Friday, 5 January 2018

ஓம் சாமுண்டாயை விச்சே - மஹா சண்டி ஹோமம்

ஷீர்டி ஸ்ரீ சாய் சேவா டிரஸ்டின் 'ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டர்'


நாள் :  16.1.2018
நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
இடம் : சங்கர மடம், தி.நகர், சென்னை
பிரசாத விநியோகம் : மதியம் 1:05  மணி முதல்
நிவேதன அன்னம் :  மதியம்1:30 மணி முதல்

சண்டியை- சாமுண்டியின் வீர்யத்தை பற்றி ஏற்கனவே கூறி வந்துள்ளோம். எதிர்ப்புகள் அகல, விரும்பியவரை திருமணம் செய்ய, தம்பதியர் ஒற்றுமை, சொத்து பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், வியாபாரம் செழிக்க, செல்வ செழிப்பு பெற என அனைத்தையும் தந்தருள்வள் அன்னை சண்டி.  சண்டியின் வீர்யம் அமாவாசை நாட்களில் மிகுந்த உக்ரத்தோடு இருக்கும். தன்னை அண்டி வந்து தொழுபவர்களை உடனுக்குடன் தொல்லைகளில் இருந்து காத்து ரட்சித்து, அவர்கள் அன்புடன் கேட்டதை அனைத்தையும் வாரி வழங்குவதில் அவள் தவறுவதேயில்லை. அதிலும், தை, மாசி, ஆடி அமாவாசை தினங்கள் மற்றும் நவராத்ரி தினங்கள் அவளை வழிபட மிக ஏற்ற தினங்களாகும். மிகுந்த பொருட் செலவு ஆகும் என்பதால், இத்துணை நாட்கள் தவிர்த்து, பின் முடிவாக இந்த தை  மற்றும் அடுத்து வரும் மாசி அமாவாசை நாட்களில் செய்வதாக முடிவு செய்துள்ளோம். அன்பர்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொண்டு ஆசி பெறலாம். பொதுவாக நாம் நன்கொடைகளை கேட்டு வற்புறுத்துவிதில்லை என்பது எம்மை பின்தொடரும் அனைவரும் அறிவர். இது நாள் வரையில் ஹோமங்கள், பயிற்சிகள் போன்ற அனைத்தும் ஒரு ருபாய் கூட கட்டணமில்லை தான் கொடுத்து வந்துள்ளோம். இந்த யாகத்தின் பொருட் செலவு அதீதம் என்பதால், சங்கல்பம் செய்ய நான்கு நபர்கள் மற்றும் அதற்கும் குறைவான ஒரு குடும்பத்திற்கு ரூ.501/- நிர்ணயம் செய்துள்ளோம். மேலும், அளவான சங்கல்பம் மட்டுமே செய்ய முடியும் என்பதால் விருப்பம் உள்ளோர் அனைவரையும் முன் கூட்டியே பதிவு செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம். ஹோமம் நடக்கும் இடத்தில் சங்கல்ப கட்டணம் பெறப்பட மாட்டாது.

மேலும், விசால மனம் கொண்டோர் நன்கொடைகள் தங்கள் சக்திக்கேற்ப வழங்கலாம். கொப்பரை, உலர் திராட்சை, பாதாம், பூசணிக்காய், விறகுகள், பாதாம், பழ வகைகள், நெய், தேன் போன்றவை வழங்கி சண்டி தேவியின் அருளை முழுமையாக பெறலாம். சங்கல்பம் மற்றும் நன்கொடைகள் வழங்கும் அனைவருக்கும் சண்டி ஹோம ரட்சை வழங்கப்படும். வெளியூர் அன்பர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்படும்.

முக்கிய குறிப்பு: முக்கிய காம்யமாக (குறிப்பிட்ட விஷயத்திற்கு) சங்கல்பம் செய்ய விரும்புபவர்கள் தொலைபேசியில் அழைத்து விவரம் கூறினால் அதன் விவரங்கள் கூறப்படும். கலச ஜல அபிஷேகம் செய்து கொண்டு பெரும் பங்கை ஏற்க விரும்புவோரும் தொலைபேசியில் அழைக்கவும்.

ஹரி ஓம் தத் சத்

+919840130156 / +918754402857 

Thursday, 4 January 2018

ஜனவரி மாதத்தில் தவிர்க்க வேண்டிய கரண நாட்கள்

 தவிர்க்க வேண்டிய கரண நாட்கள்-நேரங்கள் 


January 07, 2018 (Sunday) at 16:04  ஆரம்பம் 
January 08, 2018 (Monday) at 03:49  முடிவு 
January 11, 2018 (Thursday) at 06:14 ஆரம்பம் 
January 11, 2018 (Thursday) at 19:11முடிவு 
January 15, 2018 (Monday) at 02:31 ஆரம்பம் 
January 15, 2018 (Monday) at 15:51 முடிவு 
January 21, 2018 (Sunday) at 02:56 ஆரம்பம் 
January 21, 2018 (Sunday) at 15:33 முடிவு 
January 24, 2018 (Wednesday) at 16:17 ஆரம்பம் 
January 25, 2018 (Thursday) at 03:50 முடிவு 
January 27, 2018 (Saturday) at 21:55 ஆரம்பம் 
January 28, 2018 (Sunday) at 08:28 முடிவு 
January 30, 2018 (Tuesday) at 22:23 ஆரம்பம் 
January 31, 2018 (Wednesday) at 08:39 முடிவு 

Tuesday, 2 January 2018

லட்சுமி குபேர பூஜை

நேற்றைய தினம் ருத்ர பாராயணம் மற்றும் லட்சுமி குபேர பூஜை
அமைதியான முறையில் சிறப்பாக நடைபெற்றது. மூலிகை பெற்றவர்கள் இன்றைய தினம், கொடுக்கப்பட்டுள்ள விதிகளின் படி பூஜிக்கலாம். உடனிருந்து அயராது சேவை செய்த தன்னார்வலர்கள் அனைவருக்கும் எம் மனமார்ந்த நன்றிகள். 

Sunday, 31 December 2017

'சனீஸ்வர ரகசியங்கள்'


நமசிவய
இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தில் சென்னை தி.நகர் சங்கரமடத்தில் மாலை நான்கு மணிக்கு நடக்கவிருக்கும் குபேர லட்சுமி பூஜை மற்றும் ஏகதச ருத்ர பாராயண வேளையில் 'சனீஸ்வர ரகசியங்கள்' புத்தகம் வெளிவரும். அன்பர்களுக்கு ஒரு இனிய எச்சரிக்கை 01.1.18 அன்று பகல் 11:45 AM முதல் இரவு 10:00 PM வரை முக்கிய முடிவுகள், கடன் வாங்குவது அல்லது கொடுப்பது, புதிய முயற்சிகள் தவிர்க்கவும். தெய்வீக காரியங்களில் ஈடுபடலாம். விபரீத கரண காலம்.