Wednesday, 10 October 2018

சுக்கிரன் வக்கிர நிலை 2018 அக்டோபர் 5 முதல் நவம்பர் 16 வரை !! பலன்கள் என்ன ??

முக்கியமாக கணவர்கள் மனைவியுடன் வாக்குவாதத்தில் மற்றும் தேவையற்ற சண்டையில் ஈடுபடுவதை  தவிர்க்க வேண்டிய காலகட்டம். காதலை தெரிவிக்க நினைப்போர் இக்காலகட்டத்தில் தெரிவித்தால் எதிர்மறையான பதில்கள் வரலாம். இக்காலகட்டத்தில் துவங்கும் உறவுகள், குறிப்பாக காதல்,பெண் நட்பு போன்றவை நிலைத்திருப்பதில்லை. பொதுவாக பெண்களிடத்தில், மனைவி, சகோதரிகளிடத்தில் ஜாக்கிரதையுடனும், மரியாதையுடனும் அன்புடனும் பழக வேண்டிய காலகட்டம். இக்காலத்தில் தொடங்கப்படும் பெண்களுக்கான தொழில்கள் , (புடவை நகை தொழில் போன்றவை) நிலைத்திருக்காது. ஆகவே கவனம் தேவை. இக்காலத்தில் அழகு ரீதியான சிகிச்சைகள், பெண்கள் புதிதாக விலை உயர்ந்த அழகு பொருட்கள் வாங்குதல் போன்றவை தவிர்க்கலாம். திருமணம், நிச்சயதார்த்தம், பெண் பார்த்தல், பொருத்தம் பார்த்தல் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும். பெண்களை தவறாக நடத்தியோர், நடத்துவோருக்கு  அதற்குரிய பரிசை சுக்கிரன் அள்ளித்தருவார்.

பரிகாரம்??

மேற்கண்ட பதிவிலேயே கொடுத்துள்ளோம். பெண்களை, பெண்களிடத்தில் அன்புடன் இருப்பது,நடத்துவது தான் மிக சிறந்த பரிகாரம். இக்காலகட்டத்தில் நவராத்ரி வருவது மேலும் சிறப்பு. பெண்களுக்கு புடவை, நகைகள் அல்லது வெள்ளி பொருட்கள், இனிப்புகள் தானமளிப்பது சிறப்பு. இந்த நாற்பது சொச்ச நாட்களில் எப்பொழுதும் சாக்லேட்டுகள் கையோடு வைத்திருந்து கண் படும் சிறுமிகளுக்கு கொடுத்து வரலாம். வெள்ளிக்கிழமைகளில் மஹாலக்ஷ்மி தேவியை கோவிலின் கர்ப கிரக விளக்கிற்கு நெய் சேர்த்து வழிபட்டு வரலாம். மேற்கண்ட வக்ர நிலையினால் அவதியை சந்திப்போர், சுத்தமாக இனிப்பு உண்பதை இந்த கால கட்டத்தில் நிறுத்தி வைப்பது ஆக சிறந்த பரிகாரமாக அமையும்.

ஹரி ஓம் தத் சத்
ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Tuesday, 9 October 2018

நவராத்ரி பரிகாரங்கள்


இந்த ஒன்பது நாட்களில் எவருக்கும் கடன் கொடுப்பதோ வாங்குவதையோ நிச்சயம் தவிர்க்கவும்.
ஹரி ஓம் தத் சத்
ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Sunday, 7 October 2018

மஹாளய அமாவாசை- வாழ்வின் துன்பங்களை உடனடியாக மாற்றும் எளிய பரிகாரம் 08.10.18


நம் முன்னோர்களை-பித்ருக்களை சரிவர பூஜிக்காதது, தர்ப்பணம் கொடுக்காமல் இருப்பது போன்ற செயல்கள் மட்டுமே நாம் எத்தகைய பரிகாரங்களை செய்து வரினும், துன்பங்கள் மாறாது பெருகுவதற்கு உண்டான காரணம். அப்படி இத்தனை நாட்கள் இருந்திருப்பினும், அவை அனைத்தையும் போக்கும் வண்ணம் ஒரு பரிகாரம் உள்ளது. அவசியம் செய்து பயன் அடையவும்.

மஹாளய அமாவாசை அன்று ஐந்து தேங்காய்களை மாலையாக நூலினால் கட்டி, (குடுமியுடன்)  நீர் நிலைகள் (ஆறு,ஏறி,குளம்,கடல்) உள்ள இடத்திற்கு சென்று, பித்ருக்களை மனதார பூஜித்து, அவர்களிடம் ஆசி வேண்டி, பின், அந்த மாலையை நீர் நிலைகளில் விட்டு விடவும்- மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின்.

எளிமையாக தோன்றினாலும், பல் வேறு அதிசயங்களை உடனுக்குடன் கொடுக்கவல்லது இந்த பரிகாரம். தேவை,பித்ருக்களிடத்தில் நெஞ்சம் நிறைந்த அன்பும், மரியாதையும் மட்டுமே. 
ஆண் பெண் இரு பாலரும் செய்யலாம். இறைவன் கொடுப்பதை விட முந்தி கொண்டு நமக்கு ஆசி வழங்கும் சக்தி பெற்றோர் நம் பித்ருக்கள் என்பதனை மறந்து விட வேண்டாம்.

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857