Sunday, 31 December 2017

'சனீஸ்வர ரகசியங்கள்'


நமசிவய
இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தில் சென்னை தி.நகர் சங்கரமடத்தில் மாலை நான்கு மணிக்கு நடக்கவிருக்கும் குபேர லட்சுமி பூஜை மற்றும் ஏகதச ருத்ர பாராயண வேளையில் 'சனீஸ்வர ரகசியங்கள்' புத்தகம் வெளிவரும். அன்பர்களுக்கு ஒரு இனிய எச்சரிக்கை 01.1.18 அன்று பகல் 11:45 AM முதல் இரவு 10:00 PM வரை முக்கிய முடிவுகள், கடன் வாங்குவது அல்லது கொடுப்பது, புதிய முயற்சிகள் தவிர்க்கவும். தெய்வீக காரியங்களில் ஈடுபடலாம். விபரீத கரண காலம்.

Saturday, 30 December 2017

தனம் தரும் "தாந்த்ரீக ரகசியங்கள்"

பணம் என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்று. நாம் கொடுத்து
வரும் பரிகாரங்களில் பணம் சேர கொடுத்து வரும் பரிகாரங்கள், பலரால் சோதிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றவை. பலரின் தொடர்ந்த வேண்டுகோளுக்கிணங்க , உடனடி பலிதம் தரும், செல்வம் சேர்க்கும் தாந்த்ரீக ரகசியங்கள் புத்தகம், வரும் தை பொங்கலுக்குள் உங்கள் கைகளில் தவழ இருக்கின்றது. இந்த புத்தகமும் 'வரையறுக்கப்பட்ட பதிப்பாக' வெளிவர இருப்பதால், முன் பதிவு அவசியம். நன்கொடை ரூ.200/-
'சனீஸ்வர ரகசியங்கள்' புத்தகம் வரும் ஜனவரி ஒன்றாம் நாள், நாம் நடத்தவிருக்கும் 'லட்சுமி குபேர பூஜையின் சமயம் கிடைக்கும். பதிவு செய்தவர்கள் தகுந்த ரசீதை காண்பித்து பெற்று கொள்ளலாம். பதிவு செய்யாமல் அன்றைய தினம் வாங்க நினைப்போர், புத்தகங்கள் இருப்பின் பெற்று கொள்ளலாம். வரும் ஜனவரி மூன்றாம் நாள் மயிலாப்பூர் கிரி டிரேடிங்கில் மாலை வேளையில் திரு.பெருங்குளம் ராமகிருஷ்ணா ஜோசியர் மூலம் அதிகாரபூர்வ வெளியீடு நடக்க இருக்கிறது. சாக்த உபாசகர் திரு.பரணி முதல் புத்தகத்தை பெற்று கொண்டு சிறப்பிப்பர். அழைத்தவுடன் மறு சொல் இல்லாமல், ஏற்று கொண்டு சிறப்பிக்க இருக்கும் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.

தாந்த்ரீக ரகசியங்கள் புத்தகம் தேவைப்படுவோர் கீழ்கண்ட எண்களில் அழைக்கவும்.

+918754402857 / +919840130156

Friday, 29 December 2017

ஓம் சாமுண்டாயை விச்சே- எதையும் தருவாள் சண்டி !!சண்டியின் ஹோமமமானது மிகுந்த பொருட் செலவில் செய்யப்படும் ஒன்று என குறிப்பிட்டிருந்தோம். அது மட்டுமல்ல, மற்ற ஹோமங்களுக்கு வறட்டி, சமித்து போன்றவை உபயோகித்து அக்னியை எழ செய்வர் எனில் சண்டிக்கு, அவையெல்லாம் பத்தாது.  ஏகமாய் விறகுகளை கொண்டு அக்னியை பல அடிகள் வீரியமாய் எழ செய்தால் தான் அவ்விடம் சண்டி உதிப்பாள். அசுரர்களை, நம் எதிரிகளை அடியோடு அழிப்பதில் இவருக்கு இணை எவருமில்லை. இவ்விடம், நாம் ஒன்று சிந்திக்க வேண்டும். எதிரிகள் என்பது வெளியில் இருப்பவை மட்டுமல்ல. நம்மில் இருக்கும் தீய குணம், பொறாமை, பேராசை, உடல் நோவுகள், மன வியாதிகள் போன்றவையும் எதிரிகள் தான். ஆகையால் இவர் நம் உள்ளும் புறமும் இருக்கும் எதிரிகளை, எதிர்ப்புகளை அழிக்க வல்லவர். இதை ஒரு ஹோமம் என சொல்வதை காட்டிலும் வேள்வி என சொல்வதே பொருத்தமாக இருக்கும். சகல லோக வசியம், ராஜ வசியம் (இதனால் தான் இதை பல்வேறு அரசியல்வாதிகள் சென்று பயனடைகின்றனர்) ஆண்,பெண் வசியம், சத்ரு வசியம் என பல் வேறு தேவைகளுக்கு பல் வேறு சூட்சும மூலிகைகளை கொண்டு இந்த வேள்வியை செய்யலாம். ஏவல், பில்லி, செய்வினை, மாந்தி,பிரதேம் போன்ற அனைத்து சாபங்களையும் நீக்கவல்லவர் இந்த சண்டி. இலுப்பை பூவை வேள்வியில் இட்டால் சர்வ வசியமும், மஞ்சளை இட்டால் வசீகரணமும், நெய்யை வேள்வியில் இட தனப்ராப்தியும், தேங்காயை வேள்வியில் இட்டு வேண்ட பதவி உயர்வும் ஏற்படும். பூசணிக்காயை இட எதிரிக்கு சர்வ நாசம் ஏற்படும். மேலும், வரும் பதிவுகளில் சண்டியின் வீரியத்தை பற்றி அலசுவோம்.

முக்கிய குறிப்பு : வரும் ஜனவரி ஒன்றாம் நாள் நடக்க இருக்கும் குபேர லட்சுமி பூஜைக்கு மலை வாழைப்பழங்கள் சேர்த்தால் தனப்ராப்தி உண்டாகும். கலந்து கொள்பவர்கள் விருப்பமிருப்பின் கொண்டு வரலாம்.

ஹரி ஓம் தத் சத் 

Thursday, 28 December 2017

சண்டி ஹோமம் என்றால் என்ன? எதற்காக நடத்தப்படுகிறது??சாக்த வழிபாட்டில் கடுமையான உக்கிரத்துடன் இருக்கும் பராசக்திக்காக நடத்தப்படுவதே சண்டி ஹோமம். அப்படி உக்கிரத்துடன் இருக்கும் பராசக்தியே சிவன், விஷ்ணு, பிரம்மா  என மும் மூர்த்திகளை படைத்தார் என்கிறது புராணம். தேவியின் மீது நம் அன்பை காட்ட, தேவியின் அருள் பெற்று நம் தேவைகளை நிறைவேற்றி கொள்ள என இரு விதமாக இந்த ஹோமம் செய்யப்படலாம். சாக்த வழிபாட்டில் அனைத்து ஹோமங்களூக்கும் தலையாய ஹோமம் இது என கூறலாம். கேட்டதை உடனே அருளும் சக்தி படைத்தது இந்த ஹோமம். மிக அதீத பொருட்செலவு மற்றும் மிக உக்ரமானது என்பதால் இந்த ஹோமம் அடிக்கடி நிகழ்த்தப்படுவதில்லை. ஒவ்வொரு அத்தியாய பாராயணத்தின்  பொழுதும் தேவிக்கு அக்னியில் புடவை சாற்றப்படும். மொத்தம் பதினான்கு புடவைகள் சாற்றப்படும். உக்ரகம் அதிகம் என்பதால் வீட்டில் செய்யப்படுவதில்லை. கோவில்கள் அல்லது மடங்கள், மண்டபங்கள் போன்றவற்றில் மட்டுமே செய்விக்கப்படுகிறது. எவ்வளவு பரிகாரங்கள் செய்தும் பலன் இல்லாத நிலை,கிரகங்களினால் பிரச்சனைகள், பயம், மரண பயம், எதிரிகள் தொல்லை அழிய, எவ்வளவு பிரயத்தனம் செய்தும் முடிக்க முடியாத காரியங்கள் வெற்றி பெற, செல்வம் சேர இந்த ஹோமத்தை செய்தோ அல்லது கலந்து கொண்டோ தேவியின் அருளை பெறலாம்.பாராயண பலச்ருதியிலேயே இந்த பாராயணத்தை செய்பவருக்கு மட்டுமின்றி இதை உடனிருந்து கேட்பவருக்கும்  அதீத பலன்கள் கிட்டும் என கூறப்பட்டுள்ளது.   மஹாலக்ஷ்மி, சரஸ்வதி,மஹாகாளி என மூவருக்குமே செய்யப்படும் இந்த ஹோமத்தில் 700 ஸ்லோகங்கள் வரை கூறப்படும். வெளியில் கூற முடியாத காரியங்கள் வெற்றி பெற வேண்டுமானால் சண்டியை அணுகுவதை தவிர வேறு வழி இல்லை. அமாவாசை, அஷ்டமி, நவமி, சதுர்தசி போன்ற திதிகளில் செய்ய கை மேல் பலன் கிட்டும்.

ஹரி ஓம் தத் சத் 

ஷீர்டி ஸ்ரீ சாய் சேவா டிரஸ்டின் சார்பில் ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டர் நடத்தும் பூஜை விவரங்கள் :

இடம் :காஞ்சி காமகோடி சங்கர மடம், தி.நகர்,சென்னை
நாள் : 01.01.2018
நேரம் : மாலை 4 மணி 7 மணி வரைதிருவாதிரையுடன் பௌர்ணமியும் இணைந்து புத்தாண்டு தினத்தில் வருவதால் சக்தி வாய்ந்த ருத்ர பாராயணமும், செல்வம் தரும் குபேர லட்சுமி பூஜையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் 'சனீஸ்வர ரட்சை' சனி பெயர்ச்சி அன்று பெற்று கொள்ளாதவர்கள், பெற்று கொள்ளலாம். மூலிகை குபேரரும் வழங்கப்படும். மேலும் அதியற்புத எளிய பரிகாரங்கள் அடங்கிய 'சனீஸ்வர ரகசியங்கள்' புத்தகமும் கிடைக்கும். சங்கல்பம் செய்ய விருப்பம் உள்ளோர் தங்களின் குடும்பத்தினர் நட்சத்திரம் மற்றும் கோத்திரம் கூறி சங்கல்பம் செய்து கொள்ளவும்.புஷ்பம், தேங்காய், சுத்தமான நெய், சுத்தமான தேன், உதிரி புஷ்பம்,மலை வாழைப்பழம் ,பலவித பழங்கள் கொண்டு வரலாம். சங்கல்பம் செய்ய ஒரு நபருக்கு : ரூ.20 /- சனீஸ்வர ரட்சை ஒரு நபருக்கு : ரூ.150/- மூலிகை குபேரர் : ரூ.600/- சனீஸ்வர ரகசியங்கள் புத்தகம் :ரூ.200/- பலன்கள் : கடன் தொல்லை நீங்கும், வியாதிகள் நீங்கும், தம்பதியர் ஒற்றுமை, செல்வம் சேரும், அணைத்து வித நன்மைகளும் சேரும். மேல் விவரங்கள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள : +919840130156 / +918754402857

Sunday, 24 December 2017

சனீஸ்வர ரகசியங்கள் - வெளியீடு 03.1.18வரும் ஜனவரி மூன்றாம் நாள் (03.1.2018) முதல் நமது ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டரில் (சென்னையில் மட்டும்) மேற்கண்ட, அதியற்புத சனீஸ்வர பரிஹார சூட்சுமங்களை கொண்ட புத்தகம் கிடைக்கும். பதிவு செய்தவர்கள் நேரில் வந்து மாலை வேளையில் நான்கிலிருந்து ஆறு மணிக்குள் பெற்று கொள்ளலாம். பதிவு செய்துள்ள வெளியூர் அன்பர்களுக்கு மறுநாள் (04.1.2018) முதல் அனுப்பி வைக்கப்படும். ஒரு பிரபலம் வெளியிட மற்றொரு பிரபலம் வெளியீட்டை பெற்று கொண்டு சிறப்பிக்க உள்ளனர். விவரங்கள் விரைவில்..

முற்பதிவு செய்ய விருப்பமுள்ளோர் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம். நன்கொடை ரூ200/- .மட்டும்.

+918754402857 / +919840130156

Saturday, 23 December 2017

தன்னார்வலர்கள் (VOLUNTEERS) தேவை

ஷீர்டி ஸ்ரீ சாய் சேவா டிரஸ்டின் கீழ் இயங்கும் 'ருத்ர பரிஹார் ரக்க்ஷா
சென்டருக்கு நம்  முறைகளை பற்றிய தெளிவும், ஆன்மீக ஆர்வமும், தொண்டாற்றும் விருப்பமும் உள்ள தன்னார்வலர்கள் (VOLUNTEERS) தேவை உள்ளது. நாம் நடத்தும் நிகழ்ச்சிகள், ஹோமங்கள், பூஜைகள் போன்றவையில் சேவைகள் செய்ய. விருப்பமுள்ளோர் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு, உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு பதிவு செய்து கொள்ளவும். (வெளியூர் அன்பர்களும் தொடர்பு கொள்ளலாம்.)

+919840130156 / +918754402857 

Friday, 22 December 2017

சகல துன்பங்களையும் நீக்கும் அருமருந்து : சண்டி ஹோமம்


கிரக தோஷங்கள், கர்ம வினைகள், வீடு பேறு, குழந்தை பேறு, திருமணம் அமையாமை, எதிரிகள் தொல்லை, வறுமை, கடன் தொல்லை, உடல் நிலை கோளாறு,பிள்ளைகளின் காதல் பிரச்சனைகள், கணவன் மனைவி பிரச்னை,இனம் தெரியாத பயம்,மரண பயம், அதீத வட்டியினால் வறுமை போன்ற பல் வேறு பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு சண்டி ஹோமம் ஆகும்.

அந்த தெய்வீக அனுபவத்தை உணர்ந்ததுண்டா 
நீங்கள் ??

Wednesday, 20 December 2017

வரும் புத்தாண்டு 2018 முதல் குபேர சம்பத்து எளிதில் பெறநாள் : 01.01.18
நேரம் : மாலை நான்கு மணி முதல் ஏழு  வரை
இடம் : சங்கர மடம், தி.நகர், சென்னை
நிவேதன அன்னம் : ஏழேகால் மணி முதல்
மூலிகை குபேரர் விநியோகம் : ஏழரை மணி முதல்

குபேர சம்பத்தை எளிதில் பெற, குபேரரை எளிதில் ப்ரீதி  செய்ய ஒரு சுலப வழி உள்ளது.இதை இன்று மூலிகை குபேரரரை பத்திற்கும் அதிகமாக வேண்டி ஸ்ரீமதி. சுசிலா பாண்டுரங்கன் என்பவர் தொலைபேசியில் அழைத்திருந்தார்.  (அவரின் அனுமதி பெற்றே அவர் பெயர் வெளியிடப்படுகிறது) அவர் பகிர்ந்த தகவல் இது. இதை அவரின் மாமனாரின் தந்தை, மஹாலக்ஷ்மி உபாசகர், தெரிவித்ததாக கூறினார்.

குபேரர் யக்ஷர்களின் தலைவர், இருப்பினும் மிகுந்த சிவ பக்தர். இவரை பூஜிப்பவர்களுக்கு மட்டுமின்றி, வேறொருவர் பூஜிக்க வாங்கி பரிசளிப்பின், பெற்று கொண்டோர்  பூஜிக்க பூஜிக்க, வாங்கி கொடுத்தவருக்கும் சேர்த்து பலன் தருவார் என்பதே அது. ஆகையினால், எவர் ஒருவர் தூய்மையான பக்தியுடன் அவரை பூஜிக்கிறார்களோ, அவர்களுக்கு வாங்கி பரிசளிப்பதாக தெரிவித்தார். இதையே, மஹாலக்ஷ்மி தாயார் வடிவத்திற்கும் செய்யலாம் பலன் உண்டு.

குறிப்பு: மேற்கண்ட விஷயம் நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று என்றாலும். சிலர் இதை நாம் சந்தைப்படுத்துவதற்காக கூறுகிறோம் என எண்ணி விடக்கூடாது, என்பதால் தெரிவிக்காமல் இருந்தோம். அவரின் உரையாடலின் பொழுது, இது நல்ல விஷயம் தானே, தெரிவித்தால் அனைவருக்கும் பயன் இருக்குமே என வேண்டிக்கொண்டதால் இந்த பதிவு.பெருமாள், தாயார் கோவிலில் உள்ள பட்டர்களும்  (உபாசகர்கள்) இதை உறுதி செய்கின்றனர் . 

முக்கிய குறிப்பு: மேற்கண்ட புத்தாண்டு தினத்தில் மூலிகை குபேர விநியோகத்தின் சமயம், அனைவரும் அமைதி காத்து, வழிபட கூறப்படும் மகா மந்திரத்தையும் எழுதி வைத்து, அதன்படி பூஜித்து வர பலன்கள் பெருகும்.

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Tuesday, 19 December 2017

ருத்ராக்ஷ-வசிய ரத்ன பரிகாரங்கள்"அவரவருக்கு தனம் தரும் தெய்வங்கள்" என்கின்ற ரிப்போர்ட் நாம் குறைந்த கட்டண ஆலோசனையில் கொடுத்து வருவது பலரும் அறிந்ததே. அதில் ஒரு சில குறிப்பிட்ட நபர்களுக்கு, வேறு பரிகாரங்கள் அவசியம் என்கின்ற சூழ்நிலையில் நாம் பின் குறிப்பாக மேற்கண்ட "ருத்ராக்ஷ-வசிய ரத்ன பரிகாரங்கள்" ரிப்போர்ட் பெற்று கொள்ளும் படி கூறியிருந்தோம். அப்படி 'ருத்ராக்ஷ-வசிய ரத்ன பரிகாரங்கள்" ரிப்போர்ட் பெற்று கொண்ட ஒரு அன்பர், அதில் குறிப்பிட்டிருந்தது போல் அவருக்குரிய தன வசிய ரத்தினத்தை வாங்கி அணிந்திருக்கிறார். பின்பு, எம்மிடம், அவர் வெளியில் கொடுத்து வைத்திருக்கும் பல லட்ச ரூபாய்கள், வருவதில் தாமதம் என்றும்,குறிப்பிட்ட ரத்னம் எவ்வளவு நாளில் பலன் தரும் எனவும் கேட்டிருந்தார். மேற்கண்ட விஷயத்தை ஆராய்ந்தே அவருக்கு அப்படிப்பட்ட ரத்தினத்தை பரிந்துரை செய்திருந்தோம். பொதுவாக உண்மையான மற்றும் சூடு செய்யப்படாத ரத்தினங்கள், இருவது முதல் முப்பது நாட்களுக்குள் அதன் அற்புதங்களை காட்ட ஆரம்பித்துவிடும் என கூறினோம். அதே போல் மேற்குறிப்பிட்ட நபருக்கு, அந்த ரத்தினம் பதின்மூன்றே நாட்களில், வர வேண்டிய தொகையில் கணிசமான  பகுதியை  திரும்ப பெற்று தந்துள்ளதை தொலைபேசியில் தற்போது தெரிவித்தார். அவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம்,எந்த உலோகத்தில் அணிய வேண்டும், எந்த கையில் எந்த விரலில் அணிந்தால் நன்று என்பதை ஆராய்ந்து அணிய வேண்டும். மேலும், ராசிக்கு, நடப்பு திசைக்கு ரத்தினங்கள் வாங்கி அணிவது சில நேரங்களில் அதீத ஆபத்தை  ஏற்படுத்திவிடும். எந்த ஒரு ரத்தினக்கற்கள் தமக்கு எந்த நேரத்தில் எப்படி உதவும் என்பதை டிகிரி சுத்தமாக ஆராய்ந்து, குறிப்பிட்ட நாளில் அணிந்து வந்தால், அதன் அற்புதத்தை அது கண்டிப்பாக காட்ட ஆரம்பிக்கும் என்கிறது மூல க்ரந்தமான 'ரத்ன சாஸ்த்ரம்".

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Monday, 18 December 2017

உங்கள் அனைவரின் வாழ்விலும் குபேர மழை கொட்டப்போகும் புது வருடம் 2018


நாள் : 01.01.18
நேரம் : மாலை நான்கு மணி முதல் ஏழு  வரை
இடம் : சங்கர மடம், தி.நகர், சென்னை
நிவேதன அன்னம் : ஏழேகால் மணி முதல்

வரும் புது வருடம் முதல் நாளை ஒட்டி வருகிறது பௌர்ணமி. அதே நாளில் மாலையில் திருவாதிரை நட்சத்திரமும் இணைவதால், அன்று மாலை 'ஏகதச ருத்ர பாராயணமும் அதை தொடர்ந்து குபேர லட்சுமி பூஜையும் செய்விக்க இருக்கிறோம். திருவாதிரையில்,அதுவும் சோம வாரத்தில்  ருத்ர பாராயணம் என்பது மிக அதீத பலன் தரும் ஒன்றாகும். சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் அல்லவா?? அது மட்டுமல்ல, குபேரர் பிறந்தது பௌர்ணமி திதியில். ஆகவே தான் குபேர பூஜை பௌர்ணமி அன்று செய்யப்படுகிறது-பலன் பன்மடங்கு பெருக. பலரின் தொடர்ந்த வேண்டுகோளை அடுத்து, தன வரவு பெருகச்செய்யும் பல மூலிகைகளை கொண்டு, "மூலிகை குபேரர்" அந்த நாளில் குபேர லட்சுமி பூஜையில் வைத்து மிகுந்த மந்திர உருவேற்றம் செய்து, தேவைப்படுவோர் அனைவருக்கும் தயாரிப்பு செலவில் (Production Cost) கொடுக்க இருக்கிறோம். மிக மிக குறைந்த நன்கொடையாக ரூ.600/- விலை நிர்ணயம் செய்துள்ளோம். மேலும், சங்கல்பம் செய்ய ஒரு நபருக்கு மிக குறைந்த தொகையாக ரூ.இருபது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ் வருடம் தான் புது வருடம் தமிழ் இந்துக்களுக்கு என்றாலும், வழக்கத்தில் உள்ள புது வருட நாள், பௌர்ணமி மற்றும் திருவாதிரையை உள்ளடக்கி வருவதால் இந்த ஏற்பாடு. புது வருடத்தில் அனைவர் வீட்டிலும் குபேரர் நுழைந்தால் நன்மை தானே?? குபேரர் வேண்டுவோர், கண்டிப்பாக முன் பதிவு செய்தல் அவசியம். காரணம், இதை ஒரு பொருளை போன்றோ பொம்மையை போன்றோ தயாரிக்கப்படுவதில்லை. அதீத சக்தி வாய்ந்த தன வசிய மூலிகையால் செய்யப்பட இருக்கிறது-அனைவருக்கும் மிகுந்த பலன் சேர்ப்பதற்காக. ஆகவே, விருப்பமுள்ளோர், முன் கூட்டியே முன் பதிவு செய்து கொள்ளவும். ருத்ர சமக பராயணத்திலும், குபேர லட்சுமி பூஜையிலும் மனமுருகி வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டால், எப்பேர்ப்பட்ட விருப்பங்களும் நிறைவேறும் என்பது நாம் சொல்லி உங்களுக்கு அறியவேண்டியதில்லை என நம்புகிறோம்.

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Sunday, 17 December 2017

சனி பெயர்ச்சி ஹோமமும் சனீஸ்வர ரட்சையும்இன்று 17.12.17 குறித்த நேரத்தில் சென்னை தி.நகர் சங்கர மடத்தில் 'சனி பெயர்ச்சி ஹோமம்' சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. கலந்து கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் சிறப்பான முறையில் நடத்தி கொடுத்தார். அவருக்கு  எம் நன்றிகள். நாம் எதிர்பாரா வண்ணம் பலரும் சனீஸ்வர ரட்சை அவரவர் குடும்பத்தினர் அனைவருக்குமாக பெற்று சென்றனர். பலருக்கு கொடுக்க முடியாமல், கையிருப்பு கரைந்தது. பலரும் சனீஸ்வர ரட்சையின் அருமையை, மகத்துவத்தை புரிந்து வைத்திருந்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கிடைக்க பெறாமல் போனோர், மேலும் வாங்கி அணிய விருப்பமுள்ளோருக்காக, இந்த மார்கழி மாதம்  முழுவதும், சனீஸ்வர ரட்சை கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.

அன்பர்கள் அனைவருக்கும் வரும் புத்தாண்டு மென் மேலும் பல புதிய வாய்ப்புகளை, செல்வ செழிப்பை ஏற்படுத்த, புத்தாண்டு பரிசு ஒன்று காத்திருக்கிறது. என்னவென்று அறிந்து கொள்ள,
நாளை வரை காத்திருங்கள் !!

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Saturday, 16 December 2017

சனி பெயர்ச்சி பரிஹார மஹா ஹோமம் 17.12.17

நாள் : 17.12.17
இடம் : சங்கர மடம், தி.நகர்,சென்னை (பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் மிக அருகில்)
நேரம் : காலை பத்து மணி முதல் மதியம் ஒன்று வரை
நிவேதன அன்னம் : மதியம் ஒண்ணே கால் மணியில் இருந்து

பொதுவாக தாந்த்ரீக பரிகாரங்கள், பரிஹார ஹோமங்கள், மாந்த்ரீக விஷயங்கள் போன்றவற்றிற்கு கேட்டை நட்சத்திரம் மிக ஏற்றதாகும். இந்த நச்சரித்ததின் குறியீடு காதணி, குடை மற்றும் ரட்சைகளாகும். இதை மனதினில் வைத்தே சனீஸ்வர ரட்சை கொடுக்க திட்டமிடப்பட்டது. இந்த நாளில் ரட்சைக்கு பணம் செலுத்துவதோ, அணிவதோ பலன்களை இரட்டிப்பாக்குவது உறுதி.

இந்நாளில் ஹோமம் செய்விக்கும் வைதீகர்களுக்கு வேஷ்டி அங்கவஸ்திரம் மற்றும் சம்பாவனை (தக்ஷிணை) செலுத்துவது மிக பெரும் புண்ணிய பலனை கொண்டு சேர்க்கும்.

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Thursday, 14 December 2017

சனி பெயர்ச்சி பரிகார மஹா ஹோமம்-சூட்சும பரிகாரம்


நாள் : 17.12.17
இடம் : சங்கர மடம், தி.நகர்-காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் பஸ் நிலையம் அருகில், சென்னை
நேரம் : காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரை 
நிவேதன அன்னம் : மதியம் ஒன்னேகால் மணியளவில்


அன்பர்கள் ஒவ்வொருவரும் ஹோமத்திற்கு வருமுன் சனீஸ்வர திருமேனியை மனதினுள் நன்கு பிரார்த்தித்து, ஒரு ஸ்பூன் அளவு (கவனம் தேவை : சிறு அளவு மட்டும்-) பச்சரிசி மற்றும் அரை ஸ்பூன் அளவு  எள் கைகளில் வைத்து தியானித்து, எடுத்து ஒரு பேப்பரில் முடிந்து வைத்து கொண்டு வரவும்-ஹோமத்தில் செலுத்த. பல சூட்சுமங்களை உள்ளடக்கிய பெரும் பரிஹாரம் இது. பச்சரிசியின் அளவை விட எள்ளின் அளவு குறைவாக இருத்தல் வேண்டும். அதிகப்படியாக எடுத்து வரின், மறுக்கப்படும்.

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Wednesday, 13 December 2017

பங்கு சந்தை மற்றும் கமாடிட்டி சந்தையில் வெற்றி பெறமேற்கண்ட துறைகளில் பலர், தங்களின் நிரந்தர வேலையை விட்டு விட்டு,
கோடீஸ்வரன் ஆகிறேன் பேர்வழி என்று இறங்கி அதலபாதாளத்தில் வீழ்ந்து துன்பப்படுவதுண்டு. மேலும் சிலர், அடுத்தவர்களின் பணத்தையும் வாங்கி அவர்களுக்கு லாபமீட்டி தருகிறேன் என மேற்கண்ட தொழிலில் , அவர்களின் பணத்தையும் சேர்த்து அழித்து, மிக பெரும் கடனாளியாகி சிக்கி தவிப்பதுண்டு. இது போன்ற யூக வியாபாரங்களில் இறங்குவதற்கு முன், மிக அவசியமாக, நன்கு விவரமறிந்த ஜோதிடர்களிடம் ஆலோசனை பெறுவது பெரும் சிக்கல்களில் இருந்து காக்கும். எம்மிடம் தனி நபர்  ஆலோசனைக்கு வருவோரில், இதை போன்றோர் அதிகம் உள்ளர். சில ஆயிரங்களை யோசித்து,மிக பெரும் அவதிக்கு உள்ளாகி பின் ஆலோசனைக்கு வருவதை விட,முன்னரே தகுந்த ஆலோசனையின் படி செயல்பட்டால்  பல லட்சங்களை அழிப்பதை தவிர்க்கலாம். முதலில் அவர்களுக்கு இந்த துறை ஏற்றதா என்பதை ஆராய்ந்து பின் அவர்களுக்கு தக்க பரிகார முறைகள் கூறுவது வழக்கம். இதில், சிலர் அடுத்தவர்களுக்காக சந்தையில் ஈடுபடும் பொழுது லாபம் ஈட்டிவிடுவதாகவும், தனக்கென வரும் சமயம் பெரும் நஷ்டத்தை சந்திப்பதாக கூறுவதுண்டு. இவைகளுக்கு பின்னால் பெரும் சூட்சும விஷயங்கள் அடங்கியுள்ளன. பொதுவாக ஒவ்வொருவருக்கும் எந்தெந்த துறை ஷேர் அல்லது கமாடிட்டி லாபம் ஈட்டி தரும் என ஒன்று உண்டு. அதை தெரிந்து கொண்டு மற்றும் அந்த மாதம் எந்த துறை ஏற்றம் பெறும், எது வீழ்ச்சியை தரும் என்பதையும் தெரிந்து கொண்டு ஈடுபடுவது சாலச்சிறந்தது.  தங்கள் நிலையை அறிந்து, பேராசையும் பதட்டமும் இல்லாது, தகுந்த முறையில் ஈடுபட்டால், இந்த துறை மட்டுமல்ல,
எத்துறையிலும்  பல வெற்றிகளை காணலாம்.

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Tuesday, 12 December 2017

மாபெரும் கடன்கள் அடைய ரகசியம்வரும் சனிக்கிழமை 16.12.17 காலை நாலரை மணி முதல் ஆறரை மணி வரை கடன்களில் ஒரு சிறு பகுதியை கட்டினாலும், வெகு நாளாய் அடையாது இருக்கும் கடன்கள் கூட அடைந்து விடும்- இது மைத்ர முகூர்த்த நேரம். ஆனால், பலருக்கும் தெரியாத  ஒன்று அந்த நாளில் (16.12.17) காலை ஆறரை முதல் எட்டேகால் வரை இருக்கும் சங்கராந்தி முகூர்த்தத்தில் ஒரு சிறு கடன் பகுதியை அடைத்தால், உங்களுக்கு கோடானு கோடி கடன் இருப்பினும் மின்னல் வேகத்தில் அடைந்து விடும் என்பது. முயற்சித்து வெற்றி அடையுங்கள்.

( இது போன்ற சூட்சுமம் நிறைந்த வெற்றி கொடுக்கும் நேரங்களை பங்கு சந்தையில் ஈடுபட்டுள்ளோர்க்கு கட்டண ஆலோசனையாக
வழங்கப்படுகிறது. )

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Monday, 11 December 2017

சனி பெயர்ச்சி-சனீஸ்வர ரட்சை- சில விளக்கங்கள்பொதுவாக சிலர் தங்களின் கஷ்ட காலங்களில் தங்களின் அதாவது குடும்ப தலைவர் என வைத்து கொள்வோம். அவரின் ஜாதகத்தை உரியவரிடம் காண்பித்து பலன் அறிந்து, பரிகாரங்கள் ஏதேனும் இருப்பின் அறிந்து அதன் படி செய்வர். பின் சில காலங்கள் கழித்தும் நிலை சரியாகாது போயின், குறிப்பிட்ட பரிகாரம் அல்லது பலன் கூறிய நபர்  பற்றி அவநம்பிக்கையுருவர். இப்படி எம்மிடம் பலர் வந்து எங்கெங்கு சென்றோம் என்றெல்லாம் விவரிப்பதுண்டு. இதில் குறை கூற வேண்டியது தம்மை தாமே அன்றி, பலன் அல்லது பரிகாரம் கூறிய நபர்களை அல்ல. ஆகையினால் தான் எம்மிடம் வருவோர் சனி கிரகம் ரீதியாக தொல்லைகளை சந்தித்து வரின், நாம் கேட்கும் முதல் கேள்வி, அவர்களின் வாழ்க்கை முறை, தூங்குதல், உணவு பழக்கம், விழித்தெழும் நேரங்கள் பற்றி தான். ஏனெனில், எம்மை பொறுத்தவரை இவைகள் சனி  கிரக ரீதியான கஷ்டங்களுக்கு மிக முக்கியமானவை. மேலும், ஒரே குடும்பத்தில் சனி பெயர்ச்சியினால் ஒருவருக்கு மேல் குறிப்பாக தந்தை மகன் அல்லது மகள்- ஒரே ராசியாக இருந்து ஏழரை அல்லது அஷ்டம சனி போன்ற காலங்களோ அல்லது சனி திசை ஒருவருக்கு மேல் ஒரே குடும்பத்தில், மற்றும் ஒரே குடும்பத்தில் சனி திசை, ராகு திசை போன்றவை மற்றும் சனி பெயர்ச்சியின் நிலை சரியில்லாது போதல் போன்றவை இருப்பின், வாழ்நிலை மிக கடினமாக காணப்படும். இதை எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்தே பலன்கள் மற்றும் பரிகாரங்களை கேட்டு சென்று, செவ்வனே செய்து வரின், பலன் நிச்சயம். ஜோதிட அல்லது தாந்த்ரீக குரு மார்கள், எவரும் வருவோர்  குடும்பத்தில்  அனைவருக்கும் தம்மிடம்  ஆலோசனை எடுத்து கொள்ள சொல்லி கூற மாட்டார்கள். ஆலோசனைக்கு செல்வோர் தான் , நல்லது எவை என கேட்டறிந்து செயல்படவேண்டும்.

இது போன்ற சனி பெயர்ச்சி காலகட்டத்தில், நன்கு தாந்த்ரீக மந்த்ர பிரயோகம் செய்யப்பட்ட ரட்சை, ஒரு நல்ல வேலி எனலாம். நம்பிக்கை மற்றும் பக்தியுடன் அனைவரும் அணிந்து வர, பல சிக்கல்களை எளிதில் தாண்டி விடலாம். ஆகவே தான் வரும் சனி பெயர்ச்சி ஹோமத்தில் இந்த ரட்சை மிக குறைந்த கட்டணத்திற்கு கொடுக்க திட்டமிட்டோம்.

சனி பெயர்ச்சி மஹா ஹோமம்
நாள் : 17.12.17
இடம் : சங்கர மடம், தி.நகர் (பஸ் ஸ்டான்ட் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் அருகில்)
நேரம் : காலை 10 AM மணி முதல் 1 PM மணி வரை
நிவேதன அன்னம் : மதியம் 1:15 PM முதல்

மேல் விவரங்கள் பெற : +918754402857 & +919840130156


முக்கிய பின் குறிப்பு : தாந்த்ரீக அல்லது ஜோதிட ஆலோசனை கூறும் அனைவருக்கும், எல்லோரும் போல் வாய், வயிற் அதற்கு பசி மற்றும் தாகம் உண்டு. அவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் உண்டு. அவர்களும் மற்ற  அனைவர் செலுத்தும் அதே வாடகையை  செலுத்தி  தான் வீடுகளில் குடியிருக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு உடல்நிலை மோசமானால், அவர்களும் மற்றவர் கொடுக்கும் தொகையை கொடுத்து தான் மருத்துவம் செய்து கொள்ள வேண்டிவரும். அவர்களும் சனி திசை, ஏழரை சனி, அஷ்டம சனி, கர்ம சனி,கண்டக   சனி என்ற சோதனையான காலங்களை சந்திக்க வேண்டி வரும்.  அவர்களின் குழந்தைகள் படிப்பதற்கும் மற்ற அனைவரும் செலுத்தும்  அதே கல்வி தொகையை  தான் பள்ளி கல்லூரிகளில் செலுத்த  வேண்டிவரும். இவை அனைத்தையும் மனதில் கொண்டோமானால், அவர்களிடம் அனைத்தையும் இலவசமாக எதிர்பாராத குணம் ஏற்படும். சனீஸ்வரரை ப்ரீதி செய்ய முதலில், எவரிடமும் எதையும் இலவசமாக பெறாமல் இருக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். ஏதேனும் குருமார்கள் அன்பு பிரசாதமாக சிலவற்றை கட்டணமின்றி கொடுத்தாலும், அவற்றை பெற்று கொண்டு, ஒரு வாழைப்பழமாவது அல்லது ஒரு ரூபாய் நாணயமாவது அவர்களுக்கு தட்சிணையாக அளிப்பது நன்று. நாம் பல ஆன்மீக பொருட்களை கட்டணமின்றி கொடுத்து வந்த நேரங்களில், பலர் இதனை கடைபிடித்து பெற்று கொண்டனர்.

தற்சமயம் எம்மிடம் தொடர்ந்து ஒரு சிலர் , சேவையை-பொருட்களை, கட்டணமின்றி எதிர்பார்த்து நச்சரிப்பதால்,அப்படிப்பட்டோருக்காக  மேற்கண்ட பின் குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

Saturday, 9 December 2017

பணவீழ்ச்சியில் இருந்து காப்பாற்றிய தாந்த்ரீக மந்த்ர சாதனைபொதுவாக தாந்த்ரீக மந்த்ர சாதனைகள் நம் வீட்டு இட்லியை போல-
உடனடியாக சமைத்து விடலாம்-சத்தானது- கேடான பின் விளைவுகளும் இல்லை-செலவும் கம்மி.

எதற்காக இதை கூறுகிறோமென்றால் சமீபத்தில் ஒரு தம்பதியர் நேரடி ஆலோசனைக்கு வந்திருந்தனர். வியாபாரத்தில் பெரும் வீழ்ச்சி. லாபம் உண்டென்றாலும் அத்தனையும் வராக்கடனாக வெளியில் நிற்கிறது. தொழில் இடம் வங்கியில் கடனாக உள்ளது. பல மாதங்களாக தவணை கட்டாத நிலையில் எந்நேரமும் ஜப்தி செய்யப்படலாம் என்ற நிலை. கணவரின் நிலையை ஆராய்ந்து பார்த்ததில் அவருக்கு சாதகமான நிலை எதுவும் இல்லை. அதே நேரத்தில் மனைவியும் மிகவும் உறுதுணையாக இருப்பதால் அவரின் நிலைகளை சோதித்து பார்த்ததில், தாந்த்ரீக முறையில் இவர்களுக்கு உடனடி தீர்வு உண்டு என தெரிந்தது. இருபத்தியோரு நாட்கள் இரவு நேரம் பூஜை அறையில் அமர்ந்து அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை தாந்த்ரீக மந்த்ர சாதனை செய்ய தயாரா என பெண்மணியை கேட்டதில் 'எத்தை தின்னால் பித்தம் தெளியும்' என்ற நிலையில் இருந்த அவர், இந்நிலை மாறுமென்றால் இரவு முழுதும் விழித்திருந்து பூஜிக்க தயார் என்கிறார். சுலபமான ஆனால் மிகுந்த மன உறுதி தேவைப்பட்ட ஒரு அதீத சக்தி வாய்ந்த தாந்த்ரீக மந்த்ர சாதனை அவருக்கு அளிக்கப்பட்டு, அதற்குரிய நேரம், நாள் போன்றவையும் குறித்து கொடுக்கப்பட்டது. இதில், விசேஷம் என்னவென்றால், இத்தகைய உபாசனைகளின் பலனை, மன உறுதியும், அதீத நம்பிக்கையும் இருப்பின் முதல் ஓரிரு நாட்களிலேயே காணலாம் என்பது தான். குறிப்பிட்ட நபர், உபாசனை ஆரம்பிக்கப்பட்டு இன்னும் முடியாத நிலையில், இன்று தொலைபேசியில் 'தங்களுக்கு வேறு வங்கி மூலம் இடைக்கால கடனுதவி கிடைக்க இருக்கிறது எனவும்- இட ஜப்தி விவகாரமும் தள்ளி போகிறேதென்றும்- கடன்களையும் வசூலிக்க மிக அதீத பிரயத்தனம் செய்ய ஆரம்பித்து விட்டார் கணவர் என கூறி மிகவும் சந்தோஷத்துடன் நன்றி தெரிவித்தார். உபாசனை முடிந்ததும் பாருங்கள் இந்த மந்த்ர சாதனையின் அருமை முழுமையாக தெரியும் என கூறி வாழ்த்தினோம். ஈசன் அருளிய இந்த சக்தி வாய்ந்த தந்த்ர மந்த்ரங்கள் துன்பத்தில் உள்ளோருக்கு, தங்களை முறைப்படி உபாசிப்போருக்கு,
என்றும் வாரி வழங்கிட தயங்கியதேயில்லை.

ஹரி ஓம் தத் சத்   

"சனீஸ்வர ரகசியங்கள்"

டிசம்பர் மதம் வெளிவரவிருக்கும் "சனீஸ்வர ரகசியங்கள்" புத்தகத்தில் வரும் பொருளடக்கத்தில் ஒரு சில..

1.சனீஸ்வரரின் எதிர்பார்ப்புகள் 
2.சனீஸ்வரரிடமிருந்து நேர்மறை சக்திகளை பெற 
3.பன்னிரண்டு ராசி லக்கினத்திற்குமான சூட்சும சனி பெயர்ச்சி பரிகாரங்கள் 
4.கால சக்ரா தந்த்ரா
5.சனீஸ்வரரை ப்ரீதி செய்ய தாந்த்ரீக வழிபாடு 
6.மூலிகைகள், விருட்சங்கள், ரத்தினங்கள் 
7.சனீஸ்வரரை குளிரச் செய்யும் எளிய முத்திரைகள் 
8.உடனடி பலன் தரும் பாராயணம் 
9.வாஸ்து முறையில் சனீஸ்வர பரிகாரம் 
10.சனீஸ்வர ஸ்தவராஜா 
11.அதீத சக்தி வாய்ந்த எந்திரங்கள் 
12. மலர் முறையில் சனீஸ்வர பரிகாரம் 


மேலும் பல அறிய சூட்சுமங்களை தாங்கி "வரையறுக்கப்பட்ட பதிப்பாக" (Limited Edition) டிசம்பர் மாதம் வெளிவரவுள்ளது- வெளிவரும் நாள், இடம், நேரம் -விரைவில் அறிவிக்கப்படும். 

உங்கள் பிரதிக்கு முன்பதிவு செய்ய : 
+918754402857  &  +919840130156

Friday, 8 December 2017

சனி பெயர்ச்சி மஹா பரிஹார ஹோமம் - 17.12.1717.12.17 ஏன்- 19.12.17 தானே சனி பெயர்ச்சி  ??

சனியானவர் தன் பலன்களை மிக மெதுவாக கொடுப்பவர். அள்ளி கொடுப்பதனாலும் சரி, கிள்ளி எடுப்பதானாலும் சரி. அப்படிப்பட்டவர் தன் பெயர்ச்சியின் பலா பலன்களை ஒரு மாதம் முன்பிருந்தே கொடுக்க தயங்குவதில்லை.

பொதுவாக அமாவாசை தினத்தன்று ஹோமம் செய்தால் செய்தவருக்கும்  சரி செய்து வைப்பவருக்கும் சரி கேடு விளையும் என்கின்றன வேதங்கள். ஆனால் சண்டி, காளி மற்றும் அதர்வண ஹோமங்கள் அத்தோடு சனி சாந்தி ஹோமம் இவற்றிற்கு மட்டும் விதி விலக்கு உண்டு. ஆகவே, இந்த நாளில் இந்த பரிகார சாந்தி ஹோமத்தை வைத்தோம். அது மட்டுமல்ல, பரிபூர்ண அமாவாசை தினம் மற்றும் சனீஸ்வரரால் துன்பங்கள் ஏற்படின் அதை தடுத்து நிறுத்தி நம்மை உடனடியாக காத்து அருளும் சக்தி கலியுகத்தில் உக்ர காளி, ஆஞ்சநேயர், யமராஜர் மற்றும் விநாயகருக்கே அதிகம். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த ஆஞ்சநேய சக்தி உதித்த நாள் 17.12.17 . இப்படி சர்வ அமாவாசை தினமும் அஞ்சனை மைந்தன் அனுமனின் ஜெயந்தி தினமும் சனீஸ்வரரின் அதீத ஆற்றலை உள்ளடக்கிய  எட்டாம் எண் (17) நாளும் சேர்ந்து வருவது மஹா அபூர்வம்- ஆகையினால் தான் இந்த நாளில் ஹோமத்தையும் வைத்து சனீஸ்வர ரட்சை கொடுக்க திட்டமிட்டோம். இந்த நாளில் சனீஸ்வர ஹோமத்தில் கலந்து கொண்டு, அவரின் பரிபூரண ஆசியை உள்வாங்கி, வசதி உள்ளோர்- ஹோமத்திற்கு வன்னி சமித்து மற்றும் நெய்
 (தூய நெய் மட்டுமே  ஏற்றுக்கொள்ளப்படும்) நல்லெண்ணெய் கொடுத்து வழிபாடு செய்யலாம். மேலும், இது போன்ற ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நாம் அடிக்கடி கட்டணமின்றி  நடத்தி வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. வசதி உள்ளோர் அன்னதானம் மற்றும் இதர விஷயங்களுக்கு நன்கொடை அளிக்க விரும்பினால் மற்றும் சனீஸ்வர ரட்சை தேவைப்படின் கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு அழைத்து விவரங்கள் பெறலாம்.

+918754402857  &  +919840130156 

இடம் : சங்கர மடம்
நேரம் : காலை பத்து மணிமுதல் ஒரு மணி வரை 

மதியம் ஒன்னேகால் மணியில் இருந்து நிவேதன அன்னம் 


சனி பெயர்ச்சி மஹா பரிகார ஹோமம் - 17.12.17


Wednesday, 6 December 2017

சனி பெயர்ச்சி மஹா ஹோமம் - 17.12.17-சங்கர மடம், காலை பத்து மணி முதல்

ஷீர்டி ஸ்ரீ சாய் சேவா ட்ரஸ்டின்- ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டர் வழங்கும்


சனி பெயர்ச்சி மஹா ஹோமம்

 குரு, ராகு கேது, சனி பெயர்ச்சியை பொறுத்த வரை, பெயர்ச்சி நாள் முதல் தான் அவர்களின் பலன்கள் ஆரம்பிக்கும் என்பதில்லை. குறைந்த பட்சம் ஒரு மாதம்  முன்னதாகவே பெயர்ச்சி பலன்களை பெற ஆரம்பித்துவிடுவோம். இதை அனுபவத்தில் உணர்ந்திருப்பீர்கள். இதை மனதினில்  கொண்டு, வரும் சனி பெயர்ச்சி ஹோமத்தை 17.12.17 ஞாயிறு காலை பத்து மணிமுதல் மதியம் ஒரு மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளோம். பலரின் தொடர்ந்த வேண்டுகோளுக்கிணங்க, அனைவரும் வந்து சேர வசதியாக இம்முறை சென்னை தி.நகர் சங்கர மடத்தில் மேற்கண்ட ஹோமம் நடைபெற உள்ளது. இதில் அன்பர்களுக்கு இரட்டிப்பு பலன் என்னவென்றால், ஹோமம் நடைபெறும் இடத்தின் பின்புறம் பிரசித்தி பெற்ற பசு மடம் உள்ளது. மிக அருகில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் ஆலயமும் உள்ளது. தயாராக வந்தால், பசுவுக்கும் உணவு கொடுத்து பலன்களை பெறலாம். வழக்கத்திற்கு மாறாக இம்முறை சங்கல்பம் செய்து கொள்ள மிக சிறிய காணிக்கையாக ஓருவருக்கு ரூ.இருவது மட்டும் வசூலிக்கப்படுகிறது. மேலும், நம் 'சனீஸ்வர ரகசியங்கள்' புத்தகத்தில் விவரங்கள் வெளிவரவிருக்கும், மிக அதீத சக்தி வாய்ந்த, ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி, ஜென்ம சனி, மேலும், சனி திசை புத்தியினால் அவதியுறுவோருக்கு,  மந்திர உருவேற்றம் செய்யப்பட்ட ரட்ஷை குறைந்த கட்டுமான ரூ.150 /- மட்டும் வழங்க உள்ளோம். இந்த ரட்ஷை, இந்த பெயர்ச்சி காலத்தில் மட்டுமே கிட்டும். இந்த ரட்ஷை அடுத்து வரவிருக்கும் இரண்டரை ஆண்டுகளில் உங்களை ஆபத்து மற்றும் துன்பங்களில் இருந்து காத்து ரட்சிக்கும் என்பது உறுதி. வெளியூர் அன்பர்கள் போதிய தபால் தலை வைத்து மேற்கண்ட ஹோமத்தில் சங்கல்பம் செய்து கொள்ள, தங்கள் குடும்பத்தினர் சகிதம் பெயர்,நட்சத்திரம்,ராசி,கோத்திரம் ஆகியவற்றை எழுதி அனுப்பலாம். நன்கொடை செலுத்தும் விவரங்கள் பற்றி தொலைபேசியில் அழைத்து தெரிந்து கொள்ளவும்.


ஹோமம் நடைபெறவிருக்கும் இடம் : சங்கர மடம், தி.நகர், சென்னை
நாள் : 17.12.17
நேரம் : காலை 10 AM முதல் 1PM வரை 
விவரங்களுக்கு  : +918754402857 / +919840130156

அனைவரையும் நிவேதன அன்னம் உண்டு சனீஸ்வரரின் பரிபூர்ண ஆசி பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஹரி ஓம் தத் சத் 

Tuesday, 5 December 2017

டிசம்பர் மாதத்தில் தவிர்க்க வேண்டிய கரண நாட்கள்

கரணம் தப்பினால் மரணம் என்ற தலைப்பில் மாதா மாதம் வெளியாகும் பதிவு

6.12.17 அதிகாலை 00.00 AM முதல் காலை 10:20 AM வரை

9.12.17 அதிகாலை 02:45 AM முதல் மதியம் 02:20 PM வரை

12.122.17 மதியம் 01:30 PM முதல் மறுநாள் அதிகாலை 01:15 AM வரை

16.12.17  காலை 07:08 AM முதல் இரவு  08:27 PM வரை

22.12.17 காலை 09:10 AM முதல் இரவு 10:30 PM வரை

26.12.17 அதிகாலை 02:35 AM முதல் மதியம் 02:57 PM வரை

29.12.17 காலை 11:04 AM முதல் இரவு 10:01 PM வரை

இந்த வருடம் அனைத்து மாதங்களின் கரண நாட்களையும் தவிர்த்து பலன் பெற்றிருப்பீர்கள் என நம்புகிறோம். அடுத்த வருடம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் சேர்த்து கரண விளக்கங்கள் தரப்படும்-உங்களின் வசதிக்காக.  

Friday, 1 December 2017

Saturn Transit 2017 Remedies-சனீஸ்வர ரகசியங்கள் புத்தகத்தின் சிறு பகுதிவெளிவரவிருக்கும் 'சனீஸ்வர ரகசியங்கள் புத்தகத்தின் சிறு பகுதியை இந்த காணொளியில் காணலாம். சூட்சுமம் நிறைந்த அற்புத பரிகாரங்களை தாங்கி  லிமிடெட் எடிசனாக வெளிவரவிருக்கும்  புத்தகத்திற்கு (விலை ரூ.200 ) முன் பதிவு செய்ய +918754402857 / +919840130156 அழைக்கவும்.

Thursday, 23 November 2017

அபூர்வ சனீஸ்வர பரிகாரங்கள்டிசம்பர் ஒன்பதாம் நாள் வரையறுக்கப்பட்ட பதிப்பாக (லிமிடெட் எடிஷன்) வெளிவர உள்ளது. தேவைப்படுவோர் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். வேறெங்கும் வெளிவராத அபூர்வ பரிகார முறைகள் தாங்கி வெளிவர உள்ளது. நன்கொடை : ரூ. 200/-


+918754402857 / +919840131056

Wednesday, 22 November 2017

திருமண தடை, மண வாழ்வில் பிரச்சனைகளை நீக்கும் விவாஹ பஞ்சமி வழிபாடு 23/24.11.17

ஸ்ரீமான் ராமருக்கும் புண்யவதி சீதைக்கும் திருமணம் ஆன தினமே விவாஹ
பஞ்சமியாக கொண்டாடப்பட்டு வருகிறது, தொன்று தொட்டு. அப்படிப்பட்ட புண்ய தினம் நாளை-23.11.17 நாளை மதியம் 3 மணி முதல் முதல் 24.11.1 மாலை ஐந்து மணி வரை .

இத்தினத்தில் திருமணம் வேண்டி காத்திருப்போர், தன் மகன் மகளை திருமணம் செய்ய பொருள் இல்லாது தவிப்போர், மற்றும் தன் பெண்,ஆண் பிள்ளைகள் தவறான மணமுடிக்காது, நல்ல வரனை கைப்பிடிக்க வேண்டியிருப்போர், மண வாழ்வில் நிம்மதியற்று இருப்போர் அனைவரும் காலை அல்லது

மாலை குளித்து, துவைத்த ஆடை அணிந்து ராமரின் பட்டாபிஷேக படத்தை வைத்து, கோலமிட்டு , தனி மண் அகலில் நெய் தீபமேற்றி, ராமாயணத்தின் சீதா ராம விவாஹ சர்க்கத்தை படித்து முடித்து நிவேதனம் செய்து வழிபட, மேற்கண்ட துன்பங்கள் தீர்ந்து நல்வழி பிறக்கும். அப்படி செய்ய முடியாதோர் ராமரின் சன்னதி கர்ப கிரக விளக்கிற்கு தூய நெய் கொடுத்து , சன்னதியில் ஒன்றரை மணி நேரம் இருந்து மனமுருகி வேண்டி வர மேற்கண்ட அதே பலன் உண்டு. வருடத்தில் ஒரு முறையே வரும் இந்த கிடைத்தற்கரிய நாளை பயன்படுத்தி நல் வழி பெற எல்லாம் வல்ல அந்த சீதாராமரை பிரார்த்திக்கிறேன்.

"ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே"

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Monday, 6 November 2017

அவரவருக்கு தனத்தை தரும் பிரத்யேக தெய்வங்கள்

நாம் கொடுத்து வரும் 'அவரவருக்கு ஏற்ற  தெய்வங்கள் மற்றும் மந்திரங்கள்"
ரிப்போர்ட்டினில் வழிபடும் முறைகள் நாட்கள் மட்டுமின்றி 'அவரவருக்கேற்ற தனம் தரும் தெய்வம்' சேர்க்கப்பட்டுள்ளது. நமக்கு உகந்த தெய்வங்களை வழிபடுவதோடு, தனத்தை-பண வரவை அதிகப்படுத்தும் தெய்வத்தையும் தேர்ந்தெடுத்து வழிபட்டு வந்தால், நாம் நினைத்த நேரத்தில் நினைத்த பொருட் செல்வத்தை, பண வரவை எளிதாக ஈட்ட முடியும்.

ஹரி ஓம் தத் சத் 

Tuesday, 31 October 2017

நவம்பர் மாதத்தில் தவிர்க்க வேண்டிய கரண நாட்கள்

கரணம் தப்பினால் மரணம் என்ற தலைப்பில் மாதா மாதம் வெளியாகும் பதிவு


03.11.17  மதியம் 1:45 PM முதல் மறுநாள் 04.11.17 அதிகாலை 00:34AM வரை 

06.11.17 மதியம் 2:30 PM முதல் மறுநாள் 07.11.17 அதிகாலை 01:10 AM வரை

09.11.17 மாலை 4:35 PM முதல் மறுநாள் 10.11.17 அதிகாலை 03:50 AM வரை

13.11.17 அதிகாலை 00:25 AM முதல் மதியம் 12:30 PM வரை

16.11.17 மதியம் 02:00 PM முதல் மறுநாள் 17.11.17 அதிகாலை 02:55 AM வரை

22.11.17  மதியம் 01:30 PM முதல் மறுநாள் 23.11.17 அதிகாலை 03:00 AM வரை

26.11.17 காலை  09:45 AM முதல் இரவு 10:45 PM வரை

29.11.17 இரவு 10:10 PM முதல் மறுநாள் 30.11.17  காலை 09:35 AM வரை

Monday, 30 October 2017

நமக்கு உகந்த தெய்வங்களை தெரிந்து கொள்வது ஏன் முக்கியம் ??பொதுவாக சில ஜோதிடர்கள்  'பூர்வ புண்ய ஸ்தானம் அல்லது மந்த்ர ஸ்தானம்' என்றழைக்கப்படும் ராசிக்கு ஐந்தாம் இடத்தை வைத்து நமக்கு உகந்த தெய்வம் எது என்பதை கூறும் வழக்கம் ஒன்று உண்டு. இது ஓரளவே சரியாக வரும். ஆத்மகாரகனின் நிலையை நவாம்சத்தில் அலசிய பின்பே சரியான தேவதை அல்லது தெய்வம் எது என்பதை கணித்தல் நலம் தரும். ஏன் எல்லா கடவுளையும் வழிபடுதல் கூடாதா என்று கேள்வி எழுப்புவோர்க்கு, நம் பதில், அவரவருக்கு  பூர்வ ஜென்மத்தில் தாங்கள் வழிபட்ட தெய்வங்கள், அல்லது நம் விதிப்படி நமக்கு நன்மை தரக்கூடிய ஆற்றல் சக்தி எந்த தெய்வீக சக்தியிடம் உள்ளது என்பதை அறிந்து அதன்படி வழிபட வேண்டும் என்பதே.

என்ன தான், பணம் இருந்தாலும், வியாபாரம் அல்லது தொழில்கள் இருப்பினும், நமக்கு நன்மை தரும் தொழில் அல்லது வியாபாரம், நமக்கு வெற்றியை தரக்கூடிய கல்வி முறை என சரியானவற்றை தேர்ந்து, அதன் படி நடந்தோமேயானால், நடக்கும் கோட்சார பலன்கள் அல்லது தசை புத்தி பலன்கள் கேடு விளைவிக்க கூடிய நிலையில் இருப்பினும், அவற்றை சுலபமாக கடந்தேறிவிடலாம். இத்தகைய மாபெரும் பொக்கிஷத்தை நமக்கு தந்திருப்பது தான் ஜோதிஷம் என்ற அறிய கலை. இதில் நாம் கடைபிடித்து வரும்  தாந்த்ரீக ஜோதிஷத்தை பொறுத்தவரை, எந்த கடவுள் சக்தி நமக்கு அருள் தரும் என்பதை தேர்ந்தெடுத்து அவற்றிக்கு தாந்த்ரீக முறையிலான மந்திர பூஜா முறைகளை கொடுத்து வரும் காரணத்தினாலே, பலன்கள் விரைவாகவும், இரட்டிப்பாகவும் கிடைத்து வருகிறது.

நாம் தற்போது கொடுத்து வரும் 'அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்' ரிப்போர்ட்டில் ஒருவருக்குரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வம் அல்லது தேவதை, அதன் தாந்த்ரீக மந்திரங்கள், வழிபட வேண்டிய நாட்கள் மற்றும் நேரம், எப்படி எளிதான அதே சமயம் அதீத சக்தியை கொடுக்கும் படி வழிபட வேண்டும் என்ற விவரங்கள் இடம் பெறும்.

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com


அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்

அவரவருக்கு அதிர்ஷ்டம்  அளிக்கும் தெய்வசக்திகள் மற்றும் தேவதைகள் பற்றிய விவரங்கள் ரிப்போர்ட்  மற்றும் அவரருக்கு அதிர்ஷ்டம் அளிக்க கூடிய இரத்தின கற்கள், ருத்ராட்சங்கள் மற்றும் மூலிகைகள் ரிப்போர்ட்- மேற்கண்ட இரண்டிற்கும் தலா ரூ.அறுநூறு மட்டும், கட்டணமாக பெறப்படும். வேறு சில குழப்பங்களினால், இதன் தொகை முன்பு தவறுதலாக  கூறப்பட்டது. தேவைப்படுவோர், தங்கள் பெயர், பிறந்த நேரம், பிறந்த நாள் மற்றும் பிறந்த இடம் குறிப்பிட்டு தகவல் தெரிவிக்கவும். பலன்கள் ஈமெயில் மூலம் கட்டணம் செலுத்திய நாற்பத்தியெட்டு மணி நேரத்தில் அனுப்பப்படும். விரும்புவோர் நேரிலும், கொரியர் மூலமும் பெற்று கொள்ளலாம். 
 

அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் அவர்களை வழிபடும் முறைகள் மற்றும் மந்திரங்கள் அடங்கிய பலன்கள்- வாழ்நாள் முழுதும் தாங்கள் எவ்வித தெய்வ சக்தியை வழிபட்டால் பிரச்சனைகள் இன்றி வெற்றி பெற முடியும் என்பதை விளக்கும். 

அதிர்ஷ்டம் தரும் ரத்தினங்கள், ருத்ராட்சம் மற்றும் மூலிகைகள் அடங்கிய பலன்கள் : உங்கள் வாழ்வில் திடீர் அதிர்ஷ்டம் மற்றும் ஏற்றம் பெற மேற்கண்ட பொருட்களை  எவ்விதம், எவ்வாறு, எந்த தினத்தில் உபயோகம் செய்தால், உடனடி பலன் பெறலாம் என்பதை விளக்கும். 


மேலும், வரும் நவம்பர் மாதம்  முதல் வாரத்தில் ஐந்து நாட்கள், திங்கள், புதன்,வியாழன்,வெள்ளி மற்றும் சனி- தனி நபர் தாந்த்ரீக ஆலோசனை வழங்கப்படும். 

+918754402857 / +919840130156

Friday, 27 October 2017

அவரவருக்கு பலனை கொடுக்கும் தெய்வங்கள் மற்றும் வெற்றி தரும் மந்திரங்கள்மேற்கண்ட தலைப்பு தான், தற்சமயம் பலர் எம்மை தொடர்ந்து விசாரித்து
கொண்டிருப்பது. தனிப்பட்ட முறையில் அவரவருக்கு பலனை உடனடியாக தரும் தெய்வ சக்திகளையும், அவர்களை பூஜிக்கும் மந்திரங்களும். ஆம், உங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பலன் கொடுக்க வல்ல இறை சக்தியை, ஜாதகத்தின் துணை கொண்டு, அல்லது ஜாதக விவரங்கள் இல்லாதோர், ப்ரசன்னத்தின் துணை கொண்டு அறியலாம். பல கோவில்களுக்கு சென்றும், பல தெய்வ சக்திகளை தொழுதும், எதிர்பார்த்த பலன் கிட்டாதோர் இந்த முறையில் வழிபட்டு பூஜித்து வரின், அந்த இறை சக்தி துணை நிற்பதோடு மட்டுமல்லாமல், நாம்  அன்புடன் -பக்தியுடன்  கேட்கும் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து அருளுவார்.

அன்பர்களின் வசதிக்காக மேற்கண்ட  பலன்களை தனியாக கொடுக்க எண்ணம். உங்கள் விவரங்கள் பெற்று கொண்ட நாற்பத்தியெட்டு மணி நேரத்தில் பலன்கள் கொடுக்கப்படும். மேல் விவரங்கள் பெற தொலைபேசியில் அழைக்கவும்.

+919840130156 / +918754402857 

Thursday, 26 October 2017

அற்புதம் நிகழ்த்தும் அக்க்ஷய நவமி - 28.10.17 மதியம் முதல் 29.10.17 மாலை மூன்று வரை


குறிப்பாக சில பரிகாரங்கள் மற்றும் ஆன்மீக விஷயங்களை இன்றளவும் தொடர்ந்து செய்து வருவதினால் செல்வ செழிப்பில் வட நாட்டினர் திகழ்ந்து கொண்டுள்ளனரே..எப்படி தெரியுமா ??

வருடத்தில் தானமளிக்க, முக்கியமான ஆன்மீக பரிகாரங்கள் செய்ய மற்றும் ஆன்மீக போதனைகள், பூஜை பொருட்கள் மற்றும் அதிர்ஷ்டம் தரும் பொருட்களை வாங்கி வைத்து பூஜிக்க ஏற்ற தினமாக அக்ஷய திரிதியை உள்ளது. அதே போல் அவ்வளவு வீரியங்களையும் உள்ளடக்கிய நாள் தான் தீபாவளியை தொடர்ந்து வரும் சுக்ல பக்ஷ நவமி- அக்க்ஷய நவமி என்ற பெருமை பெற்ற நாளிது.

இந்நாளில் முடிந்த தானங்கள் மற்றும் மிருகங்கள், பறவைகளுக்கு உணவிடுவது மிக சிறந்த நற்பலனை கொண்டு சேர்க்கும்.

இந்நாளில் பூஜையறையில் மஹாலக்ஷ்மி தாயார் மற்றும் துர்கைக்கு, பூக்கள் சாற்றி தூப தீபம் செய்வித்து, மஹாலக்ஷ்மி தாயார் கழுத்தில் ஒரு நெல்லி கனியினை சிகப்பு நூலில் மாலையாக கட்டி வழிபட்டு வர செல்வ வளம் சேரும்.

பணப்பெட்டியின் அருகில் அல்லது பூஜை அறையில் வலம்புரி சங்கு, கோமதி சக்கரம், கணேஷா சங்கு, ராக்கெட் சங்கு மற்றும் முத்து சங்கு போன்ற ஐவகை சங்குகளை வைத்து வழிபட்டு வர, தீராத பணக்கஷ்டங்களும் தீரும்.

இந்நாளில் மஹாலக்ஷ்மி சன்னதியில் கர்ப கிரக விளக்கிற்கு தூய நெய் சேர்த்து வழிபட்டு வர மிகப்பெரும் தோஷ நிவர்த்தி பெறலாம். கோவிலில் தென்படும் குழந்தைகளுக்கு மஞ்சள் லட்டு கொடுத்து வரலாம்.

ஆன்மீக பரிகாரங்கள் செய்வது , ஜோதிட ரத்தினம் வாங்குவது அல்லது அணிவது, ஜோதிஷ பரிகாரங்கள் அல்லது கருத்துக்களை கேட்பது, சத்சங்கங்களில், கூட்டு பிரார்த்தனைகளில் கலந்து கொள்வது இந்நாளில் செய்ய அஷ்ட ஐஸ்வர்யங்களும் சேர்க்கும்.

இந்த நாளில் நெல்லி மரத்தினடியில் சிவன் மற்றும் விஷ்ணு இருவரையும் தூப தீபம் காட்டி, மலர் சாற்றி, நிவேதனம் செய்து வழிபட்டு வர, பல ஜென்ம பாவங்கள் தீரும். அது மட்டுமின்றி, நெல்லி மரத்தடியில் குடும்ப சகிதம் அமர்ந்து உணவருந்த, குடும்ப அமைதி நீடித்து நிலைக்கும். சொத்து பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.

வறியோர்க்கு உணவிடுவது மற்றும் உடைகள் தானமளிப்பது,இந்நன்னாளில் செய்ய மிக சிறந்த நற்செயலாய் அமையும்.

கிடைத்தற்கரிய இந்நாளை முழுமையாக பயன்படுத்தி அனைத்து நலன்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

பசுவை பூஜிக்க அரியதொரு நாள்


Friday, 13 October 2017

தீபாவளியை தித்திப்பாக்க அபூர்வ ஆன்மீக பொருட்கள்


எரிமலை குழம்பு துகள்களில் தயாரான நரசிம்ம ஜ்வாலாமுகி மாலை 

நரசிம்மரின் புகழ் பெற்ற வாசஸ்தலங்கள் பெரும்பாலும் எரிமலை அடர்ந்துள்ள (மங்களகிரி ஒரு உதாரணம்) மலை குகைகள் தான். கிரகங்களில்  செவ்வாயின் தன்மையை,செவ்வாயை ஆட்சி புரியும் உக்ரத்தை  தன்னுள் கொண்டுள்ள நரசிம்மரை வழிபட்டு வர கடன், சொத்து ரீதியான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு உடனடியாக வரும். காரணம், வா என்று பிரஹலாதன் கதறி அழைத்ததும் உடனடியாக தூணை பிளந்து வெளிவந்து காத்தருளியவர் நரசிம்மர். இப்படிப்பட்ட எரிமலை குழம்பிலிருந்து தயாராகும் மலை நரசிம்ம ஜ்வாலாமுகி மலை என்று அழைக்கப்படுகிறது. இது  நரசிம்மரை வழிபடவும், நரசிம்ம ஸ்தோத்திரத்தை கூறி அவரை அழைக்கவும் பயன்படுபடுகிறது. 


எதிரிகளை அழிக்கும் பகலாமுகி மாலை 

பகளாமுகி தாயானவள் கிரகங்களால் உண்டாகும் பிரச்சனைகள், ஜாதகத்தில் ஆறு எட்டு பன்னிரண்டு இடங்களில் ராகு கேது சனி போன்றவைகள் இருந்து அதனால் பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தாலோ,அல்லது வேறு எந்த வித எதிர்ப்புகளையும் சந்தித்து வெற்றி கொள்ள துணையிருப்பவள் ஆவாள். இவளை வழிபட, இந்த தாய்க்கு உகந்த மஞ்சளை உருட்டி செய்யப்படும் மாலை தான் மேற்கண்ட மாலை. மேற்கூறிய அனைத்து தொல்லைகளுக்கும் இந்த மாலையை வைத்து அவள் நாமம் கூறி தன் கழுத்தில் அணிந்து வர, அல்லது தாயானவள் படத்திற்கு இந்த மாலையை சாற்றி வழிபட்டு வர, அனைத்து எதிர்ப்புகளும் விலகுவதை கண் கூடாக காணலாம்.   

விநாயகரின் ரூபமான சிகப்பு சோனபத்திரா கற்கள் 

பஞ்சாயதன பூஜையில் விநாயகராய் வைத்து வழிபடப்படும், இந்த கல் ரூபமே விநாயகரின் ஸ்வரூபம் ஆகும். எப்படி ருத்திராக்ஷம் சிவனை உள்ளடக்கியதோ, சாளக்கிராமம் மஹாவிஷ்ணுவை உள்ளடக்கியதோ, அது போன்றே இதுவும். விநாயக வழிபாடு செய்வோர், அவசியம் இதை வைத்து தூப தீபம் காட்டி  அருகம்புல் சாற்றி வழிபட்டு வர, அனைத்து வித காரியத்தடங்கல்களும் நீங்குவது உறுதி. கலியுகத்தில் மனம் ஒன்றி அழைத்தால் உடனடியாக ஓடி வருவதில்  கணபதிக்கு இணை இல்லை. இந்த கற்களை வைத்து பூஜிப்பது அவரை நேரடியாக வைத்து பூஜிப்பதற்கு சமம் என்றால் மிகை இல்லை.மிக அபூர்வமாய் சோனா நதிக்கரையில் கிடைக்கும் இவை, தற்போது நம் சென்டரில் ஐந்து எண்ணிக்கை மட்டும் தருவிக்கப்பட்டுள்ளது. 

 அதீத பலம் அளிக்கும் கதாயுத ஹனுமான் சங்கு 

இயற்கை வடிவிலேயே ஹனுமானின் கதாயுதத்தை ஒத்திருப்பதால் இதற்கு இந்த பெயர். தடங்கல்கள், பய உணர்ச்சி, எதிலும் தயக்கம், வீட்டில், வேலையிடத்தில் எதிர்ப்பும்-நிம்மதியின்மையும், இது போன்ற அனைத்தையும் நீக்கும் சக்தி கொண்டது மேற்கண்ட சங்கு. பொதுவாகவே, சங்குகளுக்கு விசேஷ சக்திகள் உண்டென்பது அனைவரும் அறிந்த விஷயம், இந்த சங்கிற்கு உள்ள வேறொரு சக்தி- கணவன் மனைவி உறவுகளை மேம்படுத்த, இதையும் அனுமன் படத்தை/சிலையை வைத்து, தினசரி சுந்தரகாண்ட பாராயணம் செய்யின், அனுமனை அருகே அமரவைத்து பாராயணத்தை கேட்க வைக்கும் எனலாம். நம் மன உளைச்சல்கள் நீங்கி, காரிய பலிதம் கொடுக்கவல்லவை இவை. 

மேற்கண்ட அனைத்தும் தற்சமயம் நம் சென்டரில் குறைந்த அளவில் இருப்பு வந்துள்ளது. தேவைப்படுவோர் தொலைபேசியில் மட்டும் அழைத்து விவரங்கள் பெறவும். 


+918754402857 / +919840130156 


Diwali Festival Special தீபாவளி அன்று நாம் செய்யக்கூடாதது வழங்குபவர் ஸ்ர...

Thursday, 12 October 2017

#தடை செய்யப்பட்ட தாந்த்ரீக பொருட்கள் 1சாமுண்டியின் ரூபமாக, தான் இருக்கும் இடத்தை சர்வ வசீகரம் செய்ய கூடிய சக்தியை பெற்றது தான் 'ஹத ஜோரி" பண வசீகரம் மற்றும் ஜன வசீகரம் செய்யும் அபூர்வ மூலிகை இது. "ஹத ஜோரி" எடுக்கப்படும் 'பிர்வா' மரங்களை வெட்டப்பட தடை போட்டு விட்டதால்,ஒரு சில வருடங்கள் முன் அபூர்வமாக கிடைத்து கொண்டிருந்த ஹத ஜோரி யை  தற்சமயம் காண்பதே அரிதாக உள்ளது.

2014 ஆம் ஆண்டு இதை பற்றிய கீழ்கண்ட கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

"ஹத ஜோரி" யின் வீரியத்தை அதிகரிக்கும் முறை அல்லது உயிர்ப்பிக்கும் முறையை பார்ப்போம்.
வெள்ளி டப்பியில் வைத்திருப்பது மிகுந்த நன்மை தரும்-சிறிய குங்கும சிமிழ் வெள்ளியில் உள்ளது கூட போதும். டப்பியின் உள் சிறிது மஞ்சள் மற்றும் குங்குமம் போட்டு வைத்திருக்கவும். இதை ஞாயிறு அன்று நல்ல நேரத்தில் கடல் நீரில் கழுவி சிகப்பு துணியில் (பட்டு துணி மிக சிறந்தது) வைத்து இதனுடன் சிறிது கிராம்பு, மற்றும் சிறிது பச்சை அரிசி வைத்து சிகப்பு துணியில் முடிந்து வைத்து, தொடர்ந்து 21 நாட்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை அதை திறந்து வைத்தவாறே கூறி விட்டு பின்பு மூடி அதே இடத்தில் வைத்து விடவும்-இடம் மாறக்கூடாது. 21 நாட்கள் முடிந்ததும் அதை தினசரி பார்த்து விட்டு அன்றாட வேலையை தொடங்கலாம். முக்கிய சமயங்களில் மட்டும் தன்னுடன் எடுத்து செல்லலாம்.

மந்திரம் : ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை நமஹ " -

Wednesday, 11 October 2017

தொழில் வளர்ச்சிக்கு சூட்சும ரத்ன பரிகாரம்ரத்ன கற்களின் வீரியங்களை ,ஆற்றல்களை கொண்டு, அதை அணிவதின்    மூலமும், வைத்திருப்பதின் மூலமும்  அதிர்ஷ்டங்களை பெற வழி காட்டுகிறது 'ரத்ன சாஸ்திரம்' எனும் ஆதி கால கிரந்தம். வரும் பதிவுகளில் அதை எப்படி சூட்சும முறையில் உபயோகித்து அத்தகைய அதிர்ஷ்டங்களை பெறலாம் என்பதை காண்போம்.

புதனுக்குரிய மரகதத்தை அறுவது கேரட்டுகள் உள்ள பொடியாக தொழில் செய்யும் இடத்தின் வடக்கு பக்கத்தில் தரையில் சிறு துளையிட்டு புதைத்து, அதே போல் சனிக்குரிய நீல கல்லின் நாற்பது கேரட்டுள்ள தூளை வடகிழக்கிலும், ராஹுவிற்குரிய ஹேசோநைட், முன்னூறு கேரட்டுள்ள தூளை மேற்கிலும் புதைத்து வைக்க, தொழில் வளர்ச்சி தடைகள் அனைத்தும் உடனடியாக நீங்கி பண வளம் பெருகுவதை கண் கூடாக காணலாம். மூன்றையும் செய்ய முடியாதோர் ஒவ்வொன்றாகவும் செய்து வளர்ச்சி காணலாம். பல இடங்களில் பரீட்சித்து வெற்றி கண்ட முறை இது.


Sunday, 8 October 2017

சூட்சும சுவாசக்கலை (கட்டணமின்றி பயிற்சிகள்)

 சூட்சும சுவாசக்கலை (கட்டணமில்லா பயிற்சி)
இன்று அமைதியான முறையில் மேற்கண்ட பயிற்சி நடந்து முடிந்தது. நபர்களுக்கும் மேல் கலந்து கொண்டு அமைதி காத்து, கற்றுணர்ந்தனர். பயின்றவைகளை தொடர்ந்து உபயோகித்து, தங்களின் வாழ்வினை மென்மேலும் உயர்த்திக்கொள்ள, எல்லாம் வல்ல இறையை பிரார்த்திக்கின்றேன். உடனிருந்து எமக்கு எள்ளளவும் சுமைகள் இல்லாது, சேவை புரிந்த தன்னார்வலர்களுக்கு என் கோடானு கோடி நன்றிகள். இறை சக்தி எங்கள் அனைவரையும் நல்வழி நடத்தி செல்ல வாழ்த்துகிறேன். நமசிவய !! ஹரி ஓம் தத் சத் !!


Tuesday, 3 October 2017

பண வரவு நிரந்தரமாகவலது கை பழக்கம் உள்ளோர் : (இடது கை பழக்கம் உள்ளோர் மாற்றி செய்யவும்)

ஒருவரிடத்தில் பணத்தை பெறும் சமயம் இடது கையினால் வாங்கவும்-மனதினுள் "ஏராளம் எண்ணிக்கை" கூறியவாறே.
ஒருவரிடத்தில் பணத்தை கொடுக்கும் சமயம் "ஏகம் அநேகம் அனுதினம் வந்தேறும்" மனதினுள் கூறியவாறே வலது கைகளினால் கொடுக்கவும். பணத்தை ஈர்த்து அதிகரிக்க செய்யும் சூட்சுமம் நிறைந்த முறை இது.


Monday, 2 October 2017

மூச்சு பயிற்சியினால் பணக்காரர் ஆக முடியுமா ??

சூட்சும சுவாசக்கலை
நாள் : 08.10.17
நேரம் : மாலை 6 PM முதல் 8 PM மணி வரை
இடம் : பாணி க்ரஹா திருமண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை 33.
பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் கிடையாது.
+918754402857 / +919840130156

மூச்சு பயிற்சியினால் பணக்காரர் ஆக முடியுமா ??

மேற்கண்ட கேள்வியை ஆலோசனைக்கு வந்த ஒரு நாத்திகவாதி என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவர் கேட்டார்-நான்கு வருடம் முன். அவருடைய நண்பர் ஒருவர், ஆன்மீக ஈடுபாடு கொண்டவர் மூலம் எம்மை பற்றி தெரிந்து கொண்டதாக கூறினார். ஆன்மீக ரீதியில் இல்லாது, அறிவியல் ரீதியாக ஏதேனும் தெரபி முறையில், நல்ல தனம் சேர்க்க வேண்டும் என்கிறார். ஆன்மிகம் அறிவியல் மட்டுமல்ல, அதற்கும் மேலானது- எனினும் அவருடன் தர்க்கம் வேண்டாம் என்று, முக்கியமான மூச்சு கலை ஒன்றினை, தினசரி பத்து நிமிடங்கள் வரை செய்து வர கூறி அனுப்பி வைத்தோம். அவரும் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார் போலும். அவரிடமிருந்து பின் தகவல்கள் இல்லை. எனினும் அவரை நம்மிடம் அனுப்பி வைத்த அன்பர், இன்றளவும் ஆலோசனைக்கு வந்து கொண்டுள்ளார். அவர் மூலம் அவரை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. என்ன தான் ஆன்மீக நாட்டம் இல்லை எனினும் நாம் கொடுத்த பயிற்சி முறையை அன்றாடம் இன்றளவும் செய்து வருகிறாராம்.உங்களிடம் வந்தது ஆல்டோவில், இப்போது அவர் வைத்திருப்பது டஸ்ட்டர் கார் என அடிக்கடி வேடிக்கையாக குறிப்பிடுவார் அந்த நண்பர்.

சர கலையில் சர்வத்தையும் அடையலாம்.

குறிப்பு : மேற்கண்ட பயிற்சிக்கு சில அன்பர்கள் வாட்ஸாப் மூலமும் கைபேசியில் மெசேஜ் களாகவும் முன்பதிவு செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட முன்பதிவுகள் செல்லாது. சென்னையில் உள்ளோர் நேரில் மட்டுமே வந்து டோக்கன் பெற்று முன்பதிவு செய்யவும். வெளியூர் நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து, பின் பதிவுகள் செய்து கொள்ளவும். இடப்பற்றாக்குறையே மேற்கண்ட விதிமுறைகளுக்கு காரணம்-கடைசி நேர நெரிசல்களை (முத்திரை பயிற்சியில் அப்படி உருவானது ) தவிர்க்கவும். 

Friday, 29 September 2017

நடைபெறவிருக்கும் சூட்சும மூச்சு கலை பயிற்சியின் மூலம் என்னென்ன பயன்கள் பெறலாம் ?

நாள் : 08.10.17                                                                                    
நேரம் : மாலை 6 PM முதல் 8 PM மணி வரை 
இடம் : பாணி க்ரஹா திருமண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை 33.
குறிப்பு : எவ்வித கட்டணமும் இல்லை 
முன் பதிவு அவசியம்- டோக்கன் பெற :  +918754402857 / +919840130156 


1.அந்தந்த நாள் துவங்கியதும், நாள் முழுதும் அனைத்திலும் வெற்றி பெற சூட்சும மூச்சு பயிற்சி

2.ஆஸ்துமா, ஹார்ட் அட்டாக், கேன்சர், குழந்தையின்மை, ஆண் குழந்தை பெற, காய்ச்சல், தலைவலி, அனைத்து வலிகள் உடனடியாக குணமாக்கும் முறைகள்

3.எதிரிகள், வேண்டாதோரை வெற்றி கொள்ள

4.தாந்த்ரீக மூச்சு பயிற்சி முறை

5.அட்டமா சித்திகள் பற்றிய அதிர்ச்சியூட்டும் முறைகள்

மிகுந்த யோகம் மற்றும் ஆத்ம ஞானம் உள்ளோர்க்கே மேற்கண்ட முறைகள் கற்றுணரப்படும் என்பது யோகிகள் வாக்கு.

ஹரி ஓம் தத் ஸத்

தாந்த்ரீக பரிகார ஆலோசனை- நேரலைநாளை 30.9.17 மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை Swasthiktv.com ல் அன்பர்களின் கேள்விகளுக்கு ஆலோசனை மற்றும் பரிகார சூட்சும முறைகள் விளக்கப்படும். 

Thursday, 28 September 2017

உங்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தி- சூட்சும சுவாசக்கலைநாள் :  08.10.17
நேரம் : மாலை 6 PM முதல் 8 PM மணி வரை
இடம் : பாணி க்ரஹா திருமண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை 33.

நம் சுவாசத்தின் மூலம், நாம் எது வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? சித்தர்கள் அட்டமா சித்துக்கள் செய்து பல அற்புதங்களை நிகழ்த்தியது, தங்களின் சுவாசத்தை கொண்டு தான். ஆஞ்சநேயர் ராமாயண காலத்தில் மகா விஸ்வரூபம் எடுத்தது, தன் உருவை சுருக்கி கொண்டது போன்றவை அனைத்தும் சுவாசக்கலையின் மூலமே. தற்காலத்தில் இந்த அற்புதங்களை நிகழ்த்தி சித்த ஸ்வரூபமாய் சென்னை திருவான்மியூரில் குடி கொண்டிருக்கும் சக்கரை அம்மா- வானில் பறந்தது (இதை கண்கூடாக கண்டதாக திரு.வி.க கூறியுள்ளார்) இந்த சுவாச கலைகளின் மூலமே. இப்படி சாகசங்களை தாண்டியும், நம் உடல் மனம் போன்றவற்றை மிக சீராக வைத்து கொள்ள, அதியற்புத சூட்சுமங்களை கொண்ட முக்கியமான சில மூச்சு பயிற்சிகள் உங்கள் அனைவருக்கும் பயிற்றுவிக்க எண்ணம். இந்த பயிற்சிக்கு கட்டணம் எதுவுமில்லை. அதே சமயம் முன்பதிவு டோக்கன் பெற்று கொள்வது அவசியம். இதை நன்றாக கற்றுணர்ந்து,பின்  தாங்களும் பிரதி பலன் பாராது, உங்கள் சுற்றத்தார்க்கு பயிற்றுவிப்பின் , சமூகம் சீர் பெரும்-எம் மனம் மகிழும்.


குறிப்பு : நூற்றி ஐம்பது நபர்களுக்கு மட்டும் அனுமதி ஆகையால் முன்பதிவு அவசியம் என்பதை நினைவில் கொள்க. வெளியூர் அன்பர்கள், தபாலில் டோக்கன் பெற்று கொண்டு கலந்து கொள்ளவும். மேற் தகவல்கள் பெற தொலைபேசியில் அழைக்கவும்.நன்கொடைகள் அளிக்க எண்ணமிருப்பின் தொலைபேசியில் அணுகலாம்.
 +918754402857 / +919840130156

Wednesday, 27 September 2017

பண வரவை-மன மகிழ்ச்சியை அள்ளி தரும் முத்து சங்குமுத்து சங்கினை பற்றியும் அதன் மகிமைகளை பற்றியும்  பல பதிவுகள் கொடுத்துள்ளோம். ஆனால் அபூர்வமான அது அரிதாகவே கிடைத்து வந்த காரணத்தினால், நம்மிடம்

வரத்து இன்றி இருந்தது. தற்சமயம் மூன்று சங்குகள் கிடைத்துள்ளன. தேவையுள்ளோர் தொலைபேசியில் அழைத்து மேல் விவரங்கள் பெறவும்.

படத்தில் இருப்பது : முத்து சங்கு மற்றும் நேபாளில் இருந்து தருவிக்கப்பட்ட விசேஷ ருத்ராக்ஷ வளையம். 

Sunday, 24 September 2017

வசிய முத்திரை பயிற்சிமேற்கண்ட பயிற்சி இன்று சிறந்த முறையில் நடந்தேறியது. நூற்றி ஐம்பதிற்கும் மேலானோர் வந்திருந்து பயிற்சி பெற்றனர். மன கோளாறுகள், பயம், சக்கரை வியாதி, கழுத்து மற்றும் முதுகு பிரச்சனைகள், வேலை கிடைக்க, தன வரவிற்கு, கண்கள் மற்றும் காது கோளாறுகள் நீங்க, கிட்னி பிரச்சனைகள் தீர, ஆண்மை, பெண்மை குறைபாடுகள் நீங்க, குழந்தை செல்வம் கிட்ட, தெய்வ தொடர்பு ஏற்பட, வாயு கோளாறுகள் நீங்க, மூட்டு பிரச்சனைகள், உடை குறைக்க மற்றும் கூட, முகம் பொலிவு பெற, ஆஸ்துமா மற்றும் ஜலதோஷ பிரச்சனைகளுக்கு, தைராய்டு,மறதி, வாதம் பிரச்சனைகள் நீங்க என பல் வேறு பிரச்சனைகளுக்கும் முத்திரை முறைகளை பயிற்றுவித்தோம். எம்மை மிகுந்த வியப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் ஆளாக்கியது என்னவென்றால், நாம் கேட்டு கொண்டபடி, அந்த இரண்டு மணி நேரமும் அன்பர்களிடத்தில் அப்படி ஒரு அமைதி. மிகுந்த கட்டு கோப்புடனும், ஒழுங்கு முறையுடனும், ஆர்வத்துடனும் பயிற்சி பெற்று சென்றனர். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும். Abirami Vivek அவர்களின் ஆரம்ப உரையாடலை பின் தொடர்ந்து, Ganesh Rajaraman அவர்களின் இனிய குரலினால் கடவுள் வாழ்த்து பாட பெற்று , பின் பயிற்சி ஆரம்பமானது. Swasthiktv.com நேரடியாக நிகழ்ச்சியை ஒளிபரப்பினர். நான் கேட்டதும் , மறுப்பேதும் சொல்லாது மிகுந்த வேலைப்பளுவிலும், இதை சாத்தியமாக்கிய 'சாய் அருண்' அவர்களுக்கு நன்றி.   தன்னார்வத்துடன் எமக்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். இறைவன் சித்தமிருப்பின், இது போன்று மாதம் இரு முறையாவது, பல் வேறு பயிற்சிகள், மற்றும் முகாம்கள் நடத்த விரும்புகிறேன் . எல்லா வல்ல இறை அதற்குரிய சக்தியை கொடுத்துதவ வேண்டுகிறேன்.

Friday, 22 September 2017

வசிய முத்திரை பயிற்சி 24.9.17மேற்கண்ட முத்திரை பயிற்சிக்கு பதிவு செய்துள்ளோர், மாலை 5 :45 மணியளவில் வந்து அறையில் வசதியாக அமர்ந்து விடுமாறு கேட்டு கொள்கிறோம். பயிற்சி தொடங்கு முன், கைபேசியினை சைலன்ட் மோடில் போட்டு விடுவது அவசியம். காலம் தாழ்த்தி வருவோருக்கு இடமளிக்கும் சூழ்நிலை இருக்காது என்பதால், அதற்கு  தகுந்தாற் போல் கிளம்பவும். தன்னார்வலர்கள் ஐந்து மணிக்கே வந்து விடின், சற்று வசதியாக இருக்கும்.பயிற்சியின் நடுவில் சந்தேங்களை கேட்காமல் ,முடிந்ததும் கேட்டு தெரிந்து கொள்ளவும்.  முத்திரை பயிற்சி முடிந்தவுடன், கற்று கொடுக்கப்பட்ட முத்திரைகள் அடங்கிய காலண்டர் கொடுக்கப்படும். காலண்டரில் கொடுக்கப்பட்டுள்ள பயன்களை விடவும் அதிக பயன்கள் ஒவ்வொரு முத்திரைக்கும் உண்டு, அவைகள் விளக்கப்படும். ஆகவே தேவையுள்ளோர் குறிப்பு எழுதி கொள்ள,முன்னேற்பாடுடன் வரவும். பயிற்சி நடக்கும் சமயம், அமைதி அவசியம், ஆகவே சிறு குழந்தைகளுடன் வருவோர், தக்க ஏற்பாட்டுடன் வரவும். பயிற்சி முடிந்ததும், அனைவரும் உணவருந்தி செல்லுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.

குறிப்பு : முன்பதிவு அவசியம் /  இந்த பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் இல்லை.

நாள் : 24.9.17
நேரம் : மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை
இடம் : மேற்கு மாம்பலம், பாணி கிரஹா திருமண மண்டபம்
தொடர்பிற்கு : +919840130156 / +918754402857

Thursday, 21 September 2017

பிரபஞ்ச ஆற்றல் யந்திரங்கள்


மின் வசிய எண்கள் பயிற்சி


மின் வசிய எண்கள் மற்றும் பிரபஞ்ச ஆற்றல் யந்திரங்கள் பயிற்சிமேற்கண்ட இரண்டு முறைகளையும் கூறி பலர் பலனடைந்ததை அடுத்து, தங்கள் வேறு பிரச்சனைகளை தாங்களே தீர்த்து கொள்ள, அதை பயிற்சியாக கேட்டு வந்ததின் பொருட்டு, இவ்விரண்டு பயிற்சிகளையும் புத்தக வடிவில் கொடுக்க எண்ணம்.

மின் வசிய எண்கள், நம் அன்றாட விஷயங்களுக்கு மற்றும் அனைத்து வித நோய்களுக்கும் பயன்கொடுக்கும். பிரபஞ்ச ஆற்றல் யந்திரங்கள், வாழ்வியல் பிரச்சனைகளுக்கு, எண்பது யந்திரங்கள் ஸ்டிக்கர் வடிவில் மற்றும் பாக்கெட்டில், தலையணை அடியில் வைக்கும் வண்ணம் கார்டுகளில் கொடுக்கப்படும். இரண்டும் பிரபஞ்ச ஈர்ப்பின் சக்தியில் செயல்படுவதால், பலன்களை வெகு சீக்கிரம் உணரலாம். இவற்றிற்கு கட்டணம் உண்டு. விவரங்கள் பெற தொலைபேசியில் மட்டும் அணுகவும். 

Wednesday, 20 September 2017

நவராத்திரியில் நல்லவை எல்லாம் பொங்கி வர..நம் துன்பங்கள் அனைத்தும் முடிவிற்கு வருவதற்காகவே, மஹாளய பட்சம் முடிந்ததும் தொடங்குகிறது நவராத்ரி. நம் வாழ்வியல் துன்பங்களை களைவதற்கு மிக சரியான சந்தர்ப்பங்கள் நவராத்ரி, தீபாவளி நாட்கள் போன்றவை. தேவியின் பரிபூர்ண ஆக்ரமம் இந்த நாட்களுக்கு உண்டு. இந்த தினங்களில் எவைகளை செய்யலாம், எவற்றை செய்ய கூடாது என்பதையும், சூட்சும முறையில் இந்த நாட்களில் நம் துன்பங்களை களைந்து, நன்மைகளை-நேர் மறை ஆற்றல்களை அதிகப்படுத்தி கொள்ளலாம் என்பதனை இந்த பதிவில் காண்போம்.

இந்த நாட்களில் அசைவம், தாம்பத்தியம், சவரம், முடி களைதல் போன்றவை கண்டிப்பாக தவிர்த்தல் நலம் தரும்.

தினசரி சுமங்கலிகள் அல்லது கன்னி குழந்தைகளுக்கு மஞ்சள் மற்றும் வளையல்கள் வாங்கி கொடுப்பது மங்கள நிகழ்ச்சிகளை நம் வாழ்வில் கொண்டு வரும்.

மஹாலக்ஷ்மி சன்னதியில் 'தன ஆகர்ஷண ஊதுபத்தியை' தினசரி ஒரு பாக்கெட் வீதம் கொடுத்து ஏற்ற சொல்லி, கர்ப கிரக விளக்கில் நெய் சேர்த்து வழிபட்டு வரலாம். தினசரி கோவில் செல்ல முடியாதோர்,  வீட்டில் உள்ள மஹாலக்ஷ்மி படத்தின் முன் ஏற்றி வைத்து, வெள்ளி விளக்கில் வெள்ளை திரி அல்லது தாமரை தண்டு திரி கொண்டு விளக்கேற்றி வழிபடலாம்.

இந்த நாட்களில் லட்சுமி சோழி எனப்படும் நான்கு வர்ண சோழிகளை வீட்டின் பூஜை அறையில் அல்லது பணப்பெட்டியில் வைப்பது நல்ல பலன் தரும். இத்துடன் கோமதி சக்கரம் வைத்து வழிபட, பலன் இரட்டிப்பாகும். இருக்கும் இடத்தினை செல்வ வளமாகும் வலம்புரி சங்கினை  வீட்டினில் வைக்க மிக சரியான சந்தர்ப்பம் இது.

இந்த ஒன்பது தினங்களில், மந்திரங்களில் தேர்ந்த ஒருவரை வைத்து வீட்டில், துர்கா சப்தசதி பாராயணம் செய்விக்கவும். தெரிந்தவர், தானே செய்யலாம்.

இந்த நாட்களில் மாலை வேளையில் 'ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே" என்ற சர்வ சக்தி படைத்த மந்திரத்தை நூற்றியெட்டு முறை கூறி நிவேதனம் செய்து வழிபட்டு வருவது, மிக பெரிய துன்பங்களில் இருந்து நம்மை உடனுக்குடன் காக்கும்.

கணவன் மனைவிக்கும்,மனைவி கணவனுக்கும் ஒரு வெள்ளை துணியில் தேங்காயை சுற்றி பரிசளிக்கவும். அதனை நவராத்ரி முடிந்ததும் சமையலுக்கு  உபயோகிக்க, அன்னியோன்னியம் மிகும்.

இந்த தினங்களில் ஒன்பது முக ருத்ராட்சத்தினை வாங்கி கழுத்தோடு அணிவது, தேவியை தங்களோடு என்றும் வைத்திருப்பதற்கு சமம்.

ஒன்பது சிறிய நிலக்கரி துண்டுகளை வாங்கி வைத்து கொண்டு, தினசரி ஒன்றாக மண்ணில் மாலை நேரத்தில் புதைத்து  வரவும். மண் இல்லாதோர், ஒரு மண் தொட்டியில் புதைத்து வரலாம். இது எப்போதும் வீட்டில் இருக்கலாம்.

இந்நாட்களில் கன்னி பெண்களுக்கு சிகப்பு நிற ஆடைகளை தானமளிப்பது (முடியாதோர் சிகப்பு கைக்குட்டை வழங்கலாம்) நன்மை சேர்க்கும்.

இந்த நாட்களில் ஸ்ரீ சூக்தம் தினசரி வீட்டில் கூறி வர பணம் பல வழிகளில் சேரும்

முக்கிய குறிப்பு : இந்நாட்களில் உங்களால் எவ்வளவுக்கு எவ்வளவு கன்னி குழந்தைகளுக்கு (எட்டு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள்) உதவி செய்கின்றீர்களோ, அந்தளவு உங்கள் வாழ்க்கை வளமாகும்.

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Monday, 18 September 2017

மஹாளய அமாவாசை- வாழ்வின் துன்பங்களை உடனடியாக மாற்றும் எளிய பரிகாரம்

நம் முன்னோர்களை-பித்ருக்களை சரிவர பூஜிக்காதது, தர்ப்பணம் கொடுக்காமல் இருப்பது போன்ற செயல்கள் மட்டுமே நாம் எத்தகைய பரிகாரங்களை செய்து வரினும், துன்பங்கள் மாறாது பெருகுவதற்கு உண்டான காரணம். அப்படி இத்தனை நாட்கள் இருந்திருப்பினும், அவை அனைத்தையும் போக்கும் வண்ணம் ஒரு பரிகாரம் உள்ளது. அவசியம் செய்து பயன் அடையவும். மஹாளய அமாவாசை அன்று ஐந்து தேங்காய்களை மாலையாக நூலினால் கட்டி, நீர் நிலைகள் (ஆறு,ஏறி,குளம்,கடல்) உள்ள இடத்திற்கு சென்று, பித்ருக்களை மனதார பூஜித்து, அவர்களிடம் ஆசி வேண்டி, பின், அந்த மாலையை நீர் நிலைகளில் விட்டு விடவும்- மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின். எளிமையாக தோன்றினாலும், பல் வேறு அதிசயங்களை உடனுக்குடன் கொடுக்கவல்லது இந்த பரிகாரம். தேவை,பித்ருக்களிடத்தில் நெஞ்சம் நிறைந்த அன்பும், மரியாதையும் மட்டுமே. ஆண் பெண் இரு பாலரும் செய்யலாம். இறைவன் கொடுப்பதை விட முந்தி கொண்டு நமக்கு ஆசி வழங்கும் சக்தி பெற்றோர் நம் பித்ருக்கள் என்பதனை மறந்து விட வேண்டாம். ஹரி ஓம் தத் சத் ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர் ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள் 9840130156 / 8754402857 www.yantramantratantra.com