Thursday, 27 July 2017

அபிசார (செய்வினை / ஏவல் ) என்பது என்ன?

அபிசார தோஷம் , மாந்த்ரீக தோஷங்களுக்கு உட்பட்டு உள்ளோரை ஜாதகத்தின் மூலம் வெகு எளிதில் கண்டு பிடிக்க இயலும்-ஆறு மற்றும் எட்டாம் இடங்கள், பார்வை மற்றும் அதில் உள்ள கிரகங்கள் மற்றும் நடப்பு திசா புத்தியை வைத்து.
ஒரு சிலர் அவர்களிடம் செல்பவர்கள் எவராயினும், அவர்களின் கஷ்டங்களை கூறியுடன், செய்வினை செய்யப்பட்டு உள்ளது என கூறிவிடுகின்றனர். இவர்களும் அதை நம்பி, மற்றும் அதையே நினைத்து கொண்டு, ஜோதிடர், மாந்த்ரீகர் என விண்டோ ஷாப்பிங் செய்ய ஆரம்பிக்கின்றனர். அதில் உண்மையாக ஒரு சிலர், அவர்களுக்கு அப்படி எந்த செய்வினையும் செய்யப்படவில்லை என கூறினால் நம்பாமல், அவர்களையே ஒன்றும் தெரியாதவர் என நினைத்து விடுகின்றனர்.

செய்வினை எப்படி செய்யப்படுகிறது? 

குறிப்பிட்ட சில தேவதைகளை வைத்து,மூலிகைகளை கொண்டு,  உதாரணமாக 'யக்ஞனி' என ஒரு தேவதை உண்டு. இதை வைத்து அபிசார தோஷத்தை ஒருவருக்கு ஏற்படுத்தி அவரை அடி பணிய வைத்தல், அவர்களின் சொத்துக்களை பறித்தல், அழித்தல் என பல முறைகளை கையாள்வர். இந்த அபிசார தோஷமானது பன்னிரண்டு ஆண்டுகள் வரை மட்டுமே வேலை செய்யும். இதில் துயரம் என்னவென்றால், அந்த ஆண்டுகளுக்குள், பீடித்துள்ள நபர், முக்காலே முழு சதவீதம், செல்வ நிலையிலும் சரி, மன நிலையிலும் சரி, அழிந்து போய் இருப்பார்.

என்னவெல்லாம் ஆகும் என்பதை பார்ப்போமா?  

உணவின் சுவை தெரியாமை, எவர் மீதும் சந்தேகம் அல்லது இனம் தெரியாத பயம், வீட்டில் மிருகங்கள், மீன்கள் காரணமின்றி திடீரென இறத்தல், கொடூர கனவுகள், அடிக்கடி விபத்துகள் அல்லது கால் தடுக்கி கீழே விழுதல், வீண் விரயங்கள், பொருட்கள் களவு போதல், மன நிம்மதியின்றி போதல், மனம் தேவையற்ற சிந்தனையாகவே எப்பொழுதும் இருத்தல் போன்றவை சில அறிகுறிகள். இதில் நீங்கள் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, மேற்சொன்ன அறிகுறிகளில் பல சாதாரணமாகவே நமக்கு வந்து போவதுண்டு. இதை படித்து விட்டு, உடனே தங்களுக்கும் அவ்வித அபிசார பிரயோகம் செய்யப்பட்டிருக்கும் என எண்ணக்கூடாது. மேற்சொன்னவை ஒரு உதாரணத்திற்கும், விழிப்புடன் இருப்பதற்கும் தான்.நகங்களை வெட்டி கீழே போடுவது, உதிர்ந்த முடிகளை அப்படியே விட்டு வைப்பது போன்றவை கால நேரம் சரியில்லாமல் போயின், கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.

எப்படி குணப்படுத்துவது ?

குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தின் துணை கொண்டு இதனை எளிதில் குணப்படுத்த முடியும். ஆழ்ந்த நம்பிக்கையும், மன உறுதியும் முக்கியம். தகுந்த நபரை கொண்டு அப்படிப்பட்ட ஏவல் உள்ளதா என்பதை கண்டு கொண்டு, பின் அதற்குண்டான பரிகாரங்களை செய்ய, துன்பங்களில் இருந்து நிரந்தரமாக மீளலாம். பொதுவாக, இப்படி இருப்பின் செல்வ நிலையில் தொய்வு ஏற்படாமல் இருக்க ஒரு சூட்சும பரிகாரம் உள்ளது.
முதலில் அந்த நபர் மற்றும் அவர் வசிக்கும் இடம், இரண்டையும் பஞ்சகவ்யம் கொண்டு குளிக்க/கழுவ வேண்டும். பின் தினசரி மாலை வேளையில் சீதாரி தூபம் இட்டு வரலாம். இந்த தூபத்தை பற்றி ஒரு தேவார பாடலே உண்டு. தூப முறையை அடுத்த பதிவில் காணலாம்.

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156/8754402857
www.yantramantratantra.com 

Wednesday, 26 July 2017

வசீகரத்திற்கு வழிமுறைகள்வசீகரம் என்பது ஏதோ மற்றவர்களை மோசம் செய்வது, அழிப்பது, மாந்த்ரீகம் செய்து சீரழிப்பது போன்று பலர் மனதில் ஒரு மாயயையான தோற்றத்தை இக்காலத்தில் பலர் உருவாக்கி விட்டனர்-அவர்களின் பிழைப்புக்காக.
இது முற்றிலும் தவறாகும். நம் சித்தர்களும் முனிகளும் இதை பற்றி பல விடயங்களை கொடுத்திருப்பினும், இதற்கான வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் கூறியுள்ளனர். எம்மை பொறுத்தவரை, தம்மை வசீகர சக்தி உள்ள நபராக மாற்றி கொண்டு, நமக்கான நியாயமான தேவைகளை நிறைவேற்றி கொள்வதே வசீகரம் என்பேன். இதை பற்றிய பயிற்சியிலும் இதையே கூறிவந்துள்ளேன். உதாரணத்திற்கு, ஜோதிட விதிகளின் படி பார்த்தோமானால், மிதுனத்திற்கு கன்னியும், தனுசிற்கு மீனமும், விருச்சிகத்திற்கு கடகமும் எளிதில் வசமாவர்-நட்புடன் இருப்பார்.இது போன்று மற்ற ராசிகளுக்கும் உண்டு.  இது பொது விதியே. அன்றாடம் நாம் வேப்பிலை கொழுந்தினை உண்டு வந்தாலே, வசீகர சக்தியை பெறலாம்-ஏனெனில், ராகுவாகவும் , கேதுவாகவும் உருவெடுப்பதற்கு முன்னால், அசுரனின் வாயிலிருந்து விழுந்த அமிர்தமே வேப்பமரம் என்பது கூற்று. அதே சமயம் இந்த கொழுந்தினை ஒரு வாரத்திற்கு மேல் தொடர்ந்து உண்ண வேண்டாம். இடைவெளி விட்டு உண்ணலாம். அளவிற்கு அதிகமான அமிர்தமும் விஷமாகும்.
இது போன்று மேலதிகாரிகளையோ, குழந்தைகளையோ, உறவுகளுக்குள்ளோ வசீகர நட்பு பெற வேண்டுமெனில், அவர்களது புருவ மத்தியினை உற்று நோக்கி, நம் வலது நாசியில் மூச்சு வரும் படி இருக்க 'நசி மசி வசி வசி' என்ற மந்திரத்தை மனதினுள் கூறிவரின், அவர்கள் நம் அன்பிற்கு வசமாவர். இதை தவறாக பயன்படுத்த கூடும் என்ற காரணத்தினால் தான், புருவ மத்தி எப்பொழுதும் வெறுமையாக இருத்தல் ஆகாது என்பர். பெண்களாயின், அவர்கள் இடும் ஸ்டிக்கர் பொட்டுக்களுக்கு வசியத்தை தடுக்கும் சக்தி இல்லை. ஆகவே, அதை தவிர்த்தல் நலம். பல் வேறு மூலிகைகளை கொண்டு அஞ்சனம் முறைப்படி தயார் செய்து, அதை புருவ மத்தியில் இட்டு வர, நம் வசீகர சக்தி கூடுவதோடு மட்டுமில்லாமல், காரியங்களும் எளிதில் கைகூடும். பல்வேறு வாழ்வியல் தொல்லைகளை நினைத்து வருந்தாமல், அவற்றை எப்படி நம் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்வது என்பதே இந்த திலக தந்திரத்தின் கோட்பாடு.


ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156/8754402857
www.yantramantratantra.com 

Tuesday, 25 July 2017

தனதா யக்ஷினி தீப எண்ணெய்தனம் பெருக நாம் தனதா யக்ஷினி உபாசனை பயிற்சி முறை கொடுத்து வந்தது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும். யக்ஷினி உபாசனை செய்வோர் அல்லது அப்படி செய்ய முடியாத சூழலில் உள்ளோர் பயன் பெற , முக்கியமான பல சூட்சுமங்கள் உள்ளடங்கிய மூலிகைகளை கொண்டு தனதா யக்ஷினி தீப எண்ணெய் தயார் செய்யப்பட்டு உள்ளது. இதை தினசரி மாலை வேளையில் வீட்டின் பூஜையறையில் ஏற்றி வைத்து வழிபட்டு வர, தனம் மிகும். தற்போது, 'லகு' (எளிய முறை) தனதா யக்ஷினி உபாசனை கொடுக்கப்பட உள்ளது. அப்படி செய்யப்படும் உபாசனையின் சமயம் இந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றி , மந்திரம் கூறியபடியே அந்த தீபத்தை நோக்கி வரின், அவ்விடத்தில் தனம் ஆனந்தத்தாண்டவமாடுவது உறுதி.

மேலும் விவரங்களுக்கு :  +919840130156 / +918754402857

Monday, 24 July 2017

சூட்சும ஒலிகளின் மூலம் உன்னத வாழ்க்கைசில வசீகர சூட்சும ஒலிகளின் மூலம் நாம் பிரபஞ்சத்தில், நமக்கு வேண்டியவற்றை அடையலாம்-இது பலருக்கு தெரிந்திருக்கும். மிருதங்க   ஒலியின்  மூலம் பழங்களை பழுக்க வைப்பது, கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதி ஆநிரைகளை வசீகரித்தது போன்று பலவற்றை கூறலாம். இதன்படி, நாம் சில வருடங்களாக 'கடன்கள் அடைய', 'மூலாதார சக்கரத்திற்கு' மற்றும் 'பண வரவிற்கு' என விசேஷ ஒலிகள் கொண்ட சிடி க்கள் கொடுத்து வந்துள்ளோம். பலரும் பயன் பெற்றும் வருகின்றனர். இருப்பினும், அடிப்படையாக நம்மை சூழ்ந்துள்ள நமக்கு தெரிந்த, தெரியாத, ரூபமில்லா சூட்சும எதிர் மறை சக்திகளை கடந்து வந்தால் மட்டுமே எவற்றிலும் சாதிக்க முடியும். இவற்றை கருத்தில் கொண்டு, தற்சமயம் 'அஹம் ப்ரம்மாஸ்மி' 'கர்ம ஸுத்தி' என இரு ஒலிப்பேழைகளை உருவாக்கியுள்ளோம். இதில்  'கர்ம ஸுத்தி' ஒலியை இரவிலும்  'அஹம் ப்ரம்மாஸ்மி' ஒலியினை காலை எழுந்ததும் இயர்போன் மூலம் கேட்டு வர , நம் கர்ம எதிர்மறைகள் மாறி, நல்ல எதிர்மறை சூட்சும சக்திகளை இந்த பிரபஞ்சத்தில் இருந்து கிரகித்து கொள்ள முடியும்.

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156/8754402857
www.yantramantratantra.com