Saturday, 27 January 2018

கிரகண கால தனலக்ஷ்மி உபாசனை

பொதுவாக கிரகண நேரத்தில் செய்யப்படும் எந்தவொரு மந்திர உபாசனையும், 
சாதாரணமாக செய்யப்படும் மந்திர உபாஸனையை காட்டிலும் ஆயிரம் மடங்குகள் பலன் அளிக்க கூடியது ஆகும். இதை மனதினில் கொண்டு தான் தற்சமயம் நான்கு நாட்கள் 'தாந்த்ரோக்த தனலட்சுமி உபாசனை' வழங்கப்படுகிறது. இது ஒரு மிக அறிய சந்தர்ப்பம். மற்றபடி பிப்ரவரி மாதத்திலும், உபாசனை வழங்கப்படும்-உரிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

உபாசனை வழங்கும் தேதிகள் :
ஜனவரி மாதம் 27,28,30,31 தேதிகள்.

ஹரி ஓம் தத் சத்

+919840130156 / +918754402857

Thursday, 25 January 2018

தாந்த்ரோக்த தனலக்ஷ்மி உபாசனை


மேற்கண்ட உபாசனை பற்றி முன்பே குறிப்பிட்டிருந்தோம். நம்
எழுபத்தியிரண்டாயிரம் நாடிகளிலும் மந்திரத்தின் மூலம் தனதேவதையின் ஆற்றல் பரவ, நம் வாழ் நாள் முழுதும் பண ரீதியான பிரச்சனைகள் அண்டாது பார்த்து கொள்வதோடு மட்டுமல்லாமல், நாம் விரும்பிய செல்வ செழிப்பான வாழ்வும் வாழ முடியும். அறிய தவ சீலர்களால் கொடுக்கப்பட்டுள்ள இந்த சிறிய மந்திரமானது, தகுந்த உபதேசத்தின் மூலமே பெற முடியும். இவற்றை வரும் பௌர்ணமி கடந்து, ஆரம்பிக்க எண்ணியிருந்தோம். எனினும் பலர், வரும் (31.1.18) கிரகண காலத்தை சுட்டி காட்டி, " நீங்கள் தான் கிரகண நேரத்தில் கூறப்படும் மந்திர சாதனைக்கு சக்தி பல்லாயிரம் மடங்கு என கூறியுள்ளீர்களே, அதற்கு முன்னரே உபதேச முறை கொடுங்களேன்-கிரகணத்தில் உபாசனை செய்து பயன் அடைவோமே ' என கோரிக்கை வைத்துள்ளதால், வரும் சனிக்கிழமை (27.1.18), ஞாயிறு (28.1.18), செவ்வாய்(30.1.18) மற்றும் புதன் கிழமைகள் (31.1.18 காலை மட்டும்*)  என பிரித்து, நான்கு நாட்கள் உபாசனை வழங்க உள்ளோம்-நம் சென்டரிலேயே.
உபாஸனைக்கு பதினைந்து முதல் அரை மணி நேரம் வரை ஆகும். மிக முக்கியமாக, இதற்கு தொடர்ந்து ஏழு முதல் இருபத்தியோரு நாட்கள் வரை தினசரி ஒரு மணி நேரம் மந்த்ர ஜெபம் செய்ய வைராக்யமுள்ளோர் மட்டும் கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொண்டு தட்சிணை விவரங்கள் கேட்டு பெறவும்.  மந்திர உபாசனை பெற்று கொண்டு அதை தொடராமல் பாதியில் விட்டு விடுவோம் என சிறு ஐயம் இருப்பினும், இந்த முறை உங்களுக்கானதல்ல என்பதனை புரிந்து கொள்ளவும். சிலருக்கு  மந்திரம் உச்சரிப்பு பற்றிய ஐயம் இருப்பின், அது அறவே தேவையில்லை, மிக எளிதான அனைவரும் உச்சரிக்க கூடிய மந்திரம் தான் என்பதனை அறிக.

மிக முக்கிய குறிப்பு : உபாசனை முறை  நேரில் வருவோருக்கு மட்டுமே. 

ஹரி ஓம் தத் சத் 

+918754402857 / +919840130156


Wednesday, 24 January 2018

சூஷ்ம ஞானத்தை தரும் " மேதா தக்ஷிணாமூர்த்தி ஹோமம்"

நாள் : 26.1.18
நேரம் : மாலை 4:45 மணி முதல் இரவு 7 மணி வரை
இடம் : தி.நகர் சங்கர மடம் (காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் பஸ் நிலையம் அருகில்)
பிரசாத விநியோகம் :இரவு 7:30 மணி முதல்

ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி,துலாம்,கும்பம் ராசி மற்றும் லக்கினத்தினர் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு வழிபட அவர்கள் வாழ்வு மேன்மையுறும் என்பது உறுதி. பள்ளியில் அல்லது கல்லூரியில் படிக்கும் மேற்கண்ட ராசி அல்லது லக்கினத்தினை கொண்ட  மகன் அல்லது மகள்கள் இருப்பின், கண்டிப்பாக அவர்களையும் அழைத்து வந்து வழிபடவும்.

அரசு சமித்து, பூக்கள், உதிரி பூக்கள், பழங்கள், நெய் (சுத்தமான நெய் மட்டுமே ஏற்று கொள்ளப்படும்) , தேன் போன்றவை ஹோமத்திற்கு கொடுத்து வழிபடலாம். அன்னதானத்திற்கு உபயம் செய்ய விரும்புவோர், கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்.

சங்கல்பம் செய்து கொள்வோருக்கு மட்டும் :  தக்ஷிணாமூர்த்தி ஹோமத்தில் வைக்கப்பட்ட நோட்டு, பேணா மற்றும் கல்வியில், ஞானத்தில் தேர்ச்சி பெற நான்கு முக ருத்ராட்சம் வழங்கப்படும். மற்றபடி அனைவருக்கும், ஹோம பிரசாதம் மற்றும் நிவேதன அன்னம் உண்டு.

முக்கிய குறிப்பு : கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்போர் அல்லது கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்ல விருப்பமின்றி இருக்கும் பிள்ளைகள் ,திருமண மற்றும் சுப காரிய தடை கொண்டோர்,  ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கும்ப ஜல அபிஷேகம் செய்து கொள்வது மிக சிறந்த பரிகாரமாக அமையும்.

மேலும் விவரங்கள் பெற : +919840130156  &  +918754402857 

Tuesday, 23 January 2018

செல்வம் சேர்க்கும் ஞானத்தை பெற

வரும் வெள்ளிக்கிழமை 26.1.18 மாலை சென்னை தி.நகர் சங்கர
மடத்தில் நடக்கவிருக்கும்  மேதா தக்ஷிணாமூர்த்தி ஹோமத்தை பற்றி இன்று 
ஒரு அன்பர்  கேட்கையில் 'நீங்கள் லக்ஷ்மி அல்லது குபேர ஹோமம் செய்தால், உங்களுக்கும் தனம் வரும், வந்து கலந்து வழிபடறவங்களுக்கும் செல்வம் சேருமே ? என்றார். அதற்கு நான் "செல்வத்தை கடவுளே  எடுத்து கொண்டு வந்து உங்க கையிலே கொடுப்பார்களா என்றேன். 'அதெப்பிடி சார், அதற்குண்டான வழியை காட்டுவார்கள் என நீங்க மொதக்கொண்டு சொல்லிருக்கீங்களே !! என்றார்.
'அதற்கு அடிப்படையான அறிவு, ஞானம் வேணுமில்லயா?? அவர்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் பொழுது தக்க வச்சுக்க  சூஷ்ம புத்தி வேணுமே ?? அவற்றை கொடுப்பதற்கு தான் இந்த ஹோமம் என்றேன். மறுமுனையில் கப்சிப்.

ஹரி ஓம் தத் சத்
தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Sunday, 21 January 2018

திருப்பூர் புத்தக திருவிழா 2018

#ChennaiBookFair
#TirupurBookFair

சென்னை புத்தக திருவிழாவில் கிரி டிரேடிங், ஆனந்த நிலையம் மற்றும் வேறு சில கடைகளிலும் அடித்து பிடித்து விற்று தீர்ந்துள்ளது 'உடனடி தனம் தரும்-தாந்த்ரீக ரகசியங்கள்" புத்தகம். அடுத்தபடியாக 'சனீஸ்வர ரகசியங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து திருப்பூரில் இம்மாதம் இருபத்தி ஐந்தாம் தேதி முதல் நடக்கவிருக்கும் புத்தக திருவிழாவிலும் மேற்கண்ட இரு கடைகளிலும் நம் மூன்று புத்தகங்களும் கிடைக்கும். மேலும் இந்தியாவில் அனைத்து 'கிரி டிரேடிங்' கிளைகளிலும், சென்னை அசோக் நகர் 'ஆனந்த நிலையம்' புத்தகாலயத்திலும், தி.நகர் 'நியூ புக் லாண்ட்ஸ்' , புத்தக கடையிலும் கிடைக்கும். அடுத்து வெகு விரைவில் 'மறைத்து வைக்கப்பட்ட-மந்திர ரகசியங்கள்' புத்தகம் வெளிவர உள்ளது.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

கடன் தீர்க்க உகந்த நாள் 24.1.18வரும் 24.1.18 புதனன்று காலை 11:33 AM மணி முதல் மதியம் 1:05 PM மணி வரை
தீர்க்கப்படும் கடனின் ஒரு சிறு தொகையும், மொத்த கடனையும் கிடு கிடுவென அடைப்பதற்குண்டான வழி பிறக்க வைக்கும்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com