Saturday, 23 December 2017

தன்னார்வலர்கள் (VOLUNTEERS) தேவை

ஷீர்டி ஸ்ரீ சாய் சேவா டிரஸ்டின் கீழ் இயங்கும் 'ருத்ர பரிஹார் ரக்க்ஷா
சென்டருக்கு நம்  முறைகளை பற்றிய தெளிவும், ஆன்மீக ஆர்வமும், தொண்டாற்றும் விருப்பமும் உள்ள தன்னார்வலர்கள் (VOLUNTEERS) தேவை உள்ளது. நாம் நடத்தும் நிகழ்ச்சிகள், ஹோமங்கள், பூஜைகள் போன்றவையில் சேவைகள் செய்ய. விருப்பமுள்ளோர் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு, உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு பதிவு செய்து கொள்ளவும். (வெளியூர் அன்பர்களும் தொடர்பு கொள்ளலாம்.)

+919840130156 / +918754402857 

Friday, 22 December 2017

சகல துன்பங்களையும் நீக்கும் அருமருந்து : சண்டி ஹோமம்


கிரக தோஷங்கள், கர்ம வினைகள், வீடு பேறு, குழந்தை பேறு, திருமணம் அமையாமை, எதிரிகள் தொல்லை, வறுமை, கடன் தொல்லை, உடல் நிலை கோளாறு,பிள்ளைகளின் காதல் பிரச்சனைகள், கணவன் மனைவி பிரச்னை,இனம் தெரியாத பயம்,மரண பயம், அதீத வட்டியினால் வறுமை போன்ற பல் வேறு பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு சண்டி ஹோமம் ஆகும்.

அந்த தெய்வீக அனுபவத்தை உணர்ந்ததுண்டா 
நீங்கள் ??

Wednesday, 20 December 2017

வரும் புத்தாண்டு 2018 முதல் குபேர சம்பத்து எளிதில் பெறநாள் : 01.01.18
நேரம் : மாலை நான்கு மணி முதல் ஏழு  வரை
இடம் : சங்கர மடம், தி.நகர், சென்னை
நிவேதன அன்னம் : ஏழேகால் மணி முதல்
மூலிகை குபேரர் விநியோகம் : ஏழரை மணி முதல்

குபேர சம்பத்தை எளிதில் பெற, குபேரரை எளிதில் ப்ரீதி  செய்ய ஒரு சுலப வழி உள்ளது.இதை இன்று மூலிகை குபேரரரை பத்திற்கும் அதிகமாக வேண்டி ஸ்ரீமதி. சுசிலா பாண்டுரங்கன் என்பவர் தொலைபேசியில் அழைத்திருந்தார்.  (அவரின் அனுமதி பெற்றே அவர் பெயர் வெளியிடப்படுகிறது) அவர் பகிர்ந்த தகவல் இது. இதை அவரின் மாமனாரின் தந்தை, மஹாலக்ஷ்மி உபாசகர், தெரிவித்ததாக கூறினார்.

குபேரர் யக்ஷர்களின் தலைவர், இருப்பினும் மிகுந்த சிவ பக்தர். இவரை பூஜிப்பவர்களுக்கு மட்டுமின்றி, வேறொருவர் பூஜிக்க வாங்கி பரிசளிப்பின், பெற்று கொண்டோர்  பூஜிக்க பூஜிக்க, வாங்கி கொடுத்தவருக்கும் சேர்த்து பலன் தருவார் என்பதே அது. ஆகையினால், எவர் ஒருவர் தூய்மையான பக்தியுடன் அவரை பூஜிக்கிறார்களோ, அவர்களுக்கு வாங்கி பரிசளிப்பதாக தெரிவித்தார். இதையே, மஹாலக்ஷ்மி தாயார் வடிவத்திற்கும் செய்யலாம் பலன் உண்டு.

குறிப்பு: மேற்கண்ட விஷயம் நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று என்றாலும். சிலர் இதை நாம் சந்தைப்படுத்துவதற்காக கூறுகிறோம் என எண்ணி விடக்கூடாது, என்பதால் தெரிவிக்காமல் இருந்தோம். அவரின் உரையாடலின் பொழுது, இது நல்ல விஷயம் தானே, தெரிவித்தால் அனைவருக்கும் பயன் இருக்குமே என வேண்டிக்கொண்டதால் இந்த பதிவு.பெருமாள், தாயார் கோவிலில் உள்ள பட்டர்களும்  (உபாசகர்கள்) இதை உறுதி செய்கின்றனர் . 

முக்கிய குறிப்பு: மேற்கண்ட புத்தாண்டு தினத்தில் மூலிகை குபேர விநியோகத்தின் சமயம், அனைவரும் அமைதி காத்து, வழிபட கூறப்படும் மகா மந்திரத்தையும் எழுதி வைத்து, அதன்படி பூஜித்து வர பலன்கள் பெருகும்.

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Tuesday, 19 December 2017

ருத்ராக்ஷ-வசிய ரத்ன பரிகாரங்கள்"அவரவருக்கு தனம் தரும் தெய்வங்கள்" என்கின்ற ரிப்போர்ட் நாம் குறைந்த கட்டண ஆலோசனையில் கொடுத்து வருவது பலரும் அறிந்ததே. அதில் ஒரு சில குறிப்பிட்ட நபர்களுக்கு, வேறு பரிகாரங்கள் அவசியம் என்கின்ற சூழ்நிலையில் நாம் பின் குறிப்பாக மேற்கண்ட "ருத்ராக்ஷ-வசிய ரத்ன பரிகாரங்கள்" ரிப்போர்ட் பெற்று கொள்ளும் படி கூறியிருந்தோம். அப்படி 'ருத்ராக்ஷ-வசிய ரத்ன பரிகாரங்கள்" ரிப்போர்ட் பெற்று கொண்ட ஒரு அன்பர், அதில் குறிப்பிட்டிருந்தது போல் அவருக்குரிய தன வசிய ரத்தினத்தை வாங்கி அணிந்திருக்கிறார். பின்பு, எம்மிடம், அவர் வெளியில் கொடுத்து வைத்திருக்கும் பல லட்ச ரூபாய்கள், வருவதில் தாமதம் என்றும்,குறிப்பிட்ட ரத்னம் எவ்வளவு நாளில் பலன் தரும் எனவும் கேட்டிருந்தார். மேற்கண்ட விஷயத்தை ஆராய்ந்தே அவருக்கு அப்படிப்பட்ட ரத்தினத்தை பரிந்துரை செய்திருந்தோம். பொதுவாக உண்மையான மற்றும் சூடு செய்யப்படாத ரத்தினங்கள், இருவது முதல் முப்பது நாட்களுக்குள் அதன் அற்புதங்களை காட்ட ஆரம்பித்துவிடும் என கூறினோம். அதே போல் மேற்குறிப்பிட்ட நபருக்கு, அந்த ரத்தினம் பதின்மூன்றே நாட்களில், வர வேண்டிய தொகையில் கணிசமான  பகுதியை  திரும்ப பெற்று தந்துள்ளதை தொலைபேசியில் தற்போது தெரிவித்தார். அவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம்,எந்த உலோகத்தில் அணிய வேண்டும், எந்த கையில் எந்த விரலில் அணிந்தால் நன்று என்பதை ஆராய்ந்து அணிய வேண்டும். மேலும், ராசிக்கு, நடப்பு திசைக்கு ரத்தினங்கள் வாங்கி அணிவது சில நேரங்களில் அதீத ஆபத்தை  ஏற்படுத்திவிடும். எந்த ஒரு ரத்தினக்கற்கள் தமக்கு எந்த நேரத்தில் எப்படி உதவும் என்பதை டிகிரி சுத்தமாக ஆராய்ந்து, குறிப்பிட்ட நாளில் அணிந்து வந்தால், அதன் அற்புதத்தை அது கண்டிப்பாக காட்ட ஆரம்பிக்கும் என்கிறது மூல க்ரந்தமான 'ரத்ன சாஸ்த்ரம்".

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Monday, 18 December 2017

உங்கள் அனைவரின் வாழ்விலும் குபேர மழை கொட்டப்போகும் புது வருடம் 2018


நாள் : 01.01.18
நேரம் : மாலை நான்கு மணி முதல் ஏழு  வரை
இடம் : சங்கர மடம், தி.நகர், சென்னை
நிவேதன அன்னம் : ஏழேகால் மணி முதல்

வரும் புது வருடம் முதல் நாளை ஒட்டி வருகிறது பௌர்ணமி. அதே நாளில் மாலையில் திருவாதிரை நட்சத்திரமும் இணைவதால், அன்று மாலை 'ஏகதச ருத்ர பாராயணமும் அதை தொடர்ந்து குபேர லட்சுமி பூஜையும் செய்விக்க இருக்கிறோம். திருவாதிரையில்,அதுவும் சோம வாரத்தில்  ருத்ர பாராயணம் என்பது மிக அதீத பலன் தரும் ஒன்றாகும். சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் அல்லவா?? அது மட்டுமல்ல, குபேரர் பிறந்தது பௌர்ணமி திதியில். ஆகவே தான் குபேர பூஜை பௌர்ணமி அன்று செய்யப்படுகிறது-பலன் பன்மடங்கு பெருக. பலரின் தொடர்ந்த வேண்டுகோளை அடுத்து, தன வரவு பெருகச்செய்யும் பல மூலிகைகளை கொண்டு, "மூலிகை குபேரர்" அந்த நாளில் குபேர லட்சுமி பூஜையில் வைத்து மிகுந்த மந்திர உருவேற்றம் செய்து, தேவைப்படுவோர் அனைவருக்கும் தயாரிப்பு செலவில் (Production Cost) கொடுக்க இருக்கிறோம். மிக மிக குறைந்த நன்கொடையாக ரூ.600/- விலை நிர்ணயம் செய்துள்ளோம். மேலும், சங்கல்பம் செய்ய ஒரு நபருக்கு மிக குறைந்த தொகையாக ரூ.இருபது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ் வருடம் தான் புது வருடம் தமிழ் இந்துக்களுக்கு என்றாலும், வழக்கத்தில் உள்ள புது வருட நாள், பௌர்ணமி மற்றும் திருவாதிரையை உள்ளடக்கி வருவதால் இந்த ஏற்பாடு. புது வருடத்தில் அனைவர் வீட்டிலும் குபேரர் நுழைந்தால் நன்மை தானே?? குபேரர் வேண்டுவோர், கண்டிப்பாக முன் பதிவு செய்தல் அவசியம். காரணம், இதை ஒரு பொருளை போன்றோ பொம்மையை போன்றோ தயாரிக்கப்படுவதில்லை. அதீத சக்தி வாய்ந்த தன வசிய மூலிகையால் செய்யப்பட இருக்கிறது-அனைவருக்கும் மிகுந்த பலன் சேர்ப்பதற்காக. ஆகவே, விருப்பமுள்ளோர், முன் கூட்டியே முன் பதிவு செய்து கொள்ளவும். ருத்ர சமக பராயணத்திலும், குபேர லட்சுமி பூஜையிலும் மனமுருகி வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டால், எப்பேர்ப்பட்ட விருப்பங்களும் நிறைவேறும் என்பது நாம் சொல்லி உங்களுக்கு அறியவேண்டியதில்லை என நம்புகிறோம்.

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Sunday, 17 December 2017

சனி பெயர்ச்சி ஹோமமும் சனீஸ்வர ரட்சையும்இன்று 17.12.17 குறித்த நேரத்தில் சென்னை தி.நகர் சங்கர மடத்தில் 'சனி பெயர்ச்சி ஹோமம்' சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. கலந்து கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் சிறப்பான முறையில் நடத்தி கொடுத்தார். அவருக்கு  எம் நன்றிகள். நாம் எதிர்பாரா வண்ணம் பலரும் சனீஸ்வர ரட்சை அவரவர் குடும்பத்தினர் அனைவருக்குமாக பெற்று சென்றனர். பலருக்கு கொடுக்க முடியாமல், கையிருப்பு கரைந்தது. பலரும் சனீஸ்வர ரட்சையின் அருமையை, மகத்துவத்தை புரிந்து வைத்திருந்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கிடைக்க பெறாமல் போனோர், மேலும் வாங்கி அணிய விருப்பமுள்ளோருக்காக, இந்த மார்கழி மாதம்  முழுவதும், சனீஸ்வர ரட்சை கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.

அன்பர்கள் அனைவருக்கும் வரும் புத்தாண்டு மென் மேலும் பல புதிய வாய்ப்புகளை, செல்வ செழிப்பை ஏற்படுத்த, புத்தாண்டு பரிசு ஒன்று காத்திருக்கிறது. என்னவென்று அறிந்து கொள்ள,
நாளை வரை காத்திருங்கள் !!

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com