதாராம பட்டாபிஷேக சர்கம் படிப்பது அளவற்ற நற்பயன்களை தரும். அப்படி படிக்கும் இடத்தில் ஹனுமன் நேரில் வந்து அமர்ந்திருந்து படிப்பதை கேட்பார் என்பது வெறும் ஐதீகம் மட்டுமல்ல, பலரின் அனுபவமும் கூட. வசதிப்பட்டால் குரங்குகளுக்கு செவ்வாழைப்பழம் கொடுப்பதும், குரங்குகளுக்கு கொடுக்க முடியாதோர் மாடுகளுக்கு கொடுப்பதும், நற்பலன்களை சேர்க்கும்.

ராம ராம சீதா ராம

ஹரி ஓம் தத் ஸத்

Monday, 26 December 2016

ஹோமத்தில் சேர்க்கப்படும் பொருட்களும் அதன் பயன்களும்

வரும் புத்தாண்டு நாளன்று நடக்க இருக்கும் மஹா லக்ஷ ஆவர்த்தி கணபதி ஹோமத்தை பற்றி குறிப்பிட்டுருந்தது அனைவருக்கும் நினைவிருக்கும் என நம்புகிறோம். பெரும் திரளாக குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு விநாயக பெருமானின் பூரண ஆசியை அனைவரும் பெற வேண்டுகிறோம். வெளியூர் அன்பர்களின் பிரசாதம் வேண்டி தபால் கவர்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் பல வெளியூர் அன்பர்கள் குறைந்த நாட்கள் கருதி, கூரியர் தபாலிலும் கவர்களை அனுப்பிய வண்ணம் உள்ளனர். அனைவருக்கும் முதல் வாரத்தில், அவர்களின் குடும்ப நபர்களின் பெயரில் தனித்தனியாக சங்கல்பம் செய்யப்பட்ட பிரசாதங்கள் சென்று சேரும். மேலும். இந்த ஹோமத்தில் என்னென்ன பொருட்கள் கொடுப்பின் என்னென்ன பலன்கள் கிட்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

சம்பங்கி பூ : அரசாங்க நன்மைகள், அரசு வேலை மற்றும் காரியத்த
டை நீக்கம்.

அரிசி,பால், பழங்கள்  : மன மற்றும் பணப்பிரச்சனைகள் நீங்கும். தாய் வழி சொத்துக்கள் தாமதம் ஆகாமல் வந்து சேரும்.ஸ்டாக் மார்க்கெட், கமாடிட்டி தொழில் செய்வோருக்கு தடைகள் நீங்கும்.

சுத்தமான மலை தேன்: விற்காத சொத்துக்கள் விற்கும். மற்றும் சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் முடிவிற்கு வரும். ரியல் எஸ்டேட் தொழில் செய்வோருக்கு தொழில் ஏற்றம் உண்டாகும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும்.

தூய நெய் : தொழில் செய்வோருக்கு ஏற்றம் தரும். பண புழக்கம் அதிகமாகும். பணத்தடைகள் நீங்கும்.

மஞ்சள் வாழைப்பழம் : நீரிழிவு நோயின் தாக்கம் குறையும். அனைத்து விஷயங்களும் சுபமாகும். சுபகாரியத்தடைகள் அடியோடு நீங்கும்.

சர்க்கரை, கரும்பு : கணவன் மனைவி அன்னியோன்னியம், திருமணத்தடை நீங்கும்.

தூய நல்லெண்ணெய் : அனைத்து தடைகளும் நீங்கும். இனம் தெரியாத பிரச்சனைகள் முடிவிற்கு வரும். உடல் நோய்கள் நீங்கும்.

தேங்காய் : இழந்த கௌரவம், செல்வம், பறிகொடுத்த பெயர், பணம், பொருட்கள் திரும்ப சேரும். சிம்ம ராசி மற்றும் லக்கினம் கொண்டோர் அவசியம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலன் பெறலாம்.

அருகம்புல், தர்பை : அனைத்து தடைகளும் நீங்கும். சர்வ சங்கட நாஸ்தி.

மேற்கூறியவற்றில் தங்களின் சக்திக்கு ஏற்ப செய்து பலன் பெறலாம். ஹோமத்திற்கு பொருளுதவி, அன்னதானத்திற்கு பொருளுதவி செய்ய விரும்புவோரும் செய்து பலன் பெறலாம். மேலும் இந்த ஹோமத்தில் நாம் புதிதாக கூறியுள்ள 'வெள்ளெருக்கன் வன்னி விநாயகரை' வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. அப்படி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் திங்கள் 2.1.2017 முதல் நமது சென்டரில் கிடைக்கும்.

வெள்ளெருக்கன் வன்னி விநாயகர்


அரசு ரீதியான தொல்லைகள், அரசாங்க உத்யோகம், அரசியலில் வெற்றி , தந்தை சம்பந்தமான சொத்துக்கள் மற்றும் பல் வேறு பிரச்சனைகளை தீர்க்கவல்லது வெள்ளெருக்கன் வேரில் செய்யப்படும் விநாயகர். அன்பர்களின் குறையை முழுதுமாக களைய வேண்டி தாந்த்ரீக சிறப்பு கொண்ட, சனி தோஷத்தை முழுதும் போக்க வல்ல வன்னி மரத்தை இருக்கையாக கொண்டு வெள்ளெருக்கன் வேரினால் விநாயகரை  இருத்தி, பிரணவ மந்திர வடிவில் வன்னி மரத்தில் சாய்ந்தவாறு அற்புத தோற்றம் கொண்டு மிக அதீத சக்தி வாய்ந்தவராக வெள்ளெருக்கன் வன்னி விநாயகர்  தேய்பிறை பிரதோஷ நாளான இன்று  முதல் நமது 'ருத்ர பரிஹார்
 ரக்க்ஷா சென்டரில்'.கிரகங்களில் சூரியன், சனி மற்றும் கேதுவின் தோஷத்தை அடியோடு களைய வல்லவர் இந்த விநாயகர். 
தற்சமயம் மிக குறைந்த அளவே தயாரிக்கப்பட்டு உள்ளது.

தேவைப்படுவோர் அழைக்க : +918754402857 

Sunday, 25 December 2016

கணவன் மனைவி பிரச்சனைகள் தீர



கீழ்கண்ட மஹா மருத்யுஞ்சய மந்திரத்தை பற்றி, உடல் கோளாறுகள் நீங்க மற்றும் வாழ் நாளை நீடிக்க என தான் பலரும் நினைத்து கொண்டுள்ளனர். தம்பதியரின் பிரச்சனைகளை நீக்கக்கூடிய எளிய சக்தி வாய்ந்த மந்திரம் இது. தினசரி 108 முறை குளித்தவுடன் ஜெபித்து வர, தம்பதியர் பிரச்சனைகள் பறந்தோடும். உச்சரிக்க காணொளி கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் முதலில் வரும் காயத்திரி மந்திரம் இல்லாமல், கீழ்கண்ட வகையில் கூறி வந்தாலும் பலன் நிச்சயம்.

திரயம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஷ்டிவர்தனம் :
உருவாருகமிவ பந்தனான்
ம்ருத்யோர் மூக்க்ஷிய மாம்ருதாத்: