Friday, 2 February 2018

மாசி அமாவாசை சண்டி ஹோமம் 15.2.18நேரம் : மாலை 4:30 மணி முதல்
இடம் : சங்கர மடம், தி.நகர்,சென்னை
நிவேதன அன்னம் : மாலை 8:15 மணி முதல்

முக்கிய குறிப்பு : நான்கு நபரை சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு சங்கல்ப கட்டணமாக ரூ.ஐநூறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சங்கல்பம் செய்யும் அனைவருக்கும், அனைத்து வெற்றிகளையும் தேடி வரச்செய்யும் 'சண்டி' தேவியின் வெள்ளி முலாம் பூசப்பட்ட  டாலர் பிரசாதமாக வழங்கப்படும்.

சண்டி தேவியை, சாமுண்டியை பற்றி பல முறை விளக்கி  உள்ளதனால், அவரின் மகத்துவத்தை பற்றி மீண்டும் கூற வேண்டியதில்லை உங்களுக்கு. தை மாத  அமாவாசை சண்டி ஹோமத்தில் கலந்து கொண்ட அனைவரும் அந்த தெய்வீக ஆற்றலை உணர்ந்துள்ளீர்கள் என்பது, மீண்டும் எப்பொழுது சண்டி ஹோமம் என அனுதினமும் எமக்கு வரும் தொலைபேசி அழைப்புக்களே சாட்சி. சென்ற முறை தவற விட்டவர்கள், இம்முறை தவற விடாது, கலந்து கொண்டு சண்டி தேவியின் ஆசி பெறுமாறு கேட்டு கொள்கிறோம். மாசி மாத அமாவாசைக்கும் சண்டி தேவிக்கும் மிக நெருக்கமான தொடர்புகள் உள்ளன.

வெளியே சொல்ல முடியாத துன்பங்கள் அனுபவிப்போர் , அல்லது வெளியில் கூற முடியாத சில விஷயங்களால் துன்பப்படுவோர், இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு கலச ஜல அபிஷேகம் செய்து பயன் பெறலாம்.

மேலும் விஷேச சங்கல்பம் செய்து கொள்ள விழைவோர், தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். இந்த ஹோமத்தில், அன்னதானத்திற்கான பொறுப்பை ஏற்று முன்னோர்களின் மற்றும் சண்டி தேவியின் அருளாற்றலை பெற நினைப்போர் முன் கூட்டியே தகவல் தெரிவிக்கவும். புடவை, மற்றும் ஹோமத்திற்குண்டான பொருட்கள் கொடுக்க விழைவோரும் கொடுத்து பயன்பெறலாம்.

+918754402857 / +919840130156

மிக முக்கிய குறிப்பு : சங்கல்பம் செய்து கொள்வோர் முன்கூட்டியே தெரிவிக்கவும். ஹோமம் நடக்கும் இடத்தில் சங்கல்ப கட்டணம் பெறப்படமாட்டாது.

Tuesday, 30 January 2018

தனம் தரும் தாந்த்ரோக்த தனலட்சுமி

தனம் தரும் தாந்த்ரோக்த தனலட்சுமி உபாசனை நாளை 31.1.18 மதியம் நான்கு முப்பது மணியுடன் முடிவடைகிறது. வெளியூர் அன்பர்களுக்கு குறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் உபாசனை வழங்கப்படும்.

உபாசனை பெற்றவர்கள் 31.1.18 மாலை ஆறுமணிக்கு முன் குளித்துவிட்டு முதலில் "ஓம் ஸோம்  ஸோமாய நமஹ" மந்திரம் இயன்றவரை கூறிவிட்டு, பின்  உபாசனையில் கொடுக்கப்பட்ட மந்திரத்தை இயன்றவரை கூறலாம். கிரகணம் முடிந்ததும் சந்திரனை தரிசித்து விட்டு குளிக்கவும். பின்னரும் சந்திரனை தரிசித்து, மனை சுத்தம் செய்து விளக்கேற்றி வழிபட்டு, பின்னர் உணவருந்தவும். கொடுத்துள்ள தாந்த்ரோக்த மந்திரத்தை கிரகண நேரத்தில் உபாசிப்பது பல லக்ஷம் மடங்குகள் பயன் தரக்கூடியதாகும்.

ஹரி ஓம் தத் சத்

+919840130156 / +918754402857 

தன ஜன வசியத்தை தரும் கருப்பு மஞ்சள் (புதிய வரத்துக்கள்)

(ஜூலை மாதம் 2017ல்  இட்ட பதிவு, மீண்டும் வரத்துக்கள் வந்த நிலையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது)

மேற்கண்ட கருப்பு மஞ்சள் பற்றி  ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். பலர் இதை உபயோகித்து மேற்கண்ட தன ஜன வசீகரத்தை பெற்று வருகின்றனர். சிறிது மாதங்களாக வரத்து குறைவான நிலையில் இருந்த இவை தற்சமயம் மீண்டும் நம் சென்டரில் உள்ளன.

இதை பற்றி அறியாதோருக்கு சிறு விளக்கம்.

தாந்த்ரீக சாதனையில் உபயோகிக்கப்படும் இவை மிகுந்த சக்தி வாய்ந்தவை. காளியாக இதை இன்றும் வீடுகளில் வளர்த்து வழிபடுவோர் வட நாட்டில் ஏராளம்.

இதை வீட்டில் வளர்த்து பூஜித்து வர, கிரகங்களில் ராகு மற்றும் குருவின் அருளை பரிபூரணமாக பெறலாம்.

பெண்களுக்கு தன்னூடே வைத்திருக்க, மிக பாதுகாப்பை தரவல்லவை இவை.
ஆண் / பெண்கள் திலகமாக இட்டு செல்ல வசீகர சக்தியை கொடுக்கும்.காரிய பலிதம் ஏற்படும்.

சட்டிஸ்கர் மாநில தாந்த்ரீகர்கள், ஏன், பொது மக்கள் கூட இவற்றை குழைத்து அதனுடன் தங்களின் மோதிர விரலின் சிறிது ரத்தத்தை சேர்த்து நெற்றியில் இட்டு செல்வர்-வசீகர சக்தி பெற.

இவற்றை பணப்பெட்டியில் வைத்திருக்க தனம் மிகும். தொடர்ந்து பண ரீதியாக சரிவுகளை சந்திப்போர், இதனை ஒரு சிகப்பு துணியில் வைத்து, மேற்கொண்டு ஐந்து கோமதி சக்கரம் மற்றும் ஐந்து சோழிகளை வைத்து முடிந்து பணப்பெட்டி அல்லது பீரோவில் வைத்திருக்க, சரிவு நிலை மாறி தனம் செழிக்கும்.

தற்சமயம் பொடி மற்றும் முளையுள்ள கிழங்கு வடிவிலும் கிடைக்கும்.

தேவைக்கு : +919840130156 / +918754402857 

Sunday, 28 January 2018

வெளியூர் அன்பர்களுக்கு தாந்த்ரோக்த தனலக்ஷ்மி உபாசனைகிரகண காலத்தை குறிப்பிட்டு பல வெளியூர் அன்பர்கள் தொடர்ந்து
தொலைபேசி வாயிலாகவோ அல்லது வேறு முறையிலோ மேற்கண்ட உபாசனை கொடுக்க சொல்லி கோரிக்கை வைத்துள்ளதால், இன்று முதல் 29.1.18 வெளியூர் அன்பர்களுக்கும் வரும் 31.1.18 ம் தேதி பகல் பன்னிரண்டு மணி வரை உபாசனை வழங்கப்படும். மேல் விவரங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும்.

+919840130156 / +918754402857