Saturday, 30 December 2017

தனம் தரும் "தாந்த்ரீக ரகசியங்கள்"

பணம் என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்று. நாம் கொடுத்து
வரும் பரிகாரங்களில் பணம் சேர கொடுத்து வரும் பரிகாரங்கள், பலரால் சோதிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றவை. பலரின் தொடர்ந்த வேண்டுகோளுக்கிணங்க , உடனடி பலிதம் தரும், செல்வம் சேர்க்கும் தாந்த்ரீக ரகசியங்கள் புத்தகம், வரும் தை பொங்கலுக்குள் உங்கள் கைகளில் தவழ இருக்கின்றது. இந்த புத்தகமும் 'வரையறுக்கப்பட்ட பதிப்பாக' வெளிவர இருப்பதால், முன் பதிவு அவசியம். நன்கொடை ரூ.200/-
'சனீஸ்வர ரகசியங்கள்' புத்தகம் வரும் ஜனவரி ஒன்றாம் நாள், நாம் நடத்தவிருக்கும் 'லட்சுமி குபேர பூஜையின் சமயம் கிடைக்கும். பதிவு செய்தவர்கள் தகுந்த ரசீதை காண்பித்து பெற்று கொள்ளலாம். பதிவு செய்யாமல் அன்றைய தினம் வாங்க நினைப்போர், புத்தகங்கள் இருப்பின் பெற்று கொள்ளலாம். வரும் ஜனவரி மூன்றாம் நாள் மயிலாப்பூர் கிரி டிரேடிங்கில் மாலை வேளையில் திரு.பெருங்குளம் ராமகிருஷ்ணா ஜோசியர் மூலம் அதிகாரபூர்வ வெளியீடு நடக்க இருக்கிறது. சாக்த உபாசகர் திரு.பரணி முதல் புத்தகத்தை பெற்று கொண்டு சிறப்பிப்பர். அழைத்தவுடன் மறு சொல் இல்லாமல், ஏற்று கொண்டு சிறப்பிக்க இருக்கும் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.

தாந்த்ரீக ரகசியங்கள் புத்தகம் தேவைப்படுவோர் கீழ்கண்ட எண்களில் அழைக்கவும்.

+918754402857 / +919840130156

Friday, 29 December 2017

ஓம் சாமுண்டாயை விச்சே- எதையும் தருவாள் சண்டி !!சண்டியின் ஹோமமமானது மிகுந்த பொருட் செலவில் செய்யப்படும் ஒன்று என குறிப்பிட்டிருந்தோம். அது மட்டுமல்ல, மற்ற ஹோமங்களுக்கு வறட்டி, சமித்து போன்றவை உபயோகித்து அக்னியை எழ செய்வர் எனில் சண்டிக்கு, அவையெல்லாம் பத்தாது.  ஏகமாய் விறகுகளை கொண்டு அக்னியை பல அடிகள் வீரியமாய் எழ செய்தால் தான் அவ்விடம் சண்டி உதிப்பாள். அசுரர்களை, நம் எதிரிகளை அடியோடு அழிப்பதில் இவருக்கு இணை எவருமில்லை. இவ்விடம், நாம் ஒன்று சிந்திக்க வேண்டும். எதிரிகள் என்பது வெளியில் இருப்பவை மட்டுமல்ல. நம்மில் இருக்கும் தீய குணம், பொறாமை, பேராசை, உடல் நோவுகள், மன வியாதிகள் போன்றவையும் எதிரிகள் தான். ஆகையால் இவர் நம் உள்ளும் புறமும் இருக்கும் எதிரிகளை, எதிர்ப்புகளை அழிக்க வல்லவர். இதை ஒரு ஹோமம் என சொல்வதை காட்டிலும் வேள்வி என சொல்வதே பொருத்தமாக இருக்கும். சகல லோக வசியம், ராஜ வசியம் (இதனால் தான் இதை பல்வேறு அரசியல்வாதிகள் சென்று பயனடைகின்றனர்) ஆண்,பெண் வசியம், சத்ரு வசியம் என பல் வேறு தேவைகளுக்கு பல் வேறு சூட்சும மூலிகைகளை கொண்டு இந்த வேள்வியை செய்யலாம். ஏவல், பில்லி, செய்வினை, மாந்தி,பிரதேம் போன்ற அனைத்து சாபங்களையும் நீக்கவல்லவர் இந்த சண்டி. இலுப்பை பூவை வேள்வியில் இட்டால் சர்வ வசியமும், மஞ்சளை இட்டால் வசீகரணமும், நெய்யை வேள்வியில் இட தனப்ராப்தியும், தேங்காயை வேள்வியில் இட்டு வேண்ட பதவி உயர்வும் ஏற்படும். பூசணிக்காயை இட எதிரிக்கு சர்வ நாசம் ஏற்படும். மேலும், வரும் பதிவுகளில் சண்டியின் வீரியத்தை பற்றி அலசுவோம்.

முக்கிய குறிப்பு : வரும் ஜனவரி ஒன்றாம் நாள் நடக்க இருக்கும் குபேர லட்சுமி பூஜைக்கு மலை வாழைப்பழங்கள் சேர்த்தால் தனப்ராப்தி உண்டாகும். கலந்து கொள்பவர்கள் விருப்பமிருப்பின் கொண்டு வரலாம்.

ஹரி ஓம் தத் சத் 

Thursday, 28 December 2017

சண்டி ஹோமம் என்றால் என்ன? எதற்காக நடத்தப்படுகிறது??சாக்த வழிபாட்டில் கடுமையான உக்கிரத்துடன் இருக்கும் பராசக்திக்காக நடத்தப்படுவதே சண்டி ஹோமம். அப்படி உக்கிரத்துடன் இருக்கும் பராசக்தியே சிவன், விஷ்ணு, பிரம்மா  என மும் மூர்த்திகளை படைத்தார் என்கிறது புராணம். தேவியின் மீது நம் அன்பை காட்ட, தேவியின் அருள் பெற்று நம் தேவைகளை நிறைவேற்றி கொள்ள என இரு விதமாக இந்த ஹோமம் செய்யப்படலாம். சாக்த வழிபாட்டில் அனைத்து ஹோமங்களூக்கும் தலையாய ஹோமம் இது என கூறலாம். கேட்டதை உடனே அருளும் சக்தி படைத்தது இந்த ஹோமம். மிக அதீத பொருட்செலவு மற்றும் மிக உக்ரமானது என்பதால் இந்த ஹோமம் அடிக்கடி நிகழ்த்தப்படுவதில்லை. ஒவ்வொரு அத்தியாய பாராயணத்தின்  பொழுதும் தேவிக்கு அக்னியில் புடவை சாற்றப்படும். மொத்தம் பதினான்கு புடவைகள் சாற்றப்படும். உக்ரகம் அதிகம் என்பதால் வீட்டில் செய்யப்படுவதில்லை. கோவில்கள் அல்லது மடங்கள், மண்டபங்கள் போன்றவற்றில் மட்டுமே செய்விக்கப்படுகிறது. எவ்வளவு பரிகாரங்கள் செய்தும் பலன் இல்லாத நிலை,கிரகங்களினால் பிரச்சனைகள், பயம், மரண பயம், எதிரிகள் தொல்லை அழிய, எவ்வளவு பிரயத்தனம் செய்தும் முடிக்க முடியாத காரியங்கள் வெற்றி பெற, செல்வம் சேர இந்த ஹோமத்தை செய்தோ அல்லது கலந்து கொண்டோ தேவியின் அருளை பெறலாம்.பாராயண பலச்ருதியிலேயே இந்த பாராயணத்தை செய்பவருக்கு மட்டுமின்றி இதை உடனிருந்து கேட்பவருக்கும்  அதீத பலன்கள் கிட்டும் என கூறப்பட்டுள்ளது.   மஹாலக்ஷ்மி, சரஸ்வதி,மஹாகாளி என மூவருக்குமே செய்யப்படும் இந்த ஹோமத்தில் 700 ஸ்லோகங்கள் வரை கூறப்படும். வெளியில் கூற முடியாத காரியங்கள் வெற்றி பெற வேண்டுமானால் சண்டியை அணுகுவதை தவிர வேறு வழி இல்லை. அமாவாசை, அஷ்டமி, நவமி, சதுர்தசி போன்ற திதிகளில் செய்ய கை மேல் பலன் கிட்டும்.

ஹரி ஓம் தத் சத் 

ஷீர்டி ஸ்ரீ சாய் சேவா டிரஸ்டின் சார்பில் ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டர் நடத்தும் பூஜை விவரங்கள் :

இடம் :காஞ்சி காமகோடி சங்கர மடம், தி.நகர்,சென்னை
நாள் : 01.01.2018
நேரம் : மாலை 4 மணி 7 மணி வரைதிருவாதிரையுடன் பௌர்ணமியும் இணைந்து புத்தாண்டு தினத்தில் வருவதால் சக்தி வாய்ந்த ருத்ர பாராயணமும், செல்வம் தரும் குபேர லட்சுமி பூஜையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் 'சனீஸ்வர ரட்சை' சனி பெயர்ச்சி அன்று பெற்று கொள்ளாதவர்கள், பெற்று கொள்ளலாம். மூலிகை குபேரரும் வழங்கப்படும். மேலும் அதியற்புத எளிய பரிகாரங்கள் அடங்கிய 'சனீஸ்வர ரகசியங்கள்' புத்தகமும் கிடைக்கும். சங்கல்பம் செய்ய விருப்பம் உள்ளோர் தங்களின் குடும்பத்தினர் நட்சத்திரம் மற்றும் கோத்திரம் கூறி சங்கல்பம் செய்து கொள்ளவும்.புஷ்பம், தேங்காய், சுத்தமான நெய், சுத்தமான தேன், உதிரி புஷ்பம்,மலை வாழைப்பழம் ,பலவித பழங்கள் கொண்டு வரலாம். சங்கல்பம் செய்ய ஒரு நபருக்கு : ரூ.20 /- சனீஸ்வர ரட்சை ஒரு நபருக்கு : ரூ.150/- மூலிகை குபேரர் : ரூ.600/- சனீஸ்வர ரகசியங்கள் புத்தகம் :ரூ.200/- பலன்கள் : கடன் தொல்லை நீங்கும், வியாதிகள் நீங்கும், தம்பதியர் ஒற்றுமை, செல்வம் சேரும், அணைத்து வித நன்மைகளும் சேரும். மேல் விவரங்கள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள : +919840130156 / +918754402857

Sunday, 24 December 2017

சனீஸ்வர ரகசியங்கள் - வெளியீடு 03.1.18வரும் ஜனவரி மூன்றாம் நாள் (03.1.2018) முதல் நமது ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டரில் (சென்னையில் மட்டும்) மேற்கண்ட, அதியற்புத சனீஸ்வர பரிஹார சூட்சுமங்களை கொண்ட புத்தகம் கிடைக்கும். பதிவு செய்தவர்கள் நேரில் வந்து மாலை வேளையில் நான்கிலிருந்து ஆறு மணிக்குள் பெற்று கொள்ளலாம். பதிவு செய்துள்ள வெளியூர் அன்பர்களுக்கு மறுநாள் (04.1.2018) முதல் அனுப்பி வைக்கப்படும். ஒரு பிரபலம் வெளியிட மற்றொரு பிரபலம் வெளியீட்டை பெற்று கொண்டு சிறப்பிக்க உள்ளனர். விவரங்கள் விரைவில்..

முற்பதிவு செய்ய விருப்பமுள்ளோர் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம். நன்கொடை ரூ200/- .மட்டும்.

+918754402857 / +919840130156