Thursday, 27 October 2016

வீரியத்தில் உயர்ந்த கருப்பு டார்மலின் கற்கள்நம் வாழ்வில் அனைத்தையும் விட மிக அவசியமான ஒன்று, "பாதுகாப்பு" !!

எவற்றிலிருந்து ??

அனைத்திலிருந்தும்..

நாம் தவறான நபர்களிடம் சிக்காமல் இருப்பது, தவறான முடிவுகள் எடுக்காமல் இருப்பது, தவறான பாதையில் செல்லாமல் இருப்பது, வேண்டாத துஷ்ட சக்திகள், பொறாமை கண்கள் மற்றும் துர் சக்திகளிடம் அண்டாமல் இருப்பது என எத்தனையோ உண்டு..இப்படி அடிப்படை பாதுகாப்பு நம்மிடம் இருந்தால் மட்டுமே மற்ற அனைத்தையும் சுபமாக்க முடியும் அல்லவா ?? அப்படிப்பட்ட பாதுகாப்பை தரும் கல் என விஞ்ஞான பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்ட கல் தான் மேற்கண்ட ஒன்று. இதை அணிய வேண்டாம், உடன் வைத்திருந்தால் போதும். ஒவ்வொருவர் வீட்டிலும் அவர்களின் அறையில், கண்டிப்பாக இருக்க வேண்டிய இந்த கல் விலை மிக மலிவான ஒன்று. 'பெய்ரோ எலக்ட்ரிக்' எனக்கூடிய மின் சக்தியை தன்னுள் அடக்கிய கற்கள் இவை. மேலும் இன்ப்ரா ரெட் என கூறக்கூடிய அகச்சிவப்பு கதிர்களை வெளியிட கூடிய தன்மை பெற்றவை. மேலும் இவை உடன் வைத்திருப்பின் மொபைல், தொலைக்காட்சி பெட்டி, மைக்ரோ வேவ், கம்ப்யூட்டர்கள் மூலம் வெளிவரும் தீய மின் காந்த அலைகளை அறவே நெருங்க விடாமல் செய்யும்
. மிக முக்கியமாக செய்வினை அல்லது எதிர்மறை சக்திகள் போன்ற விஷயங்களை நம்மில் முயல்வோரை, அவர்களையே திருப்பி தாக்கும் தன்மை கொண்டவை என்பது சிறப்பு.  தலையணை அடியில் வைத்து உறங்குவதால் நேர் மறை சக்திகளை நம்முள் இறக்கும் தன்மையும் இதற்கு உண்டு. வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் வைத்திருக்க வேண்டிய அற்புதமான கற்கள் இவை !! 

Wednesday, 26 October 2016

மூலிகை தீப எண்ணெய்கள்- தேவைக்கேற்றவாறு தினசரி ஏற்றி வரவும்-மண் அகலில் தனி தீபமாகவருடம் முழுதும் மகாலக்ஷ்மியின் அருள் கிட்ட தீபஒளி திருநாள் பரிகாரங்கள்


(மறுபதிவு)
இந்நாளில் குளிக்கும் நீரில் சிறிது பால் விட்டு குளித்து வர அதிர்ஷ்டம் சேரும்.
கொட்டை பாக்கினை சிகப்பு நூலால் சுற்றி லக்ஷ்மி தேவியின் கழுத்தில் மாலையாக அணிவிக்கவும். மறு நாளிற்கு மறு நாள் அதை கழற்றி வீட்டின் பண அறையில் வைத்து இருக்கவும்-மறு வருடம் தீபாவளி நாள் அதை ஓடும் நீரில் விட்டு புதிதாக அணிவிக்கவும்.
முதல் நாளே புதிய தென்னந்துடப்பம் வாங்கி வைத்து வீட்டை தீபாவளி நாள் முதல் அந்த துடைப்பத்தில் சுத்தம் செய்து வரவும்- இந்த நாளில் கோவில்களுக்கு பெருக்க தென்னந்துடப்பங்கள் தானமாய் தர லக்ஷ்மி தேவி மனம் குளிர்ந்து அருள் புரிவார்.
வீட்டில் பூஜிக்கும் பொழுது 11 கோமதி சக்கரம், 11 மஞ்சள் நிற சோழிகள், குங்குமப்பூ,மஞ்சள் கட்டை, சந்தன கட்டை மற்றும் வெள்ளி நாணயங்கள் வைத்து இன்னாளில் பூஜிக்க பொருள் வரவு மேம்படும்.
இந்நாளில் வீட்டின் வாயிலில் 7 கோமதி சக்கரங்களை சிறிய சிகப்பு பட்டு துணியில் கட்டி தொங்கவிட, எதிர்மறை சக்திகள்,கோளாறுகள் விலகி நன்மைகள் பெருகும்.
மீன்களுக்கு இந்நாளில் நாம் ஏற்கனவே கூறியுள்ளபடி, கோதுமை உருண்டைகள் போட்டு வரலாம்.
இந்நாளில்மாடுகள் மற்றும் குரங்குகளுக்கு அச்சு வெல்லம் கொடுத்து வருவது அளவற்ற நற்பயனை தரும்.
ஏழு முக ருத்திராட்சம் இந்நாளில் அணிய பணவரத்து இரட்டிப்பாகும்.
சிறிய சிகப்பு பட்டு நூலில் ஆல மர வேர் சிறிது வைத்து வீட்டு வாயிலில் இந்நாளில் கட்ட வீட்டினுள் மகாலட்சுமி கடாட்சம் ஏற்படும்.
மகாலட்சுமி தாயாரின் படம் அல்லது விக்ரகத்தின் முன் 6 மண் அகலில் சுத்தமான நெய் சேர்த்து அதில் ஒவ்வொன்றிலும் ஒரு கிராம்பு மற்றும் ஒரு ஏலக்காய் சேர்த்து விளக்கேற்ற அடுத்த ஒரு வருடத்திற்கு நிரந்தர செல்வ செழிப்பு உண்டாகும்.
இந்நாளில் பெண் குழந்தைகளுக்கு தங்களால் முடிந்த புத்தாடை எடுத்து தானம் செய்வது தேவியின் மனம் குளிர வழி செய்யும்.
பசுக்களுக்கு இந்நாளில் முடிந்த அளவு மஞ்சள் லட்டு கொடுத்து வர வாழ்கை இனிப்பாகும்.
அரச மரத்திற்கு பால் கலந்த நீரை இந்நாளில் ஊற்றுவது அளவற்ற நற்பயனை பெற்று தரும்.
முக்கியமாக இந்நாளிலும் மறு நாள் அமாவாசை நாளிலும் கண்டிப்பாக அசைவம் தவிர்ப்பது அடுத்து வரும் ஒரு வருடத்திற்கு சிக்கல்கள் இல்லா வாழ்வு தரும்.
மறு நாள் இரவு (அமாவாசை) அரச மரத்தின் அடியில் ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைத்து திரும்பி பார்க்காமல் வீடு சேர்ந்து கால்களை அலம்பி வீட்டினுள் செல்லவும்.
மறு நாள் அமாவாசை அன்று மாலை 5.40 முதல் 7.30 வரை மகாலட்சுமி தேவியை பூஜிப்பது ஒரு வருடம் பூஜித்த பலனை பெற்று தரும்.

Tuesday, 25 October 2016

தூக்கம் வராமல் தவிப்போர் மற்றும் கெட்ட கனவுகளால் அவதிப்படுவோர்


தலையணை உரையின் உள்ளே சிறிது கொத்தமல்லி விதைகளை போட்டு வைத்து உறங்க மேற்கண்ட தொல்லைகள் விலகும். 

தங்கள் இடத்தை தன ஆகர்ஷணம் மிக்கதாக மாற்ற வேண்டுமா ??ஒரு கண்ணாடி பாட்டிலில்  சிறிது முனை உடையாத பச்சரிசியை இடவும் பின் ஒரு ருபாய் நாணயம் ஒன்றை இடவும் மேலும் சிறிது அரிசியை இட்டு இரண்டு ருபாய் நாணயம் ஒன்றை இடவும் பின் சிறிது அரிசி, அதன் மேல் ஒரு ஐந்து ருபாய் நாணயம், மேலும் சிறிது அரிசி அதன் மேல் 10 ருபாய் நாணயம் பின் மேலும் சிறிது அரிசி பாட்டில்  நிறையும் வரை இட்டு மூடி, பின் மூடியில் சிறிதாக ஆறு துளையிடவும். இதை  தங்கள் வீட்டு ஷோ கேஸ் அல்லது பூஜை அறை, அலுவலகம் ஆயின், பணப்பெட்டி அருகே வைத்து விடவும். எங்கே வைப்பினும் தினசரி தங்கள் கண் பார்வை படும் இடமாக இருக்க வேண்டும். பிரபஞ்ச சக்தி மூலம்  தன ஆகர்ஷணம் செய்யும் சக்தி இதற்கு உண்டு. மாதம் ஒரு முறை அரிசியை பறவைகளுக்கு இட்டு பின் அதே நாணயங்களை வைத்து மாற்றவும். மிக விரைவாக பலன் தரக்கூடிய சூட்சும பரிகாரம் இது. 

குளியல் பரிகாரம்நம் கிரந்தங்களில் பரிகார வகைகளை வரையறுக்கும் விதத்தில் ஒன்றாக குளியல் பரிகாரங்களும் கூறப்பட்டுள்ளன. பழங்காலத்தில் குறிப்பிட்ட சில மூலிகைகளை, இலைகளை போட்டு குளித்து, தேவையான கிரகங்களின் சக்தியை பெற்று துன்பங்களை போக்கி வந்தனர். இவை இன்றும் வட இந்தியாவின் சில மாநிலத்தோர் செய்து வருவதுண்டு. மேலை நாடுகளில் இவை வெகு பிரசித்தம். இது போன்ற பரிகாரங்களை நாமும் ஏற்கனவே கொடுத்து பலர் உபயோகித்து பலன் கண்டும் வந்துள்ளனர்.

பணத்தை ஈர்க்கும் சக்தி பல மூலிகைகளுக்கு உண்டு. அவற்றின் எண்ணெய்களை உபயோகித்து குளித்து வர, பண ஈர்ப்பு சக்தி நம்மையும் வந்தடையும்.

வெது வெதுப்பான அல்லது சூடான குளிக்கும் நீரில் 6 ஒரு ருபாய் நாணயங்களை இட்டு, பின் இஞ்சி, வெட்டிவேர் அல்லது துளசி எண்ணையில் ஏதேனும் ஒன்றை 4 சொட்டுகள்  விட்டு, 3 நிமிடங்கள் அந்த நீரை உற்று நோக்கவும். பின் தங்களுக்கு தேவையான நியாயமான தொகையை மனதில் நினைத்து குளிக்கவும். முடிந்ததும் அந்த நாணயங்களை எடுத்து தங்கள் பர்சில் தனியாக வைத்து வரவும். அதையே தினசரி உபயோகிக்கலாம். பல் வேறு சூட்சுமங்களை கொண்ட பரிகாரம் இது.

குறிப்பு : அந்த எண்ணெய்கள் அனைத்து ஆர்கானிக் அங்காடிகளில் கிடைக்கின்றன. 

Sunday, 23 October 2016

நிரந்தர வேலை கிடைக்க மற்றும் வேலைக்கு ஆட்கள் கிடைக்கசிலர் நிரந்தர வேலை இல்லாமல் தவிப்பர், வேறு சிலரோ வேலைக்கு ஆட்கள் நிரந்தரமாக அமையாமல் தொழில் தடுமாற்றத்தில் இருப்பர். இத்தகைய சூழலுக்கு, காலை சூரியன் உதித்த ஒரு மணி நேரத்திற்குள், ஒரு செம்பு டம்பளரில் சுத்தமான நீர் எடுத்து அதில் சிறிது வெல்லம் கரைத்து, சூரியனை பார்த்தவாறு 'ஓம் சூர்யாய நமஹ: " மந்திரம் கூறியவாறே 10 முறை நீரை சிறிது சிறிதாக சூரியனுக்கு அர்ப்பணம் செய்து, கண் திறந்து வழிபட்டு வர நினைத்த வேலை கிடைக்கும். வேலைக்கும் ஆட்களும் நிரந்தரமாக கிடைப்பர். 

திடீர் வீழ்ச்சி வராமல் தடுக்கசிலருக்கு அடிக்கடி எதிர்பாராமல் வீழ்ச்சி இருந்து கொண்டே இருக்கும். மேலும், அதை பற்றிய பயமும் இருந்து வரும். அத்தகையோர், தொடர்ந்து 4 சனிக்கிழமைகள் மதியம் 1:15-2 மணிக்குள் நான்கு நபர்களுக்கு  4 உளுந்து வடையுடன் கூடிய தேங்காய் சட்னியை (ஒவ்வொருவருக்கும் 4)  வைத்து தானம் செய்ய, மேற்கண்ட கெடு பலன் மறையும். மேலும், போட்டி பந்தயங்களில் வெற்றி பெற நினைப்போரும் இதை செய்து வரலாம். 

லக்ஷ்மி கட்டு விலக, தரித்திர நிலை நீங்கதொடர்ந்து 8 சனிக்கிழமைகள் வன்னி மரத்தை வழிபட்டு, அதனடியில் மண் அகலில் கருந்திரியிட்டு நல்லெண்ணெய் தீபமேற்றி, மரத்தை வழிபட்டு வர மேற்கண்ட நிலை நீங்கி, எதிலும் வெற்றி பெறலாம்.

குறிப்பு : வன்னி மரத்தை தங்கள் ஊரில் உள்ள பழங்கால சிவ ஆலயங்களில் காணலாம். பல கோவில்களில் இவை தல விருட்சமாக உள்ளன. எங்கு தேடியும் கிடைக்காதவர்கள், நன்கு வளர்ந்திருக்கும் வன்னி செடியை வாங்கி வீட்டில் வைத்தும் வழிபடலாம். முழு மரத்தை வழிபட்டு வருவதே முழு பலன் அளிக்கும்.