Saturday, 9 December 2017

பணவீழ்ச்சியில் இருந்து காப்பாற்றிய தாந்த்ரீக மந்த்ர சாதனைபொதுவாக தாந்த்ரீக மந்த்ர சாதனைகள் நம் வீட்டு இட்லியை போல-
உடனடியாக சமைத்து விடலாம்-சத்தானது- கேடான பின் விளைவுகளும் இல்லை-செலவும் கம்மி.

எதற்காக இதை கூறுகிறோமென்றால் சமீபத்தில் ஒரு தம்பதியர் நேரடி ஆலோசனைக்கு வந்திருந்தனர். வியாபாரத்தில் பெரும் வீழ்ச்சி. லாபம் உண்டென்றாலும் அத்தனையும் வராக்கடனாக வெளியில் நிற்கிறது. தொழில் இடம் வங்கியில் கடனாக உள்ளது. பல மாதங்களாக தவணை கட்டாத நிலையில் எந்நேரமும் ஜப்தி செய்யப்படலாம் என்ற நிலை. கணவரின் நிலையை ஆராய்ந்து பார்த்ததில் அவருக்கு சாதகமான நிலை எதுவும் இல்லை. அதே நேரத்தில் மனைவியும் மிகவும் உறுதுணையாக இருப்பதால் அவரின் நிலைகளை சோதித்து பார்த்ததில், தாந்த்ரீக முறையில் இவர்களுக்கு உடனடி தீர்வு உண்டு என தெரிந்தது. இருபத்தியோரு நாட்கள் இரவு நேரம் பூஜை அறையில் அமர்ந்து அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை தாந்த்ரீக மந்த்ர சாதனை செய்ய தயாரா என பெண்மணியை கேட்டதில் 'எத்தை தின்னால் பித்தம் தெளியும்' என்ற நிலையில் இருந்த அவர், இந்நிலை மாறுமென்றால் இரவு முழுதும் விழித்திருந்து பூஜிக்க தயார் என்கிறார். சுலபமான ஆனால் மிகுந்த மன உறுதி தேவைப்பட்ட ஒரு அதீத சக்தி வாய்ந்த தாந்த்ரீக மந்த்ர சாதனை அவருக்கு அளிக்கப்பட்டு, அதற்குரிய நேரம், நாள் போன்றவையும் குறித்து கொடுக்கப்பட்டது. இதில், விசேஷம் என்னவென்றால், இத்தகைய உபாசனைகளின் பலனை, மன உறுதியும், அதீத நம்பிக்கையும் இருப்பின் முதல் ஓரிரு நாட்களிலேயே காணலாம் என்பது தான். குறிப்பிட்ட நபர், உபாசனை ஆரம்பிக்கப்பட்டு இன்னும் முடியாத நிலையில், இன்று தொலைபேசியில் 'தங்களுக்கு வேறு வங்கி மூலம் இடைக்கால கடனுதவி கிடைக்க இருக்கிறது எனவும்- இட ஜப்தி விவகாரமும் தள்ளி போகிறேதென்றும்- கடன்களையும் வசூலிக்க மிக அதீத பிரயத்தனம் செய்ய ஆரம்பித்து விட்டார் கணவர் என கூறி மிகவும் சந்தோஷத்துடன் நன்றி தெரிவித்தார். உபாசனை முடிந்ததும் பாருங்கள் இந்த மந்த்ர சாதனையின் அருமை முழுமையாக தெரியும் என கூறி வாழ்த்தினோம். ஈசன் அருளிய இந்த சக்தி வாய்ந்த தந்த்ர மந்த்ரங்கள் துன்பத்தில் உள்ளோருக்கு, தங்களை முறைப்படி உபாசிப்போருக்கு,
என்றும் வாரி வழங்கிட தயங்கியதேயில்லை.

ஹரி ஓம் தத் சத்   

"சனீஸ்வர ரகசியங்கள்"

டிசம்பர் மதம் வெளிவரவிருக்கும் "சனீஸ்வர ரகசியங்கள்" புத்தகத்தில் வரும் பொருளடக்கத்தில் ஒரு சில..

1.சனீஸ்வரரின் எதிர்பார்ப்புகள் 
2.சனீஸ்வரரிடமிருந்து நேர்மறை சக்திகளை பெற 
3.பன்னிரண்டு ராசி லக்கினத்திற்குமான சூட்சும சனி பெயர்ச்சி பரிகாரங்கள் 
4.கால சக்ரா தந்த்ரா
5.சனீஸ்வரரை ப்ரீதி செய்ய தாந்த்ரீக வழிபாடு 
6.மூலிகைகள், விருட்சங்கள், ரத்தினங்கள் 
7.சனீஸ்வரரை குளிரச் செய்யும் எளிய முத்திரைகள் 
8.உடனடி பலன் தரும் பாராயணம் 
9.வாஸ்து முறையில் சனீஸ்வர பரிகாரம் 
10.சனீஸ்வர ஸ்தவராஜா 
11.அதீத சக்தி வாய்ந்த எந்திரங்கள் 
12. மலர் முறையில் சனீஸ்வர பரிகாரம் 


மேலும் பல அறிய சூட்சுமங்களை தாங்கி "வரையறுக்கப்பட்ட பதிப்பாக" (Limited Edition) டிசம்பர் மாதம் வெளிவரவுள்ளது- வெளிவரும் நாள், இடம், நேரம் -விரைவில் அறிவிக்கப்படும். 

உங்கள் பிரதிக்கு முன்பதிவு செய்ய : 
+918754402857  &  +919840130156

Friday, 8 December 2017

சனி பெயர்ச்சி மஹா பரிஹார ஹோமம் - 17.12.1717.12.17 ஏன்- 19.12.17 தானே சனி பெயர்ச்சி  ??

சனியானவர் தன் பலன்களை மிக மெதுவாக கொடுப்பவர். அள்ளி கொடுப்பதனாலும் சரி, கிள்ளி எடுப்பதானாலும் சரி. அப்படிப்பட்டவர் தன் பெயர்ச்சியின் பலா பலன்களை ஒரு மாதம் முன்பிருந்தே கொடுக்க தயங்குவதில்லை.

பொதுவாக அமாவாசை தினத்தன்று ஹோமம் செய்தால் செய்தவருக்கும்  சரி செய்து வைப்பவருக்கும் சரி கேடு விளையும் என்கின்றன வேதங்கள். ஆனால் சண்டி, காளி மற்றும் அதர்வண ஹோமங்கள் அத்தோடு சனி சாந்தி ஹோமம் இவற்றிற்கு மட்டும் விதி விலக்கு உண்டு. ஆகவே, இந்த நாளில் இந்த பரிகார சாந்தி ஹோமத்தை வைத்தோம். அது மட்டுமல்ல, பரிபூர்ண அமாவாசை தினம் மற்றும் சனீஸ்வரரால் துன்பங்கள் ஏற்படின் அதை தடுத்து நிறுத்தி நம்மை உடனடியாக காத்து அருளும் சக்தி கலியுகத்தில் உக்ர காளி, ஆஞ்சநேயர், யமராஜர் மற்றும் விநாயகருக்கே அதிகம். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த ஆஞ்சநேய சக்தி உதித்த நாள் 17.12.17 . இப்படி சர்வ அமாவாசை தினமும் அஞ்சனை மைந்தன் அனுமனின் ஜெயந்தி தினமும் சனீஸ்வரரின் அதீத ஆற்றலை உள்ளடக்கிய  எட்டாம் எண் (17) நாளும் சேர்ந்து வருவது மஹா அபூர்வம்- ஆகையினால் தான் இந்த நாளில் ஹோமத்தையும் வைத்து சனீஸ்வர ரட்சை கொடுக்க திட்டமிட்டோம். இந்த நாளில் சனீஸ்வர ஹோமத்தில் கலந்து கொண்டு, அவரின் பரிபூரண ஆசியை உள்வாங்கி, வசதி உள்ளோர்- ஹோமத்திற்கு வன்னி சமித்து மற்றும் நெய்
 (தூய நெய் மட்டுமே  ஏற்றுக்கொள்ளப்படும்) நல்லெண்ணெய் கொடுத்து வழிபாடு செய்யலாம். மேலும், இது போன்ற ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நாம் அடிக்கடி கட்டணமின்றி  நடத்தி வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. வசதி உள்ளோர் அன்னதானம் மற்றும் இதர விஷயங்களுக்கு நன்கொடை அளிக்க விரும்பினால் மற்றும் சனீஸ்வர ரட்சை தேவைப்படின் கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு அழைத்து விவரங்கள் பெறலாம்.

+918754402857  &  +919840130156 

இடம் : சங்கர மடம்
நேரம் : காலை பத்து மணிமுதல் ஒரு மணி வரை 

மதியம் ஒன்னேகால் மணியில் இருந்து நிவேதன அன்னம் 


சனி பெயர்ச்சி மஹா பரிகார ஹோமம் - 17.12.17


Wednesday, 6 December 2017

சனி பெயர்ச்சி மஹா ஹோமம் - 17.12.17-சங்கர மடம், காலை பத்து மணி முதல்

ஷீர்டி ஸ்ரீ சாய் சேவா ட்ரஸ்டின்- ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டர் வழங்கும்


சனி பெயர்ச்சி மஹா ஹோமம்

 குரு, ராகு கேது, சனி பெயர்ச்சியை பொறுத்த வரை, பெயர்ச்சி நாள் முதல் தான் அவர்களின் பலன்கள் ஆரம்பிக்கும் என்பதில்லை. குறைந்த பட்சம் ஒரு மாதம்  முன்னதாகவே பெயர்ச்சி பலன்களை பெற ஆரம்பித்துவிடுவோம். இதை அனுபவத்தில் உணர்ந்திருப்பீர்கள். இதை மனதினில்  கொண்டு, வரும் சனி பெயர்ச்சி ஹோமத்தை 17.12.17 ஞாயிறு காலை பத்து மணிமுதல் மதியம் ஒரு மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளோம். பலரின் தொடர்ந்த வேண்டுகோளுக்கிணங்க, அனைவரும் வந்து சேர வசதியாக இம்முறை சென்னை தி.நகர் சங்கர மடத்தில் மேற்கண்ட ஹோமம் நடைபெற உள்ளது. இதில் அன்பர்களுக்கு இரட்டிப்பு பலன் என்னவென்றால், ஹோமம் நடைபெறும் இடத்தின் பின்புறம் பிரசித்தி பெற்ற பசு மடம் உள்ளது. மிக அருகில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் ஆலயமும் உள்ளது. தயாராக வந்தால், பசுவுக்கும் உணவு கொடுத்து பலன்களை பெறலாம். வழக்கத்திற்கு மாறாக இம்முறை சங்கல்பம் செய்து கொள்ள மிக சிறிய காணிக்கையாக ஓருவருக்கு ரூ.இருவது மட்டும் வசூலிக்கப்படுகிறது. மேலும், நம் 'சனீஸ்வர ரகசியங்கள்' புத்தகத்தில் விவரங்கள் வெளிவரவிருக்கும், மிக அதீத சக்தி வாய்ந்த, ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி, ஜென்ம சனி, மேலும், சனி திசை புத்தியினால் அவதியுறுவோருக்கு,  மந்திர உருவேற்றம் செய்யப்பட்ட ரட்ஷை குறைந்த கட்டுமான ரூ.150 /- மட்டும் வழங்க உள்ளோம். இந்த ரட்ஷை, இந்த பெயர்ச்சி காலத்தில் மட்டுமே கிட்டும். இந்த ரட்ஷை அடுத்து வரவிருக்கும் இரண்டரை ஆண்டுகளில் உங்களை ஆபத்து மற்றும் துன்பங்களில் இருந்து காத்து ரட்சிக்கும் என்பது உறுதி. வெளியூர் அன்பர்கள் போதிய தபால் தலை வைத்து மேற்கண்ட ஹோமத்தில் சங்கல்பம் செய்து கொள்ள, தங்கள் குடும்பத்தினர் சகிதம் பெயர்,நட்சத்திரம்,ராசி,கோத்திரம் ஆகியவற்றை எழுதி அனுப்பலாம். நன்கொடை செலுத்தும் விவரங்கள் பற்றி தொலைபேசியில் அழைத்து தெரிந்து கொள்ளவும்.


ஹோமம் நடைபெறவிருக்கும் இடம் : சங்கர மடம், தி.நகர், சென்னை
நாள் : 17.12.17
நேரம் : காலை 10 AM முதல் 1PM வரை 
விவரங்களுக்கு  : +918754402857 / +919840130156

அனைவரையும் நிவேதன அன்னம் உண்டு சனீஸ்வரரின் பரிபூர்ண ஆசி பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஹரி ஓம் தத் சத் 

Tuesday, 5 December 2017

டிசம்பர் மாதத்தில் தவிர்க்க வேண்டிய கரண நாட்கள்

கரணம் தப்பினால் மரணம் என்ற தலைப்பில் மாதா மாதம் வெளியாகும் பதிவு

6.12.17 அதிகாலை 00.00 AM முதல் காலை 10:20 AM வரை

9.12.17 அதிகாலை 02:45 AM முதல் மதியம் 02:20 PM வரை

12.122.17 மதியம் 01:30 PM முதல் மறுநாள் அதிகாலை 01:15 AM வரை

16.12.17  காலை 07:08 AM முதல் இரவு  08:27 PM வரை

22.12.17 காலை 09:10 AM முதல் இரவு 10:30 PM வரை

26.12.17 அதிகாலை 02:35 AM முதல் மதியம் 02:57 PM வரை

29.12.17 காலை 11:04 AM முதல் இரவு 10:01 PM வரை

இந்த வருடம் அனைத்து மாதங்களின் கரண நாட்களையும் தவிர்த்து பலன் பெற்றிருப்பீர்கள் என நம்புகிறோம். அடுத்த வருடம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் சேர்த்து கரண விளக்கங்கள் தரப்படும்-உங்களின் வசதிக்காக.