Saturday, 15 September 2018

ரகசிய பண வசிய பரிகாரம்


சிறிது காலம் முன்பு ஒருவர் நீங்கா பணவளம் ஏற்பட  எளிய பரிகாரம் ஒன்றை கூறும்படியும் மிகுந்த பணக்கஷ்டத்தில் இருப்பதாகவும் கூறினார். ஒரு பெரிய பூஜைப்பொருட்கள் விற்கும் அங்காடியில் முக்கிய பொறுப்பில் உள்ளவர். அவரின் ஜாதகத்தை ஆராய்ந்து புதன் வீற்றிருக்கும் வீட்டின் திசையில் அவர் வீட்டில் நரியின் படம் ஒன்றை மாட்டி, அதன் கீழ் பித்தளை எழுத்துக்களில் அவரின் பெயரை பொறித்த பெயர் பலகையையும் மாட்டிவைக்குமாறு  கூறினோம்.  இது நடந்தது முதல் புத்தகமான தாந்த்ரீக ரகசியங்கள் வெளியீட்டின் சமயம் என்று நினைவு. ஒன்பது மாதங்கள் கழிந்து, இன்று அதே அங்காடியில் அவரை சந்தித்தபொழுது, மிகவும் நல்ல நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதாகவும், தற்சமயம் ஏதோ ஒரு வகையில் பண முடை இல்லாது , தடையின்றி வந்துகொண்டிருப்பதாக கூறி மகிழ்ந்தார். இதை நீங்கள் ஒவ்வொருவரும் செய்யலாம். தங்கள் ஜாதகத்தில் புதன் இருக்கும் வீட்டின் திசையை தெரிந்து கொண்டு , அதே திசையில் தங்கள் வசிக்கும் வீட்டின் திசையினில் மேற்கண்டவாறு செய்யலாம். புதபகவான் அருளாசியுடன் பணமுடை நீங்கும். முயற்சித்து வெற்றியினை பகிர்ந்து கொள்ளுங்கள்.ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857 
www.youtube.com/amanushyam

Friday, 14 September 2018

சூரியனுக்குரிய பானு சப்தமி 16.9.18ஞாயிறும் சப்தமியும் இணையும் நாட்களை பானுசப்தமி என்றழைப்பர். குறிப்பாக வளர்பிறையில் இது வருவது மிகுந்த விசேஷம். இவ்வருடத்தில் இது கடைசி ஒன்றாகும். முன்னர் சென்ற ஏப்ரில் 22 மற்றும் செப்டம்பர் 2 ல் வந்தது. இம்முறை வரும் ஞாயிறு செப்டம்பர் பதினாறாம்  நாள் வந்துள்ளது. அதிகாலை எழுந்து குளித்ததும், சூரியனை வணங்கி அவருக்கு நீர் வார்த்து, விளக்கேற்றி முடிந்தளவு 'ஓம் சூர்யாய நமஹ' மந்திரம் கூறி வழிபட்டு, பின்னர் ஆதித்ய ஹ்ருதயம் கூறியோ கேட்டோ வருவது மிகுந்த நன்மை தரும். இந்நாளில் காலை வேளையில் 'சூரிய நாராயணர்' கோவில் சென்று வழிபட்டு கோவிலில் ஒன்றரை மணி நேரம் தங்கி தெரிந்த மந்திரங்களை அல்லது 'ஓம் சூர்யாய நமஹ' மந்திரத்தை கூறி வருவதும், முடிந்தளவு மந்திர உபாசனைகள் செய்வதும், பணம், பொருள், உணவு தானமிடுவதும் இந்நாளில் செய்வது பன்மடங்கு நன்மைகளை பெருக்கும். அரசியலில் இருப்போர் அல்லது ஈடுபட நினைப்போர், அரசு வேலைக்கு காத்திருப்போர், அரசாங்கத்தால் தொல்லைகளை சந்திப்போர், அரசாங்கத்தால் லாபத்தை வேண்டி இருப்போர்க்கு மேற்கண்ட நாளும் கொடுத்துள்ள வழிபாடுகளும் ஒரு மிகசிறந்த வரப்பிரசாதமாகும். 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857   
www.youtube.com/amanushyam

சந்திராஷ்டமம் கரண நாட்கள் விஷயோக நாட்களை பற்றிய முக்கிய பதிவு

ஒரு அன்பர் மேற்கண்ட நாட்களே ஒரு மாதத்தில்
பெரும்பான்மையான நாட்களை விழுங்கி விடுமே என கேள்வி எழுப்பி இருந்தார்.நாம் செய்யும் எந்த ஒரு காரியமும் முதல் முயற்சியிலேயோ அல்லது சில விஷயங்கள் எவ்வளவோ முயற்சித்தும் வெற்றி பெற்று விடுவதில்லை. அப்படி செய்யப்படும் சில காரியங்கள் பல பிரச்சனைகள் அல்லது துன்பங்களுக்கும் வித்திட்டு விடுகிறது. அவற்றை எல்லாம் கூடிய அளவு தவிர்க்கத்தான் மேற்கூறிய நாட்களில் புதிய விஷயங்களை தவிர்க்க சொல்லப்பட்டு இருக்கின்றது. சந்திராஷ்டமத்தை பொறுத்த வரை ஒரு நபருக்கு அதிக பட்சம் ஏழு மணி நேரம் மட்டுமே. அதற்கும் பரிகாரம் உண்டு. மனதை ஒரு நிலை படுத்தி காரியங்களில் ஈடுபடுவதே  அந்த பரிகாரம். இவற்றை பற்றி விரிவாக எம் புத்தகங்களில் கொடுத்துள்ளோம். கரணத்தை பொறுத்தவரை மாதத்தில் ஒரு சில நாட்களில் சில மணி நேரங்களே வருகின்றன. விஷயோகத்தை பொறுத்தவரை ஒரு நேர்மறையான விஷயம் உண்டு. இந்நேரத்தில் செய்யப்படும் தானங்கள்,பூஜைகள், யாகங்கள், மற்றும் மந்திர உபாசனைகள்  மிக பெரிய வெற்றியை கொண்டு சேர்க்கும் என்பதே அது. மேற்கண்ட நாட்களில் புதிய விஷயங்கள் தொடங்கிய ஆக வேண்டிய கட்டாயம் இருப்பின், பால் மற்றும் உப்பு அவ்வேளைகளில் தவிர்த்து செயல்படுவதும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கும். 

ஒரு வேலையை தவறான தவிர்க்கவேண்டிய நேரத்தில் தொடங்கி பின் வருட கணக்கில் அதற்காக பாடுபடுவதை விட, சிறந்த வெற்றி தரும் நேரத்தில் தொடங்கி உடனடியாக முடித்து வெற்றி காண்பது, நன்மை தரும் அன்றோ? 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857   
www.youtube.com/amanushyam

Thursday, 13 September 2018

கரணம் தப்பினால் மரணம் செப்டெம்பர் மற்றும் அக்டோபர் 2018
செப்டம்பர்16, 2018 ஞாயிறு  மதியம் ஆரம்பம் 15:50
செப்டம்பர் 17, 2018 திங்கள் அதிகாலை முடிவு 04:50
செப்டம்பர் 20, 2018 வியாழன் காலை 11 :45  ஆரம்பம்
செப்டம்பர்21, 2018 வெள்ளி  மதியம்  முடிவு 01:20
செப்டம்பர் 24, 2018 திங்கள் காலை ஆரம்பம்  07:14
செப்டம்பர் 24, 2018 திங்கள் இரவு முடிவு  19:58
செப்டம்பர் 27, 2018  வியாழன் இரவு ஆரம்பம்  20:51
செப்டம்பர்  28, 2018 வெள்ளி காலை முடிவு  08:50

அக்டோபர்  01, 2018 திங்கள் காலை  05:54  ஆரம்பம்
அக்டோபர்  01, 2018 திங்கள் மதியம்  17:04  முடிவு
அக்டோபர்  04, 2018 வியாழன் காலை  11:00 ஆரம்பம்
அக்டோபர்  04, 2018 வியாழன் இரவு  21:54   முடிவு
அக்டோபர்  07, 2018 ஞாயிறு மதியம்  14:00 ஆரம்பம்
அக்டோபர் 08, 2018 திங்கள் அதிகாலை  00:50  முடிவு
அக்டோபர்  12, 2018 வெள்ளி மாலை  17:30  ஆரம்பம்
அக்டோபர் 13, 2018 சனிக்கிழமை அதிகாலை  05:41  முடிவு
அக்டோபர்  16, 2018 செவ்வாய் காலை  10:10 ஆரம்பம்
அக்டோபர்  16, 2018 செவ்வாய் இரவு  23:39  முடிவு
அக்டோபர் 20, 2018 சனி காலை 07:00  ஆரம்பம்
அக்டோபர் 20, 2018 சனி இரவு  20:10   முடிவு
அக்டோபர்  23, 2018 செவ்வாய் இரவு  22:30  ஆரம்பம்
அக்டோபர் 24, 2018 புதன் காலை  10:35  முடிவு
அக்டோபர்  27, 2018 சனி காலை  07:20  ஆரம்பம்
அக்டோபர்  27, 2018 சனி மாலை  18:45  முடிவு
அக்டோபர்  30, 2018 செவ்வாய் மதியம்  13:02 ஆரம்பம்
அக்டோபர் 31, 2018 புதன் அதிகாலை  00:15 முடிவு