Saturday, 5 August 2017

சிறப்பான வருமானத்தை தரும் 'சீதாரி' தூபம்

'அபிசார தோஷம் என்றால் என்ன?' என்ற தலைப்பில் இடைப்பட்ட பதிவில் வறுமையை நீக்கும் தேவார பாடல் போற்றும்  'சீதாரி' தூபத்தை பற்றி குறிப்பிட்டுருந்தோம். வறுமையை அகற்றி செல்வ வளம் கொடுக்கவல்ல இந்த 'சீதாரி'  செய்முறையை இப்பொழுது பார்ப்போம்.

கலப்படமற்ற சந்தனம், சாம்பிராணி கட்டி,சுத்தமான குங்குமப்பூ, அருகு, பச்சை கற்பூரம், குங்கிலியம் இவற்றோடு கோரை கிழங்கு மற்றும் யானை லத்தி (சாணம்) இவற்றை சேர்த்து பொடி செய்து மாலை தீபம் ஏற்றிய பின் இட்டு வர, இனம் தெரியாத தடங்கல், பண முடை, லட்சுமி கட்டு போன்றவை அகன்று செல்வ வளம் சேரும்.

குறிப்பு : இவற்றை செய்து கொள்ள முடியாதோர், நம் சென்டரில் வாங்கி கொள்ளலாம். இத்துடன் தன ஆகர்ஷண தூபத்தையும் கலந்து பின் இடுவது இரட்டிப்பு பலன் தரும். ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156/8754402857
www.yantramantratantra.com 

Friday, 4 August 2017

7.8.17 சந்திர கிரஹணம் - செய்ய கூடாதவை என்னென்ன ?


ஆரம்பம் இரவு- 7.8.17 - 10:52PM
                முடிவு-8.8.17     00:48PM

வருகிற திங்கட்கிழமை 'பகுதி'  (Partial) சந்திர கிரஹணம் நம் இந்திய நாட்டில் தெரியும். இதன் பொருட்டு சில  ராசியினர்  தோஷ பரிகாரம் செய்து கொள்வது அவசியம். இந்த பதிவு இட முக்கிய காரணமே, சமூக வலைத்தளங்களிலும், இணைய தளங்களிலும், இதை மிகைப்படுத்தி, மிகப்பெரும் தனி மனித சேதம் நிகழப்போவதை போன்று பல பதிவுகள் வந்த வண்ணம் உள்ளன. அச்சம் வேண்டாம். அது போன்ற பதிவுகளில் அவர்கள் மேற்கோள் காட்டியிருப்பது, பாதிப்பை பற்றி கூறியிருப்பது, முழு சந்திர கிரகணம் எனில் மட்டுமே சாத்தியம்.  முக்கியமாக தோஷ பரிகாரம், மகரம், கும்பம் , கடகம், சிம்மம் ராசி-லக்கினத்தினர் கண்டிப்பாக செய்வது அவசியம். மேஷம் மற்றும் விருச்சிகம் ராசி லக்கினத்தினர் செய்து கொள்வதும் நலம் தரும். பொதுவாகவே, சந்திர கிரகணத்தின் மூலம் பாதிப்பில் இருந்து தப்ப, அந்த நேரங்களில் தூங்காமல் 'நமசிவய' மந்திரத்தை ஜெபித்து வருவதோ அல்லது மிருத்தியுஞ்சய மந்திரம், விஷ்ணு சஹஸ்ரநாமம், அல்லது ராம நாமம் ஜெபித்து வரின், மிகப்பெரிய பலன் கிட்டும். உணவு உண்பதை மாலை ஆறு மணிக்குள் செய்து விடுவது நன்று. திரவ உணவுகளின் மீதும், நீரிலும் தர்ப்பை புல் போட்டு வைக்கவும். கண்டிப்பாக இந்த நேரத்தில் உணவு அருந்துவது தவிர்க்கவேண்டும். இந்த நாள் முழுதுமே அசைவ உணவு மற்றும் வெளியிடங்களில் உணவு அருந்துவது கூடாது. நீர் நிலைகளில் நீச்சலடித்து விளையாடுவதை செவ்வாய் 8.8.17 மதியம் வரை தவிர்க்கவும். சமுத்திரத்தில் கிரகண காலம் முடிந்ததும் குளிக்க இருப்போர், ஏதேனும் பாத்திரத்தில் மொண்டு, கரையில் நின்று குளிக்கவும். கிரகண காலம் முடிந்து அடுத்து வரும் பதினைந்து நாட்களுக்கு மேற்கூறிய ராசியினர் குடும்பத்தாரிடம் வாக்கு வாதம் தவிர்த்து வரவும். கர்பிணி பெண்கள் வெளியே வருவதை அவசியம் தவிர்க்கவும். தோஷ பரிகாரம், மேற்கூறியபடி மந்திரம் ஜெபிப்பதும், கிரகண காலம் முடிந்ததும் குளித்து, சந்திரனை பார்த்துவிட்டு, பின் வீட்டின் பூஜையறையில் நெய் விளக்கேற்றி வைத்து வழிபட்டு, பின்னர்  புதிதாக சமைத்த உணவை உண்ணவும்(தேவைப்படின்) .
மேற்கூறிய ராசியினர் செவ்வாயன்று 8.8.17 காலை ஒரு வெள்ளை ஜாக்கெட் துணி அல்லது அங்கவஸ்திரத்துடன், சிறிது நெல், அரிசி பாக்கெட், மட்டை தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம்,பூவுடன் சிறிது தட்சிணையும் வைத்து எவருக்கேனும் (பிச்சை புகுவோருக்கு கொடுக்கலாகாது) தானமளிக்கவும்.

முக்கிய குறிப்பு : கிரகண காலம் முடிந்ததும் குளித்து தர்ப்பணம்
செய்வது அவசியம்.  

கீழ்கண்ட மந்திரத்தை கூறிவருவது அளவற்ற நற்பயனை தரும்- இந்த கிரகண நேரத்தில். (6000 முறை கூறுவது உசிதம்)

"ஓம் ஸ்ராம் ஸ்ரீம் ஸ்ரோம் சஹ் சந்த்ராய நமஹ"

Thursday, 3 August 2017

வியாபார மந்த நிலை நீங்க-5.8.17


வியாபார மந்தம், கல்வியில் தோல்வி போன்ற நிலைகள் நீங்க நாளைய தினம்  (5.8.17) மாரியம்மன் அல்லது காளி/துர்கை கோவிலில் நான்கு மண் அகலில் நல்லெண்ணெய் தீபமேற்றி  வழிபட்டு பின்னர் கோவிலில் பிரசாதம் தயாரிக்க நான்கு தேங்காய்களை கொடுத்து வர, மேற்கண்ட நிலைகள் நீங்கி, வியாபாரம்-தொழில் வெற்றியை கண்கூடாக காணலாம். ராகு வேளையில் செய்வது மிகவும் சிறப்பு. முடியாதோர் மாலையில் செய்யலாம். ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156/8754402857
www.yantramantratantra.com

Wednesday, 2 August 2017

கடன் சுமைகள் குறைய


ஒவ்வொரு சதுர்த்தியிலும் எமகண்ட வேளையில் விநாயகருக்கு அகத்தி கீரையால் அர்ச்சனை செய்வித்து, மண் அகலில் இலுப்பெண்ணெய் தீபம் சிகப்பு திரி கொண்டு ஏற்றி வர கடன்கள் கரையும்.
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156/8754402857
www.yantramantratantra.com

ஆகஸ்ட் மாதத்தில் தவிர்க்க வேண்டிய கரண நாட்கள்

கரணம் தப்பினால் மரணம் என்ற தலைப்பில் மாதா மாதம் வெளியாகும் பதிவு.

3.8.17    காலை 3.15 AM முதல் மாலை 4:45 PM வரை

6.8.17   இரவு 10:15 PM முதல் மறுநாள் காலை 11:15 AM வரை 

10.8.17 மதியம் 12:30 PM முதல் மறுநாள் அதிகாலை 00:45AM வரை 

13.8.17 இரவு 9:10 PM முதல் மறுநாள் காலை 8:45 AM வரை
  
17.8.17 அதிகாலை 02:00AM  முதல் மதியம் 12:55PM வரை 

20.8.17 அதிகாலை 4:30 AM முதல் மதியம் 03:30 PM வரை 

25.8.17 காலை 08:15AM முதல் இரவு 08:45PM வரை

29.8.17  அதிகாலை 00:30AM முதல் மதியம் 01:52 வரை