Friday, 18 August 2017

நாம் அறியாமல் நம்மை சோதிக்கும் பூத கணங்கள்பூத கணங்கள் என கேள்விப்பட்டிருப்பீர்கள். பழமையான கோவில்
கோபுரங்களில் நான்கு திசைகளிலும் வீற்றிருக்கும் இவை, சிவனுக்கு சேவை செய்ய பிறப்பிக்கப்பட்டவை. இவைகள் நம் வாழ்விலும் சில இன்ப துன்பங்களை ஏற்படுத்த வல்லவை. இதை பற்றி பழம்பெரும் கிரந்தங்களில் பல குறிப்புகள் உண்டு. தற்காலத்திலும் அவை பொருந்தும். இந்த முப்பது மூன்று பூத கணங்களும் நமக்கு எப்படிப்பட்ட சோதனைகளை தரும் என பார்ப்போம்.

காம பூதம் : பெயரே விளக்கம் தரும். ஒருவரை காமத்தில் மோகம் கொண்டு அலைய செய்து வீணாக்கும்.
ராட்சச பூதம் : மனிதனை ராட்சச குணம் கொள்ள செய்யும்.
வேதாள பூதம் : அடுத்தவரை மதியதிருத்தல், தன்னை தானே அளித்து கொள்ளல்.
கிரண பூதம் : மதுவுக்கு அடிமையாக்கும், துற சகவாசம் ஏற்படுத்தும்.
ஷூஸ்மாண்ட பூதம் : நற் சகவாசம், ஆன்மீக பிரியம் ஏற்படுத்தும்.
யக்ஷ பூதம் : தற்கொலைக்கு தூண்டும்.
பைசாச பூதம் : தெய்வத்தை நிந்திக்க செய்யும்
சித்த பூதம் : ஞானமளிக்கும்
குரவ பூதம் : பிறருக்கு ஞானத்தை போதிக்க செய்யும்.
கந்தர்வ பூதம் : அழகிய தேகத்தை தரும்.
அசுர பூதம் : பிராமண துவேஷம், ஞானிகளை நிந்தித்தல், மாமிச பிரியம் கொள்ள செய்யும்.
முனி பூதம் : சாஸ்திரத்தில் நாட்டம் கொள்ள செய்யும்.
விருத்த பூதம் : உடல் கோணலை கொடுக்கும்.
தேவ பூதம் : தேவர்கள், சித்தர்கள், மகான்கள், பெரியோர்களிடத்தில் நாட்டம் கொள்ள செய்யும்.
வருண பூதம் : நீர் நிறைந்த பிரதேசத்தில் வாசம் கொள்ள செய்யும்.
அர்த்தபிதா பூதம் : சோம்பலை கொடுக்கும்.
ஈசுர பூதம் : சரித்திரத்தில் நாட்டம் கொள்ளச்செய்யும்.
வித்தியுன்மாலி பூதம் : பயம் கொள்ள செய்யும்.
நிகட பூதம் : பெண்கள் மீது நாட்டம்.
மணிவரை பூதம் : எவற்றிற்கும் பயமில்லா  தன்மையையும், அதீத கோபத்தையும் கொடுக்கும்.
குபேர பூதம் : தன விருத்தி.
விருபாச பூதம் : தேகத்தில் வலிமையுண்டாக்கும்.
சக பூதம் : பித்தம், சதா பயம்.
சாகோர்த்த பூதம் : நிர்வாண நிலையில் தெருவெங்கும் ஓட்டம், ஞான நிலை.
யாகசேனா பூதம் : பெருமை, தற்புகழ்ச்சி.
நிஸ்ததேச: பெண்களை இம்சித்து புசித்தல், குரோத எண்ணம் கொண்டு வரும்.
இந்திர பூதம் : குறையாத தனத்தை தரும்.
நாக பூதம் : மயான வாசம், மலை வாசம்.
விசாக பூதம் : எல்லோரையும் எப்பொழுதும் குறை கூறி கொண்டிருத்தல்.
கசுமால பூதம் : அதீத தீனி எண்ணம்.
அசாத்திய பூதம் : வலிய சென்று மற்றவரை சண்டைக்கு இழுத்தல்.
பித்த பூதம் : மன சுழற்சி, பைத்திய நிலை.
ப்ரம்ம ராக்ஷச பூதம் : தேவர்கள், முனிகள், பிராமணர்களிடம் விரோதம்.

மேற்கண்டவற்றை நீங்கள் ஆழ்ந்து நோக்கினால் நம்மிடம், நாம் பார்க்கும், பலரிடம் மேற்கண்டவற்றை காணலாம். இவைகள் அனைத்தும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டவை.        

Wednesday, 16 August 2017

உங்கள் அனைவருக்கும் மந்த்ர ஆகர்ஷணம் செய்யப்பட்ட 'குரு மகா யந்திரம்'வரவிருக்கும் குரு பெயர்ச்சியை பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். பொதுவாக குருவானவர்  (வியாழ கிரகம்) பெயர்ச்சிக்கு ஒரு மாதம் முன்பிருந்தே அதற்குண்டான பலனை கொடுக்க துவங்கிவிடுவார். அதை மனதில் கொண்டு, மந்த்ர ஆகர்ஷணம் செய்து சக்தியூற்றப்பெற்ற 'குரு மஹா யந்திரம்' உங்கள் அனைவருக்கும் எவ்வித கட்டணமும் இன்றி வழங்க இருக்கின்றோம். இந்த யந்திரத்தின் சக்தியானது ஒரு வேலி போல், உங்களை கஷ்டங்களில் இருந்து வரும் ஒரு வருடம் முழுதும் காபந்து செய்யும். அனைவருக்குமே இவை செல்வநிலையை  மேலோங்க, நல்ல விஷயங்கள் தடையின்றி நடைபெற உதவும் எனினும் வரவிருக்கும் குருபெயர்ச்சியின் பலா பலன்களின் படி மேஷம், மிதுனம் மற்றும் கும்பராசியினர் தவிர்த்து மற்ற அனைத்து ராசியினருக்கும் இவை நிச்சயமாக தேவை என்றும் கூறலாம். தினசரி யந்திரத்திற்கு ஊதுவத்தி புகை  காட்டியும், வியாழன் தோறும் தீபம் ஏற்றி வழிபட்டும் வந்தாலே போதுமானது.

இதை நம் சென்டரின் மூலம், வரும் சனிக்கிழமை  19.08.17 முதல், 01.09.17 வரை வழங்க உள்ளோம். வழக்கம் போல் வெளி ஊர்களில் உள்ளோர், தகுந்த சுய விலாசமிட்ட தபால் தலையை ஒட்டிய கவருடன் அனுப்பி பெற்று கொள்ளலாம். மேற்கண்ட தேதிக்கு பின் கவர்கள் அனுப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். மேலும், இது சம்பந்தமாக தொலை பேசியில் எவரும் அழைக்க வேண்டாம். ஒரு குடும்பத்திற்கு ஒன்று என்ற வகையில் கவர்களை அனுப்பி வைத்தால், அனைவரும் பயன்பட ஏதுவாகும். இது எந்த காலத்திலும் எம்மிடம் விற்பனைக்கு கிடையாது.
காலை 10 முதல் மாலை 6 வரை மட்டுமே நேரில் வந்து பெற்று கொள்ளலாம். விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிறு தவிர்க்கவும். நாம் நடத்தவிருக்கும் குரு பெயர்ச்சி ஹோமத்தில் இவை கொடுக்கப்படமாட்டாது.

முகவரி :
Rudra Parihaar Raksha Centre, 69, AF Plaza,1st Flr, Arya Gowda Road,West Mamblam, Chennai 600033.
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
69, AF பிலாசா, முதல் மாடி,
ஆரிய கவுடா ரோடு, மேற்கு மாம்பலம், ஸ்ரீ கிருஷ்ண சுவீட்ஸ் எதிரில், சென்னை 33.

Tuesday, 15 August 2017

நம்மை சுற்றி இயங்கும் ஸ்தூல துர் தேவதைகள்


சதா சர்வ காலமும் எல்லாவற்றிலும் தடை, முயன்று முடிக்க வேண்டும் என
நினைத்தாலும் முயலவேமுடியலாத நிலை, பண விஷயங்களில் ஏமாற்றம் மற்றும் தடைகள், நல்ல உயர்வான இடத்தில இருந்து காரணமின்றி திடீர் சறுக்கல், பணம் கிட்டிவிடும் என்று கடைசி வரை நம்பி கொண்டிருக்கையில், கடைசி நேரத்தில் பணத்தை கொடுக்கிறேன் என்றவர் கைவிரிப்பு, குடும்பத்தில் திடீர் சச்சரவுகள், வீட்டிற்கு வெளியே இருப்பின் சுகம் அதே சமயம் வீட்டிற்குள் நுழைந்த மறுநிமிடம் எரிச்சல்- இத்தனைக்கும் காரணமே தெரியாமல் விழித்து கொண்டிருக்கும் சமயம், எவராவது நமக்கு செய்வினை செய்து விட்டாரோ என அஞ்சி அதற்கு பரிகாரம் செய்தும், சரியாகாத நிலை-போன்றவைக்கு காரணம், மாந்த்ரீக சாஸ்திரம் மற்றும் வேறு பல கிரந்தங்களில் கூறப்பட்டுள்ளது போல் நம்மை சுற்றி இயங்கி கொண்டிருக்கும் ஸ்தூல சூட்சும துர் சக்திகளே. இதை பற்றி ஏற்கனவே சில முறை கூறியுள்ளோம். இந்த பதிவு ,ஒரு வீட்டில் குழந்தை பிறந்ததும், அதனை பதினாறு ஆண்டுகள் சுற்றி வரும் துர்தேவதைகள் பற்றியது. இவைகளினால் குழந்தைக்கோ அல்லது அதன் பெற்றோருக்கோ மேற்கண்ட இனம் தெரியாத தொல்லைகள்  ஏற்படும் என அறிந்து கொள்க.

பிறந்த முதல் நாள்  மற்றும் முதல் மாதம் மற்றும் முதல் வருடம்- மோகனாங்கி என்ற துர்சக்தி தொல்லை செய்யும்.
 இரண்டாம் நாள்,இரண்டாம் மாதம், இரண்டாம் வருடம்   வைத்திரி
நீலகண்டி  என்ற துர்தேவதை துஷ்டை செய்யும்.
மூன்றாம் நாள், மூன்றாம் மாதம், மூன்றாம் வருடம் விரோதசன்னி, குடும்பத்தில் விரோதத்தை ஏற்படுத்துவாள்.
நான்காம் நாள், நான்காம் மாதம், நான்காம் வருடம் காலாக்கினி, கலக்கத்தை கொடுத்து வருவாள்.
ஐந்தாம் நாள், ஐந்தாம் மாதம், ஐந்தாம் வருடம், ஆகாச ஜின்னு தேவதை, குடும்பத்தில் ஆத்திரத்தை எற்படுத்துவாள்.
ஆறாம் நாள், ஆறாம் மாதம், ஆறாவது வருடம், கன்னி தேவதைகள் கஷ்டத்தை கொடுக்கும்.
ஏழாம் நாள், ஏழாவது மாதம், ஏழாவது வருடம், கௌரி தேவதை கௌரவக்குறைச்சல் கொடுத்து வரும்.
எட்டாம் நாள் எட்டாம் மாதம், எட்டாம் வருடம் சுப்பிர பகவதி,சூன்ய நிலையை கொடுக்கும்.
ஒன்பதாம் நாள், ஒன்பதாம் மாதம்,ஒன்பதாம் வருடம் வாயக்கினி குடோரி குலநாசம் செய்ய முயலும்.
பத்தாம் நாள்,பத்தாவது மாதம்,பத்தாம் வருடம் ஆகஞ்சி தேவிருத்தி தேடி வந்து துன்பிக்கும்.
பதினோராம் நாள்,பதினோராம் வருடம்,பஞ்சமி பாதிரி என்ற தேவதை பாதகம்  செய்ய புறப்படுவாள்.
பன்னிரெண்டாம் நாள், பன்னிரெண்டாம் மாதம், பன்னிரெண்டாம் வருடம், உச்சிங்கி அரக்கி தேடி வருவாள்.
பதிமூன்றாம் நாள்,பதிமூன்றாம் மாதம்,பதிமூன்றாம் வருடம்,பிடாரி  தேவதை பிடுங்கல்களை கொண்டு வரும்.
பதினான்காம் நாள்,பதினான்காம் மாதம்,பதினான்காம் வருடம் மாடன் உக்ரன் வந்து கஷ்டங்களை கொடுக்கும்.
பதினைந்தாம் நாள்,பதினைந்தாம் மாதம், பதினைந்தாம் வருடம்,மயான ருத்திரி, தூக்கத்தை கெடுக்கும்.
பதினாறாம் நாள், பதினாறாம் மாதம்,பதினாறாம் வருடம் பால மோகினி, தன் வலையில் விழ செய்யும்.

மேற்கண்டவை அனைவருக்குமானதல்ல. எனவே பயம் வேண்டாம். எனினும் முதலில் கொடுக்கப்பட்ட நிகழ்வுகளும், பின் அந்த நாட்கள் மாதங்களையும்  சரி பார்த்து  உறுதி செய்து, அதன் படி தகுந்த  நபர் கொண்டு பரிகார சாந்தி செய்து பயன் பெறவும். 

Monday, 14 August 2017

துன்பங்களை தூளாக்கும் பித்ரு தியான முறை

நமசிவய

நம்மை பெற்றெடுத்த தாய் தந்தையர்களுக்கு, அவர்கள் உள்ள போதும் சரி, மறைந்து விட்டாலும் சரி, நம் உயிர் உள்ள வரை அவர்களை பேணி காப்பது நம் கடமையாகும். பலர், அவர்கள் உள்ள போதே,அவர்களின் அந்திம காலத்தில், அவர்களை சரி வர கவனிக்காமல், தூற்றியும், அவர்களை பற்றிய அக்கறை இல்லாமலும் இருந்து வருகின்றனர். என் இத்தனை வருட அனுபவத்தில், அத்தகைய மகா பாதக செயல் செய்தோர் எவரும் தங்கள் அந்திம காலத்திலோ அல்லது துன்ப நிலை வரும் பொழுதோ, உதவி கிட்டாமல், கடவுளும் கை விட்ட நிலையில் சிக்கி தவிப்பதை பல முறை கண்டுள்ளேன். எந்த பரிகாரமும் ஜோதிடமும் மாந்த்ரீகமும் அவர்களை காப்பாற்றியதில்லை. பித்ரு தர்ப்பணம் என்பது எதோ அந்தணர்கள் மற்றும் செய்ய கூடியது என்ற கருத்து இங்கு இருந்து வருகிறது. அது தவறாகும். அனைவரும், குறிப்பாக, இந்து சமயத்தில் பிறந்த அனைவ்ரும் ஒவ்வொரு மாதம் அமாவாசை தினங்களில் ஆவது, தங்கள் முன்னோர்களுக்கு கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும். தினசரி முன்னோர்களை நினைத்து காக்கைக்கு எள் கலந்த சாதம் வைத்து வருவதும் முக்கியம். தற்சமயம் தமிழ்நாட்டில் பல சித்தர்களை, குரு மார்களை வழிபடும் பழக்கம் பெருகி வருகிறது. இவர்களும் நம் முன்னோர்களே. அப்படி வாழ்ந்து உயிர் நீத்த குருமார்களுக்கு வழிபடும் தங்கள் கோடானுகோடி பக்தர்களை காக்க இயலும் எனில், உங்களை பெற்றெடுத்த தாய் தந்தையரின் தூய ஆத்மாவினால், தங்கள் குழந்தைகளை மட்டுமாவது காக்க இயலாதா? சிந்தித்து பார்க்க வேண்டிய விஷயம் இது. தினசரி கடவுள் வழிபாடு செய்த உடன், உங்கள் முன்னோர்களை நினைத்து பத்து நிமிடமாவது, தியானம் செய்வது முக்கியம். அப்படி தியானித்து வருவீர்களேயானால், அவர்களின் அதீத ஸ்தூல ஆத்ம சக்தியால்,ஆசீர்வாதத்தினால், கிடைக்கப்பெறும் நல்வாழ்வை, வேறெந்த பரிகாரமும், ஜோதிடமும் உங்களுக்கு கொடுத்து விட முடியாது என்பது திண்னம். அடுத்த மாதம், மஹாளய பட்சம் வருகிறது. பௌர்ணமி மறுநாள் தொடங்கி அமாவாசை வரை உள்ள அந்த பதினைந்து தினங்களும், அவர்கள் நம் வீடு தேடி நம்மை காண வருவதாக ஐதீகம். அந்த பதினைந்து தினங்களும் அவர்களை எவரொருவர் அன்புடன் உபசரித்து, தியானித்து, தர்ப்பணம் கொடுத்து வழியனுப்பி வைக்கின்றனரோ, அவர்களின் துன்பம் யாவும் தூள் தூளாவதை தங்கள் அனுபவத்தில் காணலாம்.

நமக்கு உயிர் தந்த, நம் தாய் தந்தையரை அவர்கள் உள்ள போதும், மறைந்த பின்னும் பேணி காப்பதும், போற்றுவதும் நம் ஒவ்வொருவருடைய கடமை.

ஹரி ஓம் தத் சத்

Sunday, 13 August 2017

குரு பெயர்ச்சிக்கு இயற்கை பட்டு மஞ்சள் மந்திர வஸ்திரம்

நமசிவய
மந்திர உருவேற்றப்பெற்ற இயற்கை பட்டு கைக்குட்டை வழங்க இருக்கும் -
குரு பெயர்ச்சி சூட்சும பரிகார ஹோமம் -2017                                                    

நாள் : 02.9.17
நேரம் : 9 மணி முதல் 2 மணி வரை
இடம் : பாணி கிரஹா திருமண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை
.
இயற்கை பட்டு என்பதையே பலர் கேள்விப்பட்டிருக்கவில்லை என்பதை எம் முந்தய குரு பெயர்ச்சியை பற்றிய பதிவிற்கு வந்த தொலைபேசி அழைப்புகளில் இருந்து தெரிந்து கொண்டோம். இயற்கை பட்டு துணி  மந்திர சக்தியை தன்னுள் கிரகித்து தக்க வைத்து கொள்ளும் சூட்சுமத்தை  கொண்டதாகும். நடக்கவிருக்கும் ஹோமத்தில் அத்தகைய பட்டு துணியை   வைத்து உச்சரிக்கப்படும் அனைத்து குரு பீஜங்களையும் ஆகர்ஷிக்கும் வண்ணம் செய்து உங்கள் அனைவருக்கும் வழங்க எண்ணம். இந்த துணியை எப்போதும் அசுத்தம் மற்றும் தீட்டு படாத இடத்தில் வைத்திருக்கலாம். குரு பீஜ மந்திரத்தை துணியில் ஓதி, தங்கள் வேண்டுதல்களை கேட்டு பெறலாம். மொத்தத்தில் அடுத்த ஒரு வருடத்தை சுகமாக மந்திர சக்தியுடன் கழிக்க ஏதுவாக இந்த குரு பெயர்ச்சி ஹோமம் இருக்கும். அனைவரும் குடும்ப சகிதம் வந்திருந்து குரு மஹா தேவனின் ஆசி பெற்று செல்லுங்கள். மேலும், இந்த ஹோமத்தில் கலச சங்கல்பம் பெற விரும்புகிறவர்களுக்கு, தனியாக நன்கொடை உண்டு. கலசத்தின் மந்திர ஜல நீரை வீட்டில் தெளித்தும், நீரில் விட்டு குளித்தும், பூஜையறையில் வைத்தும் வழிபடலாம். இந்த ஹோமத்தில் சேவை  செய்ய விரும்பும் தன்னார்வலர்கள் தங்கள் விவரங்களை முன் கூட்டியே தெரிவிக்கவும். அன்னதான சேவையில் கட்டணம் செலுத்தி சங்கல்பம் செய்து கொள்வோரும் முன் கூட்டியே தெரிவிக்க வேண்டுகிறேன்.  மேல் விவரங்கள் பெற கீழ்கண்ட எண்களை அழைக்கவும்.

ஹரி ஓம் தத் சத்

+919840130156 / +918754402857