Wednesday, 13 September 2017

வசிய முத்திரை பயிற்சிநாள் : 24.9.17
நேரம் : மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை
இடம் : மேற்கு மாம்பலம், பாணி கிரஹா திருமண மண்டபம்

கட்டணம் இன்றி நாம் நடத்த இருக்கும் வசிய முத்திரை பயிற்சி பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். பலர் நேரில் வந்தும் தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து வருகின்றனர். இதில் ஒரு சிலர் சீடி வடிவில் தயாரித்து கொடுப்பின் , அனைவரும் பயனுறுவர் என கேட்டு வருகின்றனர். இதை பற்றி உங்களுக்கு ஆழமான புரிந்துணுர்வு தேவை. இத்தகைய சீடிக்கள் பல சந்தையில் உள்ளன. எனக்கு தெரிந்த வரையில் அவை முழுமையான பயன் கொடுப்பதில்லை. ஓரிரு நாட்கள் பார்த்து விட்டு, பின் முழுமையாக அன்றாட அலுவல்களில், வேலை சுமையில் அவற்றை மறந்து விடுகின்ற வாய்ப்பு அதிகம். எம் நோக்கம், தாங்கள் அனைவரும் இவற்றை கற்றுணர்ந்து, மேலும் பலருக்கு இவற்றை பயிற்றுவித்து, அவர்களின் வாழ்வையும் மேம்படுத்த வேண்டும் என்பதே. இத்தகைய முத்திரை பயிற்சினை கட்டணம் வசூலித்தும்  பலர் நடத்தி வருகின்றனர். நேரில் வந்து தாங்கள் கற்று கொள்ளும் சமயம், தாங்கள் சரியாக இதை கற்று கொள்கிறீர்களா என சோதிக்க முடியும், தவறிருப்பின், சென்டரின் தன்னார்வலர்கள் திருத்தம் செய்வர். மேலும், உங்களின் புற ஒளி மற்றும் ஆற்றல்களின் நிலை எப்படி உள்ளது என்பதனை என்னாலும் அறிந்து கொள்ளமுடியும். அதற்காகவே, இந்த ஏற்பாடு. வசதியின்மையால், இவற்றை விளக்கும் படங்களை கொடுக்க இயலாது என்ற காரணம்  கொண்டு, வருவோர் அனைவரையும், நோட்டு மற்றும் பேணா கொண்டு வர கூறியிருந்தோம். தற்சமயம், அந்த குறையையும்  போக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. அனைவருக்கும் இவற்றினை விளக்கும் படமும் கொடுக்க உள்ளோம். மிக சரியாக ஆறு மணிக்கு பயிற்சி தொங்கப்பட்டு விடும். ஆகவே, அதற்கு தகுந்தாற் போல் முன்னமே வந்து விடுதல் நன்று. சென்னையில் உள்ளோர் முன் பதிவு டோக்கன் நேரில் வந்து பெற்று செல்லவும். இந்த பயிற்சி உங்கள் வாழ்வில் அனைத்து வித உடற், மன பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது என்பதை உறுதியாக கூற முடியும்.

ஹரி ஓம் தத் சத் :

Tuesday, 12 September 2017

உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகள்

வரும் செப்டம்பர் 22 ம் தேதி முதல் இணையதள தொலைக்காட்சியான Swasthiktv.com ல் அன்பர்களின் பிரச்சனைகளுக்கு பரிகாரங்கள் வழங்க இருக்கிறோம். அன்பர்கள் ஒவ்வொருவரின் இரண்டு கேள்விகளுக்கு பதில் கூறப்படும். தங்களுடைய கேள்விகளை 'தாந்த்ரீக பரிகாரங்கள்' என தலைப்பிட்டு, பெயர்,பிறந்த நேரம்,பிறந்த ஊர், பிறந்த நேரம் குறிப்பிட்டு, அவர்களின் இணையதளத்திற்கு அனுப்பவும்.  அல்லது www.facebook.com/swasthiktv யின் முகநூல் பக்கத்திற்கு அனுப்பவும். இங்குள்ள கருத்து பெட்டியிலும் அனுப்பலாம். தலைப்பு மிக முக்கியம். பதில்களை Swasthiktv.comல் கண்டு தெளிவு பெறலாம். நேர விவரங்கள் அடுத்த பதிவுகளில் வெளிவரும்.

Monday, 11 September 2017

உங்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்திதற்கால சூழ்நிலையில், பண பற்றாக்குறை, குடும்ப அமைதியின்மை, உடல் சோர்வு, உடல் நலமின்மை, எல்லாவித மருந்துகள்,மருத்துவமும் செய்தும் உடலில் முன்னேற்றமின்மை போன்ற அனைத்தையும் போக்க வல்லவை யோக கலையும், முத்ர கலையும் ஆகும். பலரின் வேகமான வாழ்க்கை முறை சூழல்களால் மேற்கண்ட யோகாசன பயிற்சி மற்றும் மூச்சு பயிற்சிகள் செய்ய முடிவதில்லை. வைராக்கியத்துடன் ஆரம்பித்தாலும் ஒரு சில நாட்கள் செய்து பின் நிறுத்தி விடுகின்றனர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, உங்கள் அனைவருக்கும் மேற்கண்ட அனைத்து தொல்லைகளையும் போக்க வல்ல முத்திரை பயிற்சியை வழங்க உள்ளோம். நூற்றி ஐம்பது நபர்களுக்கு மட்டும் அனுமதி. எவ்வித கட்டணமும் இல்லை. நேரிடையாக வந்து முன்பதிவு டோக்கன் வாங்கி செல்வது அவசியம். இம்மாதம் இருபத்தி நான்காம் நாள்,ஞாயிறன்று, சென்னை மேற்கு மாம்பலத்தில் மாலை ஆறு முதல் எட்டு மணி வரை நடத்த எண்ணம்.

மிக சுலபமான இந்த முத்திரை பயிற்சியை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம். எளிதானது மட்டுமல்ல. மிகுந்த சக்தி வாய்ந்ததும் ,உடனடி பலன் தரக்கூடிய ஒன்றும் ஆகும். மூட்டு, முதுகு, கழுத்து வலிகள், ஆஸ்துமா, குழந்தையின்மை, பண பற்றாக்குறை, பயம், தேவையற்ற படபடப்பு, மன அமைதியின்மை, மூலம், பசியின்மை, தூக்கமின்மை, கோபம், நெஞ்சு வலி, சக்கரை வியாதி, இரத்த அழுத்தம், பெண்களுக்கு உண்டாகும் வியாதிகள், வாயு கோளாறு, உடல் பருமன், கல்வியில் தேர்ச்சி, வேலை கிடைக்க, கண் பார்வை, கிட்னி வியாதிகள், காது கோளாறுகள், முடி உதிர்தல் நிற்க போன்ற பல் வேறு பிரச்சைனைகளுக்குரிய, ஒரு நாளில் இருவது நிமிடம் செய்தாலே, நல்ல பலனை கொடுக்க கூடிய தெய்வீக முத்திரைகள் கற்று கொடுக்கப்படும். வருவோர் ஒரு நோட்டு புத்தகம் மற்றும் பேணா கொண்டு வந்தால் போதுமானது.

இவற்றை, தாங்கள் கற்று கொண்டது மட்டுமின்றி, தங்களை சுற்றியுள்ள உங்கள் உற்றார் உறவினருக்கு கற்று கொடுத்து அவர்கள் வாழ்வை மேன்மையுற செய்வீர்களேயானால் மகிழ்ச்சியுறுவேன்.

குறிப்பு : முன்பதிவு அவசியம் என்பதை நினைவில் கொள்க. வெளியூர் அன்பர்கள், தபாலில் டோக்கன் பெற்று கொண்டு கலந்து கொள்ளவும். மேற் தகவல்கள்  பெற தொலைபேசியில் அழைக்கவும்.

+919840130156 / +918754402857 

Sunday, 10 September 2017

வெற்றி தரும் வசீகர அஞ்சனங்கள்தங்களுக்கு எதிலும் அதிர்ஷ்டம் இல்லை என குறையுள்ளோர்க்கு,காரியங்கள் முடியும் தருவாயில் வந்து பின் தடையாவோர்க்கு, ஒரு வசீகர சக்தி வேண்டுவோர்க்கு, நம் புராதன தாந்த்ரீக கிரந்தங்களில் பல அஞ்சன முறைகள் கூறப்பட்டு உள்ளது. இவைகளை முறையாக செய்து உபயோகித்தால் வெற்றி நிச்சயம்.

அம்பர், கோரோசனை , ஸஹதேவி வேர், கஸ்தூரி,ஜவ்வாது ,புனுகு,மச்ச கல், பச்சை கற்பூரம்-இவை அனைத்தையும் சம அளவில் சேர்த்து ஒரு மஞ்சள் வஸ்திரத்தில் அமர்ந்து அரைத்து, "ஓம் றீம் ஐயும் கிலியும் சவ்வும் சர்வலோக வசியமாக சுவாகா" என்ற மந்திரத்தை 1008 முறை கூறி, அரச மரத்தில் இருந்து தானாக விழுந்த  ஒரு சிறு குச்சியினால் , புருவ மத்தியில் இட்டு செல்ல, காரிய பலிதம் நிச்சயம். இதை வீட்டிற்குள் இருக்கும் சமயம் தரித்தல் கூடாது.
இதை வியாழன் அல்லது ஞாயிறு தயாரித்தல் பலன் தரும்.

மேல் விவரங்களுக்கு தொலைபேசியில் மட்டும் அணுகவும் :

+919840130156 / +918754402857