Saturday, 16 December 2017

சனி பெயர்ச்சி பரிஹார மஹா ஹோமம் 17.12.17

நாள் : 17.12.17
இடம் : சங்கர மடம், தி.நகர்,சென்னை (பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் மிக அருகில்)
நேரம் : காலை பத்து மணி முதல் மதியம் ஒன்று வரை
நிவேதன அன்னம் : மதியம் ஒண்ணே கால் மணியில் இருந்து

பொதுவாக தாந்த்ரீக பரிகாரங்கள், பரிஹார ஹோமங்கள், மாந்த்ரீக விஷயங்கள் போன்றவற்றிற்கு கேட்டை நட்சத்திரம் மிக ஏற்றதாகும். இந்த நச்சரித்ததின் குறியீடு காதணி, குடை மற்றும் ரட்சைகளாகும். இதை மனதினில் வைத்தே சனீஸ்வர ரட்சை கொடுக்க திட்டமிடப்பட்டது. இந்த நாளில் ரட்சைக்கு பணம் செலுத்துவதோ, அணிவதோ பலன்களை இரட்டிப்பாக்குவது உறுதி.

இந்நாளில் ஹோமம் செய்விக்கும் வைதீகர்களுக்கு வேஷ்டி அங்கவஸ்திரம் மற்றும் சம்பாவனை (தக்ஷிணை) செலுத்துவது மிக பெரும் புண்ணிய பலனை கொண்டு சேர்க்கும்.

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Thursday, 14 December 2017

சனி பெயர்ச்சி பரிகார மஹா ஹோமம்-சூட்சும பரிகாரம்


நாள் : 17.12.17
இடம் : சங்கர மடம், தி.நகர்-காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் பஸ் நிலையம் அருகில், சென்னை
நேரம் : காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரை 
நிவேதன அன்னம் : மதியம் ஒன்னேகால் மணியளவில்


அன்பர்கள் ஒவ்வொருவரும் ஹோமத்திற்கு வருமுன் சனீஸ்வர திருமேனியை மனதினுள் நன்கு பிரார்த்தித்து, ஒரு ஸ்பூன் அளவு (கவனம் தேவை : சிறு அளவு மட்டும்-) பச்சரிசி மற்றும் அரை ஸ்பூன் அளவு  எள் கைகளில் வைத்து தியானித்து, எடுத்து ஒரு பேப்பரில் முடிந்து வைத்து கொண்டு வரவும்-ஹோமத்தில் செலுத்த. பல சூட்சுமங்களை உள்ளடக்கிய பெரும் பரிஹாரம் இது. பச்சரிசியின் அளவை விட எள்ளின் அளவு குறைவாக இருத்தல் வேண்டும். அதிகப்படியாக எடுத்து வரின், மறுக்கப்படும்.

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Wednesday, 13 December 2017

பங்கு சந்தை மற்றும் கமாடிட்டி சந்தையில் வெற்றி பெறமேற்கண்ட துறைகளில் பலர், தங்களின் நிரந்தர வேலையை விட்டு விட்டு,
கோடீஸ்வரன் ஆகிறேன் பேர்வழி என்று இறங்கி அதலபாதாளத்தில் வீழ்ந்து துன்பப்படுவதுண்டு. மேலும் சிலர், அடுத்தவர்களின் பணத்தையும் வாங்கி அவர்களுக்கு லாபமீட்டி தருகிறேன் என மேற்கண்ட தொழிலில் , அவர்களின் பணத்தையும் சேர்த்து அழித்து, மிக பெரும் கடனாளியாகி சிக்கி தவிப்பதுண்டு. இது போன்ற யூக வியாபாரங்களில் இறங்குவதற்கு முன், மிக அவசியமாக, நன்கு விவரமறிந்த ஜோதிடர்களிடம் ஆலோசனை பெறுவது பெரும் சிக்கல்களில் இருந்து காக்கும். எம்மிடம் தனி நபர்  ஆலோசனைக்கு வருவோரில், இதை போன்றோர் அதிகம் உள்ளர். சில ஆயிரங்களை யோசித்து,மிக பெரும் அவதிக்கு உள்ளாகி பின் ஆலோசனைக்கு வருவதை விட,முன்னரே தகுந்த ஆலோசனையின் படி செயல்பட்டால்  பல லட்சங்களை அழிப்பதை தவிர்க்கலாம். முதலில் அவர்களுக்கு இந்த துறை ஏற்றதா என்பதை ஆராய்ந்து பின் அவர்களுக்கு தக்க பரிகார முறைகள் கூறுவது வழக்கம். இதில், சிலர் அடுத்தவர்களுக்காக சந்தையில் ஈடுபடும் பொழுது லாபம் ஈட்டிவிடுவதாகவும், தனக்கென வரும் சமயம் பெரும் நஷ்டத்தை சந்திப்பதாக கூறுவதுண்டு. இவைகளுக்கு பின்னால் பெரும் சூட்சும விஷயங்கள் அடங்கியுள்ளன. பொதுவாக ஒவ்வொருவருக்கும் எந்தெந்த துறை ஷேர் அல்லது கமாடிட்டி லாபம் ஈட்டி தரும் என ஒன்று உண்டு. அதை தெரிந்து கொண்டு மற்றும் அந்த மாதம் எந்த துறை ஏற்றம் பெறும், எது வீழ்ச்சியை தரும் என்பதையும் தெரிந்து கொண்டு ஈடுபடுவது சாலச்சிறந்தது.  தங்கள் நிலையை அறிந்து, பேராசையும் பதட்டமும் இல்லாது, தகுந்த முறையில் ஈடுபட்டால், இந்த துறை மட்டுமல்ல,
எத்துறையிலும்  பல வெற்றிகளை காணலாம்.

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Tuesday, 12 December 2017

மாபெரும் கடன்கள் அடைய ரகசியம்வரும் சனிக்கிழமை 16.12.17 காலை நாலரை மணி முதல் ஆறரை மணி வரை கடன்களில் ஒரு சிறு பகுதியை கட்டினாலும், வெகு நாளாய் அடையாது இருக்கும் கடன்கள் கூட அடைந்து விடும்- இது மைத்ர முகூர்த்த நேரம். ஆனால், பலருக்கும் தெரியாத  ஒன்று அந்த நாளில் (16.12.17) காலை ஆறரை முதல் எட்டேகால் வரை இருக்கும் சங்கராந்தி முகூர்த்தத்தில் ஒரு சிறு கடன் பகுதியை அடைத்தால், உங்களுக்கு கோடானு கோடி கடன் இருப்பினும் மின்னல் வேகத்தில் அடைந்து விடும் என்பது. முயற்சித்து வெற்றி அடையுங்கள்.

( இது போன்ற சூட்சுமம் நிறைந்த வெற்றி கொடுக்கும் நேரங்களை பங்கு சந்தையில் ஈடுபட்டுள்ளோர்க்கு கட்டண ஆலோசனையாக
வழங்கப்படுகிறது. )

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Monday, 11 December 2017

சனி பெயர்ச்சி-சனீஸ்வர ரட்சை- சில விளக்கங்கள்பொதுவாக சிலர் தங்களின் கஷ்ட காலங்களில் தங்களின் அதாவது குடும்ப தலைவர் என வைத்து கொள்வோம். அவரின் ஜாதகத்தை உரியவரிடம் காண்பித்து பலன் அறிந்து, பரிகாரங்கள் ஏதேனும் இருப்பின் அறிந்து அதன் படி செய்வர். பின் சில காலங்கள் கழித்தும் நிலை சரியாகாது போயின், குறிப்பிட்ட பரிகாரம் அல்லது பலன் கூறிய நபர்  பற்றி அவநம்பிக்கையுருவர். இப்படி எம்மிடம் பலர் வந்து எங்கெங்கு சென்றோம் என்றெல்லாம் விவரிப்பதுண்டு. இதில் குறை கூற வேண்டியது தம்மை தாமே அன்றி, பலன் அல்லது பரிகாரம் கூறிய நபர்களை அல்ல. ஆகையினால் தான் எம்மிடம் வருவோர் சனி கிரகம் ரீதியாக தொல்லைகளை சந்தித்து வரின், நாம் கேட்கும் முதல் கேள்வி, அவர்களின் வாழ்க்கை முறை, தூங்குதல், உணவு பழக்கம், விழித்தெழும் நேரங்கள் பற்றி தான். ஏனெனில், எம்மை பொறுத்தவரை இவைகள் சனி  கிரக ரீதியான கஷ்டங்களுக்கு மிக முக்கியமானவை. மேலும், ஒரே குடும்பத்தில் சனி பெயர்ச்சியினால் ஒருவருக்கு மேல் குறிப்பாக தந்தை மகன் அல்லது மகள்- ஒரே ராசியாக இருந்து ஏழரை அல்லது அஷ்டம சனி போன்ற காலங்களோ அல்லது சனி திசை ஒருவருக்கு மேல் ஒரே குடும்பத்தில், மற்றும் ஒரே குடும்பத்தில் சனி திசை, ராகு திசை போன்றவை மற்றும் சனி பெயர்ச்சியின் நிலை சரியில்லாது போதல் போன்றவை இருப்பின், வாழ்நிலை மிக கடினமாக காணப்படும். இதை எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்தே பலன்கள் மற்றும் பரிகாரங்களை கேட்டு சென்று, செவ்வனே செய்து வரின், பலன் நிச்சயம். ஜோதிட அல்லது தாந்த்ரீக குரு மார்கள், எவரும் வருவோர்  குடும்பத்தில்  அனைவருக்கும் தம்மிடம்  ஆலோசனை எடுத்து கொள்ள சொல்லி கூற மாட்டார்கள். ஆலோசனைக்கு செல்வோர் தான் , நல்லது எவை என கேட்டறிந்து செயல்படவேண்டும்.

இது போன்ற சனி பெயர்ச்சி காலகட்டத்தில், நன்கு தாந்த்ரீக மந்த்ர பிரயோகம் செய்யப்பட்ட ரட்சை, ஒரு நல்ல வேலி எனலாம். நம்பிக்கை மற்றும் பக்தியுடன் அனைவரும் அணிந்து வர, பல சிக்கல்களை எளிதில் தாண்டி விடலாம். ஆகவே தான் வரும் சனி பெயர்ச்சி ஹோமத்தில் இந்த ரட்சை மிக குறைந்த கட்டணத்திற்கு கொடுக்க திட்டமிட்டோம்.

சனி பெயர்ச்சி மஹா ஹோமம்
நாள் : 17.12.17
இடம் : சங்கர மடம், தி.நகர் (பஸ் ஸ்டான்ட் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் அருகில்)
நேரம் : காலை 10 AM மணி முதல் 1 PM மணி வரை
நிவேதன அன்னம் : மதியம் 1:15 PM முதல்

மேல் விவரங்கள் பெற : +918754402857 & +919840130156


முக்கிய பின் குறிப்பு : தாந்த்ரீக அல்லது ஜோதிட ஆலோசனை கூறும் அனைவருக்கும், எல்லோரும் போல் வாய், வயிற் அதற்கு பசி மற்றும் தாகம் உண்டு. அவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் உண்டு. அவர்களும் மற்ற  அனைவர் செலுத்தும் அதே வாடகையை  செலுத்தி  தான் வீடுகளில் குடியிருக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு உடல்நிலை மோசமானால், அவர்களும் மற்றவர் கொடுக்கும் தொகையை கொடுத்து தான் மருத்துவம் செய்து கொள்ள வேண்டிவரும். அவர்களும் சனி திசை, ஏழரை சனி, அஷ்டம சனி, கர்ம சனி,கண்டக   சனி என்ற சோதனையான காலங்களை சந்திக்க வேண்டி வரும்.  அவர்களின் குழந்தைகள் படிப்பதற்கும் மற்ற அனைவரும் செலுத்தும்  அதே கல்வி தொகையை  தான் பள்ளி கல்லூரிகளில் செலுத்த  வேண்டிவரும். இவை அனைத்தையும் மனதில் கொண்டோமானால், அவர்களிடம் அனைத்தையும் இலவசமாக எதிர்பாராத குணம் ஏற்படும். சனீஸ்வரரை ப்ரீதி செய்ய முதலில், எவரிடமும் எதையும் இலவசமாக பெறாமல் இருக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். ஏதேனும் குருமார்கள் அன்பு பிரசாதமாக சிலவற்றை கட்டணமின்றி கொடுத்தாலும், அவற்றை பெற்று கொண்டு, ஒரு வாழைப்பழமாவது அல்லது ஒரு ரூபாய் நாணயமாவது அவர்களுக்கு தட்சிணையாக அளிப்பது நன்று. நாம் பல ஆன்மீக பொருட்களை கட்டணமின்றி கொடுத்து வந்த நேரங்களில், பலர் இதனை கடைபிடித்து பெற்று கொண்டனர்.

தற்சமயம் எம்மிடம் தொடர்ந்து ஒரு சிலர் , சேவையை-பொருட்களை, கட்டணமின்றி எதிர்பார்த்து நச்சரிப்பதால்,அப்படிப்பட்டோருக்காக  மேற்கண்ட பின் குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.