Saturday, 12 November 2016

ராகு கேது தசா புத்திகளில் நன்மை பெற விஷாஹரி வழிபாடுமேற்கண்ட தசா புத்திகள் பலரை மிகுந்த தொல்லைகளுக்கு ஆளாக்கும். மானசா என பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுபவளும், ஈசனின் புத்ரியுமான விஷாஹரி தேவியை மனமுருக பிரார்த்தித்து தாமரை மலர்களால் அலங்கரித்து வர, மேற்கண்ட காலத்தில் நன்மைகள் வந்து சேரும்.சர்ப்ப பயம் நீங்கும். மழை காலங்களில் வழிபட்டு வர மனமுருகி வரம் அருளும் தேவி இவள்.

தேவியின் படத்தை வைத்து தாமரை மலர் சூட்டி உளர் திராட்சை நிவேதனம் செய்து பூஜிக்கவும். 

Friday, 11 November 2016

சர்ப்ப தோஷம், திருமணத்தடை நீங்கமிக அதீத சக்தி வாய்ந்த, கீழ்கண்ட நவ நாக
மந்திரத்தை தினசரி குளித்ததும் 9 கூறி மனதார நாகங்களை வழிபட்டு வர சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம், திருமண தடை, மண வாழ்வில் சோதனைகள் போன்றவை விலகி வாழ்வில் நன்மைகள் வந்து சேரும்.

குறிப்பு : பாம்புகளை அடிப்பது, தோல் பொருட்கள் உபயோகம் செய்வது போன்றவற்றையும் அடியோடு நிறுத்தினால் மட்டுமே மந்திரத்தால் பலன் சேரும் என்பதை நினைவில் கொள்க.

அனந்தம் வாஸுகிம் சேஷம்
பத்மநாபம் ஸ கம்பளம்
ஷங்கப்பலம்  தர்டராஷ்ட்ரம்
தக்ஸகம் கலியம் தத :

முக்காலமும் அறிய "பஞ்சாங்குலி தேவி" யை முறையாக பூஜித்து வர கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தை துல்லியமாக அறிந்து கூறமுடியும். ஜோதிடர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள், முக்காலமும் அறிய விரும்புவோர் இவரின் பூஜை முறையை முறையாக கற்று கொண்டு வழிபட்டு வர, அனைத்தையும் முன் கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய திறன் வந்து சேரும். துவிதியை, சதுர்த்தி மற்றும் பஞ்சமி திதிகள் தேவிக்கு உகந்தவை. 

சத்ரு உபாதைகள், பித்ரு தோஷங்கள் நீங்க


கலியுகத்தில் உடனடி நிவாரணம் தருபவள் 'ரக்த சாமுண்டி'. இந்த தேவியின் படத்தை வைத்து மண் அகலில் சிகப்பு திரி கொண்டு இலுப்பெண்ணை தீபமேற்றி 9 செவ்வாய்கிழமைகள்  மந்திரத்தை 108
முறை கூறி வழிபட்டு வர மேற்கண்ட தொல்லைகள் நீங்கும். அமாவாசை மற்றும் அஷ்டமி தோறும் தேவியை மேற்கண்ட முறையில்  வழிபாடு செய்து வர சுப காரிய தடைகள் நீங்கும்.

மந்திரம் : ஓம் ஹ்ரீம் ரக்தசாமுண்டாயை நமஹ் :


Tuesday, 8 November 2016

உங்கள் அனைவருக்கும் "தன ஆகர்ஷண புதையல்"

முக்கிய குறிப்பு : பதிவை முழுவதும் படிக்கவும்

 'சிகப்பு சந்தனம்' சாக்த தாந்த்ரீக வழிபாட்டில் மிக முக்கியமான ஒன்றாகும்- பல வித வாழ்வியல் தொல்லைகளை நீக்கும் சக்தி கொண்டது.
கருப்பு சிகப்பு குன்றிமணி : காளிக்கும் பைரவருக்கும் உகந்த இவை மிக அதீத சக்தி கொண்டவை.

வெள்ளை குன்றிமணி : தன ஆகர்ஷணம் செய்யும் சக்தி கொண்டது.

கோமதி சக்கரம் : மஹாலக்ஷ்மி ஸ்வரூபம்.

மந்திர சக்தி ஏற்றப்பட்ட சிகப்பு சந்தனத்துடன், மேற்கண்ட மூன்றும் சேர்த்து நம் பணப்பெட்டியில் அல்லது நம்மூடே வைத்திருக்க, பணம் சார்ந்த பிரச்சனைகள் தீர்ந்து, தன ஆகர்ஷணம் உருவாகும். இவை, பெரும்பாலான வட மாநிலத்திலுள்ள தாந்த்ரீக சாஸ்திர பிரயோகம் செய்பவர்கள், தம் அடியார்களுக்கு கொடுத்து வருவதாகும்.

நம் சென்டரின் மூலம், மேற்கண்ட இவைகளை எந்தவித கட்டணமும் இன்றி வரும் வியாழன் 10.11.16  முதல், 25.12.16 வரை வழங்க உள்ளோம். வழக்கம் போல் வெளி ஊர்களில் உள்ளோர், தகுந்த சுய விலாசமிட்ட தபால் தலையை ஒட்டிய கவருடன் அனுப்பி பெற்று கொள்ளலாம். மேற்கண்ட தேதிக்கு பின் கவர்கள் அனுப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். மேலும், இது சம்பந்தமாக தொலை பேசியில் எவரும் அழைக்க வேண்டாம். ஒரு குடும்பத்திற்கு ஒன்று என்ற வகையில் கவர்களை அனுப்பி வைத்தால், அனைவரும் பயன்பட ஏதுவாகும்.  இது எந்த காலத்திலும் எம்மிடம் விற்பனைக்கு கிடையாது.

காலை 10 முதல் மாலை 6 வரை மட்டுமே நேரில் வந்து பெற்று கொள்ளலாம். விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிறு தவிர்க்கவும்.

நாம் ஏற்கனவே கட்டணமின்றி  கொடுத்து வந்த  'சூரிய எந்திரம்' , தன ஆகர்ஷண விபூதி, சந்தனம் மற்றும் சர்வைஸ்வர்ய குங்குமம் மற்றும் மஞ்சள் போன்ற எவையும் தற்சமயம் இருப்பில் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

முகவரி :

Rudra Parihaar Raksha Centre, 69, AF Plaza,1st Flr, Arya Gowda Road,West Mamblam, Chennai 600033.

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
69, AF பிலாசா, முதல் மாடி,
ஆரிய கவுடா ரோடு, மேற்கு மாம்பலம், ஸ்ரீ கிருஷ்ண சுவீட்ஸ் எதிரில், சென்னை 33.

Monday, 7 November 2016

யக்ஷினிகளின் மகா சக்திகள்- அமானுஷ்ய வழிபாட்டு முறை பாகம் 2

சென்ற பதிவில் யக்ஷினிகளை பற்றி அறிந்து கொண்டிருப்பீர்கள். இனி  அவர்களில் ஒவ்வொருவரும் (ஒவ்வொரு வகையும்) என்னென்ன தன்மையை கொண்டவைகள் என்பதை பாப்போம். இதில் சிலவற்றை சூட்சுமமாய் சொல்லியுள்ளேன். காரணம், சிலவற்றை வெளிப்படையாக கூற, தகாத விடயத்திற்கு தவறான நபர்களால் உபயோகப்படுத்தப்படின், கேடு விளையும். தனி நபர் ஆலோசனைக்கு வருவோருக்கு கூட, அவர்களின் உண்மையான நோக்கம் கண்டு மட்டுமே, முழு வழிபாட்டு முறையும் விளக்கப்படுவதுண்டு. மேலும், இதில் பல வழிபாட்டு முறைகள், மிக கடுமை நிறைந்த ஒன்றாகும். பலனும் மிகப்பெரிதல்லவா ??

விசித்ரா : அன்பானவள் - அன்பை நம் சொந்தங்களிடம் / பிறரிடம் பெற இந்த யக்ஷிணியை உபாஸிக்க, காரியம் சித்திக்கும்.

விப்ரமா : மோகம்கொண்டவள்- காதலில் வெற்றி பெற மேலும் கணவன் மனைவி ஒருவொருவர் பரஸ்பரம் மோகிக்க செய்ய, தாம்பத்திய தேவைகளுக்கு பூஜிக்கப்படுபவள்.

ஹம்ஸி : அண்ணப்பறவையை போல தோற்றம் கொண்டவள் - வேலை இடத்தில் இடையூறு, கோர்ட்டில் வழக்குகள் வெற்றி பெற, எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட வழிபாடு செய்யப்படுபவள்.

பிஷாஷினி : திகிலூட்டும்  தோற்றம் கொண்டவள் - பெயர் ஒன்றே போதுமே இவளை வர்ணிக்க..

ஜனரஞ்சிகா : ஆண்களுக்கு மகிழ்ச்சியை ஆனந்தத்தை தருபவள்

விஷாலா : கருத்த பெரும் விழிகள் கொண்டவள் - பெரும் தனத்தை தர வல்லவள் - எனினும் மிகுந்த கோபம் கொண்டவள்.

மதனா : காமம் கொண்டவள் - மாயமாய் மறையச்செய்யும் சக்தி கொண்ட யக்ஷினி இவள்.

கண்ட்டா : மணியானவள் - தம்மை வழிபடுவோரை உலகமே மோகிக்க செய்யும் தன்மை கொண்ட யக்ஷினி.

கலகர்ணி : கலச குண்டலங்களை அணிந்தவள் - அனைத்து வெற்றியையும் அள்ளித்தருபவள்.

மஹாபயா ; மிகவும் பயமுறுத்தும் தோற்றம் கொண்டவள்

மஹேந்திரி : மிகவும் சக்திகொண்டவள் - தம்மை பூஜிப்போரை காற்றில் பறக்கவைக்கும் சக்தி இவளுக்கு உண்டு.

ஷங்கினி : சங்கின் தோற்றமுடையவள் - அனைத்து தேவைகளையும்  பூர்த்தி செய்பவள்.

சந்திரி : நிலவின் தோற்றமுடையவள் -  கேட்டதை கொடுப்பவள்.

ஷ்மஷனா : மயானத்தில் வசிப்பவள்.

வடயக்ஷினி : பொன்  பொருள் ஆபரணங்களை அருள்பவள். மாய மந்திர வித்தைகளில்  தேர்ச்சி தருபவள்.

மேகலா : காதலை அள்ளித்தருபவள்

விகளா : உணவு, தானியங்களை தருபவள்.

லக்ஷ்மி : பொன்,பொருள், ஆடை ஆபரணங்கள் அனைத்தும் தருபவள்.

மாலினி : பூவை போன்றவள் - எவ்வித எதிர்ப்பையும் இவள் ஆசி இருந்தால் அடித்து நொறுக்கலாம்.

ஷடபத்ரிகா : நூறு பூக்களின் தோற்றமுடையவள்

ஷுலோச்சனா : அழகிய கண்களை கொண்டவள் - எவ்வித இடத்திற்கும் நொடிப்பொழுதில் நம்மை சேரவைக்கும் சக்தி கொண்ட யக்ஷினி.

ஷோபா : அழகிய தோற்றம் மற்றும் வேண்டியதை தரும் யக்ஷினி தேவி.

கபாலினி : மண்டை ஓட்டை மாலையாய் கொண்டவள் - கபால  மோட்சம் கொடுக்க வல்லவள்.

வரயக்ஷினி : கேட்கும் வரத்தை அளிப்பவள்.

நடி : நடிகையானவள் - மறைந்திருக்கும் புதையலை இவள் ஆசி கொண்டு எடுப்பது வழக்கம்.

காமேஸ்வரி : காமத்தை கொடுப்பவள்.

மனோஹரா : கண்கவர் தோற்றம் கொண்டவள்- தம்மை பூஜிப்போரை அவளை போன்றே தோற்றமுறச்செய்பவள்.

ப்ரமோதா : நறுமணமானவள் : வாழ்வில் வசந்தம் தருபவள்.

அனுராகினி : உணர்ச்சிமிக்கவள்- பொன்னை தரும் தேவி.

நாககேஷி : சர்ப்பங்களின் சக்தியை அளிப்பவள்.

பாமினி : பெண்களை வசீகரிக்கவும்
, புதையலை தேடி எடுக்கவும் உதவும் யக்ஷினி.

பத்மினி : பொன் பொருள் வீடு பேறு தருபவள்.

ஸ்வர்ணவதி : இவளை பூஜிக்க அஷ்டமாசித்தும் கைகூடும்.

ராத்ரிப்ரியா : காதல் கொண்டவள்- அன்பானவர்கள் ஒன்று சேர வழிபடப்படுபவள்.

வேறு ஒரு பதிவில் இவர்களின் ஒவ்வொருவருக்கும் உண்டான மந்திரங்களை விளக்குகிறேன். 

Sunday, 6 November 2016

அமானுஷ்ய வழிபாட்டு முறைகுபேரரின் வழிநடத்தப்படும் யக்ஷினி மற்றும் யக்ஷர்களை பற்றி பல புராதன கிரந்தங்கள் நமக்கு வழிகாட்டியுள்ளன. இதில் "தந்த்ரராஜதந்த்ரம்" மற்றும் "உத்தமரேஸ்வரதந்தரம்" மிக முக்கியமான ஒன்றாகும். யக்ஷினிகளை வைத்து பல காரியங்களை, ஏன் முடிக்க முடியாத அனைத்து விஷயங்களையும் முடிக்கலாம் என கூறியுள்ளன அந்த புராதன நூல்கள். இவை மிகுந்த உண்மையும் கூட. ஆனால் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒன்று இந்த யக்ஷினி வழிபாடு. தற்காலத்தில் அரைகுறை ஞானத்தோடு பலர் இந்த யக்ஷினி தீக்ஷைகளை கொடுத்து வருவதை காண்கிறேன். கேரளாவில் உள்ள ஒரு நபர், ஒடிஷாவில் இருக்கும் ஒரு தாந்த்ரீகரின் மூலம் யக்ஷினி உபாசனை பெற்று, பின் அதனால் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகி, பின் எப்படியோ கேள்விப்பட்டு எம்மிடம் ஆலோசனைக்கு வந்து சேர்ந்தார். தகுந்த மாற்று வழிகூறி அவரை அந்த யக்ஷிணியின் ஆற்றலில் இருந்து வெளிவரவைக்க பெரும் பாடு பட வேண்டியதாயிற்று, யக்ஷினிகளை நம் தேவைக்காக உபாசனை செய்யலாமே தவிர புரஸ்சரணம் செய்வதென்பது    தகுந்த குரு தமக்கு உதவும் நிலையில் எந்நேரமும் இருந்தால் மட்டுமே செய்யக்கூடும். உபாசனை என்பது அன்றாட வழிபாடு. புரஸ்சரணம் என்பது கடுமையான நியம நிஷ்டைகளோடு தகுந்த தேவதை/எட்சிணியை அழைத்து காரியம் சாதிப்பது எனலாம். இந்த பதிவில் 34 எட்சிணிகளின் வகை பற்றி கூறியுள்ளோம். பலர் மொத்தமே 36 யட்சிணிகள் தான் என நினைத்து கொண்டு உள்ளனர். யட்சிணிகள் பல உண்டு. 36 என்பது அதன் வகைகள் மட்டுமே.

விசித்ரா
விப்ரமா
ஹம்ஸி
பிஷாஷினி
ஜனரஞ்சிகா
விஷாலா
மதனா
கண்ட்டா
கலகர்ணி
மஹாபயா
மஹேந்திரி
ஷங்கினி
சந்திரி
ஷ்மஷனா
வடயக்ஷினி
மேகலா
விகளா
லக்ஷ்மி
மாலினி
ஷடபத்ரிகா
ஷுலோச்சனா
ஷோபா
கபாலினி
வரயக்ஷினி
நடி
காமேஸ்வரி
மனோஹரா
ப்ரமோதா
அனுராகினி
நாககேஷி
பாமினி
பத்மினி
ஸ்வர்ணவதி
ராத்ரிப்ரியா

இவைகளில் ஒரு சில, மிகுந்த புகழ்பெற்ற லக்ஷ்மி துதிகளில் கேட்டது போல் உள்ளது அல்லவா ?

இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரியங்களை சாதித்து கொடுப்பதில் வல்லவர்கள் என்கிறது "தந்த்ரராஜதந்த்ரம்". அவைகள் என்னென்ன என்பதை அடுத்து வரும் பதிவுகளில் கூறுகிறேன்.