Friday, 19 January 2018

எந்த ராசியினர் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்??

" மேதா தக்ஷிணாமூர்த்தி ஹோமம்" 

நாள் : 26.1.18
நேரம் : மாலை 4:45 மணி முதல் இரவு 8 மணி வரை
இடம் : தி.நகர் சங்கர மடம் (காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் பஸ் நிலையம் அருகில்)
பிரசாத விநியோகம் :இரவு  8:15 மணி முதல்

கிரகங்களில் குருவினால் ஏற்படும் எவ்வித சிரமங்களையும் அடியோடு நீக்கும் சக்தி, பரிபூரணமாய் தக்ஷிணாமூர்த்தி பகவானால் மட்டுமே முடியும். ஆகவே தான், திருமணத்தடை, காரியத்தடை போன்றவற்றையும் நீக்கும் ஹோமமாக இருக்கட்டும் என 'மேதா தக்ஷிணாமூர்த்தி ஹோமம்' செய்ய திட்டமிடப்பட்டது. வேறு, வித்யார்த்தி ஹோமங்கள்  ஞானம் பெருக்கவும், தேர்வில் தேர்ச்சி பெற உதவுமே அன்றி திருமண தடை, சுபகாரிய தடைகளை போக்காது. மேலும், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி,துலாம்,கும்பம் ராசி மற்றும் லக்கினத்தினர் கண்டிப்பாக இந்த ஹோமத்தில் கலந்து கொள்வதின் மூலம் மேன்மையுறுவர். உண்மையில் இவர்கள் வருடம் ஒரு முறை பொருட்செலவை பொருட்படுத்தாது தங்கள் இல்லங்களில் இவற்றை செய்ய வேண்டும்-அப்படி செய்யாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைய போகிறது. மேற்கண்ட ராசி அல்லது லக்கினத்தினருக்கு குரு திசா புத்திகள் நடைபெற்று வருமேயானால், இந்த ஹோமம் ஒரு மிக பெரும் பரிகாரமாக அமையும்.

திருமண தடை அல்லது சுப காரிய தடைகள் இருந்து வரின், வேறு எந்த பரிகாரத்தையும்  விட, இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு வழிபடுவது, ஆகச்சிறந்த  பரிகாரமாக அமையும். திருமண தடை உள்ளோர், கும்ப ஜல அபிஷேகம் செய்து கொண்டு வழிபட, தடையகன்று நல்ல வரன்அமைய ஏதுவாகும்.


ஹரி ஓம் தத் சத்

தொடர்பிற்கு : +919840130156 / +918754402857

Thursday, 18 January 2018

தேர்வுகளில் தேர்ச்சி பெற-கல்வி ஞானம் பெருக 'மேதா தக்ஷிணாமூர்த்தி ஹோமம்"நாள் : 26.1.18
நேரம் : மாலை 4:45 மணி முதல் இரவு 8 மணி வரை
இடம் : தி.நகர் சங்கர மடம் (காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் பஸ் நிலையம் அருகில்)
பிரசாத விநியோகம் :இரவு  8:15 மணி முதல்

உங்கள் குழந்தைகள் / மாணவர்கள் / அரசு வேலைக்கு தேர்வு எழுதுவோர், நல்ல முறையில் தேர்ச்சி பெற்று, வெற்றிகளை குவிக்க, இம்மாதம் முதல் மார்ச் மாதம் வரை மாதம் ஒரு முறை 'மேதா தக்ஷிணாமூர்த்தி ஹோமம்" செய்யவிருக்கிறோம். வழக்கம் போல் இதில் கலந்து கொள்ள, தெய்வீக அனுகிரஹத்தை பெற எவ்வித கட்டணமுமில்லை. அதே சமயம் சங்கல்பம் செய்து கொள்ள, மிக சிறு நன்கொடையாக ஒரு நபருக்கு ரூ.150 /-  நிர்ணயம் செய்துள்ளோம். விருப்பமுள்ளோர் தங்கள் குழந்தைகளுக்காக சங்கல்பம் செய்து 'குரு தட்சிணாமூர்த்தியின்' அருட் பிரசாதமாக நோட்டு / பேணா / மற்றும் ஞானத்தை கூட்டும் நான்கு முக ருத்ராட்சம் பெற்று கொள்ளலாம். இந்த ஹோமத்தில் அன்னதானம் செய்ய விருப்பமுள்ளோர் மற்றும் நன்கொடை அளிக்க விருப்பமுள்ளோர் கீழ்கண்ட எண்களை அணுகவும். இந்த ஹோமத்திற்கு பூ, நெய், மஞ்சள் வாழைப்பழம் அரசு சமித்து மற்றும் வறட்டி கொடுத்து தெய்வீக ஆற்றலின் பரிபூர்ண அருளை பெறலாம்.

எவ்வளவோ படித்தும் தேர்வில் ஜெயிக்க முடியாமல் இருப்போர் மற்றும் படிப்பு மனதில் ஏறாது சிரமப்படுவோர் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு 'கும்ப ஜல அபிஷேகம் செய்து கொள்ள மேற்கண்ட நிலைகள் மாறுவதை கண்கூடாக காணலாம்.

முக்கிய குறிப்பு : சங்கல்பம் செய்து கொள்வோருக்கு மட்டுமே மேற்கண்ட பிரசாதங்கள் கொடுக்க எமது டிரஸ்டின் நிதி நிலைமை இடம் கொடுக்கிறது. கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஹோம பிரசாதம் மற்றும் நிவேதன அன்னம் அவசியம் உண்டு என்பதை நினைவில் கொள்க.

மேல்விவரங்கள் பெற :  +919840130156 / +918754402857 

Wednesday, 17 January 2018

சகல ஞானத்தையும் அள்ளித்தரும் 'மேதா தக்ஷிணாமூர்த்தி'நம் ரிஷிகளும், மஹான்களும் தங்களுக்கு  தகுந்த ஞானத்தை கொடுத்து அருள தக்ஷ்ணாமூர்த்தியையே வழிபட்டு வந்தனர். கல்வியில் வெறும் தேர்ச்சியை  மட்டும் கொடுக்காமல் அவை என்றும் மறக்காத வண்ணம், ஒரு ஞானமாய் மாற்றி அருள்வதில் அவருக்கு நிகர் வேறு எவருமில்லை. கல்வியில் இஷ்டமில்லாத குழந்தைகள் / மாணவர்கள், இஷ்டம் இருந்தும் படிப்பு ஏறாமல் சிரமப்படுவோர், நன்றாக படித்தும் பரிட்சை  நேரத்தில் மறந்து குறைந்த மதிப்பெண் எடுப்போர், அரசு வேலைக்கு படித்து பரீட்சை எழுத காத்திருப்போர், உயர் படிப்பிற்காக காத்திருப்போர், வேலையில் உயர் பதிவுக்காக காத்திருப்போர், மேலும் ஆசிரியர்கள் என அனைவரும் இவரை வழிபட்டு வர, மிக சிறந்த முறையில் மேல் நிலையை அடையலாம். இவற்றை மனதில் கொண்டும், மாணாக்கர்களுக்கு வரவிருக்கும் இறுதி தேர்வை  மனதில் கொண்டும், இந்த மாதம் முதல் மார்ச் மாதம் வரை தொடர்ச்சியாக மாதமொருமுறை  'மேதா தக்ஷிணாமூர்த்தி ஹோமம்' நடத்த திட்டமிட்டுள்ளோம். அனைவரும் கலந்து கொள்ளும் வண்ணம் வார இறுதியில், விடுமுறை நாளில் நடத்த எண்ணம். அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தக்ஷிணாமூர்த்தி அருளை பெற்று செல்ல தயாராக இருக்கவும். மேல் விவரங்கள் விரைவில். 

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Tuesday, 16 January 2018

ஓம் சாமுண்டாயை விச்சே

இன்று 16.1.18 மஹா சண்டி ஹோமம் மிக நல்ல முறையில் நடந்து முடிந்தது. அன்பர்கள்
அனைவரும் பூர்ணாஹுதியின் சமயம் மெய் சிலிர்த்து அன்னை சண்டியை அவ்விடத்திலே பரிபூரணமாய் உணர்ந்ததை காண முடிந்தது.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி 
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Monday, 15 January 2018

பண பிரச்சனைகள் ஒரு முடிவிற்கு வர-"தாந்த்ரோக்த தனலக்ஷ்மி உபாசனை"எத்தனையோ வழிகளை  கடைப்பிடித்தும், பண வளம் பெற பல "மணி தெரபி" முறைகள் செய்தும், பண பிரச்சனைகள் இருந்து கொண்டே இருப்பதாகவும், அவற்றை ஈடு கட்ட முடியாமல் கடன் சுமைகள் ஏறி கொண்டே போகிறது எனவும் பலர் என்னிடம் குறை பட்டுக்கொள்வதுண்டு. இதற்கு அடிப்படையில் இரு காரணங்கள் உள்ளன. எந்த ஒரு முறையையும் முழுதாக கடைபிடிக்காது, பாதியில் நம்பிக்கை இழந்து விட்டு விடுவது. மற்றொன்று, பல மணி தெரபி முறைகள் வெறும் எண்ணங்களை மட்டுமே மூலதனமாக கொண்டு கற்பிக்கப்படுகிறது (நாம் அப்படி செய்வதில்லை), அதுவும் தோல்விக்கு ஒரு காரணம், ஏனெனில் நாம் இந்த சமூகத்தில் பலர் சூழ வாழ்ந்து வரும் பட்சத்தில், எதிர் மறை எண்ணங்களுடன் இருப்போருடன் சேர்ந்து தான் சில காரியங்களை செய்ய வேண்டியுள்ளது. ஏன், நம் வீட்டிலேயே அது போன்ற நபர்கள் இருக்கலாம். அப்படி என்றால் இதற்கு என்ன தீர்வு?

நம் உடலில் உள்ள எழுபத்திரெண்டாயிரம் நாடிகளிலும், படியும் வண்ணம், தனத்தை அள்ளித்தரும் அந்த மஹாலக்ஷ்மி தேவியின் ஆற்றலை கொண்டு சேர்ப்பது மட்டுமே வாழ் நாள் முழுதும் பயன் தரும். அந்த நிலையை அடையும் வைராக்கியமும், மன உறுதியும், பேராவலும் உள்ளோரை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மேற்சொன்ன 'தாந்த்ரோக்த தனலக்ஷ்மி உபாசனை' வழங்க இருக்கிறேன். காரணம் சாதகர் சரி வர இல்லையெனில், உபதேசம் செய்தவரையும் சேர்த்து தண்டிக்கும் சக்தியை பெற்றது அந்த உபாசன மந்திரம். மேல் விவரங்கள் விரைவில்.. 

ஹரி ஓம் தத் சத்


தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Sunday, 14 January 2018

காணும் பொங்கலை உங்கள் வாழ்வை பேணும் பொங்கலாக மாற்றுங்கள்

நாள் 16.1.18 நேரம் மாலை 4:30 மணி முதல் இரவு 8 மணி வரை பிரசாத விநியோகம் இரவு 8:05 மணி முதல் நிவேதன அன்னம் இரவு 8:15 மணி முதல் சங்கர மடம்-தி.நகர்,காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் பஸ் நிலையம் அருகில் முக்கிய குறிப்பு : அனைவரும் ஹோம முடிவில் கைகளில் கட்டி கொள்ள, அதீத காப்பு பெற கொடுக்கவிருக்கும் சண்டி ரக்ஷையை பெற்று கொண்ட பின் செல்லுமாறு கேட்டு கொள்கிறோம். ஆம், பாவுமாய மௌனி அமாவாசையில் நடக்கவிருக்கும் மஹா சண்டி ஹோமத்தில் கலந்து கொண்டு, தேவியின் பரிபூர்ண ஆசியை பெறலாம். பூ, பல வகை பழங்கள், சகல காரியங்களும் சித்தி பெற கொப்பரை, எதிர்ப்புகள் அகல பூசணி, தாமரை,பதவி உயர்வு பெற தேங்காய், வசீகர சக்தி அதிகரிக்க மஞ்சள் கட்டை, கவலைகள் தீர எலுமிச்சை, வாக்கு பலிதம் பெற மாதுளை, தன லாபம் செழிக்க தேன், நெய் மற்றும் கரும்பு துண்டுகள் எடுத்து வரலாம். சங்கல்பம் செய்து கொள்ள மற்றும் குறிப்பிட்ட விஷயங்கள் வெற்றி பெற விஷேச சங்கல்பம் செய்து கொள்ள கொடுக்கப்பட்டுள்ள எண்களை அணுகவும். +919840130156 / +918754402857