Friday, 28 September 2018

மஹாளய பட்சம் ஆறாம் நாள் 30.9.18இன்றைய தினம் ஏதேனும் பாம்புள்ள புற்று கோவிலுக்கு சென்று நம் முன்னோர்கள் மேலுலகில் நற்கதி அடைய   பிரார்த்தித்து வர, பித்ருக்களின் பரிபூர்ண ஆசியும் மன சாந்தியும் கிட்டும். 

குறிப்பு : மிருகங்கள் இருக்கும் பூங்காவில் பாம்பிற்கு இன்றைய தினம் சென்று அவைகளுக்கு உணவிற்கு பணம் அல்லது பொருள்கொடுத்து உதவுவதும் நன்மை தரும். 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.youtube.com/amanushyam

மொபைல் மணி தெரபி


Thursday, 27 September 2018

மஹாளய பட்சம் ஐந்தாம் நாள் 29.9.18இந்த தினத்தில் அக்னிஹோத்ரம் செய்வது சிறந்தது. திலஹோமம் இந்நாளில் செய்ய பித்ருக்களின் பரிபூர்ண ஆசியை பெறலாம். முடியாதவர்கள், பித்ருக்களின் படத்திற்கு கற்பூரம் காட்டி வழிபடவும். ஆட்டிற்கு உணவு வழங்கி வருவது,  இந்நாளில் முன்னோர்கள் ஆசியை சுலபமாக பெறுவதற்கு ஒரு சிறந்த வழி. 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Wednesday, 26 September 2018

#மகாளயபட்ச பரிகாரங்கள்

#மஹாளயபட்சம் மூன்றாம் நாள் 27.9.18 

இன்றையநாளில் குதிரைகள் இருக்கும் இடம் தேடி சென்று உணவிடவும். சில காரியங்களை சிரமேற்கொண்டு செய்வதால் தான் பித்ருக்களுக்கு செய்வதை 'சிரார்தம்' என்கிறோம். குதிரைகளுக்கு உணவிட முடியாத பட்சத்தில் விநாயகருக்கு அருகம் புல் மாலை சாற்றி வணங்கி வரவும் 

#மஹாளயபட்சம் நான்காம் நாள் மஹாபரணி 28.9.18

இன்றைய நாள் அதிமுக்கிய நாளாகும். தர்ப்பணம் போன்றவற்றை செய்வதோடு, ஆண் யானைக்கு பித்ருக்களை நினைத்தவாறே உணவிட்டால், அவர்கள் மனம் குளிரும்-ஆசிகள் கிட்டும்.உங்கள் ஊரில் யானை உள்ள கோவில் எதுவோ அங்கு சென்று உணவிடவும். முடியாத பட்சத்தில் விநாயகருக்கு வாழைப்பழம், கரும்பு, சர்க்கரை  பொங்கல் எது முடியுமோ  அதை நிவேதனம் (கோவிலில்) செய்து அங்கு வரும் முதியோருக்கு அவற்றை அளிக்கவும். 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.youtube.com/amanushyam

குரு பெயர்ச்சி 2018 மகரம் கும்பம் மீனம்மகரம் : பல காலமாக நினைத்து வந்த திட்டமிட்ட அனைத்தையும் வெற்றிகரமாக முடிக்க முடியும். நட்புக்கள், தொடர்புகள், மூத்த சகோதர சகோதரிகளின் அனைத்து வித ஆதரவும் கிட்டும். தனியாக இருப்பதை தவிர்த்து குழுவாக அல்லது ஓரிருவருடன் இருந்து செயல்படுவது இக்காலகட்டத்தில் அவசியமாகிறது. உங்களை சுற்றி இருக்கும் அனைத்தையும் அனைவரையும் நேர்மறையாக நீங்கள் மாற்ற முயற்சிக்கும் காலமிது. கவனமாக செயல்படின் , இக்காலகட்டத்தில் செடிக்கு விதையிட்டால் மரமே முளைத்து விடும்.

கும்பம் :  கவனமாக குறிபார்த்து கல் எரிய வேண்டிய நேரமிது. ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். அடுத்தவரை, எவராயினும், அதிகாரம் செய்ய முற்பட்டால் விளைவுகள் சிரமம் தரும். அனுசரித்து வெற்றி காண வேண்டிய காலகட்டம். அவசர சிந்தனைகள், தன்னை மட்டுமே பெரிதாக எண்ணம் கொள்ளல், வேலைகளை தள்ளி போடுதல் தவிர்க்கவும். வெளிநாட்டு தொடர்பினால் வெற்றி வரும் நேரமிது.

மீனம் : பல புதிய விஷயங்களை கற்றுணரும் நேரமிது. வாழ்க்கை நன்முறையாக விரிவடையும், எண்ணங்கள் நேர்மறையாக மேலோங்கும். கற்றல் மற்றும் கற்று கொடுத்தல் என்ற நிலையில் இருப்போருக்கு இது ஒரு அற்புத காலம். மதம், ஆன்மிகம், எழுத்தாளர்கள், ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுவோர், மற்றும் வெளிநாட்டு சம்மந்தம் போன்றவற்றால் வெற்றிகள் குவியும். ஆன்மீக மற்றும் சாத்வீக விஷயங்களால் நலம் பெற இருக்கிறீர்கள்.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.youtube.com/amanushyam

Tuesday, 25 September 2018

#மஹாளயபட்சம் இரண்டாம் நாள்

இன்று அனாதை இல்லத்தில் இருக்கும் முதியோர்களுக்கு உணவு,உடை தானமளிக்க பித்ருக்களின் ஆசியினால் பணவரவு பன்மடங்கு கூடும். மீன்களுக்கு கோதுமைமாவு உருண்டைகள் அளிப்பதும், சூரிய வழிபாடும், மஹாவிஷ்ணு வழிபாடும் பித்ருக்களை மனம் குளிர செய்யும்.

ஹரி ஓம் தத் சத்ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Monday, 24 September 2018

குறிப்பு : சென்ற வருடம் நாம் பதிந்ததை தேதிகள் மாற்றப்பட்டு வழங்கியுள்ளோம்.

குறிப்பு : சென்ற வருடம் நாம் பதிந்ததை தேதிகள் மாற்றப்பட்டு வழங்கியுள்ளோம்.

மஹாளய பட்சம்- அதி முக்கிய ஸ்ரார்த்த தினங்கள்

மேற்கண்ட மஹாளய பட்சத்தில் சில மிக முக்கிய ஸ்ரார்த்த தினங்கள் உள்ளன. இந்த தினங்களில் கண்டிப்பாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அவர்களின் பரிபூர்ண ஆசி கிடைப்பதோடு மட்டுமல்லாமல், நாம்  சேர்த்து வைத்துள்ள அனைத்து கர்ம வினைகளும் அடியோடு அழியும்.

28.9.18 மஹா பரணி எனப்படும்  பஞ்சமி ஸ்ரார்த்தம் : இந்நாளில் செய்யப்படும் ஸ்ரார்த்தம், கயாவில் சென்று செய்யப்படும் ஸ்ரார்தத்திற்கு இணையானது. திருமணம் ஆகாமல் மரணித்துள்ள ஆத்மாக்களுக்கு இந்நாளில் தர்ப்பணம், பிண்டம் கொடுக்க அவர்களின் ஆத்மா திருப்தி பெற்று நம்மை மனதார வாழ்த்தும்.

03.10.18 நவமி ஸ்ரார்த்தம் : இந்நாளில் சுமங்கலியாக இறந்துள்ள தாய், மனைவி போன்றோருக்கு தர்ப்பணம்-பிண்டம் கொடுத்து, சுமங்கலி பெண்களுக்கு சேலை,ரவிக்கை துணி, மஞ்சள்,குங்குமம்,வளையல் வைத்து தாம்பூலத்தேங்காயுடன் முடிந்த தட்சிணை சேர்த்து தானம் செய்ய, மேற்கண்டோரின் ஆத்மாக்களின் பரிபூர்ண ஆசியை பெறலாம்.

06.10 .18 மக ஸ்ரார்த்தம் எனப்படும் திரயோதசி ஸ்ரார்த்தம் : மறைந்த இளம் குழந்தைகளுக்கு இந்நாளில் ஸ்ரார்த்தம் செய்ய, அனைத்து நலன்களும் சேரும். இவ்விஷயத்தில் ஒன்றை கவனிக்க வேண்டும்: இங்கே கூறி வரும் அனைத்து அதி முக்கிய நாட்களிலும், குறிப்பிட்டுள்ள நபர்களுக்கு தான் என்றில்லை. நம் முன்னோர்கள் எவராயினும் இத்தினங்களில் தர்ப்பணம் செய்து வரலாம். நாம் ஆசையாக வளர்த்த நாய், பூனை மற்றும் பசுக்களுக்கு கூட தர்ப்பணம் இந்நாட்களில் கொடுக்க அவர்களின் ஆத்மா நம்மை மனதார வாழ்த்தி, வாழ்வாங்கு வாழ வைக்கும்.

07.10.18 சதுர்தசி ஸ்ரார்த்தம் : இந்நாளில் அகால  மரணம் அடைந்த ஜீவன்களுக்கு, அதாவது விபத்து, கொலை, அல்லது தற்கொலை போன்று, மரணித்த ஜீவன்களுக்கு ஸ்ரார்த்த பிண்டம் கொடுக்க, மேலோகம் செல்ல முடியாது தவித்து கொண்டிருக்கும் அந்த ஆத்மாக்களை நிரந்தரமாக மேலுளுகம் செல்ல வைத்த புண்ய  பலன் உங்களின் பல தலைமுறைகளை காத்து காபந்து செய்யும்.

08.10.18 மஹாளய அமாவாஸ்யை - பகல் பன்னிரெண்டிலிருந்து ஒரு மணிக்குள் செய்யவும்.

இதில் அனைத்து நாட்களிலும் அன்னதானம் செய்து, தர்ப்பணம் செய்வோர் மிகவும் பாக்கியவான்கள். இதன் புண்ய பலன் அளவிடமுடியாதது ஆகும். இதை உங்கள் அனுபவத்தில் காணலாம். இந்நாட்களில், மாமிசம்,மது, வெங்காயம்,பூண்டு,உருளை, போன்றவற்றையும் தவிர்ப்பது நலமளிக்கும்.

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

குரு பெயர்ச்சி 2018 துலாம் விருச்சிகம் தனுசுதுலாம் : பண ரீதியான யோகமான காலகட்டம். வாக்கினால் வளங்கள் சேரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பல இடங்களில் இருந்து பண புழக்கம் மற்றும் வாய்ப்புகள் வரப்போவதால், குழப்பத்தில் சரியான  வாய்ப்பை தவற விட வாய்ப்புள்ளது. இப்போதிலிருந்தே மனத்தெளிவை உண்டு செய்து, தங்களுக்கு எது தேவை எது தேவையில்லை என்பதை அறிந்து கொண்டு அதன் படி நடக்கவும். வருகின்றது ஒரு பொற்காலம்-அதை வீணாக்காது  உபயோகித்து கொள்ளவும்.

விருச்சிகம் : இனம் தெரியாத பயம், வீட்டிற்குள் நுழைந்தாலே எரிச்சல், குடும்பத்தில் அமைதி குறைவு போன்ற அனைத்தும் நீங்கி குதூகலம் நிறையப்போகும் அற்புதகாலம். வீடு மனைகள் வாங்குவது புதிதாக குடி போவது போன்றவை நிகழும். பெற்றோரால் சொத்து சேர்க்கை அவர்களின் அன்னியோன்னியம், அன்பு ஆகியவை அதிகரிக்கும் காலகட்டம்.

தனுசு : ஆன்மிகம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த அனுபவங்களும் ஆர்வங்களும் மேலோங்கும். அடுத்தவருக்கு உதவும் குணங்களும், தான் என்கின்ற அகங்காரம் குறைந்தும் காணப்படும். ஆன்மீகத்தில் தக்க குருவும் அவர்தம் ஆசீர்வாதத்தால் ஆன்மீகத்தில் மேல் நிலைக்கு வித்திடும் காலம் இது. மற்றோருக்கு தனக்கு  தெரிந்ததை உபதேசிக்கும் நிலையும் ஏற்படும்.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.youtube.com/amanushyam

Sunday, 23 September 2018

மஹாளய பட்சம் 25.9.18குறிப்பு : 2013 & 2017 ல் நாம் இட்ட பதிவுகளில் இருந்து சில முக்கிய பகுதிகள்

இந்த ஆண்டு, செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 9 வரை மகாளய பட்சம் நடக்கிறது. இது ஓர் அரிய மகத்தான புண்ணிய காலமாகும். இதன் மகத்துவத்தையும் தெய்வீக பெருமையும் மிகப்பழைமையான நூல்கள் அற்புதமாக விளக்கியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சூரிய பகவான் அவரது சொந்த ராசியான சிம்மத்தில் சஞ்சரிக்கும் போது தேய்பிறையில் ஆரம்பமாகும் மகாளய பட்சம் ( மகாளய காலம் ) ஆரம்பமான தினத்திலிருந்து பதினைந்து நாட்கள் வரை நீடித்து அமாவாசை அன்று முடிவடைகிறது.தெய்வத்திற்கு சமமான  நமது முன்னோர்கள் நம்மீது அவர்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் அன்பு காரணமாக நம் வீடு தேடிவருவதோடு மட்டுமல்லாமல் நம்முடன் சுமார் 15 நாட்கள் தங்கியிருக்கும் பரமபவித்திரமான காலமும் நேரமும் ஆகும் இது.
இது பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகள் இட்டுள்ளோம். நம் வாழ்வில் ஏற்படும் பல இனம் தெரியாத இன்னல்களுக்கு நம் முன்னோர்களை முறையாக பூஜிக்காமலும், அவர்களுக்கு உரிய உணவை, அவர்களின் தாகத்தை தீர்க்கும் நீரை அவர்களுக்கு கொடுக்காமலும், அறியாமையினால் உதாசீனப்படுத்தியுள்ளதுமே காரணமாகும். நம் முன்னோர்களை வழிபடாமல், பூஜிக்காமல் இருந்து வேறு எவ்வித கடவுள்களை வழிபடினும், ஹோமங்கள் மற்றும் பரிகாரங்கள் அல்லது அன்னதானங்கள் செய்யினும் அவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீரேயாகும். இது தெரியாமல் அல்லல்பட்டு கொண்டுள்ளோர்க்கு, மேற்கண்ட புண்ய காலம், அவர்களின் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை உண்டு பண்ண கூடிய ஒன்று என்றால் மிகையாகாது. இந்த 15  தினங்களில், நம் முன்னோர்கள் நம் வீடு தேடி நம்மை காண வருவர் என்கிறது, சாஸ்திரங்கள். கர்ணன் தன்னிடமுள்ள அனைத்தையும் கொடுத்து மிக பெரிய புண்ணியத்தை செய்து விட்டு மடிந்து, சொர்க்க லோகம் செல்கையில், அங்கே அனைத்து வித செல்வங்களும், சுக போகங்களும் அவருக்காக காத்திருந்தன. ஆனால், உணவு மட்டும் இல்லை. இதை கண்டு வருந்திய கர்ணன், எமதர்மரிடம் விசாரிக்கையில், நீர் அனைத்து வித தானமும் செய்தீர். ஆனால் முன்னோர்களுக்கு உரிய காரியங்களை செய்யாமல் விட்டதே இதற்க்கு காரணம் என்றார். பின்பு கர்ணன் மீண்டும் பூலோகம் அனுப்பப்பட்டு, பதினான்கு நாட்கள் முதியோர் மற்றும் வறியோர்க்கு அன்னதானம் செய்து நீர் வழங்கி மீண்டும் சொர்க்க லோகம் சென்று உணவருந்தினார். இந்த தினங்களே மேற்கண்ட புண்ய தினங்களாக மாறின. ஆகவே, இந்த தினங்களில் நம் முன்னோர்கள் வடிவாக கருதப்படுகின்ற காக்கைகளுக்கு, தினசரி புதிதாக வடித்த சாதத்துடன் சிறிது எள் கலந்து (வைக்கும் இடத்தை நீரால் கழுவி சுத்தம் செய்து ) வைத்து, சிறிது நீரும் வைத்து வர, அவர்களின் மனம் குளிரும். முடிந்தோர் அனைத்து தினங்களிலும் தர்ப்பணம் செய்யலாம். அல்லது முதல் தினம் மற்றும் அமாவாசை தினம் செய்யலாம். அதுவும், முடியவில்லை எனில், அமாவாசை அன்று, கண்டிப்பாக திதி தர்ப்பணம் செய்தே ஆக வேண்டும். உங்களின் கஷ்டங்களுக்கு விடிவு காலமாக வந்துள்ள இந்த புண்ய தினங்களை பயன்படுத்தி, முன்னோர்களை வணங்கி வழிபட்டு மேன்மையுறுங்கள். இந்த அனைத்து நாட்களிலும் பசுவிற்கு உணவளிப்பது, அமாவாசை தினம் அன்று வறியோர் மற்றும் முதியோருக்கு உணவளித்து உடைகள் வழங்குவது மிக சிறப்பான ஒன்று என்பதை நினைவில் கொள்வீர். இந்த அமாவாசை தினத்தில் செய்ய வேண்டிய, வேறு சில விஷயங்களை விரைவில் பதிகிறேன்.

மகாளய பட்சத்தின் பித்ரு பூஜை அளிக்கும் நன்மைகளை பற்றி ‘நைமி சாரண்யம்’ என்ற பரம பவித்திரமான பாட்டில் மகரிஷிகள் கூடி விவாதித்து அதன் பெறுமையை தங்கள் திருவாக்கினால் கூறியுள்ளனர். நமது முன்னோர்களான பித்ருக்களை நாம் தேடிச் செல்ல வேண்டியதில்லை. அவர்களே நம்மை தேடி வரும் இத்தருணத்தை இழக்கலாகாது. ஆதலால் இந்த 15 நாட்களும் உடலாலும் உள்ளத்தாலும் தூய்மையாக இருந்து பித்ருக்களை பூஜித்து வாருங்கள். அதன் பலன் கைமேல்!

முக்கிய குறிப்பு : இந்த தினங்கள் ஏதோ ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டும் என நினைத்து விட வேண்டாம். சனாதன தர்மத்தின் வழிநடக்கும் அனைவரும் (ஹிந்துக்கள்) இதை கடைபிடிக்க வேண்டும். இந்நாட்களில், மது,மாது,மாமிசம் தவிர்த்தல் முக்கியம். மேலோகம் செல்ல முடியாது தவிக்கும் முன்னோர்களுக்கும் இந்த செய்கை முக்தியை கொடுக்கும். உங்களின் கர்ம வினைகளை அடியோடு அகற்றும்.


ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857