Saturday, 9 September 2017

ராகுவினால் ஏற்படும் பாதகங்களை நீக்க



ராகுவின் தற்போதைய பெயர்ச்சியினால் அவதியுறுவோர், ராகு திசை
நடப்பில் உள்ளோர், மற்றும் ராகு ஜெனன ஜாதகத்தில் தீய ஸ்தானத்தில் உள்ளோர், பந்தயங்கள், யூக வியாபாரம் போன்றவற்றில் தோல்விகளை சந்திப்போர், ஒரு வெள்ளியன்று ராகு வேளையிலோ, அல்லது சனிக்கிழமை ராகு காலத்திலோ, உக்ர காளி அல்லது துர்கை முதற் கடவுளாக வீற்றிருக்கும் கோவிலில், அன்னைக்கு செம்பில் அல்லது இரும்பினாலான வாளை அர்ப்பணிக்க, மேற்சொன்ன துன்பங்கள் பறந்தோடும். தேவையுள்ளவரை வருடம் ஒரு முறை மேற்சொன்ன விதம் செய்து வருதல் நல்ல பலன் தரும்.

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Friday, 8 September 2017

தனம் செழிக்க மின் ஆற்றல் யந்திரம்


பிரதி எடுத்து தலையணை அடியில் வைக்கலாம். பாக்கெட்டில் வைக்கலாம். வீட்டின் அலங்கார அலமாரியில் வைக்கலாம். உங்கள் ரூம் கதவில் ஒட்டி கொள்ளலாம். சுவர்களில், வீடு வாயிற் கதவில் ஒட்டி வைக்கலாம். கம்பியூட்டர் வால் பேப்பராக, உங்கள் மொபைலின் வால் பேப்பராக, அல்லது தனியாக தற்போது மொபைல் கவர்களில் டிசைன் செய்கிறார்கள். அப்படி செய்து உபயோகிக்கலாம். ஏராளாமான பயன்கள் உண்டு.
ஹரி ஓம் தத் சத் :

Thursday, 7 September 2017

மஹாளய பட்சம்- அதி முக்கிய ஸ்ரார்த்த தினங்கள்



மேற்கண்ட மஹாளய பட்சத்தில் சில மிக முக்கிய ஸ்ரார்த்த தினங்கள் உள்ளன. இந்த தினங்களில் கண்டிப்பாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அவர்களின் பரிபூர்ண ஆசி கிடைப்பதோடு மட்டுமல்லாமல், நாம்  சேர்த்து வைத்துள்ள அனைத்து கர்ம வினைகளும் அடியோடு அழியும்.

11.9.17 மஹா பரணி எனப்படும்  பஞ்சமி ஸ்ரார்த்தம் : இந்நாளில் செய்யப்படும் ஸ்ரார்த்தம், கயாவில் சென்று செய்யப்படும் ஸ்ரார்தத்திற்கு இணையானது. திருமணம் ஆகாமல் மரணித்துள்ள ஆத்மாக்களுக்கு இந்நாளில் தர்ப்பணம், பிண்டம் கொடுக்க அவர்களின் ஆத்மா திருப்தி பெற்று நம்மை மனதார வாழ்த்தும்.

14.9.17 நவமி ஸ்ரார்த்தம் : இந்நாளில் சுமங்கலியாக இறந்துள்ள தாய், மனைவி போன்றோருக்கு தர்ப்பணம்-பிண்டம் கொடுத்து, சுமங்கலி பெண்களுக்கு சேலை,ரவிக்கை துணி, மஞ்சள்,குங்குமம்,வளையல் வைத்து தாம்பூலத்தேங்காயுடன் முடிந்த தட்சிணை சேர்த்து தானம் செய்ய, மேற்கண்டோரின் ஆத்மாக்களின் பரிபூர்ண ஆசியை பெறலாம்.

18.9.17 மக ஸ்ரார்த்தம் எனப்படும் திரயோதசி ஸ்ரார்த்தம் : மறைந்த இளம் குழந்தைகளுக்கு இந்நாளில் ஸ்ரார்த்தம் செய்ய, அனைத்து நலன்களும் சேரும். இவ்விஷயத்தில் ஒன்றை கவனிக்க வேண்டும்: இங்கே கூறி வரும் அனைத்து அதி முக்கிய நாட்களிலும், குறிப்பிட்டுள்ள நபர்களுக்கு தான் என்றில்லை. நம் முன்னோர்கள் எவராயினும் இத்தினங்களில் தர்ப்பணம் செய்து வரலாம். நாம் ஆசையாக வளர்த்த நாய், பூனை மற்றும் பசுக்களுக்கு கூட தர்ப்பணம் இந்நாட்களில் கொடுக்க அவர்களின் ஆத்மா நம்மை மனதார வாழ்த்தி, வாழ்வாங்கு வாழ வைக்கும்.

19.9.17 சதுர்தசி ஸ்ரார்த்தம் : இந்நாளில் அகால  மரணம் அடைந்த ஜீவன்களுக்கு, அதாவது விபத்து, கொலை, அல்லது தற்கொலை போன்று, மரணித்த ஜீவன்களுக்கு ஸ்ரார்த்த பிண்டம் கொடுக்க, மேலோகம் செல்ல முடியாது தவித்து கொண்டிருக்கும் அந்த ஆத்மாக்களை நிரந்தரமாக மேலுளுகம் செல்ல வைத்த புண்ய  பலன் உங்களின் பல தலைமுறைகளை காத்து காபந்து செய்யும். இந்த வருடம் இந்த திதியிலேயே மஹாளய அமாவாசை வருவதால், பகல் பன்னிரண்டு மணிக்கு முன் சதுர்த்தசி ஸ்ரார்த்தமும், பன்னிரெண்டேகால் மணிக்கு மேல் மஹாளய அமாவாசை ஸ்ரார்த்தமும் செய்து பின் மறுநாள் 20.9.17 அமாவாசை ஸ்ரார்த்த பிண்ட தர்ப்பணம் கொடுக்கவும்.

இதில் அனைத்து நாட்களிலும் அன்னதானம் செய்து, தர்ப்பணம் செய்வோர் மிகவும் பாக்கியவான்கள். இதன் புண்ய பலன் அளவிடமுடியாதது ஆகும். இதை உங்கள் அனுபவத்தில் காணலாம். இந்நாட்களில், மாமிசம்,மது, வெங்காயம்,பூண்டு,உருளை, போன்றவற்றையும் தவிர்ப்பது நலமளிக்கும்.

ஹரி ஓம் தத் சத்


Tuesday, 5 September 2017

மஹாளய பக்ஷ புண்ய காலம்-6.9.17 முதல் 21.9.17 வரை



இது பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகள் இட்டுள்ளோம். நம் வாழ்வில் ஏற்படும் பல இனம் தெரியாத இன்னல்களுக்கு நம் முன்னோர்களை முறையாக பூஜிக்காமலும், அவர்களுக்கு உரிய உணவை, அவர்களின் தாகத்தை தீர்க்கும் நீரை அவர்களுக்கு கொடுக்காமலும், அறியாமையினால் உதாசீனப்படுத்தியுள்ளதுமே  காரணமாகும். நம் முன்னோர்களை வழிபடாமல், பூஜிக்காமல் இருந்து வேறு எவ்வித கடவுள்களை வழிபடினும், ஹோமங்கள் மற்றும் பரிகாரங்கள் அல்லது அன்னதானங்கள் செய்யினும் அவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீரேயாகும்.   இது தெரியாமல் அல்லல்பட்டு கொண்டுள்ளோர்க்கு, மேற்கண்ட புண்ய காலம், அவர்களின் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை உண்டு பண்ண கூடிய ஒன்று என்றால் மிகையாகாது. இந்த பதினாறு தினங்களில், நம் முன்னோர்கள் நம் வீடு தேடி நம்மை காண வருவர் என்கிறது, சாஸ்திரங்கள். கர்ணன் தன்னிடமுள்ள அனைத்தையும் கொடுத்து மிக பெரிய புண்ணியத்தை செய்து விட்டு மடிந்து, சொர்க்க லோகம் செல்கையில், அங்கே அனைத்து வித செல்வங்களும், சுக போகங்களும் அவருக்காக காத்திருந்தன. ஆனால், உணவு மட்டும் இல்லை. இதை கண்டு வருந்திய கர்ணன், எமதர்மரிடம் விசாரிக்கையில், நீர் அனைத்து வித தானமும் செய்தீர். ஆனால் முன்னோர்களுக்கு உரிய காரியங்களை செய்யாமல் விட்டதே இதற்க்கு காரணம் என்றார். பின்பு கர்ணன் மீண்டும் பூலோகம்  அனுப்பப்பட்டு, பதினான்கு நாட்கள் முதியோர் மற்றும் வறியோர்க்கு அன்னதானம் செய்து நீர் வழங்கி மீண்டும் சொர்க்க லோகம் சென்று உணவருந்தினார். இந்த தினங்களே மேற்கண்ட புண்ய தினங்களாக மாறின. ஆகவே, இந்த தினங்களில் நம் முன்னோர்கள் வடிவாக கருதப்படுகின்ற காக்கைகளுக்கு, தினசரி புதிதாக வடித்த சாதத்துடன் சிறிது எள் கலந்து (வைக்கும் இடத்தை நீரால் கழுவி சுத்தம் செய்து ) வைத்து, சிறிது நீரும் வைத்து வர, அவர்களின் மனம் குளிரும். முடிந்தோர் அனைத்து தினங்களிலும் தர்ப்பணம் செய்யலாம். அல்லது முதல் தினம் மற்றும் அமாவாசை தினம் செய்யலாம். அதுவும், முடியவில்லை எனில், அமாவாசை அன்று, கண்டிப்பாக திதி தர்ப்பணம் செய்தே ஆக வேண்டும். உங்களின் கஷ்டங்களுக்கு விடிவு காலமாக வந்துள்ள இந்த புண்ய தினங்களை பயன்படுத்தி, முன்னோர்களை வணங்கி வழிபட்டு மேன்மையுறுங்கள். இந்த அனைத்து நாட்களிலும் பசுவிற்கு உணவளிப்பது, அமாவாசை தினம் அன்று வறியோர் மற்றும் முதியோருக்கு உணவளித்து உடைகள் வழங்குவது மிக சிறப்பான ஒன்று என்பதை நினைவில் கொள்வீர். இந்த அமாவாசை தினத்தில் செய்ய வேண்டிய, வேறு சில விஷயங்களை விரைவில் பதிகிறேன்.

முக்கிய குறிப்பு : இந்த தினங்கள் ஏதோ ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டும் என நினைத்து விட வேண்டாம். சனாதன தர்மத்தின் வழிநடக்கும் அனைவரும் (ஹிந்துக்கள்) இதை கடைபிடிக்க வேண்டும். இந்நாட்களில், மது,மாது,மாமிசம் தவிர்த்தல் முக்கியம். மேலோகம் செல்ல முடியாது தவிக்கும் முன்னோர்களுக்கும் இந்த செய்கை முக்தியை கொடுக்கும். உங்களின் கர்ம வினைகளை அடியோடு அகற்றும். 

Sunday, 3 September 2017

செப்டெம்பர் மாதத்தில் தவிர்க்க வேண்டிய கரண நாட்கள்

கரணம் தப்பினால் மரணம் என்ற தலைப்பில் மாதா மாதம் வெளியாகும் பதிவு


05.9.17 மதியம் 12:35 PM  முதல் மறுநாள் அதிகாலை 00:45 AM வரை 

08.9.17 இரவு 10:00 PM முதல் மறுநாள் காலை 09:25 AM வரை

12.9.17 அதிகாலை 3:10 AM முதல் மதியம் 2:15 PM வரை

15.9.17 காலை 07:25 AM முதல் மாலை 06:40 PM வரை

18.9.17 மதியம் 01:00 PM முதல் மறுநாள் அதிகாலை 00:40 AM வரை 

23.9.17 இரவு மணி 12:00 முதல் மறுநாள் மதியம் 12:45 PM வரை 

27.9.17  மாலை 07:00PM முதல் மறுநாள் காலை 08:30AM வரை