Friday, 22 September 2017

வசிய முத்திரை பயிற்சி 24.9.17மேற்கண்ட முத்திரை பயிற்சிக்கு பதிவு செய்துள்ளோர், மாலை 5 :45 மணியளவில் வந்து அறையில் வசதியாக அமர்ந்து விடுமாறு கேட்டு கொள்கிறோம். பயிற்சி தொடங்கு முன், கைபேசியினை சைலன்ட் மோடில் போட்டு விடுவது அவசியம். காலம் தாழ்த்தி வருவோருக்கு இடமளிக்கும் சூழ்நிலை இருக்காது என்பதால், அதற்கு  தகுந்தாற் போல் கிளம்பவும். தன்னார்வலர்கள் ஐந்து மணிக்கே வந்து விடின், சற்று வசதியாக இருக்கும்.பயிற்சியின் நடுவில் சந்தேங்களை கேட்காமல் ,முடிந்ததும் கேட்டு தெரிந்து கொள்ளவும்.  முத்திரை பயிற்சி முடிந்தவுடன், கற்று கொடுக்கப்பட்ட முத்திரைகள் அடங்கிய காலண்டர் கொடுக்கப்படும். காலண்டரில் கொடுக்கப்பட்டுள்ள பயன்களை விடவும் அதிக பயன்கள் ஒவ்வொரு முத்திரைக்கும் உண்டு, அவைகள் விளக்கப்படும். ஆகவே தேவையுள்ளோர் குறிப்பு எழுதி கொள்ள,முன்னேற்பாடுடன் வரவும். பயிற்சி நடக்கும் சமயம், அமைதி அவசியம், ஆகவே சிறு குழந்தைகளுடன் வருவோர், தக்க ஏற்பாட்டுடன் வரவும். பயிற்சி முடிந்ததும், அனைவரும் உணவருந்தி செல்லுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.

குறிப்பு : முன்பதிவு அவசியம் /  இந்த பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் இல்லை.

நாள் : 24.9.17
நேரம் : மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை
இடம் : மேற்கு மாம்பலம், பாணி கிரஹா திருமண மண்டபம்
தொடர்பிற்கு : +919840130156 / +918754402857

Thursday, 21 September 2017

பிரபஞ்ச ஆற்றல் யந்திரங்கள்


மின் வசிய எண்கள் பயிற்சி


மின் வசிய எண்கள் மற்றும் பிரபஞ்ச ஆற்றல் யந்திரங்கள் பயிற்சிமேற்கண்ட இரண்டு முறைகளையும் கூறி பலர் பலனடைந்ததை அடுத்து, தங்கள் வேறு பிரச்சனைகளை தாங்களே தீர்த்து கொள்ள, அதை பயிற்சியாக கேட்டு வந்ததின் பொருட்டு, இவ்விரண்டு பயிற்சிகளையும் புத்தக வடிவில் கொடுக்க எண்ணம்.

மின் வசிய எண்கள், நம் அன்றாட விஷயங்களுக்கு மற்றும் அனைத்து வித நோய்களுக்கும் பயன்கொடுக்கும். பிரபஞ்ச ஆற்றல் யந்திரங்கள், வாழ்வியல் பிரச்சனைகளுக்கு, எண்பது யந்திரங்கள் ஸ்டிக்கர் வடிவில் மற்றும் பாக்கெட்டில், தலையணை அடியில் வைக்கும் வண்ணம் கார்டுகளில் கொடுக்கப்படும். இரண்டும் பிரபஞ்ச ஈர்ப்பின் சக்தியில் செயல்படுவதால், பலன்களை வெகு சீக்கிரம் உணரலாம். இவற்றிற்கு கட்டணம் உண்டு. விவரங்கள் பெற தொலைபேசியில் மட்டும் அணுகவும். 

Wednesday, 20 September 2017

நவராத்திரியில் நல்லவை எல்லாம் பொங்கி வர..நம் துன்பங்கள் அனைத்தும் முடிவிற்கு வருவதற்காகவே, மஹாளய பட்சம் முடிந்ததும் தொடங்குகிறது நவராத்ரி. நம் வாழ்வியல் துன்பங்களை களைவதற்கு மிக சரியான சந்தர்ப்பங்கள் நவராத்ரி, தீபாவளி நாட்கள் போன்றவை. தேவியின் பரிபூர்ண ஆக்ரமம் இந்த நாட்களுக்கு உண்டு. இந்த தினங்களில் எவைகளை செய்யலாம், எவற்றை செய்ய கூடாது என்பதையும், சூட்சும முறையில் இந்த நாட்களில் நம் துன்பங்களை களைந்து, நன்மைகளை-நேர் மறை ஆற்றல்களை அதிகப்படுத்தி கொள்ளலாம் என்பதனை இந்த பதிவில் காண்போம்.

இந்த நாட்களில் அசைவம், தாம்பத்தியம், சவரம், முடி களைதல் போன்றவை கண்டிப்பாக தவிர்த்தல் நலம் தரும்.

தினசரி சுமங்கலிகள் அல்லது கன்னி குழந்தைகளுக்கு மஞ்சள் மற்றும் வளையல்கள் வாங்கி கொடுப்பது மங்கள நிகழ்ச்சிகளை நம் வாழ்வில் கொண்டு வரும்.

மஹாலக்ஷ்மி சன்னதியில் 'தன ஆகர்ஷண ஊதுபத்தியை' தினசரி ஒரு பாக்கெட் வீதம் கொடுத்து ஏற்ற சொல்லி, கர்ப கிரக விளக்கில் நெய் சேர்த்து வழிபட்டு வரலாம். தினசரி கோவில் செல்ல முடியாதோர்,  வீட்டில் உள்ள மஹாலக்ஷ்மி படத்தின் முன் ஏற்றி வைத்து, வெள்ளி விளக்கில் வெள்ளை திரி அல்லது தாமரை தண்டு திரி கொண்டு விளக்கேற்றி வழிபடலாம்.

இந்த நாட்களில் லட்சுமி சோழி எனப்படும் நான்கு வர்ண சோழிகளை வீட்டின் பூஜை அறையில் அல்லது பணப்பெட்டியில் வைப்பது நல்ல பலன் தரும். இத்துடன் கோமதி சக்கரம் வைத்து வழிபட, பலன் இரட்டிப்பாகும். இருக்கும் இடத்தினை செல்வ வளமாகும் வலம்புரி சங்கினை  வீட்டினில் வைக்க மிக சரியான சந்தர்ப்பம் இது.

இந்த ஒன்பது தினங்களில், மந்திரங்களில் தேர்ந்த ஒருவரை வைத்து வீட்டில், துர்கா சப்தசதி பாராயணம் செய்விக்கவும். தெரிந்தவர், தானே செய்யலாம்.

இந்த நாட்களில் மாலை வேளையில் 'ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே" என்ற சர்வ சக்தி படைத்த மந்திரத்தை நூற்றியெட்டு முறை கூறி நிவேதனம் செய்து வழிபட்டு வருவது, மிக பெரிய துன்பங்களில் இருந்து நம்மை உடனுக்குடன் காக்கும்.

கணவன் மனைவிக்கும்,மனைவி கணவனுக்கும் ஒரு வெள்ளை துணியில் தேங்காயை சுற்றி பரிசளிக்கவும். அதனை நவராத்ரி முடிந்ததும் சமையலுக்கு  உபயோகிக்க, அன்னியோன்னியம் மிகும்.

இந்த தினங்களில் ஒன்பது முக ருத்ராட்சத்தினை வாங்கி கழுத்தோடு அணிவது, தேவியை தங்களோடு என்றும் வைத்திருப்பதற்கு சமம்.

ஒன்பது சிறிய நிலக்கரி துண்டுகளை வாங்கி வைத்து கொண்டு, தினசரி ஒன்றாக மண்ணில் மாலை நேரத்தில் புதைத்து  வரவும். மண் இல்லாதோர், ஒரு மண் தொட்டியில் புதைத்து வரலாம். இது எப்போதும் வீட்டில் இருக்கலாம்.

இந்நாட்களில் கன்னி பெண்களுக்கு சிகப்பு நிற ஆடைகளை தானமளிப்பது (முடியாதோர் சிகப்பு கைக்குட்டை வழங்கலாம்) நன்மை சேர்க்கும்.

இந்த நாட்களில் ஸ்ரீ சூக்தம் தினசரி வீட்டில் கூறி வர பணம் பல வழிகளில் சேரும்

முக்கிய குறிப்பு : இந்நாட்களில் உங்களால் எவ்வளவுக்கு எவ்வளவு கன்னி குழந்தைகளுக்கு (எட்டு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள்) உதவி செய்கின்றீர்களோ, அந்தளவு உங்கள் வாழ்க்கை வளமாகும்.

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Monday, 18 September 2017

மஹாளய அமாவாசை- வாழ்வின் துன்பங்களை உடனடியாக மாற்றும் எளிய பரிகாரம்

நம் முன்னோர்களை-பித்ருக்களை சரிவர பூஜிக்காதது, தர்ப்பணம் கொடுக்காமல் இருப்பது போன்ற செயல்கள் மட்டுமே நாம் எத்தகைய பரிகாரங்களை செய்து வரினும், துன்பங்கள் மாறாது பெருகுவதற்கு உண்டான காரணம். அப்படி இத்தனை நாட்கள் இருந்திருப்பினும், அவை அனைத்தையும் போக்கும் வண்ணம் ஒரு பரிகாரம் உள்ளது. அவசியம் செய்து பயன் அடையவும். மஹாளய அமாவாசை அன்று ஐந்து தேங்காய்களை மாலையாக நூலினால் கட்டி, நீர் நிலைகள் (ஆறு,ஏறி,குளம்,கடல்) உள்ள இடத்திற்கு சென்று, பித்ருக்களை மனதார பூஜித்து, அவர்களிடம் ஆசி வேண்டி, பின், அந்த மாலையை நீர் நிலைகளில் விட்டு விடவும்- மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின். எளிமையாக தோன்றினாலும், பல் வேறு அதிசயங்களை உடனுக்குடன் கொடுக்கவல்லது இந்த பரிகாரம். தேவை,பித்ருக்களிடத்தில் நெஞ்சம் நிறைந்த அன்பும், மரியாதையும் மட்டுமே. ஆண் பெண் இரு பாலரும் செய்யலாம். இறைவன் கொடுப்பதை விட முந்தி கொண்டு நமக்கு ஆசி வழங்கும் சக்தி பெற்றோர் நம் பித்ருக்கள் என்பதனை மறந்து விட வேண்டாம். ஹரி ஓம் தத் சத் ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர் ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள் 9840130156 / 8754402857 www.yantramantratantra.com